Latest Posts

தமிழகத்தின் நெல்வணிகத்தில் முத்திரை பதிக்கும் செங்குன்றம்

- Advertisement -

-நெல் அரிசி புரோக்கர்கள் சங்கத்தின் புதிய தலைவர் திரு. திராவிடமணி சிறப்புப் பேட்டி

சென்னைக்கு அருகே உள்ள செங்குன்றத்தில் ‘செங்குன்றம் சுற்று வட்டார நெல் அரிசி புரோக்கர்கள் சங்கம்’ செயல்பட்டு வருகிறது. அதன் தலைவராக திரு. திராவிட மணி அண்மையில் தேர்ந்து எடுக்கப்பட்டு உள்ளார். நெல், அரிசி வணிகத்தில் செங்குன்றம் பெற்று இருக்கும் இடம், இன்றையா வணிக நிலை ஆகியவை பற்றி திரு. திராவிடமணி, வளர்தொழில் இதழுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள் பின்வருமாறு –


நெல், அரிசி வணிகத்தில் புரோக்கர்களின் பங்கு என்ன?


செங்குன்றம் பகுதியில் விற்பனையாகும் நெல் பல வெளி ஊர்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் கொண்டு செல்லப்படுகின்றது. செங்குன்றம் சந்தை கிட்டத்தட்ட தமிழகத்திலேயே நெல்லுக்கு என இயங்கும் மிகப் பெரிய சந்தைகளிள் ஒன்று. செங்குன்றம் சுற்று வட்டார பகுதியில் மொத்தம் சுமார் நூற்று நாற்பதுக்கும் மெற்பட்ட அரிசி ஆலைகள் இயங்கி வருகின்றன. அவற்றுள் ஐம்பது ஆலைகள் சுறுசுறுப்பாக இயங்கி வருகின்றன. நெல்லின் விலையை நிர்ணயிப்பதில் புரோக்கர்களின் பங்கும் இருக்கிறது. இவர்கள் நெல்லை விற்க வரும் வியாபாரிகளுக்கும் கொள்முதல் செய்ய வரும் வியாபாரிகளுக்கும் பாலமாக இருந்து வணிகத்தை முடித்து வைக்கிறார்கள். நெல் விவசாயிகளுக்கும், வியாபாரிகளுக்கும் கூட நாங்கள் பாலமாக இருக்கிறோம்


எங்கு இருந்து லோடுகள் வந்தாலும் அவற்றை விற்பனை செய்ய எடுத்து வந்து இருக்கும் வணிகரின் முன்னிலையிலேயே நெல் வாங்க வந்து இருக்கும் வணிகரிடம் பேசி விலை நிர்ணயித்து இருவருக்கும் மனநிறைவாக வணிகத்தை முடித்து கொடுக்கிறோம்.


சந்தைக்கு வரும் எல்லா நெல்லும் அவ்வப்போதே விற்பனை ஆகி விடுமா?


எங்கள் பகுதிக்கு நள்ளிரவு பன்னிரன்டு மணி முதலே நெல் ஏற்றிய சரக்கு லாரிகள் வரத் தொடங்கி விடும். காலை ஐந்து மணி முதல் புரோக்கர்கள் லாரிகளில் இருக்கும் நெல் வகை, தரம் ஆகியவற்றை ஆராய்ந்து, கொள்முதல் செய்ய வந்து இருக்கும் வணிகர்களிடம் நெல் முட்டைகளை விற்பனை செய்வதற்கான பணிகளில் ஈடுபடத் தொடங்கி விடுவார்கள்.


போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதன் காரணமாக காலை ஒன்பது மணிக்கு மேல் எந்த சரக்கு வாகனங்களும் செங்குன்றம் நகரின் உள்ளே உள்ள மெயின் சாலையில் நிறுத்தக் கூடாது. அப்படி ஒன்பது மணிக்கு மேலும் அந்த லாரியில் இருக்கும் நெல் விற்பனை ஆகவில்லை என்றால் அப்படிப்பட்ட லாரிகளை தனியார் பார்க்கிங் இடங்களுக்கு கொண்டு சென்று, நிறுத்தி விடுவோம். அங்கிருந்தபடி விற்பனை நடைபெறும். அந்த நிறுத்தும் இடங்களில் லாரிகளை நிறுத்த ஒரு மணி நேரத்திற்கு ரூ.100 என்ற விகிதத்தில் கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும். பெரும்பாலும் அன்றன்றைக்கே விற்பனை ஆகி விடும்.


