பத்துப் பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு முன்பு, நெட்ஃபிளிக்ஸ் சுமார் ஏழு மில்லியன் அமெரிக்க சந்தாதாரர்களுக்கு இணையம் மூலம் வீடியோ சேவை செய்வதுடன் தொடங்கியது. ஓரிரண்டு ஆண்டுகளிலேயே அது உலகம் முழுவதும் 93 மில்லியன் சந்தாதாரர்களை சென்றடைந்தது.
1990 களில் நெட்ஃபிளிக்ஸ் முதன்முதலில் அறிமுகம் செய்யப்பட்ட போது, அது மின்னஞ்சல் மூலம் வீடியோக்களை முக்கியமாக திரைப்படங்களை வழங்கியது. இது அந்தக் கால வீடியோ கேசட் வாடகை நிறுவனங்களை நினைவு படுத்துவதாக அமைந்து உள்ளது.
2000 ஆண்டுகளில் கம்ப்பிரஷன் தொழில் நுட்பம் அறிமுகமாகி, இன்னும் பல இல்லங்களுக்கு அதிக விரைவு இணைய சேவை கிடைக்கத் தொடங்கியது. இதனால் மிகப் பெரிய வீடியோ ஃபைல்களை எந்த தடையும் இல்லாமல் இணையம் மூலம் அனுப்பி வைக்க முடிந்தது.
இந்த இணைய முன்னேற்றம், நெட்ஃபிளிக்சின் தொழில் நுட்பப் பார்வையை மாற்ற வைத்தது. மெயில் மூலம் வீடியோ அனுப்பும் சேவை, பின்பு வீடியோ ஸ்டிரீமிங் சேவையாக மலர்ந்தது. இந்த வீடியோ ஸ்டிரீம் சேவை 2007 இல் அறிமுகம் செய்யப்பட்டது. விரைவிலேயே இத்தகைய ஸ்டிரீமிங் வர்த்தக உலகின் முக்கிய பகுதியாக மாறிப் போனது.
வெவ்வேறு மாதிரிகள், வெவ்வேறு உத்திகள்
ஆண்டுகள் கடந்தன. தொலைக்காட்சிகள் ஒளிபரப்பு அலைகள் (பிராட்காஸ்ட் வேவ்) மூலம் வழங்கப்பட்டன. இது புரட்சிகரமான தொழில் நுட்பம். இதனால் நாடு முழுவதும் வயர்லஸ் சிக்னலை தடையில்லாமல் அனுப்பி வைக்க முடிந்தது. ஆனால் ஒளிபரப்புத் தொழில் நுட்பத்தில் ஒரே ஒரு நிகழ்ச்சியையே ஒரு நேரத்தில் அனுப்பி வைக்க முடிந்தது என்பது குறிப்பிடத் தக்கது.
நெட்ஃபிளிக்ஸ் போன்ற வீடியோ ஸ்டிரீமிங் சேவையானது, இணையம் வழியாக ‘ஆன் டிமாண்ட்’ ப்ரோகிராம்களை வழங்கத் தொடங்கியது. இதனால் பார்வையாளர்கள் தாங்கள் விரும்பும் ப்ரோகிராமை எங்கு பார்க்க வேண்டும், எப்போது பார்க்க வேண்டும் என்பதை முடிவு செய்து தேர்ந்தெடுத்துக் கொள்ள முடியும். ஆனால் தொலைக்காட்சி ஒளிபரப்பில் அவர்கள் ஒளிபரப்பு செய்யும் நேரத்தில் மட்டுமே நிகழ்ச்சிகளைப் பார்வையிட முடியும் என்பது கவனிக்கத் தக்கது.
எனவே வழக்கமாக ஒளிபரப்பு செய்யும் சேனல்கள் தங்கள் அட்டவணையை வேறு விதமாக மேம்படுத்த வேண்டி இருந்தது. இப்போது பல நேரடி ஒளிபரப்பு சேனல்கள், ஒரே நிகழ்ச்சியையே, வெவ்வேறு நேரங்களில் மறு ஒளிபரப்பு செய்து வருகின்றன என்பது குறிப்பிடத் தக்கது.
