- Advertisement -
- இறக்குமதி செய்யப்படும் வாகன உதிரி உறுப்புகள் மீது, இறக்குமதி வரி கூடுகிறது.
- மின்சாரம் மூலம் இயங்கும் வாகனங்களுக்கு சலுகைகள் கிடைக்கும்.
- இறக்குமதி செய்யப்படும் அச்சடிப்புக்கான செய்தித்தாள், புத்தகங்கள் மீது இறக்குமதி வரி விதிக்கப்படுகிறது.
- ஒரு ஆண்டுக்கான விற்பனைத் தொகை ரூ.400 கோடிக்குள் இருக்கும் இந்திய கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு வருமானவரி விகிதம் 30% – லிருந்து 25% ஆகக் குறைகிறது
- ஆண்டு வருமானம் 2 கோடிக்கு மேல் உள்ளவர்களுக்குக் கூடுதல் வரி 15% -இலிருந்து 20% ஆகிறது.
- ஆண்டு வருமானம் 7 கோடிக்கு மேல் உள்ளவர்களுக்குக் கூடுதல் வரி 15% -இலிருந்து 25% ஆகிறது.
- கணக்கு ஆண்டு 2019 – 20க்கு (01.04.2019 முதல் 31.03.2020 முடிய உள்ள ஒரு ஆண்டு) ரூ.5,00,000-க்குக் கீழ் வருமானம் உள்ள தனிப்பட்ட நபர்கள், கூட்டுக் குடும்பங்களுக்கு வருமானவரி இல்லை.
- ரூ.45,00,000 மதிப்புக்குக் கீழ் உள்ள வீடுகள், அடுக்குமாடிக் குடியிருப்பு, முதன் முறையாக வாங்குவோர், கடன் வாங்கி வீடு வாங்கி இருந்தால், வீட்டுக்கடன் வட்டிக்குப் புதிய வருமான வரிச் சலுகைகள் உண்டு. (ஏற்கனவே வீடு வைத்திருந்து, 2-ஆம் தடவை வீடு வாங்குவோருக்கு இச்சலுகை கிடையாது)
- அடுக்கு மாடிகள் கட்டித் தரும், கட்டுமான நிறுவனங்களுக்கு சலுகைகள்.
- மின்சாரத்தினால் இயங்கும் வாகனங்களைக் கடன் வாங்கி, வாங்குவோர்களுக்கான வட்டியில், ரூ.1,50,000 – வரை வருமானத்தில் கழித்துக் கொள்ள அனுமதி.
- கீழ்கக்கண்ட நபர்கள் ஒரு ஆண்டில் ரூ. 1 கோடிக்கு மேல் வங்கியில் பணம் போடுவோர், .வெளிநாட்டுப் பயணத்துக்காக ரூ.2,50,000 – க்கு மேல் செலவழித்தவர்கள், .ஒரு ஆண்டில் மின்சாரக் கட்டணமாக ரூ.1,00,000-க்கு மேல் பணம் செலுத்துபவர்கள் வருமான வரிக்குக் கட்டாயம் கணக்கு தர வேண்டும்.
- ஒரு ஆண்டில் ரூபாய் 1 கோடிக்கு மேல் ஒரு வங்கியில் ரொக்கமாகப் பணம் எடுத்தால், வங்கிகள் 2% வருமான வரி பிடிக்க வேண்டும்.
- வரிக்குட்படும் நிகர வருமானம் ரூ.5,00,000 – க்குக் கீழே இருந்தால் வருமானவரி செலுத்த வேண்டியது இல்லை.
Also read: ஜிஎஸ்டி – சஹாஜ், சுகம் படிவம்களை யார் பயன்படுத்தலாம்?
-ஆடிட்டர் சொ. பாசுகரன், சென்னை – 21.
9840316020
- Advertisement -