Latest Posts

மேலாளர்கள் சிறப்பாக செயல்பட இந்த ஆலோசனைகள் உதவும்

- Advertisement -

சிறப்பாக செயல்படும் மேலாளர், அவருக்குக் கிடைக்கக் கூடிய வளங்களை எப்போதும் அறிந்திருப்பது மட்டுமன்றி அவற்றை அருமையாக பயன்படுத்தவும் முயற்சி மேற்கொள்வார்.
இத்தகைய வளங்களுள் அடங்குவன –
நிதி
நிலைச் சொத்துகள்
பணியாற்றுபவர்கள்
இருப்புச் சரக்கு
பணி முறைகள்
சந்தைத் தந்திரம்
நேரம்
இவற்றுள் எதையாவது தவறாக நிருவகித்தால் அது கடுமையான சிக்கல்களை உருவாக்கும் என்பதை மேலாளர் நன்கு அறிந்து இருத்தல் வேண்டும்.

நிதி மேலாண்மை
நிதி மேலாண்மை என்பது, கொடுக்கப்பட்ட தொகை அல்லது வளங்களில் இருந்து அதிக அளவு நன்மையை நிறுவனத்திற்கு ஏற்படுத்துவது ஆகும்.

இதில் உட்பட்டவை:
முதலீடு தோற்றுவித்தல்
சாதாரண முதலீடு மற்றும் கடன் ஆகியவற்றின் கலவை வீதத்தை நிருணயித்தல்
மாற்று முதலீட்டு வாய்ப்புகளில் முடிவெடுத்தல்
இலாபப் பங்குக் கொள்கைகான அடிப்படையைப் பரிந்து உரைத்தல்

இதில் நிர்ணயிக்கப் படுபவை:
ஒரு வணிகத்தில் எந்த அளவு சொத்துகளை மொத்தத்தில் கைக்கொண்டு பராமரிக்க வேண்டும்.
இந்தச் சொத்துகள் எந்த வடிவத்தில் அமைய வேண்டும்.
இந்த நோக்கத்திற்குத் தேவையான மொத்த நிதித் தேவை எந்த வகையில் நிறைவு செய்யப்பட வேண்டும்.
நிதி மேலாண்மையின் கடினப் பகுதியானது நிறுவனத்தின் வரவு – செலவுத் திட்டத்தை வடிவமைப்பதாகும். வரவு – செலவுத் திட்டம் என்பது திட்டத்தைப் பண அளவிலும் நேர அளவிலும் முடிவு செய்வது ஆகும்.
இவற்றைப் பின்னர் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் ஒப்பிட்டுப் பார்க்கப் பயன் படுத்தலாம். வேறுபாடுகளை எப்படிக் கையாண்டு சிறந்த முடிவுகளை எட்ட முடியும் என்பது நிருவாகத் திறமைக்குரிய தொடர்ச்சியான சோதனையாகும்.
வரவு – செலவுத் திட்டத் தயாரிப்பு என்பது பெரிதும் வணிகத்தின் தன்மையைப் பொறுத்து அமையும். எடுத்துக் காட்டாகக் கீழ்க்கண்டவற்றின் அடிப்படையில் அமையலாம்.

வணிகம் ஈட்டக்கூடிய வருவாய் அளவை முடிவு செய்தல்
விற்பனை, அகவிலை, இலாபம் ஆகியவற்றின் கடந்த காலச் சாதனையின் நீட்டிப்பு
கடந்த காலச் சாதனையின் அடிப்படையில் முன் அளவீட்டு இலாபத்துடன் தற்போது

திட்டமிட்டு உள்ள இலாபத்தைச் சரிக்கட்டுதல்.
வரவு – செலவுக் கட்டுப்பாட்டு ஏடுகள், குறிக்கோள்களை அடைவதற்கான முன்னேற்றத்தைப் பதிவு செய்யும் அறிக்கைகளாகும். அகவிலை பற்றிய தகவல்களையும், இலக்கங்களையும் இவை அறிவித்தாலும், இவை அடிக்கடி மனிதர்களால் விளைவிக்கப் படுபவை என்பதை நினைவு கொள்ள வேண்டும்.
அடிப்படையான நிதிக்கட்டுப்பாட்டுக் களங்களுள் தொடர்ந்த சோதனைக்குக் கீழ்க்கண்டவை உட்பட்டிருக்க வேண்டும்: அகவிலை, விற்பனை, பிற வருவாய்கள், பண்டகச் சுழற்சி, கடன் கட்டுப்பாடு, கைப்பண இருப்பு நிலை, முதலீட்டின் மீது வருவாய், மொத்த லாபம், நிகர லாபம், அங்காடி நிலை.

