Latest Posts

மெக்காலே – பழமைவாதக் கல்வியின் பகைவன் – நூல் அறிமுகம்

- Advertisement -

நானும் அத்தகையதொரு மூடநம்பிக்கைக்குள் மூழ்கிக் கிடந்தவன்தான். என்னமோ இந்த மெக்காலே வந்துதான் நம்ம கல்விமுறையே பாழாய்ப் போன மாதிரி…

ஆனால் மெக்காலே மட்டும் இந்தக் கல்வி முறையை கொண்டுவராமல் போயிருந்தால் எந்த ஊர்ல…. எந்தத் தெருவுல திருவோட்டுடன் திரிந்திருப்பேன் என்பது அந்த வெள்ளையர்களுக்கே வெளிச்சம். அதனை இன்னும் வெளிச்சம் போட்டுக் காட்டிட வந்திருக்கிறது ஒரு புத்தகம். அதுதான் :
”மெக்காலே – பழமைவாதக் கல்வியின் பகைவன்.”
நண்பர் இரா. சுப்பிரமணி எழுதியது.
.
சரி…. இந்த ஆங்கிலேயர் வருவதற்கு முன்னர் நமது கல்விக்கூடங்கள் எந்த லட்சணத்தில் இருந்தன
என ஒருகணம் சிந்தித்துப் பார்த்தால் பல உண்மைகள் விளங்கும் நமக்கு.
அன்று கல்வி கற்க வேண்டும் என்றால்….ஒன்று :வேத பாடசாலைகள்.
அல்லது குருகுலப் பள்ளிகள்.

முதலாவதின் பக்கம் நாம் மழைக்குக்கூட ஒதுங்க முடியாது. இரண்டாவது வகைப் ”பள்ளிகள்”
எந்த லட்சணத்தில் இருந்தன என்பதற்கு சேரன்மாதேவியில் வ.வே.சு. ஐயர்
நடத்தி வந்த குருகுலமே சாட்சி. மாணவர்கள் உணவு உண்ணும் இடத்தில் கூட… அவாளுக்குத் தனிப் பந்தி…
இவாளுக்குத் தனிப் பந்தி…. என அநீதியாய் நடத்தப்பட்ட அந்த குருகுலத்திற்கு எதிராக எழுந்ததுதான் சேரன்மாதேவி குருகுல போராட்டம். மிகச்சரியாக 99 ஆண்டுகள் முன்பு நடந்த அந்த போராட்ட வரலாற்றை அறிந்தவர்களுக்குத் தெரியும் உண்மையில் குருகுலப் பள்ளிகள் என்பது என்ன?
அவை யாருக்கானவை? என்பது.

நாட்டு விடுதலைக்காக முன்நின்று ”போராடிய” வ.வே.சு.ஐயர் நடத்திய குருகுலப் பள்ளியே
இந்த யோக்யதையில் இருந்தது என்றால் மற்ற குருகுலப் பள்ளிகள் எந்த கதியில் இயங்கியிருக்கும் என்பதைச் சொல்லவே வேண்டியதில்லை. அதுவும் அதற்கு நூறாண்டுகளுக்கு முன்னர் என்றால்….?

வணிகனாய் வேடமிட்டு வந்த வெள்ளையன் நம்மை வளைத்த கதையையும் அதனால் பட்டபாடுகளையும் நாம் ஏற்கெனவே பாடப் புத்தகங்களில் படித்திருப்போம்.அதையும் தாண்டி அவர்கள் கொண்டு வந்த
சிற்சில சீர்திருத்தங்களையும்அதனால் ஏற்பட்ட சமூக மாற்றங்களையும் மறந்து விட்டு ஆங்கிலேயர்களைக் கணித்து விட முடியாது.
.
”சதி” தொடங்கி “சாரதா” சட்டம் வரையிலும் அவர்களால் உண்டான மாற்றங்களையும் நாம் குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது. தமிழகத்தில் பெரும்பாலானோர் தொடாத இந்தப் பக்கத்தைத் தோண்டி துருவி ஆய்ந்து எடுத்து நமக்கு அளித்திருக்கிறார் பெரியார் பல்கலைக் கழகப் பேராசிரியரான நம் நண்பர்.

”யார் இந்த மெக்காலே தெரியுமா… இரத்தத்தாலும் நிறத்தாலும் இந்தியர்களாகவும்… எண்ணத்தால் வெள்ளையர்களாகவும் நம்மை மாற்றி வெறும் குமாஸ்தாக்களாக உருமாற்ற கொண்டு வந்த திட்டம்தான் இந்த மெக்காலே கல்வித் திட்டம்….” என்று மெக்காலேவின் முதல் பகுதியை மட்டும் உருமாற்றி “நீட்”டிமுழங்குவார்கள்….