நீங்கள் எவ்வளவு காலமாக இந்த தொழிலில் இருக்கிறீகள்?


இந்த பகுதிக்கு சுமார் 1970 களிள் இருந்தே நெல் லோடுகள் வரத் தொடங்கி விட்டன. 1980களின் தொடக்கத்தில் இருந்தே நமது அண்டை மாநிலமான ஆந்திராவில் இருந்து நெல் லோடுகள் கணிசமாக வரத் தொடங்கி விட்டன. நான் இந்த தொழிலில் 1981 – ல் இருந்தே ஈடுபட்டு வருகிறேன். தற்போதைய சந்தை நிலவரப்படி இங்கு வரும் நெல்முட்டைகள் சுமார் 70% சதவிதத்திற்கும் மேற்பட்டவை ஆந்திராவில் இருந்துதான் வருகின்றன.


ஒரு நாளைக்கு சராசரியாக ஏழுபது முதல் நூறு லாரிகள் வந்து செல்கின்றன. நல்ல பருவத்தில் சுமார் நூற்று ஐம்பதுக்கும் மேற்பட்ட லாரிகள் வருகின்றன. சீசனே இல்லை என்றாலும் குறைந்தது ஐம்பது லாரிகள் கண்டிப்பாக வந்து விடும்.
நான் அரிசி தரகராக இருப்பதோடு நெல்லை கொள்முதல் செய்து விற்பனை செய்வதும் உண்டு. இது போன்று பல தரகர்கள் நெல் வணிகத்திலும் ஈடுபடுவார்கள்.


ஒரு தரகர் ஒரு கைப்பிடி நெல்லை கையில் எடுத்துப் பார்த்தே இந்த நெல் பத்து முட்டைக்கு ஆறு முட்டையில் இருந்து ஏழரை முட்டை வரையில் அரிசி தருமா எனக் கூறி விடும் அளவுக்கு திறமையாக இருப்பார்கள்.


இப்போது அரிசி ஆலைகளைப் பொறுத்தவரை பல புதிய தொழில் நுட்பங்கள் வந்து விட்டன. முன்பு எல்லாம் நெல்லில் கருப்பு கலந்து இருந்தால், அந்த லோடையே சில நேரங்களிள் புரோக்கர்கள் புறக்கணித்து விடுவார்கள். ஆனால் தற்போது நெல்லில் உள்ள கருப்புகளை, கற்களை பிரித்து எடுக்கும் பணியை நவீன அரிசி ஆலைகளில் உள்ள எந்திரங்களே செய்து முடித்து விடுகின்றன. இப்படிப்பட்ட செயல்களைச் செய்ய குறைந்தது இருபது டன் நெல்லை அந்த எந்திரத்தின் உள்ளே கொட்ட வேண்டும். தற்போது ஒரே நேரத்தில் ஐம்பது டன் நெல்லைக் கூட உள்வாங்கி அரிசியாக்கும் நவீன அரிசி ஆலைகள் வந்து விட்டன.


இங்கு இருந்து அரிசி எந்த ஊர்களுக்கு அதிக அளவில் அனுப்பப் படுகிறது?


சேலம், நசரத்பேட்டை, திருவண்ணா மலை, ஊட்டி, விக்கிரவாண்டி, வேலூர் போன்று பல இடங்களுக்கு அரிசி லோடுகள் செல்கின்றன.


தஞ்சாவூர், மதுரை, திருச்சி, மணப்பாறை மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங் களுக்கும் சரக்குகள் கொண்டு செல்லப் படுகிறது. மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் இருந்தும் கூட இங்கு நெல் விற்பனைக்கு வருகின்றது.


செங்குன்றத்தில் இருந்து அரிசி ஏற்றுமதி செய்யப்படுகிறதா?


ஏற்றுமதியைப் பொறுத்தவரை பெரிய அளவில் நடைபெறவில்லை.
எனக்குத் தெரிந்த வரை, அருகே உள்ள பொன்னேரியில் இருந்து இருவர் ஏற்றுமதி வணிகத்தில் ஈடுபட்டு இருக்கிறார்கள். குறிப்பாக நார்ச்சத்து அதிகம் உள்ள சிவப்பு அரிசியான பிசிலிகாரு போன்ற வகை அரிசிகள் மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.


