இன்றைக்கு வேலை வாய்ப்பாக இருந்தாலும் சரி, வணிகமாக இருந்தாலும் சரி, போட்டிகள் மிக மிக அதிகம். தொழில் சார்ந்து உலக அளவில் போட்டி போட வேண்டிய தேவை உள்ளது. சீனாவும், அமெரிக்காவும் கடுமையான தொழில் போட்டி யில் உள்ளன. இந்தியா, சீனா மற்றும் கொரிய தயாரிப்பு களுடன் போட்டி போடு கின்றது.
இந்த நிலையில் மாற்று மொழியை அறிந்திருந்தால் அது ஒரு கூடுதல் பலம். இப்போது இந்தியாவில் உள்ள சிலர் சீன, கொரிய மொழிகளைக் கற்கிறார்கள். இதற்கென பயிற்சி மையங்களும் உருவாகி வருகின்றன.
மொழி பல இடங்களை, பல நிறுவனங்களை, பல நாடுகளை, பல மனிதர்களை ஊடுருவி நாம் கடந்து செல்லும் அளவற்ற பலத்தை நமக்கு அளிக்கிறது. பல மொழி அறிந்திருங்கள். தமிழ் நாட்டில் தமிழறிந்தோரிடம் தமிழில் பேசுங்கள். இதுவே முன் னேற்றத்தை நோக்கிய பாதை .
தத்து எடுக்கப்பட்ட ஜெஃப் பிசோஸ் அடைந்த வெற்றி
உலகினால் அறியப் பட்ட நவீன வரலாற்றின் முதன்மையான பணக் காரராக ஆகியிருக்கிறார், அமேசான் நிறுவனர் திரு. ஜெஃப் பிசோஸ் (Jeff Bezos). நூற்றைம்பது பில்லியன் டாலர் சொத்து மதிப்பு உள்ள இவர்தான் இணையதள விற்பனைப் புரட்சியைத் தொடங்கி வைத்தவர்.
பல ஆண்டுகள் நட்டத்தில் இயங்கி பின் லாபத்திற்கு மாறியவர். வால்மார்ட் நிறுவனத்தை எதிர் கொண்டு வெற்றி அடைந்தவர். இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். இவருக்கு போட்டியாக இந்தியாவில் தோன்றிய நிறுவனம் ஃப்ளிப்கார்ட். வட இந்தியர் ஒருவரால் தொடங்கப்பட்டு தற்போது வால்மார்ட் இந்த நிறுவனத்தை வாங்கி இருக்கிறது.
இவர் ஒரு தத்தெடுக்கப்பட்ட குழந்தை. தொழிலை தன் வீட்டின் கார் நிறுத்தும் இடத்தில் தோடங்கியவர்.
வாழ்க்கையில் வெற்றி பெற, தீராத ஆர்வம், கடுமையான உழைப்பு, தன்னம்பிக்கை இருந்தால் போதும், பின்புலம் தேவை இல்லை. சாதி, மத, இன, மொழி வேறுபாடுகளை மறந்து பீடுநடை போடுங்கள், முன்னேற்றப் பாதையை நோக்கி.
கடந்த காலத்தையே அசை போட்டுக் கொண்டிராமல், நம் நேரத்தை, ஆற்றலை வருங்காலத்தை நோக்கி செலுத்துங்கள்.
மாற்றிக் கொண்டால் என்ன?
கடந்த ஒரு ஆண்டில் உற்பத்தித் துறையில் எனக்கு தனிப்பட்ட முறையில் அறிமுகம் உள்ள நண்பர்கள் சிலரிடம் உரையாடும் போது, அனைவரின் ஒருமித்த கருத்து, தமிழகம் தொழில்துறையில் தேய்ந்து வருகிறது என்பதே.
காரணம், தொழிலைத் தொடங்க அனுமதி வழங்க ஒற்றைச் சாளர முறையை முழுமையாக பின்பற்றவில்லை என்பது இவர்கள் கருத்து. தமிழகத்தின் பெரிய தொழில் குழுமத்தில் ஒன்று சென்னைக்கு அருகில் உள்ள ஆந்திர எல்லை நகரங்களில் தங்களது கிளை உற்பத்தி நிறுவனங்களை தொடங்கு கின்றது. காரணம், ஒற்றைச் சாளர முறை சரிவர செயல்படவில்லை என்பதே.
எனக்கு தெரிந்த உடனடி தீர்வு, திரு. க. பாண்டியராஜன், திரு . சம்பத் இருவரும் தங்கள் துறைகளை தங்க ளுக்குள் மாற்றிக் கொண்டு பணியாற்ற வேண்டும். திரு. பாண்டியராஜன், தொழில் பின்னணி உள்ளவர். தமிழக தொழில் துறையினரிடம் நேரடித் தொடர்பு உள்ளவர்.
சிறப்பூட்டும் மெட்ரோ தொடர்வண்டி சேவை
ஒரு நாட்டின், மாநிலத்தின், மாவட்டத்தின், பகுதியின் பொருளாதார வளர்ச்சியின் முதல் தேவை, அதன் போக்குவரத்து உள் கட்டமைப்பே . நம் சென்னை அந்த வகையில் பல ஆண்டுகளுக்கு முன்னரே, புறநகர் இரயில் போக்குவரத்தின் மூலமாக பெரும் மேன்மை அடைந்து இருந்தது.
தற்போது நிலப்பரப்பின் கீழ் உருவாக்கப்பட்டு உள்ள மெட்ரோ தொடர்வண்டிப் போக்குவரத்து உலகத் தரம் வாய்ந்தது. இதை உருவாக்கிய அரசுகள், அலுவலர்கள் பாராட்டுகளுக்கு தகுதியானவர்கள். சத்தமில்லாமல், ஆக்கிரமிப்புகள் இல்லாமல் உருவாகி உள்ளது, பன்னாட்டுத் தரமிக்க இரயில் சேவை.
ஒரு காலத்தில் இதை நான் சிங்கப்பூரில் பார்த்தது உண்டு. சென்னையின் பெருமைகளில் இதுவும் ஒன்றாகி விட்டது. உலகின் தலைசிறந்த பத்து நகரங்கள், இதைப் போன்ற நிலப் பரப்பின் கீழ் அமைக்கப்பட்டு உள்ள இரயில் சேவையினால் வளர்ந்த நகரங்களே. நாமும் அந்த வரிசையில் வெகு விரைவில் சேருவோம்.
வெற்றி பெறுக
தமிழகத்தை தொழில் முனைவதில் சிறந்த மாநிலமாக மாற்றிக் காட்டுவோம். ஆயிரக் கணக்கான பொறியியல் வல்லுநர்கள் ஒவ்வொரு ஆண்டும் கல்லூரிகளில் இருந்து வெளி வருகின்றனர். தொழில் தொடங்குவதற்கு உள்ள தடைகளைக் கண்டு பின் வாங்குகின்றனர்.
உலகளவில், உளவியல் ரீதியாக பெரும்பான்மையானோர் தாங்கள் கொண்டு உள்ள வீண் அச்சங்களின் அடிப்படையில் வாழ்க்கையை நகர்த்து கிறார்கள். சிலர், தாங்கள் வளர்த்துக் கொள்ளும் நம்பிக்கைகளின் அடிப் படையில் வாழ்க்கையை நகர்த்தி வெற்றியை அடைகின்றனர். பொறியியல் பட்டதாரிகள் நம்பிக்கைகளை வளர்த்துக் கொண்டு முயன்று தொழில் முயற்சிகளில் ஈடுபட்டு வெற்று பெற வேண்டும்.
-சரவணராஜா