அன்றாட வாழ்க்கைக்கு தேவையான பல வகைப் பொருட்களை, பல வகையான தொழில் நிறுவனங்கள் நாளும் தயாரித்து வருகின்றன.
ஒரு பொருளை தயாரிப்பதில் இருந்து அதனை கடைக் கோடி வாடிக்கையாளர் கைகளுக்கு கொண்டு சேர்ப்பது வரைக்கும் உள்ள தொடர்ச்சியான நிகழ்வில் பல மேலாண்மை நடவடிக்கைகள் உள்ளன.
அதில் முதல் நடவடிக்கை என்பது மூலப் பொருட்களை தயார் நிலையில் வைத்திருப்பது. மூலப் பொருள் தயார் நிலையில் உள்ள போதுதான் உற்பத்தி தடை இல்லாமல் நடைபெறும். அதே வேளையில், அளவுக்கு அதிகமான மூலப் பொருட்களை வாங்கி குவித்து வைத்து விட்டாலும் முதலீடு அதில் முடங்கி விடும்.
உற்பத்தி செய்த பொருட்களை மிகச் சரியாக பேக்கிங் செய்து அதனை மொத்த விற்பனையாளர்களின் கைகளுக்கு கொண்டு போய் சேர்க்க வேண்டும். அதற்கான போக்குவரத்து செலவுகளை ஏற்க வேண்டும். அந்த பொருள் பற்றிய அறிமுகத்தை வெளிச் சந்தையிலும் , மக்கள் மத்தியிலும் பிரபலப்படுத்த வேண்டும். அதற்கான விளம்பரச் செலவுகள் உள்ளன.
இந்த நிலையில் முதல் நிலையான மூலப்பொருட்கள் சேகரிப்பிலேயே நாம் நின்று விட முடியாது.
இந்த இடத்தில் தான் இந்த JIT என்ற தியரி வேலை செய்கிறது. இந்த தியரியின் படி, ஒரு பொருளின் உற்பத்தி, அதன் சந்தையின் தேவை, விற்பனை வேகம், அதன் மறு தேவைகள், இதற்கு எல்லாம் மேலாக, மூலப் பொருளின் கையிருப்பு – என இந்த அம்சங்களை எல்லாம் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்பு, அதனையொட்டி மூலப் பொருட்களின் கொள்முதலை கூட்டவோ , குறைக்கவோ செய்ய வேண்டும்.
இதனை முறையாக கையாளும் முறைக்குப் பெயர் தான் தேவைக்கு ஏற்ற கொள்முதல் அதாவது JIT என மேலாண்மை தியரியில் அழைக்கபடுகிறது.
-பள்ளபட்டி அஸ்கர் அலி