வேதி உரங்கள் பயன்படுத்தாமல் விளைவிக்கப்படும் ஆர்கானிக் அரிசிக்கான விற்பனை வாய்ப்பு இங்கே உள்ளதா?


ஆர்கானிக் அரிசி எனப்படும் இயற்கை உரம் மட்டும் பயன்படுத்தி விளைவி க்கப்படும் அரிசிகள் இப்போது நம் சந்நையில் விற்பனைக்கு வருவது கிடையாது. அதனை விளைவிக்கும் விவசாயிக்கு பயன் குறைவு என்பதால், பெரும்பாலும் சிலர் மட்டுமே அவர்கள் விருப்பத்திற்கு என சிறிய அளவில் விளைவித்து வருகின்றனர்.


அரிசி வணிகத்தில் புதிய இளைஞர்கள் இறங்கலாமா? அதற்கான தங்கள் ஆலோசனை என்ன?


அரிசி வணிகத்தைப் பொறுத்தவரை புதிதாக எவர் வேண்டும் என்றாலும் தொடங்கலாம். ஒரு இளைஞர் அனுபவம் பெற்ற வணிகரிடம் இருந்து பயணித்து அனுபவம் பெற்ற பின்பு அவர் துணிச்சலுடன் தயக்கம் இன்றி செயல்படலாம்.
எங்கள் சங்கமும், சங்க உறுப்பினர்களும் புதிதாக வருபவர்களுக்கு இழப்பு எற்படாத வகையில் அவரை வழி நடத்தி அவருக்கு தொழில் நுணுக்கங்களை கற்றுக் கொடுப்போம். ஒரு லோடு விலை சராசரியாக முன்றரை லட்சம் ரூபாய் வரை இருக்கும். முன்பு டிராக்டர்களிள் சிறிய சிறிய லோடுகள் வந்து கொண்டு இருந்தன. தற்போது அது போன்ற லோடுகள் வருவது இல்லை. ஒருவர் தனியாகவோ, அல்லது சிலர் சேர்ந்தோ ஓரு லோடினை வாங்கி வியாபாரம் செய்யலாம்.


ஜிஎஸ்டிக்குப் பின் அரிசிக்கான வரி விதிப்பு எப்படி இருக்கிறது?


அரிசி என்பது அன்றாடம் தேவைப்படும் உணவுப் பொருள். கலைஞர் அவர்களின் ஆட்சி காலத்தில் அரிசிக்கு வரிவிலக்கு கொண்டு வந்தார். தற்போது ஜிஎஸ்டியில் அரிசிக்கு வரி விதிக்கப்படுகின்றது. அதாவது அரிசியை அப்படியே பிராண்டு பெயர் இல்லாமல் விற்பனை செய்தால் அதற்கு ஜிஎஸ்டி வரி இல்லை. பிராண்டு பெயருடன் விற்பனை செய்தால் ஜிஎஸ்டி செலுத்தியாக வேண்டும்.


ஒரு அரிசி லோடுக்கு ஒரு முறை செஸ் வரி (சராசரியாக ரூ.1000) செலுத்தினால் போதுமானது. அதனை பயன்படுத்தி எந்த மாநிலத்துக்கும் கொண்டு செல்லலாம். அரிசி உணவுப் பொருள் என்பதால் ஒரு மாநிலத்தில் இருந்து மற்ற மாநிலத்துக்கு செல்லும் போது பெரிதாக எந்த கட்டுப்பாடும் கிடையாது.


அரிசியை எவ்வளவு நாட்களுக்கு இருப்பு வைத்து விற்பனை செய்ய முடியும்? அல்லது பயன்படுத்த முடியும்?


அரிசியை அதிக அளவாக ஒரு ஆண்டு வரை கெடாமல் இருப்பு வைக்க முடியும். ஆனால் அப்படி அதிக காலம் கெடாமல் இருப்பு வைக்க, நெல்லை அரைத்த பின்பு, அரிசியை ஹீட்டர் முலம் நன்கு உலர வைத்து சற்றும் ஈரப்பதம் இல்லாமல் சிறப்பாக பேக் செய்து வைக்க வேண்டும். இப்படிச் செய்தால்தான் அரிசி ஒரு ஆண்டு வரை கெடாமல் இருக்கும். சாதாரணமாக பேக் செய்தால், ஆறு மாதம் வரை கெடாமல் இருக்கும். ஒட்டல்களுக்கு சப்ளை செய்யும் சிலர், ஆலையில் இருந்து வரும் அரிசியை அப்படியே பேக் செய்து கொடுத்து விடுவார்கள். அப்படிப்பட்ட அரிசி முன்று மாதங்கள் மட்டுமே கெடாமல் இருக்கும்.


