Latest Posts

ஐம்பதாயிரம் ரூபாயில் ஒரு வணிக வாய்ப்பு, காமதேனு மசாலா தருகிறது!

- Advertisement -

இன்றைக்கு பொதுவாக வீடுகளில் கணவர், மனைவி இருவருமே வேலைக்கு செல்கிறார்கள். இருவரும் வேலைக்குச் சென்றாலும் வீட்டு நிர்வாகம் மற்றும் சமையல் பணிகளை மனைவியே செயல்படுத்த வேண்டி இருக்கிறது. கணவர் தன்னால் முடிந்த வேலைகளைச் செய்து கொடுத்து ஒத்துழைப்பாக செயல் பட்டாலும், முந்தைய காலம் போல வீட்டிலேயே மசாலா சாமான்களை அரைத்து பயன்படுத்த நேரம் இருப்பது இல்லை. இதனால் தங்களுக்குத் தேவையான மசாலா பொடிகள் ரேடிமேட் ஆக கிடைப்பதால் அனைத்தையும் கடைகளிலே வாங்கி சமையல் பணிகளை எளிதாக்கிக் கொள்கிறார்கள். இப்போது பணிக்குப் போகும் மகளிர் மட்டும் என்றில்லாமல் அனைத்து பெண்களுமே சமையலுக்குத் தேவையான மசாலா பொடிகளை கடைகளிலே வாங்கிப் பயன்படுத்திக் கொள்ளும் போக்கு வளர்ந்து விட்டது.


இதனால் மசாலா பொடிகளின் சந்தையும் வேகமாக வளர்ந்து வருகிறது. பல நிறுவனங்களில் மசாலா பொடிகள் கடைகளில் விற்பனை செய்யப்படு கின்றன. காமதேனு மசாலா என்ற பெயரில் தனது மசாலா பொடிகளை சந்தைப் படுத்தி வருகிறார், காமதேனு மசாலா நிர்வாக இயக்குநர், திரு. காலுராம். தனது உற்பத்திப் பொருட்கள் பற்றி அவர் வளர்தொழில் இதழுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது,


”என்னுடைய தனிப்பட்ட அனுபவமே இந்த தொழிலுக்கான விதை போட்டது. கடைகளில் பொதுவாக கிடைக்கும் மசாலா பொடிகளை வாங்கி வீட்டில் சமைத்த உணவுகள் எனக்கு ஒத்துக் கொள்ளவில்லை. செரிமானக் கோளாறு கள் ஏற்பட்டன. இதற்கான காரணம் பற்றி சிந்தித்த போதுதான், அவற்றில் வேதிப் பொருட்கள் சேர்மானங்களாக சேர்க்கப்பட்டு இருப்பதை உணர்ந்தேன். அவைதான் வயிற்றுக் கோளாறுகளுக் கான காரணம் என்பதையும் உணர்ந் தேன். நாம் ஏன் ரசாயன சேர்மானங்கள் சேர்க்காத தூய்மையான மசாலா பொடிகளை தயாரித்து சந்தைப்படுத்தக் கூடாது என்று தோன்றியது. இதன் விளைவாக 2016 -ல் காமதேனு மசாலா நிறுவனம் தோன்றியது.


உயர் தர விளைபொருள்களை விவசாயிகளிடமிருந்து நேரடியாகப் பெற்று அவற்றை சுகாதாரமான முறை யில் அரைத்து விற்பனை செய்கிறோம்.


எங்கள் நிறுவனம் தொடங்கிய காலத்தில் புகழ் பெற்ற பெரிய மசாலா நிறுவனங்களும் சில சிறிய நிறு வனங்களும் சந்தையில் இருந்தன. தரமற்ற பொருட்களை கொடுத்த நிறு வனங்கள் காலப்போக்கில் காணாமல் போயின.


பெரும் நிறுவனங்கள் லட்சக் கணக்கில் விளம்பரங்களில் செல வழித்து அதன் மூலம் வாடிக் கையாளர்களை இழுத்தன. இச்சூழ்நிலையில் கடைக் காரர்களிடம் விடாமுயற்சி யுடன் தொடர்ந்து சென்று எங்கள் பொருட்களை கொண்டு சேர்த்தோம்.


முதலில் சிறுசிறு சரங்களாக பொருட்களை வாங்கினார்கள், நுகர்வோரிடம் இருந்து ஆதரவான பதிலும், பொருட்களுக்கான தேவையும் பெருகியதால் விற்பனை அதிகரித்தது. நாங்கள் எங்களுடைய பொருட்களை திணிக்கவில்லை. காமதேனு மசாலா பொருட்கள் மீது வாடிக்கையாளர் களுக்கும் கடைக்காரர்களுக்கும் படிப் படியாக நம்பிக்கை வளர்ந்ததே எங்கள் வளர்ச்சிக்குக் காரணம். முதலில் ஒரு மாதத்திற்கு ரூபாய் 50,000 ஆக இருந்த தமிழக விற்பனை தற்போது ரூபாய் 50 லட்சமாக உயர்ந்து இருக்கிறது.


