நம்முடைய புத்தாக்கங்களையும், புதிய கண்டு பிடிப்புகளையும் இந்திய காப்புரிமைச் சட்டம் 1970 இன் கீழ் இந்திய காப்புரிமைச் சட்ட அலுவலகத்தில் பதிவு செய்து கொண்டால், அவற்றை நம் அனுமதி இன்றி பிறரால் பயன்படுத்த முடியாது. காப்புரிமை எனப்படும் காப்பிரைட் பதிவு செய்வதற்காக படிமுறைகள் –
முதலில் இவ்வாறான புதிய கண்டுபிடிப்புகள் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டு உள்ளதா என தேடுதல் பணியை செயற்படுத்த வேண்டும். இதற்காக தனியாக தொழில்முறை வல்லுநர்களிடம் தேடுவதற்கான கட்டணத்தினை வழங்கினால், அவர்களே தேடிப்பார்த்து காப்புரிமை பதிவு செய்யப்படவில்லை எனும் சான்று வழங்குவார்கள்
அடுத்து நம் புதிய கண்டுபிடிப்புக்கு ஆன காப்புரிமை பதிவு செய்வதற்காக தனியான விண்ணப் பபடிவத்தினை நிரப்பி இந்திய அறிவுசார் சொத்துரிமைச் சட்ட அலுவலகத்தில் வழங்க வேண்டும்.
அடுத்து புதிய கண்டுபிடிப்பின் காப்புரிமைக்கான அறிக்கை (patentability report), காப்புரிமை பதிவு எதுவும் செய்யப்படவில்லை எனும் அறிக்கை, தேவையான இணைப்பு ஆவணங்கள் ஆகியவற்றை தனியாக தொழில்முறை வல்லுநர்கள், தக்க கட்டணத்தைப் பெற்று தயார் செய்து தருவார்கள். இவவற்றையும் காப்புரிமை கோரும் விண்ணப்பத்துடன் இணைத்து வழங்க வேண்டும்.
மேலே கூறியவாறு புதிய கண்டுபிடிப்பின் காப்புரிமை பதிவு செய்ய விரும்பி வழங்கிய விண்ணப்பம் காப்புரிமைச்சட்ட அலுவலகத்தில் ஆய்வு செய்யப்படும். காப்புரிமை பதிவு செய்வதற்கான கட்டணம் செலுத்தப்பட்டு உள்ளதாவெனவும் சரிபார்த்து இறுதியாக அனைத்தும் சரியாக இருந்தால் நம் புத்தாக்கத்தின் அல்லது புதிய கண்டுபிடிப்புக்கான காப்புரிமை சான்றிதழை வழங்குவார்கள்.
இந்த காப்புரிமை குறைந்த பட்சம் 20 ஆண்டுகள் வரை செல்லுபடியாகும்.
-ச. குப்பன்
Join our list
Subscribe to our mailing list and get interesting stuff and updates to your email inbox.