ஆனால்… “இந்த நாட்டுத் தாய்மொழிகளைச் செழுமைப்படுத்தி அவர்களுக்குக் கையளிப்போம். மேல்நாட்டுப் பெயரீட்டு முறைகளில் இருந்து அறிவியல் சொற்களைக் கடன் பெற்று
நாம் இந்த மக்களுக்கு வழங்குவோம். அது அவர்களின் மொழிகளின் ஊடாக வளமான அறிவைக் கொண்டு சேர்க்கும் ஊர்தியாக மாறும். படிப்படியாக மாபெரும் மக்கள்திரளுக்கு
செலுத்தும் பொருத்தமான வாகனமாக அதை அவர்கள் பயன்படுத்தட்டும்.” என்கிற மெக்காலேவின் பிற்பகுதியை இருட்டடிப்பு செய்து விடுவார்கள்.

இந்தக் கல்வி முறை ஆபத்தானது என்று இங்கு மட்டுமல்ல…. பிரிட்டன் மண்ணிலும் எதிர்ப்புக் குரல்கள் ஓங்கி ஒலித்தன. ”ஆங்கிலத்தையும்…. அதன் மூலம் அறிவியலையும்… தொழில் நுட்பங்களையும்…. இந்தியர்களுக்குக் கற்றுக் கொடுப்பது என்பது நமக்கே நாம் வைத்துக் கொள்ளும் ஆப்பு” என்று அங்கிருந்தோரும்…. “கண்டவனெல்லாம் படிக்க வந்துட்டா நம்மவா கதி என்னாகிறது?” என்று இங்கிருந்தோரும் ஒருசேர எதிர்த்ததுதான் மெக்காலே கல்வித் திட்டம்.

”நாம் இதனை நியாயமாகவும், பொறுமையோடும் செயல்படுத்த வேண்டும்.
அப்படிச் செயல்படுத்தினால் மகிழ்ச்சியான நல்லதொரு மாற்றத்தை நம்மால் காணமுடியும்.
அந்த மாற்றம் நமக்கான பயன்களை அளிக்கக் கூடியதாகவும் ஆதாயம் தரக்கூடியதாகவும் இருக்கும்” என்று மெக்காலேவுக்கு முன்பு… 1793 ஆம் ஆண்டே ஆங்கிலேய அரசுக்கு அறிக்கை அளிக்கிறார் சார்லஸ் கிராண்ட்.

மெக்காலேவின் இக்கல்வித் திட்டத்தை ராஜாராம் மோகன்ராய் உட்பட பலர் வரவேற்றதையும்….இந்திய தண்டனைச் சட்டம் உருவாக்கத்தில் மெக்காலேவின் பங்களிப்பினையும்…இக்கல்வித்திட்டத்திற்கு ஆதரவாகவும் எதிராகவும் இந்தியாவிலும் பிரிட்டனிலும் ஒலித்த குரல்கள் குறித்தும்… எண்ணற்ற தகவல்களைச் சொல்கிறது :
சாளரம் வெளியீடாக வந்திருக்கும்
“மெக்காலே
(பழமைவாதக் கல்வியின் பகைவன்)”
என்கிற இந்நூல். நம்மிடம் மட்டுமல்ல
நம் நண்பர்கள் அனைவரிடமும் இருக்க வேண்டிய வரலாற்று ஆவணம் இது.

இந்த புத்தகத்துக்காக
நீங்க போட்டுத் தாக்க வேண்டிய எண் : 8248338118

May be an image of 1 person and text that says 'மெக்காலே பழமைவாதக் கல்வியின் பகைவன் இரா. சுப்பிரமணி'