பொதுத் துறையில் வற்புறுத்தப்படுவது வேறு. இங்குக் கவனத்திற்கு உரியவை:

  • ஒரு குறிப்பிட்ட பொதுக்கொள்கையின் குறிக்கோள்களைக் கண்டு கொள்ளுதல்
    இத்தகைய குறிக்கோள்களை அடைவதற்குத் தேவையான செயல் திட்டங்களை விளக்குதல்.
  • இத்திட்டங்களுக்கான செலவுகளின் முன்னளவீடு தயாரித்தல்
  • கிடைக்கக் கூடிய நிதி அளவுடன் இம் முன்னளவீடுகளைத் தொடர்பு படுத்தித் தேவைப்பட்ட அளவுக்குப் பொருந்த வைத்தல்.
  • செலவினங்களை வரவு – செலவுத் திட்டத்திற்குப் பொருந்த வைத்தல்.
  • செயல் திட்டங்களையும், நிதித் திட்டங்களையும் பொதுவான பொருளாதாரக் குறிக்கோள்களுடன் தொடர்பு படுத்தல்.
  • தேவையான கட்டுப்பாட்டுச் சோதனைகளை ஏற்படுத்தல்.

கிடைக்கக் கூடிய நிதியுதவி அளவின் எல்லையை உணர்ந்து, அதிலிருந்து குறிக்கோள்களையொட்டி உச்ச அளவு வருவாயை உறுதிப்படுத்துவது என்ற பொதுவான அடிப்படைக் கூறு இரு துறைகளுக்குமே பொருந்துவதாகும்.

பெறப்படும் வருவாய் ஈட்டம் தொடர்புடைய எல்லாக் காரணிகளையும்- பணவீக்கம் உட்பட- கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

நிலைச் சொத்துகள்
பொதுவாகக் கட்டிடங்கள், ஆலை, தளவாடங்கள், ஊர்திகள் என்று விவரிக்கப்படுபவை – நிறுவனத்திற்கு எதிர்காலத்தில் நன்மை ஈட்டும் என்று எதிர்பார்க்கக் கூடிய அனைத்துப் பொருளாதார வளமைக் கூறுகளையும் குறிக்கும்.
இத்தலைப்புகளில் அதிகமான அளவில் குறிப்பிடத்தக்க இனங்கள் உள்ளன. இவை மேலாளரின் குறைவு படாத கவனத்துக்கு உரியவை. இவற்றுள் சிலவற்றைத் தேர்வு செய்தோமானால் அவை செலவுகளைக் கணிசமான அளவு அதிகரிக்கக் கூடிய இயல்புடைய அகவிலை இனங்களைக் காட்டும்.

கட்டிடங்கள்
ஒவ்வொரு ஆண்டிலும் இவற்றிற்கான செலவு எவ்வளவு?
இடவசதி மொத்தமும் முழுமையாகப் பயன்படுத்தப் படுகிறதா?
இன்னும் சிறப்பாக இதை எப்படிப் பயன்படுத்த முடியும்?
சொந்தமாக உரிமை படைத்திருப்பது சிக்கனமா அல்லது வாடகைக்கு எடுப்பது சிக்கனமா? இருப்பதை விற்றுவிட்டுப் பின்னர் அதையே வாடகைக்குப் பெறுவது சிக்கனமா?
உபரியாக உள்ள இடவசதியைக் காலி செய்து விடலாமா அல்லது வாடகைக்கு விடலாமா?