அடுத்தபடியாக தென் மாநிலங்களுக் கும் எங்கள் பொருட்களை கொண்டு செல்வதற்கான முயற்சியில் இறங்கி இருக்கிறோம். ஆந்திரா போன்ற மாநிலங்களில் காரத் தன்மையை அதிகம் விரும்புவதால் அதற்கேற்ப மசாலா கூட்டுப் பொருட்களை தயாரித்து விற்பனை செய்ய இருக்கிறோம். மாநிலங்களுக்கு ஏற்ற சுவையில் ரசாயன கலப்பு இல்லாத பொருட் களை தயாரித்து வழங்கும் நடவடிக்கையில் இருக்கிறோம்.


இந்தியா முழுவதும் காமதேனு மசாலா பொருட்களை விற்பனை செய்வதற்கான கட்டமைப்பை உருவாக்கும் திட்டம் இருக்கிறது. இது எங்களின் நீண்ட கால திட்டமாகும்.


அரசாங்கத்திடம் இருந்து எந்த ஒரு உதவியையும் எதிர்பார்க் காமல், எங்களு டைய சொந்த நிதியைக் கொண்டே நிறுவனத்தை இயக்கிக் கொண்டு இருக்கி றோம். எங்களுடைய தொழிலுக்கு என்று உள்ள அசோசியேசனில் சேர்வதற்கான முயற்சியிலும் உள்ளோம்.


தமிழ்நாட்டில் இருபது மாவட்டங் களில் பரவலாக வளர்ந்திருக்கிறோம் இவ்வாண்டு இறுதிக்குள் மற்ற மாவட் டங்களிலும் முழுவதுமாக வேரூன்றுவ தற்கு நடவடிக்கை எடுத்து வருகிறோம்.


காமதேனு மசாலாவில் மூன்று பிரிவுகள் உள்ளன.
மசாலா பொருட்கள் பிரிவு; கடுகு, மிளகு, சீரகம் போன்ற பொருட்களின் பிரிவு; மாவுப் பொருட்கள் பிரிவு என வகைப்படுத்தப்பட்டு உள்ளது. தற்போது தமிழகம் முழுவதும் டீலர்கள் நியமிக்கும் பணி நடைபெற்று வருகிறது, போதிய ஆட்கள், சந்தையில் மற்ற பொருட் களை ஜிஎஸ்டி மூலம் விற்பனை செய்து கொண்டிருக்கும் அனுபவம் மற்றும் வாகன வசதி உள்ளவர்களுக்கு மூன்று பிரிவு பொருட்களையும் விற்பனை செய்யும் வாய்ப்பை வழங்குகிறோம்.


மசாலா போன்ற பொருட்களுக்கு இருசக்கர வாகனமே போதுமானது சந்தையில் ஓரிரு ஆண்டுகள் அனுபவம் தேவை. ஜிஎஸ்டிக்கு விண்ணப்பித்து உள்ளவர்களும், ஜிஎஸ்டி தேவைப் படாத பொருட்களை விற்பனை செய்யும் முகவர்களும் எங்களிடம் பொருட்களை பெற்று முகவர்களாகி ஜிஎஸ்டி பெற்று விற்பனை செய்யலாம்.


காமதேனு மசாலா நிறுவனத்தில் சுமார் 80 வகையான பொருட்களை விற்பனை செய்கிறோம் எனவே குறைந்த பட்சம் 50 ஆயிரம் ரூபாய் முதலீடு தேவை.


குறைந்த முதலீட்டில் செய்வதற்கேற்ற வணிக வாய்ப்புகளைத் தேடிக் கொண்டு இருக்கும் இளைஞர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தொடர்ந்து முன்னேறலாம். நாங்கள் பேருந்து விளம்பரங்கள், எஸ்எம்எஸ் விளம்பரம் மற்றும் பத்திரிக்கை விளம்பரங்கள் மூலம் காமதேனுவின் தரமான பொருட்களை பொதுமக்களிடையே கொண்டு சேர்க்கிறோம்.


தொடக்கத்தில் மூன்று பேர்கள் பணிபுரிந்த எங்கள் நிறுவனத்தில் இப்போது 40க்கும் அதிகமான பணியாளர்கள் பணிபுரிகின்றனர். தரமான பொருட்களை விடாமுயற்சி யுடன் விற்பனை செய்து வெற்றிகரமாக வளர்ந்து வருகிறோம்.” என்றார். (9962974440, 9962974449)

-கா. முரளி

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

Subscribe to our latest news