Latest Posts

உயிரி தொழில் நுட்பம் பற்றிய சில கேள்விகளும், பதில்களும்!

- Advertisement -

வேளாண் உயிரித்தொழில்நுட்பம் (பயோ டெக்னாலஜி) என்றால் என்ன?
வேளாண்மை உயிரித்தொழில்நுட்பம் என்பது ஒருவகையான கருவி போன்று மரபுவழிப் பயிர் பெருக்கத்தின் முறைகளில், உயிருள்ள காரணிகளை மாற்றவும் (அ) அதன் பகுதிகளை உருவாக்கவும், மாற்றி அமைப்பதும் ஆகும். தாவரம் மற்றும் விலங்குகள் (அ) நுண்ணுயிரிகளை குறிப்பிட்ட வேளாண்மைக்கு உதவிட இவ்வாறு செய்யப்படுகிறது. நவீன உயிரித் தொழில்நுட்பத்தின் கருவி என்பது மரபுப் பொறியியல் ஆகும்.

சில உயிரித் தொழில்நுட்பப் பயிர்கள் குறிப்பிட்ட களைக் கொல்லிகளுக்கு தாங்கும் திறன் கொண்டு நன்கு வளர்கின்றன.
உயிரித் தொழில் நுட்பத்தை விவசாயத் தில் ஈடுபடுத்தும் போது விவசாயிகள், உற்பத்தியாளர்கள், நுகர்வோர் அனைவரும் பயனுறுகிறார்கள். உயிரித் தொழில்நுட்பம் எளிய முறையில் பாதுகாப்பாக பயிர்களை நோய் மற்றும் பூச்சித் தாக்குதலில் இருந்து காக்கிறது. சான்றாக மரபுப் பொறியியல் நோய் தாங்கும் திறன் கொண்ட பருத்திக்கு குறைந்தளவே அனங்கக பூச்சிக் கொல்லி பயன்படுத்தப்படுவதால் நிலத்தடி நீர் மாசு அடையாமல் இருக்கின்றது. தரம் மற்றும் மகசூல் அதிகரிக்கின்றது.

பி.டி.என்றால் என்ன?
‘பேசில்லஸ் துரின்ஜியன்சிஸ்’ என்பதன் சுருக்கமே பி.டி ஆகும். இது மண்ணில் வாழும் ஒரு வகை பாக்டீரியா. பி. டி. என்பது பூச்சிக் கொல்லியாக இந்தப் பாக்டீரியா மூலம் உருவாக்கப்படுகிறது.

பி.டி.பொதுவாக எங்கும் காணப்படும். மேலும் மண் மற்றும் தாவர இலை, தழைள் சேமித்து வைக்கப்பட்ட தானியங்களிலும் காணப்படும்.

பி.டி.யில் உள்ள நச்சுப் புரதமான இன்சக்டிடால் கிரிஸ்டல் (அ) டெல்டா எண்டோ டாக்சி என்பவை பூச்சிகளைக் கொல்கின்றன. இவ்வகை நச்சுப் புரதமானது மனிதர்களுக்கும் மற்ற பூச்சியற்ற இனத் திற்கும் தீங்கற்றவை. ‘டெல்டா எண்டோ டாக்சின்கள்’ வயிற்று நஞ்சு ஆகும். இதை பூச்சிகள் உண்டவுடன் அமிலத்தன்மை கொண்டதாக செயல்பட்டு பூச்சிகளைக் கொன்று விடுகிறது.

பி.டி.பூச்சிக் கொல்லிகளான ‘டார்மண்ட் பி.டி. மற்றும் டெல்டா எண்டோ டாக்சின்’ 30 ஆண்டுகளுக்கு முன்னரே பயன்படுத்தப் பட்டு உள்ளது.

பி.டி.சோளம் என்றால் என்ன?
‘டெல்டா எண்டோ டாக்சின்’ ஒற்றை செல்லின் மூலம் பாக்டீரியாவால் கட்டுப்படுத்தி, பின் மாறுபாடு செய்து சோளப்பயிரில் அமைப்பது ஆகும். சோளப் பயிரில் உள்ள இம் மரபணு ‘டெல்டா எண்டோ டாக்சின்’ உற்பத்தி செய்து அது பூச்சிகளுக்கு நஞ்சாகி விடுகிறது. பயிரின் திசுக்களில் ‘டெல்டா எண்டோ டாக்சின்கள்’, தாங்கு திறனுக்காக பி.டி.மரபணு சோளத்தில் உட் செலுத்தப்படுகிறது.

பல்வேறு விதை உற்பத்தி நிறுவனங்கள், பல்வேறு விதமான ‘நிகழ்வு’ மற்றும் வளர்ச்சியை பயன்படுத்துவதால் பல்வேறு விதமான ‘டெல்டா எண்டோ டாக்சினை’ தருகின்றன. பல்வேறு விதமான வளர்ச்சிக் காரணிகள் ‘டெல்டா என்டோ டாக்சின்’ சோளப்பயிரிலும், வீரிய ஒட்டு உருவாக்குதலில் பயன்படுத்தப்படுகின்றன.
பி.டி.சோளத்தில் பல்வேறு விதமான வீரிய
ஒட்டு இரகங்கள் உள்ளன.

பி.டி.சோளம் மற்ற பிற பூச்சிகளை பாதிக்கிறதா?
பல்வேறு இனங்களில் புழுக்கள் சோள வயலில் உள்ளன. அவ்வாறு வளரும் காலங்களில் பி.டி.சோளத்தால் அவை பாதிப்பு அடைகின்றன. ஒரு ஐரோப்பியர் செய்த ஆய்வில் ‘பச்சை இறகு புழு’ (ஐரோப்பிய காய்ப் புழுக்களை அழித்தும், மாறுபட்டும் இருந்தது. இவை பி.டி. அற்ற சோளத்தில் சற்று குறைவானதாக இருந்தன.
பி.டி.சோளத்தின் வேர்கள் ‘டெல்டா எண்டோ டாக்சின்களை மண்ணில் வெளியேற்றுகின்றன. இவ்வாறு வெளியேற்றுவதைப் பல்வேறு ஆய்வகங்களில் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. இருப்பினும் மண்ணில் புலப்படாத பல்வேறு நுண்ணுயிரிகளும் காணப்படுகின்றன.

குறைந்த அளவு ஆய்வுகளே பி.டி. சோளம் இலக்கற்ற பூச்சிகளுக்கு பயன்படுத்தப்பட்டது. முதல் நிலை முடிவுகளில் அவற்றின் பாதிப்புகள் சற்று குறைவாகவே இருந்தன.

பி.டி.சோளமானது உடல் நலத்திற்குத் தீங்கானது, இது உடலில் சிலருக்கு ‘ஒவ்வாமை’ ஏற்படுத்தும். இது சரியா?
ஆய்வானது, அமிலச் சூழலில் ‘ஒவ்வாமை’ தோற்றுவிக்கும் காரணிகள் எவ்வளவு நேரம் உள்ளன என்பதும், அதிக அளவு நேரம் இரத்த மண்டலத்திலும், ஏதேனும் பாதிப்பை ஏற்படுத்துமா என்பதையும் ஆய்வு செய்தல் வேண்டும். தற்போது மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் ‘டெல்டா எண்டோ டாகசின்கள்’ அதி விரைவில் வயிற்றுப் பகுதியில் சிதைந்து விடுகின்றன. அவை உடலுக்கு ஒவ்வாமையைத் தோற்றுவிப்பதில்லை என்று கண்டறியப்பட்டு உள்ளது.

உயிரித் தொழில்நுட்பம், மரபியல் முறைப் பயிர்ப்பெருக்கத்தில் இருந்து எவ்வாறு வேறுபடுகிறது?
உயிரித் தொழில் நுட்பம் என்பது, நவீனமான தொழில்நுட்பமான மரபுப் பொறியியல் மூலம் தாவரத்தினை மாற்ற (அ) மேம்படுத்தவும், விலங்குகளில், பிற நுண்ணுயிரிகளிலும் பயன்படுத்தப்படுகிறது. விவசாயத்தைப் பொறுத்தவரை இது புதியது அல்ல. நூறாண்டுகளுக்கு முன்பே விவசா யிகள், இனக்கலப்பு செய்து புதிய பயிர் களை கண்டறிந்தனர்.

