திருத்தப்பட்ட கம்பெனிகளின் சட்டம் 2018 நடைமுறைக்கு வந்த பின்னர் பங்கு மூலதனத் தொகையுடன் பதிவு செய்யப்படும் அனைத்து கம்பெனிகளும் தங்களுடைய முதல் வணிக நடவடிக்கையை அல்லது முதல் கடன் வாங்கும் நடவடிக்கையை செயல்படுத்துவதற்கு முன் வணிக நட வடிக்கைகளை தொடங்குவதற்கான சான் றிதழ் (Certificate of Commencement of Business) ஒன்றினை கம்பெனிகளின் பதிவாளரிடமிருந்து கண்டி ப்பாக பெற வேண்டும்.
இந்த திருத்தப்பட்ட கம்பெனிகளின் சட்டம் 2018 ஆனது நவம்பர்2, 2018 முதல் நடைமுறைக்கு வந்து உள்ளது. இந்த தேதிக்குப் பிறகு பதிவு செய்யப்படும் எந்தவொரு கம் பெனியும் இந்த சான்றி தழைப் பெற வேண்டும்.
இந்த சட்டத்தின் விதிகள் பின்வருமாறு – திருத்தப்பட்ட நிறுமங்களின் சட்டம் 2018பிரிவு 10கி. வின் படி, ஒரு கம்பெனி இந்த திருத்தப்பட்ட கம்பெனிகளின் சட்டம் 2018 நடைமுறைக்கு வந்த பின்னர் பதிவு செய்யப்பட்டு முதல் வணிக நடவடிக்கையை அல்லது கடன் வாங்கும் நடவடிக்கையை பின்வரும் நிபந்தனையை நிறைவ செய்யாமல் செயல்படுத்த முடியாது.
கம்பெனி பதிவு செய்யப்பட்ட 180 நாட்களுக்குள் அந்நிறுமத்தின் இயக்குநர் ஒருவர் நிறுமத்தின் Memorandumof Association (MOA) எனும் முதன்மை ஆவணத்தில் குறிப்பிடப்பட்டு உள்ள முதலீட்டாளர்கள் அனைவரும் தாங்கள் ஏற்றுக் கொண் டவாறு பங்கு மூலதனத் தொகையை செலுத்தி விட்டதாக அறிவிப்பு ஒன்றினை படிவம் எண் மிழிசி 20கி ஐ நிறுமங்களின் பதிவாளரிடம் சமர்ப்பிக்க வேண்டும். இந்த படிவத்தில் கம்பெனி செகரட்டரி அல்லது பட்டய கணக்காளர் கணக்காளர் ஆகியோரி ஒருவரிடம் சான்று பெற வேண்டும்.
கம்பெனிகளின் பதிவாளரிடம் அந் நிறுமத்திற்கான பதிவு அலுவலக சரி பார்ப்பு சான்றிதழை கம்பெனிகளின் சட்டம் 2013 பிரிவு 12(2) இன்படி நிறுமங்களின் பதிவாளரிடம் சமர்ப்பிக்க வேண்டும்
இந்த சட்டப் பிரிவில் குறிப்பிடப்பட்டு உள்ள நிபந்தனையை நிறைவு செய்யத் தவறினால் அந்த கம்பெனி ரூ.50 ஆயிரம் தண்டத் தொகையை செலுத்த நேரி டும். மேலும் நிபந் தனையை நிறைவ செய்யத் தவறிய ஒவ் வொருநாளிற்கும் நாளொன்றிற்கு ரூபாய் ஆயிரம் வீதம் அதிக பட்சம் ரூ. ஒரு இலட்சம் வரை தண்டத் தொகையாக அந்நிறுமத்தின் அலு வலர் கள் செலுத்த நேரிடும்
இந்த சட்டத்தின் பிரிவு (1)அ. படி கம்பெனி பதிவு செய்யப்பட்ட 180 நாட்களுக்குள் படிவம் எண் மிழிசி 20கி இன் வாயிலாக அறிவிப்பினை கம்பெனி களின் பதிவா ளரிடம் சமர்ப் பிக்கத் தவறினால், பதிவாளர் அந்த கம்பெனி எந்தவொரு வணிக
நடவடிக் கையையும் தொடங் கவில்லை அல்லது எந்தவொரு செய லையும் செய்யவில்லை என போதுமான கால அவகாசத்துடன் அவர் இதே சட்டம்பிரிவு (2) இற்கு பாதகமில்லாமல் அடுத்த கட்ட நடவடி க்கையாக கம்பெ னிகளின் சட்டம் 2013 அத்தியாயம் ஙீக்ஷிமிமிமி இன் கீழ் பராமரிக்கப்படும் கம்பெனிகளின் பதிவே ட்டில் இருந்து இந்த நிறுமத்தின் பெயரை நீக்கம் செய்வதற்கான நடவடிக்கையை செயல் படுத்தத் தொடங் குவார்.
-முனைவர் ச. குப்பன்