தற்போது ஆலைகளில் ஐம்பது டன் வரை ஒரே முறையில் நெல்லை அரிசியாக்க முடியும். அப்படி வரும் அரிசி சைலோ (silo) எனப்படும் சேமிப்புத் தொட்டியில் சென்று சேர்ந்து விடும். தொட்டியில் இருந்து கன்வேயர் பெல்ட் மூலம் 25 கிலோ மூட்டைகளாக நிரப்பப்பட்டு, தைக்கப்பட்டு தானியங்கி முறையில் அரிசி மூட்டைகள் வந்து விடும். அதனை எடுத்து அடுக்குவதற்கே தற்போது ஆலைகளில் மனிதவளம் தேவைப்படுகின்றது.


நெல், அரிசி புரோக்கர்கள் சங்கத்தின் பணிகள் என்ன? தற்போது தாங்கள் கடுமையான போட்டிக்கு இடையே வெற்றி பெற்று புதிய தலைவராக தேர்ந்து எடுக்கப்பட்டு இருக்கிறீர்கள். என்னென்ன பணிகளை மேற்கொள்ள இருக்கிறீர்கள்?


எங்கள் நெல் அரிசி புரோக்கர்கள் சங்கம் 1986ல் தொடங்கப்பட்டது. சங்கம் உருவாக காரணமாக இருந்த பன்னிரென்டு பேர்களிள் நானும் ஒருவன். நான் தொடக்க காலத்தில் இருந்தே எல்லா பதவிகளிலும் இருந்து இருக்கிறேன். தற்போது மூன்றாவது முறையாக தலைவராக தெர்ந்தெடுக்கப்பட்டு உள்ளேன். நான் புதிதாக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், எங்கள் உறுப்பினர்கள் அனைவருக்கும் காப்பீடு திட்டம் கொண்டு வர உள்ளோம். செங்குன்றம் பகுதியில் இயங்கி வரும் நெல் அரிசி வியாபாரிகள் சங்கத்தின் கீழ் இயங்கும் திருமண மண்டபத்தில் எங்கள் உறுப்பினர்களுக்கு 25% தள்ளுபடி வழங்க திட்டமிட்டு உள்ளோம்.


உறுப்பினர்களிள் பிள்ளைகள் மேற்படிப்பிற்காக செல்லும் போது அவர்களுக்கு கல்வி ஊக்கத் தொகையை பரிசாக வழங்குகின்றோம். எதிர்பாராமல் சங்க ஊறுப்பினர் ஒருவர் காலமானார் என்றால் அவர்கள் குடும்பத்திற்கு ரூ.50,000 சங்கம் சார்பாக வழங்கி வருகின்றோம்.


செங்குன்றம் பகுதியில் அனைத்து அரிசி மண்டிகளும், தரகர்களும் நம்பிக்கையுடனும், நேர்மையுடனும் தொழிலை நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் அரிசி விலையை நிர்ணயிக்கும் ஒரு முக்கிய சந்தையாகவும் செங்குன்றம் செயல்பட்டு வருகின்றது. (98401 59597)