ஆலையும், தளவாடங்களும்
சொந்தமாக இருக்கவேண்டுமா, அல்லது வாடகைக்கு எடுக்கலாமா?
ஒவ்வொரு இனமும் பொருள் சிக்கனத்துடன் பயன்படுத்தப் படுகிறதா?
திட்டமிட்ட பராமரிப்பு உள்ளதா?
உபரிகளின் மதிப்பு என்ன?
புதுப்பித்தல் பற்றிய கொள்கை என்ன?
எந்திரங்களை இயக்கும் அனைவரும் முறையாகப் பயிற்சி பெற்றவர்களா?
கிடப்பு நேரம் அல்லது காத்திருக்கும் நேரத்தின் விழுக்காடும், செலவும் என்ன?

ஊர்திகள்
ஊர்திகளின் ஒப்பிடக் கூடிய மொத்த இயக்கச் செலவு எவ்வளவு?
ஒரு குறிப்பிட்ட கால அளவில், பராமரிப்பு உட்பட ஆன மொத்தச் செலவின் அடிப்படையில், ஒவ்வொரு ஊர்தியையும் பராமரிப்பது நியாயப் படுத்தப்படுகிறதா? வேறு மாற்றுகள் என்ன?
ஊர்திகளைத் தொகுதியாகப் பராமரிப்பது நன்மை பயக்குமா?
இந்த வரிசையில் இருந்து, உங்கள் இயக்கங்களுக்குப் பொருத்தமான பிற தலைப்புகள் உங்கள் எண்ணத்தில் உதிக்கும் என்பதில் ஐயமில்லை. உங்கள் வணிகத்தின் மொத்த இலாபம் அல்லது இழப்புக்கும், செலவுச் சிக்கனத்துக்கும் இடையே உள்ள வேற்றுமையை இது விளக்கும். இந்தக் களங்களில் பொதுச் செலவுகளும் கவனமாகக் கண்காணிக்கப்பட வேண்டும்.

பணியாற்றுபவர்கள்
செயலாற்ற வேண்டிய நடவடிக்கைகளின் இயல்புக்குப் பொருத்தமாகப் பணியமைப்புத் தன்மை இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
விளக்கப்பட்ட குறிக்கோள்களை அடைவதற்குப் பணியாற்றும் நபர்களிடையே உள்ள உறவு முறைகளின் பின்னல் ஒன்று பணி அமைப்பை விவரிக்கலாம். அதனுடைய அமைப்பு பல்வேறு வடிவங்களை எடுக்கலாம். வழிவழி வழக்கிலுள்ள முறையான பணியமைப்பு என்பது குடும்ப மரம் அல்லது வரிசை முறை எடுத்துக்காட்டு ஆகும்.

இது சார்பணியாளர் மீது மேற்பார்வையாளருக்கு உள்ள திட்டமிட்ட அதிகாரத்தை விளக்குவதாகும். இது தேவையான கொள்கைகளை உருவாக்கும் வழிமுறைகளின் அடிப்படையில் உருவானதாகும். அதிகாரத்தின் போக்கு மேலிருந்து கீழாகத் தெளிவாக்கப்பட்ட வழித் தொடர்பு மூலமாகச் செல்கிறது. இதை ஆதிக்கத் தொடர் எனலாம். தகவல் தொடர்பும் இவ்வாறே மேலிருந்து கீழாகச் செல்லும்.

ஒரே மாதிரியான பணிகளைச் செய்யும் பணியாளர்கள் ஒன்றாய் இணைந்து, முறையான பணி அமைப்பில் இருந்து அதிகமான மாறுபாடின்றிப் பணி செய்யும் தேவையைச் செயல்முறைப் பணி அமைப்பு வலியுறுத்துகிறது.

எடுத்துக் காட்டாகத் தலைமை அலுவலகப் பண்டக மேலாளர், மாவட்ட அலுவலகப் பண்டக அலுவலருடன் நேரடியாக நடவடிக்கை மேற்கொள்வதைக் கூறலாம். பணியின் இயல்பைப் பொறுத்து இவ்வமைப்பில் வலுவும் இருக்கலாம்; வலுக்குறைவும் இருக்கலாம்.