விவசாயத்தைப் பொருத்தவரை உயிரித் தொழில் நுட்பப் பொருட்கள் மூலம் பூச்சிக் கொல்லிகள் பயன்படுத்தப்படுவது குறைக்கப் படும். பி.டி.பருத்தி, பருத்தியைத் தாக்கும் பல பூச்சிகளை அழித்தது.

அமெரிக்காதான் மரபுப் பொறியியல் விவசாயப் பொருட்களை உற்பத்தி செய்ததா?
அமெரிக்கா மட்டும் மரபுப் பொறியியல் விவசாய பொருட்களை உற்பத்தி செய்ய வில்லை. பல்வேறு ஐரோப்பிய நாடுகள், ஜெர்மனி, ஸ்விட்சர்லாந்து, கனடா, சீனா, அர்ஜென்டினா, தென் ஆப்பிரிக்கா மற்றும் ஜப்பான் முதலியனவும் இத்துறையில் ஈடுபட்டு உள்ளன. பல்வேறு உயிரி தொழில்நுட்ப இரகங்கள் சோளம், சோயா மொச்சை பிற பயிர்களில் உருவாக்கப் பட்டன.

மேலும் பல ஐரோப்பிய கம்பெனிகள் அமெரிக்காவில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட இரகங்களை மேம்படுத்தவும் வணிக ரீதியாக உற்பத்தியை பெருக்கவும் செய்கின்றன. ‘அகா ஈவோ’ என்னும் ஜெர்மன் கம்பெனி, நோவர்டிஸ் எனும் ஸ்விட்சர்லாந்து கம்பெனி இரண்டும் இணைந்து, மரபணு மாற்றம் செய்யப்பட்ட சோளம் மற்றும் சோயா மொச்சையினை அமெரிக்க விவசாயிகளுக்கு அளிக்கிறார்கள்.

உயிரித் தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்படும் பயிர்கள், மரபு வழியில் பயிரிடும் பயிர்களைப் போன்று சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பானதா?
உயிரித் தொழில் நுட்பத்தால், சுற்றுச் சூழல் பாதிப்படைகிறது என்பதற்கு எவ்வித சான்றும் இல்லை. உயிரித் தொழில் நுட்பம் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பின்றி, மரபு வழியில் பயிரிடுவதைக் காட்டிலும் அதிகமாக இலாபத்தைக் கொடுக்கிறது.
உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு ‘ஒவ்வாமை’ ஆய்வு மேற்கொண்ட பின்னரே புதிய ரகங்களை அறிமுகப்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது. சோயா மொச்சை, பால், முட்டை, மீன் மற்றும் கோதுமை இவற்றில் வேளாண்மை உயிரித் தொழில்நுட்ப கம்பெனிகள் ‘ஒவ்வாமை’ பொருட்கள் மரபணுவில் இல்லாதவாறு பொருட்களை உற்பத்தி செய்வதாகவே கூறுகிறார்கள்.

பி.டி. சோளம், உருளைக் கிழங்கு மற்றும் பருத்தியில் குறிப்பிட்ட மரபணு மூலம் உயிரியல் கட்டுப்பாட்டுக் காரணியான ‘பேசில்லஸ் துரிஞ்சியன்சிஸ்’ மூலம் ஐரோப்பிய சோளப்புழு, கொலராடோ உருளை வண்டு மற்றும் இளஞ்சிவப்பு காய்ப்புழுக்களைக் கட்டுப்படுத்துகிறது.

உயிரித் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட புதிய பயிர் இரகங்களை விவசாயிகள் பயன்படுத்துகிறார்களா?
உலக அளவில் மில்லியன் கணக்கான ஏக்கர்களில் உயிரித் தொழில்நுட்பப் பயிர்கள் பயிரிடப்படுகின்றன.