-செ. தினேஷ்பாண்டியன்

- Advertisement -

Latest Posts

Don't Miss

[tdn_block_newsletter_subscribe title_text="Stay in touch" description="U3Vic2NyaWJlJTIwdG8lMjBvdXIlMjBsYXRlc3QlMjBuZXdz" input_placeholder="Email address" tds_newsletter2-image="5" tds_newsletter2-image_bg_color="#c3ecff" tds_newsletter3-input_bar_display="row" tds_newsletter4-image="6" tds_newsletter4-image_bg_color="#fffbcf" tds_newsletter4-btn_bg_color="#f3b700" tds_newsletter4-check_accent="#f3b700" tds_newsletter5-tdicon="tdc-font-fa tdc-font-fa-envelope-o" tds_newsletter5-btn_bg_color="#000000" tds_newsletter5-btn_bg_color_hover="#4db2ec" tds_newsletter5-check_accent="#000000" tds_newsletter6-input_bar_display="row" tds_newsletter6-btn_bg_color="#da1414" tds_newsletter6-check_accent="#da1414" tds_newsletter7-image="7" tds_newsletter7-btn_bg_color="#1c69ad" tds_newsletter7-check_accent="#1c69ad" tds_newsletter7-f_title_font_size="20" tds_newsletter7-f_title_font_line_height="28px" tds_newsletter8-input_bar_display="row" tds_newsletter8-btn_bg_color="#00649e" tds_newsletter8-btn_bg_color_hover="#21709e" tds_newsletter8-check_accent="#00649e" embedded_form_code="JTNDIS0tJTIwQmVnaW4lMjBNYWlsY2hpbXAlMjBTaWdudXAlMjBGb3JtJTIwLS0lM0UlMEElM0NsaW5rJTIwaHJlZiUzRCUyMiUyRiUyRmNkbi1pbWFnZXMubWFpbGNoaW1wLmNvbSUyRmVtYmVkY29kZSUyRmNsYXNzaWMtMTBfNy5jc3MlMjIlMjByZWwlM0QlMjJzdHlsZXNoZWV0JTIyJTIwdHlwZSUzRCUyMnRleHQlMkZjc3MlMjIlM0UlMEElM0NzdHlsZSUyMHR5cGUlM0QlMjJ0ZXh0JTJGY3NzJTIyJTNFJTBBJTA5JTIzbWNfZW1iZWRfc2lnbnVwJTdCYmFja2dyb3VuZCUzQSUyM2ZmZiUzQiUyMGNsZWFyJTNBbGVmdCUzQiUyMGZvbnQlM0ExNHB4JTIwSGVsdmV0aWNhJTJDQXJpYWwlMkNzYW5zLXNlcmlmJTNCJTIwJTdEJTBBJTA5JTJGKiUyMEFkZCUyMHlvdXIlMjBvd24lMjBNYWlsY2hpbXAlMjBmb3JtJTIwc3R5bGUlMjBvdmVycmlkZXMlMjBpbiUyMHlvdXIlMjBzaXRlJTIwc3R5bGVzaGVldCUyMG9yJTIwaW4lMjB0aGlzJTIwc3R5bGUlMjBibG9jay4lMEElMDklMjAlMjAlMjBXZSUyMHJlY29tbWVuZCUyMG1vdmluZyUyMHRoaXMlMjBibG9jayUyMGFuZCUyMHRoZSUyMHByZWNlZGluZyUyMENTUyUyMGxpbmslMjB0byUyMHRoZSUyMEhFQUQlMjBvZiUyMHlvdXIlMjBIVE1MJTIwZmlsZS4lMjAqJTJGJTBBJTNDJTJGc3R5bGUlM0UlMEElM0NkaXYlMjBpZCUzRCUyMm1jX2VtYmVkX3NpZ251cCUyMiUzRSUwQSUzQ2Zvcm0lMjBhY3Rpb24lM0QlMjJodHRwcyUzQSUyRiUyRlZhbGFyLnVzMi5saXN0LW1hbmFnZS5jb20lMkZzdWJzY3JpYmUlMkZwb3N0JTNGdSUzRGJiNTM2ZDNlMDlmMDk5MGYzOTNkYTAwYzElMjZhbXAlM0JpZCUzRGZiZDdiNDU3MzYlMjIlMjBtZXRob2QlM0QlMjJwb3N0JTIyJTIwaWQlM0QlMjJtYy1lbWJlZGRlZC1zdWJzY3JpYmUtZm9ybSUyMiUyMG5hbWUlM0QlMjJtYy1lbWJlZGRlZC1zdWJzY3JpYmUtZm9ybSUyMiUyMGNsYXNzJTNEJTIydmFsaWRhdGUlMjIlMjB0YXJnZXQlM0QlMjJfYmxhbmslMjIlMjBub3ZhbGlkYXRlJTNFJTBBJTIwJTIwJTIwJTIwJTNDZGl2JTIwaWQlM0QlMjJtY19lbWJlZF9zaWdudXBfc2Nyb2xsJTIyJTNFJTBBJTA5JTNDaDIlM0VTdWJzY3JpYmUlM0MlMkZoMiUzRSUwQSUzQ2RpdiUyMGNsYXNzJTNEJTIyaW5kaWNhdGVzLXJlcXVpcmVkJTIyJTNFJTNDc3BhbiUyMGNsYXNzJTNEJTIyYXN0ZXJpc2slMjIlM0UqJTNDJTJGc3BhbiUzRSUyMGluZGljYXRlcyUyMHJlcXVpcmVkJTNDJTJGZGl2JTNFJTBBJTNDZGl2JTIwY2xhc3MlM0QlMjJtYy1maWVsZC1ncm91cCUyMiUzRSUwQSUwOSUzQ2xhYmVsJTIwZm9yJTNEJTIybWNlLUVNQUlMJTIyJTNFRW1haWwlMjBBZGRyZXNzJTIwJTIwJTNDc3BhbiUyMGNsYXNzJTNEJTIyYXN0ZXJpc2slMjIlM0UqJTNDJTJGc3BhbiUzRSUwQSUzQyUyRmxhYmVsJTNFJTBBJTA5JTNDaW5wdXQlMjB0eXBlJTNEJTIyZW1haWwlMjIlMjB2YWx1ZSUzRCUyMiUyMiUyMG5hbWUlM0QlMjJFTUFJTCUyMiUyMGNsYXNzJTNEJTIycmVxdWlyZWQlMjBlbWFpbCUyMiUyMGlkJTNEJTIybWNlLUVNQUlMJTIyJTNFJTBBJTNDJTJGZGl2JTNFJTBBJTA5JTNDZGl2JTIwaWQlM0QlMjJtY2UtcmVzcG9uc2VzJTIyJTIwY2xhc3MlM0QlMjJjbGVhciUyMiUzRSUwQSUwOSUwOSUzQ2RpdiUyMGNsYXNzJTNEJTIycmVzcG9uc2UlMjIlMjBpZCUzRCUyMm1jZS1lcnJvci1yZXNwb25zZSUyMiUyMHN0eWxlJTNEJTIyZGlzcGxheSUzQW5vbmUlMjIlM0UlM0MlMkZkaXYlM0UlMEElMDklMDklM0NkaXYlMjBjbGFzcyUzRCUyMnJlc3BvbnNlJTIyJTIwaWQlM0QlMjJtY2Utc3VjY2Vzcy1yZXNwb25zZSUyMiUyMHN0eWxlJTNEJTIyZGlzcGxheSUzQW5vbmUlMjIlM0UlM0MlMkZkaXYlM0UlMEElMDklM0MlMkZkaXYlM0UlMjAlMjAlMjAlMjAlM0MhLS0lMjByZWFsJTIwcGVvcGxlJTIwc2hvdWxkJTIwbm90JTIwZmlsbCUyMHRoaXMlMjBpbiUyMGFuZCUyMGV4cGVjdCUyMGdvb2QlMjB0aGluZ3MlMjAtJTIwZG8lMjBub3QlMjByZW1vdmUlMjB0aGlzJTIwb3IlMjByaXNrJTIwZm9ybSUyMGJvdCUyMHNpZ251cHMtLSUzRSUwQSUyMCUyMCUyMCUyMCUzQ2RpdiUyMHN0eWxlJTNEJTIycG9zaXRpb24lM0ElMjBhYnNvbHV0ZSUzQiUyMGxlZnQlM0ElMjAtNTAwMHB4JTNCJTIyJTIwYXJpYS1oaWRkZW4lM0QlMjJ0cnVlJTIyJTNFJTNDaW5wdXQlMjB0eXBlJTNEJTIydGV4dCUyMiUyMG5hbWUlM0QlMjJiX2JiNTM2ZDNlMDlmMDk5MGYzOTNkYTAwYzFfZmJkN2I0NTczNiUyMiUyMHRhYmluZGV4JTNEJTIyLTElMjIlMjB2YWx1ZSUzRCUyMiUyMiUzRSUzQyUyRmRpdiUzRSUwQSUyMCUyMCUyMCUyMCUzQ2RpdiUyMGNsYXNzJTNEJTIyY2xlYXIlMjIlM0UlM0NpbnB1dCUyMHR5cGUlM0QlMjJzdWJtaXQlMjIlMjB2YWx1ZSUzRCUyMlN1YnNjcmliZSUyMiUyMG5hbWUlM0QlMjJzdWJzY3JpYmUlMjIlMjBpZCUzRCUyMm1jLWVtYmVkZGVkLXN1YnNjcmliZSUyMiUyMGNsYXNzJTNEJTIyYnV0dG9uJTIyJTNFJTNDJTJGZGl2JTNFJTBBJTIwJTIwJTIwJTIwJTNDJTJGZGl2JTNFJTBBJTNDJTJGZm9ybSUzRSUwQSUzQyUyRmRpdiUzRSUwQSUzQ3NjcmlwdCUyMHR5cGUlM0QndGV4dCUyRmphdmFzY3JpcHQnJTIwc3JjJTNEJyUyRiUyRnMzLmFtYXpvbmF3cy5jb20lMkZkb3dubG9hZHMubWFpbGNoaW1wLmNvbSUyRmpzJTJGbWMtdmFsaWRhdGUuanMnJTNFJTNDJTJGc2NyaXB0JTNFJTNDc2NyaXB0JTIwdHlwZSUzRCd0ZXh0JTJGamF2YXNjcmlwdCclM0UoZnVuY3Rpb24oJTI0KSUyMCU3QndpbmRvdy5mbmFtZXMlMjAlM0QlMjBuZXclMjBBcnJheSgpJTNCJTIwd2luZG93LmZ0eXBlcyUyMCUzRCUyMG5ldyUyMEFycmF5KCklM0JmbmFtZXMlNUIwJTVEJTNEJ0VNQUlMJyUzQmZ0eXBlcyU1QjAlNUQlM0QnZW1haWwnJTNCZm5hbWVzJTVCMSU1RCUzRCdGTkFNRSclM0JmdHlwZXMlNUIxJTVEJTNEJ3RleHQnJTNCZm5hbWVzJTVCMiU1RCUzRCdMTkFNRSclM0JmdHlwZXMlNUIyJTVEJTNEJ3RleHQnJTNCZm5hbWVzJTVCMyU1RCUzRCdBRERSRVNTJyUzQmZ0eXBlcyU1QjMlNUQlM0QnYWRkcmVzcyclM0JmbmFtZXMlNUI0JTVEJTNEJ1BIT05FJyUzQmZ0eXBlcyU1QjQlNUQlM0QncGhvbmUnJTNCZm5hbWVzJTVCNSU1RCUzRCdCSVJUSERBWSclM0JmdHlwZXMlNUI1JTVEJTNEJ2JpcnRoZGF5JyUzQiU3RChqUXVlcnkpKSUzQnZhciUyMCUyNG1jaiUyMCUzRCUyMGpRdWVyeS5ub0NvbmZsaWN0KHRydWUpJTNCJTNDJTJGc2NyaXB0JTNFJTBBJTNDIS0tRW5kJTIwbWNfZW1iZWRfc2lnbnVwLS0lM0U=" descr_space="eyJhbGwiOiIxNSIsImxhbmRzY2FwZSI6IjE1In0=" tds_newsletter="tds_newsletter3" tds_newsletter3-all_border_width="0" btn_text="Sign up" tds_newsletter3-btn_bg_color="#ea1717" tds_newsletter3-btn_bg_color_hover="#000000" tds_newsletter3-btn_border_size="0" tdc_css="eyJhbGwiOnsibWFyZ2luLWJvdHRvbSI6IjAiLCJiYWNrZ3JvdW5kLWNvbG9yIjoiI2E3ZTBlNSIsImRpc3BsYXkiOiIifSwicG9ydHJhaXQiOnsiZGlzcGxheSI6IiJ9LCJwb3J0cmFpdF9tYXhfd2lkdGgiOjEwMTgsInBvcnRyYWl0X21pbl93aWR0aCI6NzY4fQ==" tds_newsletter3-input_border_size="0" tds_newsletter3-f_title_font_family="445" tds_newsletter3-f_title_font_transform="uppercase" tds_newsletter3-f_descr_font_family="394" tds_newsletter3-f_descr_font_size="eyJhbGwiOiIxMiIsInBvcnRyYWl0IjoiMTEifQ==" tds_newsletter3-f_descr_font_line_height="eyJhbGwiOiIxLjYiLCJwb3J0cmFpdCI6IjEuNCJ9" tds_newsletter3-title_color="#000000" tds_newsletter3-description_color="#000000" tds_newsletter3-f_title_font_weight="600" tds_newsletter3-f_title_font_size="eyJhbGwiOiIyMCIsImxhbmRzY2FwZSI6IjE4IiwicG9ydHJhaXQiOiIxNiJ9" tds_newsletter3-f_input_font_family="394" tds_newsletter3-f_btn_font_family="" tds_newsletter3-f_btn_font_transform="uppercase" tds_newsletter3-f_title_font_line_height="1" title_space="eyJsYW5kc2NhcGUiOiIxMCJ9"]