Also read:கார்ப்பரேட் மேலாளர்களுக்குத் தேவையான அடிப்படைப் புரிதல்கள்

பணி அமைப்பு நெறிகள் சிக்கலானவை என்றாலும் மற்றும் இரு அமைப்புகள் கருதுதலுக்கு உரியவை. முதலாவது தனிப்பட்டப் பணியமைப்பு. குறிப்பிட்ட காரணங்களுக்காகப் பணி அமர்த்தப் பட்ட தலைமையின் கீழ் தனித்திறமைப் பணியாளர்களை ஒன்று படுத்திச் செயற்குழுக்களை ஏற்படுத்தி இப்பணியமைப்பு செயல்படுகிறது. தனித் திட்டம் நிறைவுற்றதும் இப்பணியாளர்கள் தங்கள் மூல நிலைகளுக்குத் திரும்பச் சென்று விடுவர்.

இதிலிருந்து மற்றொரு அமைப்பும் உருப்பெறும். இதன் பெயர் அணிக்கோவைப் பணி அமைப்பு என்பதாகும். இருக்கக் கூடிய பணி அமைப்புக்கு உள்ளேயே அணிக் குழுக்கள் முறையாக நிறுவப்படுவதற்கு இப்பணி அமைப்பு உதவுகிறது. எடுத்துக்காட்டாக, உற்பத்திப் பொருள் மேம்பாட்டுக் குழுக்கள், சந்தை மேம்பாட்டு அணிகள் அல்லது சிறப்பு வட்டாரக் குழுமங்களைக் கூறலாம்.

இதில் குறிப்பிடத் தக்க சிறப்பு என்னவென்றால் பணி அமைப்பின் அமைப்பு முறை குறிக்கோள்களை அடைவதற்குத் துணை புரிவதாக இருக்க வேண்டுமேயன்றி அதற்குத் தடையாக இருக்கக் கூடாது என்பதாகும்.

தேக்கமுடைய அல்லது தடைகளுடைய வழி அமைப்புகள் எப்போதுமே அதிகச் செலவு வைக்கக் கூடியவை. தடைகள் பெரும்பாலும் மேல் மட்டத்திற்கு அருகில் ஏற்படுகின்றன. ஒரு குப்பியில் உள்ள நீர்மம் வேகமாக வெளியேறாமல் அதன் குறுகிய கழுத்து தடை செய்கிறது என்பதும், அக்கழுத்து மேலிடத்திற்கு மிக அருகில் உள்ளது என்பதும் உண்மையே.

மனித வளங்கள் என்பதன் பொருள் என்ன? இதற்கு மாற்றாக உங்களுக்குப் பணியாற்ற எந்திரங்களை அமைக்கலாம். ஆனால், மேலாளராகிய நீங்கள் மனிதர்களையும் நிர்வகித்துதான் ஆக வேண்டும் என்படை நினைவில் கொள்ள வேண்டும்.

எந்திரங்களுக்கும் மனிதர்களுக்கும் இடையே உள்ள வேற்றுமைது:

  • மனிதர்களை எதிர்பார்க்கும் விதத்தில் பயன் படுத்துவதற்கு, அவர்களுக்கு சொந்த சிந்தனை இருக்கிறது.
  • மனிதர்களால் முடிவுகள் மேற்கொள்ளத் தக்க அளவில் கணிப்பிட முடியும்.
  • உங்கள் நிறுவனத்தில் மனிதர்களுக்கு அவர்களுடைய பங்கு குறித்து எதிர்பார்ப்புகள் உள்ளன.
  • அதிகரித்த உற்பத்தித் திறனுக்குப் பல தரப்பட்ட குறிப்பிடத்தக்க தொண்டுகளை மனிதர்களால் ஆற்ற இயலும் – அவர்கள் விரும்பினால்.

ஆகவே, இத்தகைய திறமைகளை முழுமையாக உங்கள் நிறுவனத்திற்குப் பயன்படுத்திக் கொள்ள நீங்கள் பாடுபட வேண்டும். இதில் எவ்வளவு அதிகமாக நீங்கள் ஈடுபடுகிறீர்களோ அவ்வளவுக்கு நீங்கள் பயன் விளைவிக்கக் கூடியவராக இருப்பீர்கள்.

