சுமார் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, சைனா அதிபர் திரு. சி ஜின்பிங்க் (Xi Jinping) அரசு, உலக பொருளாதாரத்தின் மீது, சைனாவின் உள்ளூர் பொருளாதாரம் ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்பதற்காக, ‘மேட்-இன் சைனா 2025’ என்ற தொழில் உத்தியை (Strategy) வகுத்தது. இதனால், அமெரிக்கா, முதன்மையாகக் கருதும் உடல்நலம் மற்றும் நலவாழ்வுத் துறையில் (ஹெல்த் கேர்) முதலீடு செய்ய சைனா முன்வந்தது.
2018 ஆம் ஆண்டில், உடல்நலம், உயிரிதொழில் நுட்பம் (பயோடெக்), ரியல் எஸ்டேட் மற்றும் பொழுதுபோக்குத் துறையில், சைனா அதிகளவில் அமெரி க்காவில் முதலீடு செய் திருந்தது. அமெரிக்கா – சைனா பொருளாதார மற்றும் பாதுகாப்பு திறனாய்வுக் குழுவின் (எக்கனாமிக் & செக்யூரிட்டி ரிவ்யூ கமிஷன்) அறிக்கை இதனை சுட்டிக் காட்டுகிறது.
அமெரிக்காவின் அந்நிய நாட்டு முதலீடுகளுக்கான குழுவானது (தி கமிட்டி ஆன் ஃபாரின் இன்வெஸ்ட்மென்ட் இன் யூஎஸ் – சுருக்கமாக சிஎப்அய் யூஎஸ்), அறிக்கையானது, கடந்த ஆண்டின் முடிவு வரை, உயிரி தொழில் நுட்பம் உள்ளடக்கிய, அறிவுசார் தொழில்
நுட்பத்தில் சைனாவின் பங்கு முக்கியமானது என்று சுட்டிக்காட்டி உள்ளது.
கடந்த 2018 ஆம் ஆண்டில், அமெரிக்காவின் ஐந்து தொழில்நுட்ப ஒப்பந்தங்களில், சைனாவின் முக்கிய நிறுவனங்கள் பங்கு பெற்று உள்ளன. ‘ஆசியா பிரைவேட் ஈக்வட்டி ரிவ்யூ’ என்ற குழு அறிக்கையின் படி, இது 349 மில்லியன் டாலராகும். இது 2017 இல் சைனாவின் ஒன்பது தொழில்நுட்ப பரிமாற்றங்களில் 602.4 மில்லியன் டாலர் முதலீட்டை விட குறைவுதான்.
2018 நில வரப்படி, ஏழு வகை யான மாபெரும் துணிகர முதலீடுகள் மற்றும் தனிப்பட்ட ஈக்விட்டி நிதிகள் அமெரிக்காவிலும் சைனாவிலும் ஒருங்கே செய்யப்பட்டு உள்ளன. இவற்றில் நான்கு நிறுவனங்கள் நலவாழ்வுத் (ஹெல்த்கேர்) துறையைத் தேர்ந்தெடுத்து உள்ளன.
மேலும் சைனாவின் உயிரி தொழில் நுட்ப நிறுவனங்களும், அமெரிக்க முதலீட்டில் முக்கிய பங்கு வகித்து வருகின்றன. இவை மருத்துவம் மற்றும் மரபியல் தகவல் (ஜெனட்டிக் டேட்டா) துறையில் பங்கேற்பு செய்துள்ளன.
-பைந்தமிழ் குமரன், வடக்கு சூரங்குடி