பயிர்ப் பெருக்கம்: திசு வளர்ப்பு செய்யும் புரட்சி!

தாவர திசு வளர்ப்பு என்பது தாவர உயிரணு அல்லது உறுப்புகளை, சத்துள்ள மற்றும் ஏற்ற சுற்றுப்புறம் சார்ந்த நிலையில் வளர்ப்பது(in vitro).


திசு வளர்ப்பு, நுண் பயிர் பெருக்கம் என்றும் அழைக்கப்படுகிறது.
ஹாபர்லாண்ட் என்பவர் முதல் முறையாக தாவர திசுவில் இருந்து ஒரு முழு பயிரை உருவாக்கினார், ஆகையால் இவர் திசு வளர்ப்பின் தந்தை என அழைக்கப்படுகிறார்.
தாவர திசு வளர்ப்பானது மகரந்ததூள் வளர்ப்பு,தோலின் மேல் தடிப்பு வளர்ப்பு, தண்டு நுனி வளர்ப்பு, வளர்திசு வளர்ப்பு, மற்றும் உயிர்த்தாது ஒன்றுதல் ஆகும்.

Advertisement


திசு வளர்ப்பு முறை பாரம்பரிய வளர்ப்பு முறையை விட பயனுள்ளதாக இருக்கிறது
உள்கட்டமைப்பில் தாவர வளர்ப்பு, பாரம்பரிய வளர்ப்பு முறையை விட வேகமாக உள்ளது.
பாரம்பரிய முறையால் பெருக்கம் செய்யமுடியாத பயிரை திசு வளர்ப்பு மூலமாக செய்யலாம்.
ஒரு வகைப்படுத்தப்பட்ட குத்துச் செடிகளை அதிக அளவில் உற்பத்தி செய்யலாம்.
நோய்கள் அற்ற அல்லது பூச்சிகள் அற்ற விதைகளை உருவாக்கலாம்.
தேவைக்கேற்ப தாவரங்களை அதிக நாட்கள் பராமரிக்கலாம்.


தாவர திசு வளர்ப்பு வெற்றிக்கு முழுமையான திறன் என்ற அடிப்படைக் கொள்கையே காரணம். முழுமையான திறன் என்பது வேறுபாடற்ற தாவர திசுவில் இருந்து வேறுபாடு அடைந்த ஒரு செயல்பாடு உள்ள தாவரமாக வளர்ச்சியடைய கூடியது என்பதைக் குறிக்கிறது. திசு வளர்ப்பு தாவர அறிவியல் வளர்ச்சிக்கு பயன்படுகிறது. திசு வளர்ப்பு தொடர்பான பல்வேறு வணிகங்கள் செயல்பட்டு வரிகின்றன.


செயல்பாடுகள்:
நுண் பயிர் பெருக்கம் வனவியல் மற்றும் மலரியலில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இம்முறை அழிந்து வரும் தாவர வகைகளை காப்பாற்றும் வழியாகவும் அமைந்து உள்ளது.
பயிர் இனப்பெருக்க வல்லுநர்கள் இம்முறை தொடர்பான சிறந்த ஆய்வுகளில் ஈடுபட்டு பல நுட்பங்களைக் கண்டு அறிந்து உள்ளனர்.
மிகப் பெரிய அளவில் தாவர உயிரணு வளர்ப்பை பயோரியாக்டர் மூலமாக செய்து தேவைக்கேற்ப வளர்சிதை மாற்றம் அடையச் செய்யலாம்.
ஒரே சீரான பயிரை காலிசிலின் மூலமாக தயாரிக்கலாம். தண்டு நுனி வளர்ப்பின் மூலமாக வைரஸ் இல்லாத தாவரத்தை உருவாக்கலாம்.


நுட்ப முறைகள்:
ஒரு தாவரத்தின் உறுப்பை எடுத்து அதை நோயகற்றும் காரணியில் பக்குவம் செய்து பின்னர் சத்துக்கள் உள்ள குழாயில் வைத்து ஒரு சீரான நிலையில் முழு தாவரம் வரும் வரை பராமரிக்கப்படுகிறது. இதற்காக தண்டு, இலை, மொட்டு மற்றும் வளர்திசு, வளர்ப்பு ஊடகத்தில் ஈடுபடும் செடி உறுப்பாக பயன்படுத்தப்படுகிறது. வாழை கன்று திசுவளர்ப்பு மூலமாக வாழை உற்பத்தி மறுமலர்ச்சி அடைந்து உள்ளது.