சுருக்கமாக,
நீங்கள் பொறுப்பை ஒப்படைத்தால் அது விருப்புடன் ஏற்கப்படும்.
இந்தத் தலைப்பின் கீழ் அடிப்படையானதும், இன்றியமையாததுமான சிலவற்றைக் குறிப்பிடுவது பொருத்தமானதாகும்:

  • ஒரு மேலாளர் மனிதர்களின் கைகளைப் போலவே அவர்களுடைய அறிவையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
  • பணி எங்கு நிகழ்கிறதோ எல்லா விவரங்களும் எங்குத் தெரியுமோ அங்குப் பொறுப்பு சுமத்தப் பட வேண்டும். கீழ்மட்டத்தில் உள்ள பொருத்தமான நபருக்கு அது வழங்கப் படவேண்டும்.
  • பெரும்பாலான மனிதர்களிடம் வெளிப்படுத்தப் படாத திறமைகள் அதிகமாகத் தேங்கிக் கிடக்கின்றன.
  • குறைந்த முயற்சியில் அதிக வேலையை முடிப்பது எப்படி என்பதைக் கண்டுபிடிக்கும் திறமை அந்த வேலையை உண்மையில் செய்கின்றவர்களிடம்தான் அடிப்படையில் அமைந்து உள்ளது. இத்திறமையைப் பயன்படுத்துபவர்களைப் பாராட்டி பெருமைப் படுத்த வேண்டும்.
  • ஒவ்வொருவரும் அவரவர் பணியை அவருடைய சொந்தப் பணியாக ஏற்பாரானால் அவர் அதில் அதிகக் கருத்தைச் செலுத்துவார்.
  • ஒரு நிறுவனத்தால் பணி அமர்த்தப்படும் மனிதர்கள் அந்நிறுவனத்தில் பெரும் பங்கு வகிக்கின்றனர்.
  • பணிகள் குறித்து முடிவு மேற்கொள்ளும் போது, அவர்கள் ஈடுபடுத்தப் பட்டால் அல்லது கலந்து ஆலோசிக்கப் பட்டால் அவர்கள் விருப்புடன் முன்வருவார்கள்.

– கார்டன் பி. ராபி (தமிழில்
இரா. சுப்பராயலு)

