சமையல், அழகு சாதனங்கள் தயாரிப்பு, இனிப்பு வகைகளை தயாரிப்பதற்கு, நொறுக்குத் தீனி வகைகளை பொரிப்பதற்கு, சோப்பு, சலவை, பயோடீசல் தயாரிப்பில்.. என்று பாம் ஆயில் பல வகைகளில் பயன்படுத்தப் படுகிறது. இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா, துருக்கி போன்ற நாடுகள், பாம்ஆயிலை இறக்குமதி செய்து வெகுவாகப் பயன்படுத்துகின்றன. மலேசியாவும், இந்தோனேசியாவும் மட்டுமே பாம்ஆயில் உற்பத்தி செய்யும் நாடுகளில் முன்னணி வகிக்கின்றன.
ஆகஸ்ட் 2015-ல் ஒரு டன்னுக்கு 2800 ரிங்கிட் என கடுமையான நெருக்கடிக்கு இடையே மலேசியா பாம் ஆயில் விலையை எட்டியது. அதே வேளையில் இந்தியாவிலும் விலை உயர்ந்து 10 கிலோ பாம்ஆயில் ரூபாய் 360ல் இருந்து ரூபாய் 560க்கு உயர்ந்தது.
இந்தோனேசியா தனது பாம்ஆயில் உற்பத்தியை 2010-ல் நிறுத்தி விட்டதாலும், 2011-ல் ஒரு டன் பாம் ஆயில் விலை 3000 ரிங்கிட் ஆக உயர்ந்தது. சராசரி விலையாக டன் ஒன்றுக்கு 3219 ரிங்கிட் ஆக மலேசிய சந்தையில் பாம்ஆயில் விற்றது.
Also read: நான்கே மாதங்களில் உடல் எடை குறையும்
எகிப்து, பாகிஸ்தான் பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகள், தங்கள் பாம்ஆயில் தேவையை குறைத்துக் கொண்டதால், அதன் விலை படிப்படியாக 2012-ல் 2764 ரிங்கிட் ஆகவும், 2013-ல் 2371 ரிங்கிட் ஆகவும் வீழ்ச்சி அடைந்தது. சீனா சோயாஆயில், ரேப்சீட் ஆயில் (கடுகு வகை) போன்றவற்றிற்கு மாறியதால் பாம்ஆயில் விலை டன் ஒன்றுக்கு 2153 ரிங்கிட் ஆக 2015-ல் குறைந்தது.
அசாதாரன பருவ நிலை மாற்றத்தால், 2016-ல் பாம்ஆயில் உற்பத்தி பதினைந்து விழுக்காடு குறைந்து அதன் விலையில் உயர்வு ஏற்பட்டது என மலேசிய பாம் ஆயில் கழகம் பதிவு செய்து உள்ளது. சீனாவும், இந்தியாவும் தமது விழாக்கால தேவைகளுக்குப் பாம் ஆயிலை அதிகமாக பயன்படுத்துவதால், அந்த நேரங்களில் பாம் ஆயில் விலையும் உயரும். கொரோனா பாதிப்பு காரணமாக தொடர்ந்து பெரிய அளவில் விலையில் மாற்றம் இல்லாமல் இருக்கிறது. இப்போது கச்சா பாம் ஆயில் மலேசியாவில் டன்னுக்கு 2651 ரிங்கிட்டுகளாக உள்ளது. இந்திய ரூபாயில் 10 கிலோ கச்சா பாம் ஆயில் விலை ரூ.678 ஆக உள்ளது. சுத்திகரிக்கப்பட்ட பாம் ஆயில் ரூ.70 என்ற அளவில் விற்பனை ஆகிறது.
-முத்து செல்வராஜா