ஒளிபரப்பு சேவைகளும், கேபிள் சேனல்களும் பார்வையாளர்களை, விளம்பர தாரர்களுக்கு விற்பனை செய்வதன் மூலம் பணம் ஈட்டி வருகின்றன. ஆனால், நெட்ஃபிளிக்ஸ் போன்றவை, இப்போது ஆன்லைனில் கிடைக்கும் மின்னணு நூலகம் போல செயல்பட்டு வருகின்றன. நெட்ஃ பிளிக்ஸ், அமேசான் வீடியோ மற்றும் சீசோ (seeso) போன்றவை சந்தாதாரர்களின் தொகையால் வருமானம் ஈட்டி வருகின்றன. பார்வையாளர்கள் இவர்களின் மின்னணு நூலகத்தைப் பயன்படுத்த மாதாமாதம் குறிப்பிட்ட தொகையை கட்ட வேண்டும்.
இவர்களின் நுட்பத்தை இப்போது எச்பிஓ (HBO) கூட பயன்படுத்தி வருகிறது. ஏற்கெனவே அந்தக் காலத்தில் இவர்கள் கேபிளில் ஒளிபரப்பிய எச்பிஓ ப்ரோ கிராம்கள், இப்போது வீடியோ ஆன் டிமாண்ட் மூலம் வாடிக்கையாளர்களுக்குக் கொடுத்து வருகின்றன.
வாடிக்கையாளர்களின் சந்தாத் தொகை யில் நடத்தப்படும் சேவைகள் இவ்வளவு வெற்றிபெறக் காரணம், தங்களது மாதத் தொகைக்குத் தகுதியான சேவையை வாடிக் கையாளர்களே தேர்ந்தெடுத்துக் கொள் ளலாம் என்பதே.
இதனால் ஒவ்வொரு ஷோவுக்கும் மாஸ் ஆடியன்சையும், அவர்களை வைத்து விளம்பரம் பெற, விளம்பரதாரர்களையும் தேடிப்பிடிக்க வேண்டிய அவசியம் இல்லை. தங்களுக்குக் கிடைத்த சந்தாதாரர்கள் மூலம், தகுந்த வருமானம் ஈட்டி விடுகின்றன.
இப்போது ஏராளமான போர்ட்டல்கள் மிகக் குறிப்பிட்ட வகை, அரிதான மதிப் பான நிகழ்ச்சிகளை சந்தா அடிப்படையில் கொடுக்கின்றன. குறிப்பாக WWW நெட்ஒர்க், விளையாட்டுப் போட்டிகள், முக்கியமா னவர்களின் நிகழ்ச்சிகள், அறிவியல் வெற்றியாளர்களின் நிகழ்ச்சிகள் மற்றும் விளம்பரம் இல்லாத நிகழ்ச்சிகளைக் கொடுத்து வருகின்றன. மேலும் இளம் குழந்தைகளுக்கு விளம்பரம் இல்லாத நிகழ்ச்சிகளை நோகின் (Noggin) சேனல் கொடுத்து வருகிறது.
இன்றும் கூட நெட்ஃபிளிக்சின் கொள்கை முழக்கம் ஒன்றுதான் “நமக்கு மொத்தமாக வெகு திரளான பார்வை யாளர்கள் தேவையில்லை. தனித் தனியான ஒவ்வொரு பார்வையாளரும் நமக்கு முக்கியம்”
பொதுப் பார்வையாளர்களை விட, தனி நபர்களின் விருப்பு வெறுப்பு மாறுபடுகிறது என்ற உளவியலை நெட்ஃபிளிக்ஸ் நன்கு அறிந்து வைத்து உள்ளதால், இன்று 93 மில்லியன் பார்வையாளர்களுடன் இன்று வெற்றிநடை போடுகிறது.
-ஹெலன் ஜெஸ்டின்