- Advertisement -

Latest Posts

Don't Miss

[tdn_block_newsletter_subscribe title_text="Stay in touch" description="U3Vic2NyaWJlJTIwdG8lMjBvdXIlMjBsYXRlc3QlMjBuZXdz" input_placeholder="Email address" tds_newsletter2-image="5" tds_newsletter2-image_bg_color="#c3ecff" tds_newsletter3-input_bar_display="row" tds_newsletter4-image="6" tds_newsletter4-image_bg_color="#fffbcf" tds_newsletter4-btn_bg_color="#f3b700" tds_newsletter4-check_accent="#f3b700" tds_newsletter5-tdicon="tdc-font-fa tdc-font-fa-envelope-o" tds_newsletter5-btn_bg_color="#000000" tds_newsletter5-btn_bg_color_hover="#4db2ec" tds_newsletter5-check_accent="#000000" tds_newsletter6-input_bar_display="row" tds_newsletter6-btn_bg_color="#da1414" tds_newsletter6-check_accent="#da1414" tds_newsletter7-image="7" tds_newsletter7-btn_bg_color="#1c69ad" tds_newsletter7-check_accent="#1c69ad" tds_newsletter7-f_title_font_size="20" tds_newsletter7-f_title_font_line_height="28px" tds_newsletter8-input_bar_display="row" tds_newsletter8-btn_bg_color="#00649e" tds_newsletter8-btn_bg_color_hover="#21709e" tds_newsletter8-check_accent="#00649e" embedded_form_code="JTNDIS0tJTIwQmVnaW4lMjBNYWlsY2hpbXAlMjBTaWdudXAlMjBGb3JtJTIwLS0lM0UlMEElM0NsaW5rJTIwaHJlZiUzRCUyMiUyRiUyRmNkbi1pbWFnZXMubWFpbGNoaW1wLmNvbSUyRmVtYmVkY29kZSUyRmNsYXNzaWMtMTBfNy5jc3MlMjIlMjByZWwlM0QlMjJzdHlsZXNoZWV0JTIyJTIwdHlwZSUzRCUyMnRleHQlMkZjc3MlMjIlM0UlMEElM0NzdHlsZSUyMHR5cGUlM0QlMjJ0ZXh0JTJGY3NzJTIyJTNFJTBBJTA5JTIzbWNfZW1iZWRfc2lnbnVwJTdCYmFja2dyb3VuZCUzQSUyM2ZmZiUzQiUyMGNsZWFyJTNBbGVmdCUzQiUyMGZvbnQlM0ExNHB4JTIwSGVsdmV0aWNhJTJDQXJpYWwlMkNzYW5zLXNlcmlmJTNCJTIwJTdEJTBBJTA5JTJGKiUyMEFkZCUyMHlvdXIlMjBvd24lMjBNYWlsY2hpbXAlMjBmb3JtJTIwc3R5bGUlMjBvdmVycmlkZXMlMjBpbiUyMHlvdXIlMjBzaXRlJTIwc3R5bGVzaGVldCUyMG9yJTIwaW4lMjB0aGlzJTIwc3R5bGUlMjBibG9jay4lMEElMDklMjAlMjAlMjBXZSUyMHJlY29tbWVuZCUyMG1vdmluZyUyMHRoaXMlMjBibG9jayUyMGFuZCUyMHRoZSUyMHByZWNlZGluZyUyMENTUyUyMGxpbmslMjB0byUyMHRoZSUyMEhFQUQlMjBvZiUyMHlvdXIlMjBIVE1MJTIwZmlsZS4lMjAqJTJGJTBBJTNDJTJGc3R5bGUlM0UlMEElM0NkaXYlMjBpZCUzRCUyMm1jX2VtYmVkX3NpZ251cCUyMiUzRSUwQSUzQ2Zvcm0lMjBhY3Rpb24lM0QlMjJodHRwcyUzQSUyRiUyRlZhbGFyLnVzMi5saXN0LW1hbmFnZS5jb20lMkZzdWJzY3JpYmUlMkZwb3N0JTNGdSUzRGJiNTM2ZDNlMDlmMDk5MGYzOTNkYTAwYzElMjZhbXAlM0JpZCUzRGZiZDdiNDU3MzYlMjIlMjBtZXRob2QlM0QlMjJwb3N0JTIyJTIwaWQlM0QlMjJtYy1lbWJlZGRlZC1zdWJzY3JpYmUtZm9ybSUyMiUyMG5hbWUlM0QlMjJtYy1lbWJlZGRlZC1zdWJzY3JpYmUtZm9ybSUyMiUyMGNsYXNzJTNEJTIydmFsaWRhdGUlMjIlMjB0YXJnZXQlM0QlMjJfYmxhbmslMjIlMjBub3ZhbGlkYXRlJTNFJTBBJTIwJTIwJTIwJTIwJTNDZGl2JTIwaWQlM0QlMjJtY19lbWJlZF9zaWdudXBfc2Nyb2xsJTIyJTNFJTBBJTA5JTNDaDIlM0VTdWJzY3JpYmUlM0MlMkZoMiUzRSUwQSUzQ2RpdiUyMGNsYXNzJTNEJTIyaW5kaWNhdGVzLXJlcXVpcmVkJTIyJTNFJTNDc3BhbiUyMGNsYXNzJTNEJTIyYXN0ZXJpc2slMjIlM0UqJTNDJTJGc3BhbiUzRSUyMGluZGljYXRlcyUyMHJlcXVpcmVkJTNDJTJGZGl2JTNFJTBBJTNDZGl2JTIwY2xhc3MlM0QlMjJtYy1maWVsZC1ncm91cCUyMiUzRSUwQSUwOSUzQ2xhYmVsJTIwZm9yJTNEJTIybWNlLUVNQUlMJTIyJTNFRW1haWwlMjBBZGRyZXNzJTIwJTIwJTNDc3BhbiUyMGNsYXNzJTNEJTIyYXN0ZXJpc2slMjIlM0UqJTNDJTJGc3BhbiUzRSUwQSUzQyUyRmxhYmVsJTNFJTBBJTA5JTNDaW5wdXQlMjB0eXBlJTNEJTIyZW1haWwlMjIlMjB2YWx1ZSUzRCUyMiUyMiUyMG5hbWUlM0QlMjJFTUFJTCUyMiUyMGNsYXNzJTNEJTIycmVxdWlyZWQlMjBlbWFpbCUyMiUyMGlkJTNEJTIybWNlLUVNQUlMJTIyJTNFJTBBJTNDJTJGZGl2JTNFJTBBJTA5JTNDZGl2JTIwaWQlM0QlMjJtY2UtcmVzcG9uc2VzJTIyJTIwY2xhc3MlM0QlMjJjbGVhciUyMiUzRSUwQSUwOSUwOSUzQ2RpdiUyMGNsYXNzJTNEJTIycmVzcG9uc2UlMjIlMjBpZCUzRCUyMm1jZS1lcnJvci1yZXNwb25zZSUyMiUyMHN0eWxlJTNEJTIyZGlzcGxheSUzQW5vbmUlMjIlM0UlM0MlMkZkaXYlM0UlMEElMDklMDklM0NkaXYlMjBjbGFzcyUzRCUyMnJlc3BvbnNlJTIyJTIwaWQlM0QlMjJtY2Utc3VjY2Vzcy1yZXNwb25zZSUyMiUyMHN0eWxlJTNEJTIyZGlzcGxheSUzQW5vbmUlMjIlM0UlM0MlMkZkaXYlM0UlMEElMDklM0MlMkZkaXYlM0UlMjAlMjAlMjAlMjAlM0MhLS0lMjByZWFsJTIwcGVvcGxlJTIwc2hvdWxkJTIwbm90JTIwZmlsbCUyMHRoaXMlMjBpbiUyMGFuZCUyMGV4cGVjdCUyMGdvb2QlMjB0aGluZ3MlMjAtJTIwZG8lMjBub3QlMjByZW1vdmUlMjB0aGlzJTIwb3IlMjByaXNrJTIwZm9ybSUyMGJvdCUyMHNpZ251cHMtLSUzRSUwQSUyMCUyMCUyMCUyMCUzQ2RpdiUyMHN0eWxlJTNEJTIycG9zaXRpb24lM0ElMjBhYnNvbHV0ZSUzQiUyMGxlZnQlM0ElMjAtNTAwMHB4JTNCJTIyJTIwYXJpYS1oaWRkZW4lM0QlMjJ0cnVlJTIyJTNFJTNDaW5wdXQlMjB0eXBlJTNEJTIydGV4dCUyMiUyMG5hbWUlM0QlMjJiX2JiNTM2ZDNlMDlmMDk5MGYzOTNkYTAwYzFfZmJkN2I0NTczNiUyMiUyMHRhYmluZGV4JTNEJTIyLTElMjIlMjB2YWx1ZSUzRCUyMiUyMiUzRSUzQyUyRmRpdiUzRSUwQSUyMCUyMCUyMCUyMCUzQ2RpdiUyMGNsYXNzJTNEJTIyY2xlYXIlMjIlM0UlM0NpbnB1dCUyMHR5cGUlM0QlMjJzdWJtaXQlMjIlMjB2YWx1ZSUzRCUyMlN1YnNjcmliZSUyMiUyMG5hbWUlM0QlMjJzdWJzY3JpYmUlMjIlMjBpZCUzRCUyMm1jLWVtYmVkZGVkLXN1YnNjcmliZSUyMiUyMGNsYXNzJTNEJTIyYnV0dG9uJTIyJTNFJTNDJTJGZGl2JTNFJTBBJTIwJTIwJTIwJTIwJTNDJTJGZGl2JTNFJTBBJTNDJTJGZm9ybSUzRSUwQSUzQyUyRmRpdiUzRSUwQSUzQ3NjcmlwdCUyMHR5cGUlM0QndGV4dCUyRmphdmFzY3JpcHQnJTIwc3JjJTNEJyUyRiUyRnMzLmFtYXpvbmF3cy5jb20lMkZkb3dubG9hZHMubWFpbGNoaW1wLmNvbSUyRmpzJTJGbWMtdmFsaWRhdGUuanMnJTNFJTNDJTJGc2NyaXB0JTNFJTNDc2NyaXB0JTIwdHlwZSUzRCd0ZXh0JTJGamF2YXNjcmlwdCclM0UoZnVuY3Rpb24oJTI0KSUyMCU3QndpbmRvdy5mbmFtZXMlMjAlM0QlMjBuZXclMjBBcnJheSgpJTNCJTIwd2luZG93LmZ0eXBlcyUyMCUzRCUyMG5ldyUyMEFycmF5KCklM0JmbmFtZXMlNUIwJTVEJTNEJ0VNQUlMJyUzQmZ0eXBlcyU1QjAlNUQlM0QnZW1haWwnJTNCZm5hbWVzJTVCMSU1RCUzRCdGTkFNRSclM0JmdHlwZXMlNUIxJTVEJTNEJ3RleHQnJTNCZm5hbWVzJTVCMiU1RCUzRCdMTkFNRSclM0JmdHlwZXMlNUIyJTVEJTNEJ3RleHQnJTNCZm5hbWVzJTVCMyU1RCUzRCdBRERSRVNTJyUzQmZ0eXBlcyU1QjMlNUQlM0QnYWRkcmVzcyclM0JmbmFtZXMlNUI0JTVEJTNEJ1BIT05FJyUzQmZ0eXBlcyU1QjQlNUQlM0QncGhvbmUnJTNCZm5hbWVzJTVCNSU1RCUzRCdCSVJUSERBWSclM0JmdHlwZXMlNUI1JTVEJTNEJ2JpcnRoZGF5JyUzQiU3RChqUXVlcnkpKSUzQnZhciUyMCUyNG1jaiUyMCUzRCUyMGpRdWVyeS5ub0NvbmZsaWN0KHRydWUpJTNCJTNDJTJGc2NyaXB0JTNFJTBBJTNDIS0tRW5kJTIwbWNfZW1iZWRfc2lnbnVwLS0lM0U=" descr_space="eyJhbGwiOiIxNSIsImxhbmRzY2FwZSI6IjE1In0=" tds_newsletter="tds_newsletter3" tds_newsletter3-all_border_width="0" btn_text="Sign up" tds_newsletter3-btn_bg_color="#ea1717" tds_newsletter3-btn_bg_color_hover="#000000" tds_newsletter3-btn_border_size="0" tdc_css="eyJhbGwiOnsibWFyZ2luLWJvdHRvbSI6IjAiLCJiYWNrZ3JvdW5kLWNvbG9yIjoiI2E3ZTBlNSIsImRpc3BsYXkiOiIifSwicG9ydHJhaXQiOnsiZGlzcGxheSI6IiJ9LCJwb3J0cmFpdF9tYXhfd2lkdGgiOjEwMTgsInBvcnRyYWl0X21pbl93aWR0aCI6NzY4fQ==" tds_newsletter3-input_border_size="0" tds_newsletter3-f_title_font_family="445" tds_newsletter3-f_title_font_transform="uppercase" tds_newsletter3-f_descr_font_family="394" tds_newsletter3-f_descr_font_size="eyJhbGwiOiIxMiIsInBvcnRyYWl0IjoiMTEifQ==" tds_newsletter3-f_descr_font_line_height="eyJhbGwiOiIxLjYiLCJwb3J0cmFpdCI6IjEuNCJ9" tds_newsletter3-title_color="#000000" tds_newsletter3-description_color="#000000" tds_newsletter3-f_title_font_weight="600" tds_newsletter3-f_title_font_size="eyJhbGwiOiIyMCIsImxhbmRzY2FwZSI6IjE4IiwicG9ydHJhaXQiOiIxNiJ9" tds_newsletter3-f_input_font_family="394" tds_newsletter3-f_btn_font_family="" tds_newsletter3-f_btn_font_transform="uppercase" tds_newsletter3-f_title_font_line_height="1" title_space="eyJsYW5kc2NhcGUiOiIxMCJ9"]