ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்ட பின் எம்எஸ்எம்இ என சுருக்கமாக குறிப்பிடப்படும் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் வரிசெலுத்துவது, அதற்கான அறிக்கைகளை குறிப்பிட்ட கால இடைவெளியில் வழங்குவது, பொருட்களை அனுப்பும்போது, அதனோடு கூடவே பில் உருவாக்கி அனுப்புவது என அலைக்கழிக்கப்பட்டு தங்கள் வழக்கமான பணிகளுடன் இந்த கூடுதல் பணிகளையும் சேர்த்து செய்ய வேண்டி இருப்பதால் மிகவும் கஷ்டப்படுகின்றனர்.
இவர்களின் இவ்வாறான கூடுதல் பணிகளை எளிதாக்க ஜிஎஸ்டி கவுன்சில் கட்டணமில்லாத அக்கவுன்டிங் அண்ட் பில்லிங் மென்பொருளை (Free Accounting & Billing Software) வெளியிட்டு உள்ளது. இதனைக் கொண்டு ஒரு நிதியாண்டின் விறபனை வருமானம் 1.5 கோடிக்கு மிகாத எம்எஸ்எம்இ நிறுவனங்கள், தங்களின் அன்றாட வணிக நடவடிக்கைகளின் ஒரு பகுதியான கணக்கு பதிவேடுகளை ஜிஎஸ்டி-க்கு ஏற்றவாறு பராமரித்தல், பொருட்களுக்கான விலைழீயீபட்டியல் தயார் செய்தல், ஜிஎஸ்டியை சரியாக கணக்கிடச் செய்து தேவையான படிவங்களை குறிப்பிட்ட காலக் கெடுவிற்குள் வழங்க உதவுகின்றது.
இதனை பயன்படுத்த விரும்பும் நிறுவனங்கள் ஜிஎஸ்டி இணையத்திக்கு சென்று Downloads > Accounting and Billing Software என்றவாறு கொடுத்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
tutorial.gst.gov.in/userguide/taxpayersdashboard/index.htm#t=manual_accountingsoftware.htm என்ற இணைய தளத்துக்கு சென்று மேலும் அதனை பயன்படுத்துவது தொடர்பான செய்திகளை அறிந்து கொள்ளலாம்.
tutorial.gst.gov.in/userguide/taxpayersdashboard/ index.htm#t=FAQs_Accountingsoft ware.htm எனும் இணைய முகவரிக்கு சென்றால் அதற்கான ஆவணங்களை பதிவிறக்கம் செய்து படித்து அறிந்து கொள்ளலாம்.
-ச. குப்பன்