– எழிற்கோ பாமரன் சண்முகசுந்தரம்

- Advertisement -

Latest Posts

Don't Miss

[tdn_block_newsletter_subscribe title_text="Stay in touch" description="U3Vic2NyaWJlJTIwdG8lMjBvdXIlMjBsYXRlc3QlMjBuZXdz" input_placeholder="Email address" tds_newsletter2-image="5" tds_newsletter2-image_bg_color="#c3ecff" tds_newsletter3-input_bar_display="row" tds_newsletter4-image="6" tds_newsletter4-image_bg_color="#fffbcf" tds_newsletter4-btn_bg_color="#f3b700" tds_newsletter4-check_accent="#f3b700" tds_newsletter5-tdicon="tdc-font-fa tdc-font-fa-envelope-o" tds_newsletter5-btn_bg_color="#000000" tds_newsletter5-btn_bg_color_hover="#4db2ec" tds_newsletter5-check_accent="#000000" tds_newsletter6-input_bar_display="row" tds_newsletter6-btn_bg_color="#da1414" tds_newsletter6-check_accent="#da1414" tds_newsletter7-image="7" tds_newsletter7-btn_bg_color="#1c69ad" tds_newsletter7-check_accent="#1c69ad" tds_newsletter7-f_title_font_size="20" tds_newsletter7-f_title_font_line_height="28px" tds_newsletter8-input_bar_display="row" tds_newsletter8-btn_bg_color="#00649e" tds_newsletter8-btn_bg_color_hover="#21709e" tds_newsletter8-check_accent="#00649e" embedded_form_code="JTNDIS0tJTIwQmVnaW4lMjBNYWlsY2hpbXAlMjBTaWdudXAlMjBGb3JtJTIwLS0lM0UlMEElM0NsaW5rJTIwaHJlZiUzRCUyMiUyRiUyRmNkbi1pbWFnZXMubWFpbGNoaW1wLmNvbSUyRmVtYmVkY29kZSUyRmNsYXNzaWMtMTBfNy5jc3MlMjIlMjByZWwlM0QlMjJzdHlsZXNoZWV0JTIyJTIwdHlwZSUzRCUyMnRleHQlMkZjc3MlMjIlM0UlMEElM0NzdHlsZSUyMHR5cGUlM0QlMjJ0ZXh0JTJGY3NzJTIyJTNFJTBBJTA5JTIzbWNfZW1iZWRfc2lnbnVwJTdCYmFja2dyb3VuZCUzQSUyM2ZmZiUzQiUyMGNsZWFyJTNBbGVmdCUzQiUyMGZvbnQlM0ExNHB4JTIwSGVsdmV0aWNhJTJDQXJpYWwlMkNzYW5zLXNlcmlmJTNCJTIwJTdEJTBBJTA5JTJGKiUyMEFkZCUyMHlvdXIlMjBvd24lMjBNYWlsY2hpbXAlMjBmb3JtJTIwc3R5bGUlMjBvdmVycmlkZXMlMjBpbiUyMHlvdXIlMjBzaXRlJTIwc3R5bGVzaGVldCUyMG9yJTIwaW4lMjB0aGlzJTIwc3R5bGUlMjBibG9jay4lMEElMDklMjAlMjAlMjBXZSUyMHJlY29tbWVuZCUyMG1vdmluZyUyMHRoaXMlMjBibG9jayUyMGFuZCUyMHRoZSUyMHByZWNlZGluZyUyMENTUyUyMGxpbmslMjB0byUyMHRoZSUyMEhFQUQlMjBvZiUyMHlvdXIlMjBIVE1MJTIwZmlsZS4lMjAqJTJGJTBBJTNDJTJGc3R5bGUlM0UlMEElM0NkaXYlMjBpZCUzRCUyMm1jX2VtYmVkX3NpZ251cCUyMiUzRSUwQSUzQ2Zvcm0lMjBhY3Rpb24lM0QlMjJodHRwcyUzQSUyRiUyRlZhbGFyLnVzMi5saXN0LW1hbmFnZS5jb20lMkZzdWJzY3JpYmUlMkZwb3N0JTNGdSUzRGJiNTM2ZDNlMDlmMDk5MGYzOTNkYTAwYzElMjZhbXAlM0JpZCUzRGZiZDdiNDU3MzYlMjIlMjBtZXRob2QlM0QlMjJwb3N0JTIyJTIwaWQlM0QlMjJtYy1lbWJlZGRlZC1zdWJzY3JpYmUtZm9ybSUyMiUyMG5hbWUlM0QlMjJtYy1lbWJlZGRlZC1zdWJzY3JpYmUtZm9ybSUyMiUyMGNsYXNzJTNEJTIydmFsaWRhdGUlMjIlMjB0YXJnZXQlM0QlMjJfYmxhbmslMjIlMjBub3ZhbGlkYXRlJTNFJTBBJTIwJTIwJTIwJTIwJTNDZGl2JTIwaWQlM0QlMjJtY19lbWJlZF9zaWdudXBfc2Nyb2xsJTIyJTNFJTBBJTA5JTNDaDIlM0VTdWJzY3JpYmUlM0MlMkZoMiUzRSUwQSUzQ2RpdiUyMGNsYXNzJTNEJTIyaW5kaWNhdGVzLXJlcXVpcmVkJTIyJTNFJTNDc3BhbiUyMGNsYXNzJTNEJTIyYXN0ZXJpc2slMjIlM0UqJTNDJTJGc3BhbiUzRSUyMGluZGljYXRlcyUyMHJlcXVpcmVkJTNDJTJGZGl2JTNFJTBBJTNDZGl2JTIwY2xhc3MlM0QlMjJtYy1maWVsZC1ncm91cCUyMiUzRSUwQSUwOSUzQ2xhYmVsJTIwZm9yJTNEJTIybWNlLUVNQUlMJTIyJTNFRW1haWwlMjBBZGRyZXNzJTIwJTIwJTNDc3BhbiUyMGNsYXNzJTNEJTIyYXN0ZXJpc2slMjIlM0UqJTNDJTJGc3BhbiUzRSUwQSUzQyUyRmxhYmVsJTNFJTBBJTA5JTNDaW5wdXQlMjB0eXBlJTNEJTIyZW1haWwlMjIlMjB2YWx1ZSUzRCUyMiUyMiUyMG5hbWUlM0QlMjJFTUFJTCUyMiUyMGNsYXNzJTNEJTIycmVxdWlyZWQlMjBlbWFpbCUyMiUyMGlkJTNEJTIybWNlLUVNQUlMJTIyJTNFJTBBJTNDJTJGZGl2JTNFJTBBJTA5JTNDZGl2JTIwaWQlM0QlMjJtY2UtcmVzcG9uc2VzJTIyJTIwY2xhc3MlM0QlMjJjbGVhciUyMiUzRSUwQSUwOSUwOSUzQ2RpdiUyMGNsYXNzJTNEJTIycmVzcG9uc2UlMjIlMjBpZCUzRCUyMm1jZS1lcnJvci1yZXNwb25zZSUyMiUyMHN0eWxlJTNEJTIyZGlzcGxheSUzQW5vbmUlMjIlM0UlM0MlMkZkaXYlM0UlMEElMDklMDklM0NkaXYlMjBjbGFzcyUzRCUyMnJlc3BvbnNlJTIyJTIwaWQlM0QlMjJtY2Utc3VjY2Vzcy1yZXNwb25zZSUyMiUyMHN0eWxlJTNEJTIyZGlzcGxheSUzQW5vbmUlMjIlM0UlM0MlMkZkaXYlM0UlMEElMDklM0MlMkZkaXYlM0UlMjAlMjAlMjAlMjAlM0MhLS0lMjByZWFsJTIwcGVvcGxlJTIwc2hvdWxkJTIwbm90JTIwZmlsbCUyMHRoaXMlMjBpbiUyMGFuZCUyMGV4cGVjdCUyMGdvb2QlMjB0aGluZ3MlMjAtJTIwZG8lMjBub3QlMjByZW1vdmUlMjB0aGlzJTIwb3IlMjByaXNrJTIwZm9ybSUyMGJvdCUyMHNpZ251cHMtLSUzRSUwQSUyMCUyMCUyMCUyMCUzQ2RpdiUyMHN0eWxlJTNEJTIycG9zaXRpb24lM0ElMjBhYnNvbHV0ZSUzQiUyMGxlZnQlM0ElMjAtNTAwMHB4JTNCJTIyJTIwYXJpYS1oaWRkZW4lM0QlMjJ0cnVlJTIyJTNFJTNDaW5wdXQlMjB0eXBlJTNEJTIydGV4dCUyMiUyMG5hbWUlM0QlMjJiX2JiNTM2ZDNlMDlmMDk5MGYzOTNkYTAwYzFfZmJkN2I0NTczNiUyMiUyMHRhYmluZGV4JTNEJTIyLTElMjIlMjB2YWx1ZSUzRCUyMiUyMiUzRSUzQyUyRmRpdiUzRSUwQSUyMCUyMCUyMCUyMCUzQ2RpdiUyMGNsYXNzJTNEJTIyY2xlYXIlMjIlM0UlM0NpbnB1dCUyMHR5cGUlM0QlMjJzdWJtaXQlMjIlMjB2YWx1ZSUzRCUyMlN1YnNjcmliZSUyMiUyMG5hbWUlM0QlMjJzdWJzY3JpYmUlMjIlMjBpZCUzRCUyMm1jLWVtYmVkZGVkLXN1YnNjcmliZSUyMiUyMGNsYXNzJTNEJTIyYnV0dG9uJTIyJTNFJTNDJTJGZGl2JTNFJTBBJTIwJTIwJTIwJTIwJTNDJTJGZGl2JTNFJTBBJTNDJTJGZm9ybSUzRSUwQSUzQyUyRmRpdiUzRSUwQSUzQ3NjcmlwdCUyMHR5cGUlM0QndGV4dCUyRmphdmFzY3JpcHQnJTIwc3JjJTNEJyUyRiUyRnMzLmFtYXpvbmF3cy5jb20lMkZkb3dubG9hZHMubWFpbGNoaW1wLmNvbSUyRmpzJTJGbWMtdmFsaWRhdGUuanMnJTNFJTNDJTJGc2NyaXB0JTNFJTNDc2NyaXB0JTIwdHlwZSUzRCd0ZXh0JTJGamF2YXNjcmlwdCclM0UoZnVuY3Rpb24oJTI0KSUyMCU3QndpbmRvdy5mbmFtZXMlMjAlM0QlMjBuZXclMjBBcnJheSgpJTNCJTIwd2luZG93LmZ0eXBlcyUyMCUzRCUyMG5ldyUyMEFycmF5KCklM0JmbmFtZXMlNUIwJTVEJTNEJ0VNQUlMJyUzQmZ0eXBlcyU1QjAlNUQlM0QnZW1haWwnJTNCZm5hbWVzJTVCMSU1RCUzRCdGTkFNRSclM0JmdHlwZXMlNUIxJTVEJTNEJ3RleHQnJTNCZm5hbWVzJTVCMiU1RCUzRCdMTkFNRSclM0JmdHlwZXMlNUIyJTVEJTNEJ3RleHQnJTNCZm5hbWVzJTVCMyU1RCUzRCdBRERSRVNTJyUzQmZ0eXBlcyU1QjMlNUQlM0QnYWRkcmVzcyclM0JmbmFtZXMlNUI0JTVEJTNEJ1BIT05FJyUzQmZ0eXBlcyU1QjQlNUQlM0QncGhvbmUnJTNCZm5hbWVzJTVCNSU1RCUzRCdCSVJUSERBWSclM0JmdHlwZXMlNUI1JTVEJTNEJ2JpcnRoZGF5JyUzQiU3RChqUXVlcnkpKSUzQnZhciUyMCUyNG1jaiUyMCUzRCUyMGpRdWVyeS5ub0NvbmZsaWN0KHRydWUpJTNCJTNDJTJGc2NyaXB0JTNFJTBBJTNDIS0tRW5kJTIwbWNfZW1iZWRfc2lnbnVwLS0lM0U=" descr_space="eyJhbGwiOiIxNSIsImxhbmRzY2FwZSI6IjE1In0=" tds_newsletter="tds_newsletter3" tds_newsletter3-all_border_width="0" btn_text="Sign up" tds_newsletter3-btn_bg_color="#ea1717" tds_newsletter3-btn_bg_color_hover="#000000" tds_newsletter3-btn_border_size="0" tdc_css="eyJhbGwiOnsibWFyZ2luLWJvdHRvbSI6IjAiLCJiYWNrZ3JvdW5kLWNvbG9yIjoiI2E3ZTBlNSIsImRpc3BsYXkiOiIifSwicG9ydHJhaXQiOnsiZGlzcGxheSI6IiJ9LCJwb3J0cmFpdF9tYXhfd2lkdGgiOjEwMTgsInBvcnRyYWl0X21pbl93aWR0aCI6NzY4fQ==" tds_newsletter3-input_border_size="0" tds_newsletter3-f_title_font_family="445" tds_newsletter3-f_title_font_transform="uppercase" tds_newsletter3-f_descr_font_family="394" tds_newsletter3-f_descr_font_size="eyJhbGwiOiIxMiIsInBvcnRyYWl0IjoiMTEifQ==" tds_newsletter3-f_descr_font_line_height="eyJhbGwiOiIxLjYiLCJwb3J0cmFpdCI6IjEuNCJ9" tds_newsletter3-title_color="#000000" tds_newsletter3-description_color="#000000" tds_newsletter3-f_title_font_weight="600" tds_newsletter3-f_title_font_size="eyJhbGwiOiIyMCIsImxhbmRzY2FwZSI6IjE4IiwicG9ydHJhaXQiOiIxNiJ9" tds_newsletter3-f_input_font_family="394" tds_newsletter3-f_btn_font_family="" tds_newsletter3-f_btn_font_transform="uppercase" tds_newsletter3-f_title_font_line_height="1" title_space="eyJsYW5kc2NhcGUiOiIxMCJ9"]