பூச்சித் தாக்குதலில் இருந்து தாங்கும் தன்மை கொண்ட ‘ஆப்பிரிக்கா சர்க்கரை வள்ளிக் கிழங்கு’ புதிய இரகமானது ‘வைரஸ்’ நோய்களில் இருந்தும் விடுபடுகிறது. இதன் மகசூல் அதிகரிக்கிறது. மேலும் வைரஸ் தாக்குதலின்றி புதிய பூசணிக் குடும்பத் தாவரங்கள் தென்கிழக்கு ஆசியா எங்கும் புதிய இரகங்கள் உருவாக்கப்படுகிறது.

‘டெர்மினேட்டர்’ தொழில்நுட்பம் என்றால் என்ன?
‘டெர்மினேட்டர்’ தொழில் நுட்பம் என்பது விதை, செடிகளை ஆய்வு செய்து ‘கிருமி’ இல்லாத விதைகளை உற்பத்தி செய்வதாகும். இப்போது வரை, விதை மேம்பாட்டு நிறுவனம் மூலம் மட்டுமே இத் தொழில் நுட்பம் பின்பற்றப்படுகிறது. எந்தத் தனியார் நிறுவனமும் இதில்
ஈடுபடவில்லை.

மீன் வளர்ப்பியலில் உயிரித் தொழில்நுட்பமானது உதவுமா?
ஆமாம். உயிரித் தொழில்நுட்பம் பயன் படுத்தி மீன் தட்டுப்பாட்டினைப் போக்க முடியும். அக்வா அட்வான்டேஜ் என்ற சாலமன் என்னும் மீன் விதையானது, அக்வா ஃபவுண்டரி பண்ணை மூலம் 12-18 மாதங்களில் உற்பத்தி செய்யப்பட்டது. இதையே மரபு வழியில் செய்ய 2-3 ஆண்டுகள் ஆகும்.

‘தங்க அரிசி’ என்றால் என்ன?
‘அரிசியை’ முதன்மை உணவாக உட்கொள்ளும் மக்களில் 200 மில்லியன் பேர்கள் ‘வைட்டமின் ஏ’ குறைபாட்டினால் பாதிக்கப்பட்டு உள்ளனர். உயிரித் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கிய அரசியை ‘தங்க அரிசி’ என்கிறார்கள். இதில் உள்ள ‘பீட்டா கரோட்டின்’ ‘வைட்டமின் ஏ’வை உருவாக்குகிறது.

எம்மாதிரியான பயன்பாடுகளுக்கு மரபுப் பொறியியல், வேளாண் பயிர்களில் பயன் படுத்தப்படுகிறது?
பெரும்பாலும் அமெரிக்காவில் உருவாக்கப்படும் ‘மரபுப் பொறியியல் பயிர்கள்’ பூச்சித் தாக்குதல் (அ) பூச்சிக் கொல்லி தாங்கும் தன்மைக்காகவே உருவாக்கப்படுகிறது. அமெரிக்கர் தினமும் உட்கொள்ளும் உணவு வகைகள் பெரும்பாலும் மரபணுப் பொறியியல் உணவுகளே, ஆனால் நமது நாட்டில் மரபணு மாற்றப்பட்ட உணவுகள் குறைந்த அளவே ஏற்றுக் கொள்ளப்படுகின்றன.

உலகின் மக்கள் தொகை அதிகரிப்பைப் பார்க்கும் போது உலகின் அனைத்து இடங்களிலும் உணவு உற்பத்தியின் தேவை அதிகரிக்கும். பயிர்கள் அவைகளாகவே தங்களை பூச்சி, நோய்த் தாக்கதலில் இருந்து காத்துக் கொள்ள வேண்டும். சுவை, நிறம், வடிவம் மற்றும் அதிக தாங்கும் தன்மை முதலியன உயிரித் தொழில்நுட்பம் மூலம் செய்யப்படுகின்றன. விவசாயிகளுக்கு உற்பத்தி செலவு குறைகிறது.

ஏன் மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் மாறுபாடு உடையதாக இருக்கின்றன?
எந்த ஒரு புதிய தொழில்நுட்பமும் முடிவுறாத் தன்மையுடன் இருக்கும் போது மாறுபாடுடன்தான் காணப்படும். அதற்கு மரபணு மாற்றப்பட்ட பயிர்களும் விதி விலக்கல்ல. புதிய மரபணு மாற்றப்பட்ட பயிர்களை வெளியிடும் முன், அவற்றை மரபு முறையில் பயிரிடுவதற்கு சோதனை செய்தலை விட அதிகம் சோதனை செய்ய வேண்டும். ஆனால் இப்போதுதான் அத்தகைய சோதனை முறைகள் அமெரிக்கா மற்றும் பிற நாடுகளில் வளர்ந்து வருகின்றன.

தாவரத் திசு வளர்ப்பு என்றால் என்ன?
தாவரத் திசு குறிப்பிட்ட வழி முறைக ளைக் கடைபிடித்து அதன் பகுதிகள் (தண்டு, வேர், உட்கரு) கிருமி இல்லாத நிலையில் வளர்ப்பதாகும். தாவரத் திசு வளர்ப்பு அதிகமாக ஆய்வுக் கூடத்தில் விதையில்லாப் பெருக்கமான ‘நுண் பெருக்கம்’ மூலம் செய்யப்படுகிறது.

.நுண் பெருக்க முறையில் விரைவாக
ஆயிரக்கணக்கான தாவரங்களை உற்பத்தி செய்ய முடி யும். குறைந்த இடத் தில் அதிக அளவு பல்வேறு இனங்களை வைக்கலாம்.
திசு வளர்ப்பு ஊட்டச்சத்து ஊட கத்தில் நீர், அங்கக உப்புகள், தாவர வளர்ச்சி ஊக்கிகள், வைட்டமின்கள், அமினோ அமிலம், கரிம மூலப்பொருட்கள் மற்றும் திடப் பொருள் ஊடகம் ஆகியவை உள்ளன.

இரண்டு தாவர வளர்ச்சி ஊக்கிகள், தாவரத்தில் மாறுபாட்டைத் தோற்றுவிக் கின்றன. ஆக்ஸின்கள், வேர் தோன்றுவதை ஊக்குவிக்கின்றன. சைட்டோன்கைனின்கள், தண்டு தோன்றுவதை ஊக்குவிக்கிறது. பொதுவாக இவற்றின் அளவை மாற்றி அமைப்பதன் மூலமே தாவரத்தின் உருவத் தோற்றத்தில் மாறுபாட்டை ஏற்படுத்த முடியும்.
நுண் பெருக்க நிலைகள் –

நிலை 0 : தேர்ந்தெடுத்தல் மற்றும் தாய் தாவரத்தைத் தயார் செய்தல் – கிருமி நீக்கம் செய்தல் – தாவரத் திசுப் பகுதிகளைச் சேகரித்தல். நிலை 1: தொடக்கநிலை – வளர்ப்பு ஊடகத்தில் விடப்படும் செடியை தகுந்த ஊடகத்தில் வைக்க வேண்டும். நிலை 2: பெருக்கநிலை – வளர்ப்பு ஊடகத்தில் விடப்படும் செடியை தண்டு ஊடகத்திற்கு மாற்ற வேண்டும். அவற்றைப் பிரித்து பின் நடவேண்டும். நிலை 3 : வேர் விடும் நிலை- வளர்ப்பு ஊடகத்தில் விடப்படும் செடியை வேர் ஊடகத்திற்கு மாற்ற வேண்டும். நிலை 4 : மண்ணிற்கு மாற்றுதல் – வளர்ப்பு ஊடகத்தில் விடப்படும் செடியை மண்ணிற்கு மாற்ற வேண்டும்.

ஆதாரம்: btmicropropagation.nic.in (தமிழ் நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக இணைய தளத்தில் இருந்து)

-மலர்

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

Subscribe to our latest news