திசு வளர்ப்பு மூலமாக நுண் உயிரிகள் அற்ற கன்றுகளை குறைந்த இடத்தில் அதிக அளவில் உற்பத்தி செய்யலாம். சந்தையின் தேவைக்கு ஏற்ப செயல்பட்டு ஏற்றுமதி அளவுக்கு ஏற்ப உற்பத்தி செய்யலாம். ஆனால் திசு வளர்ப்புக்கான அடிப்படை கட்டுமானத்தை அமைப்பதற்கு பெரிய அளவில் முதலீடும், தொழில் நுட்ப பணியாளர்களும், கூடுதலான இடமும் தேவைப்படுகிறது.


ஊடகம்:
இதில் அனைத்து தனிமம் மற்றும் தேவையான சத்துக்கள், திரவ நிலை அல்லது அரை திண்ம நிலையில் திசு வளர்ப்புக்காக இருக்கும். திசுக்கள் இந்த ஊடகத்தில்தால் வளர்க்கப்படுகிறது. இதில் 95% நீர், திசு வளர்ப்புக்குத் தேவையான ஊட்ட சத்துக்கள், தாவர வளர்ச்சி ஹார்மோன்கள், விட்டமின்கள் போன்றவை இருக்கும்.


கருவளர்ப்பு:
கருவளர்ப்பு என்பது ஒரு ஊடகத்தில் முதிர்ந்த அல்லது முதிராத கரு கொண்டு வளர்க்கபடுபவை. இம்முறையால் செயலற்ற விதை அல்லது முளைப்புத் திறனற்ற விதையில் இருந்து ஒரு புதிய தாவரத்தை உருவாக்கலாம்.


உடற்கூறு கரு வளர்ப்பு தாவர திசு வளர்ப்பில் ஒரு சிறந்த முறையாகும். கால்சியம் அல்கினெட் பயன்படுத்தி உடற்கூறு கருவில் இருந்து செயற்கை விதையை உருவாக்கலாம்.


இயல் நிகழ்ச்சியில் பசைக் கூடு உருவாக்கப்படுகிறது. இதை சைட்டோ கைனின் மூலமாக தண்டு உருவாக் கப்படுகிறது. இம்முறையால் புதியதோர் உறுப்பு உருவாக்கப்படுகிறது. இது உறுப்பாக்கவியல் என அழைக்கப்படுகிறது. தண்டை வேர் வளர்ச்சி உக்கி பயன்படுத்தி முழு தாவரமாக வளர்க்கலாம்.


வளர்கரு காக்கும் வளர்ப்பு:
ஒரு சில வணிகம் சார்ந்த பயிர்களின் வளர்ச்சி விதை முளைப்பின்றி காணப்படும். வளர்கரு சிதைவே இதற்கு முக்கிய காரணம் இதற்காக வளர்கருவை தனிமைப்படுத்தி சத்துள்ள ஊடகத்தில் வளர்ப்பதன் மூலம் புதிய பயிரை உருவாக்கலாம்.


தண்டு நுனி வளர்ப்பு:
தண்டு வளர்ப்பு முறையை விட தண்டு நுனி வளர்ப்பு மூலமாக சிறந்த தாவரத்தை பெறலாம்.


முழுத் தாவரம்:
இம்முறையால் நோயற்ற தாவரத்தை பெறுவதோடு அல்லாமல் மேலும் நோய்கள் வராமல் வளர்க்கலாம். ஆகையால் இத்தாவரங்களை நோய்கள் அற்று சேகரித்து வைக்கலாம்.


வளர்திசு வளர்ப்பு:
0.1மிமி – 0.5மிமி நீளமுள்ள தொற்று நீக்கிய வளர்திசுவை உகந்த ஊடகத்தில் பசைக் கூடு தயாரிப்பின் மூலமாக பெறலாம். இம்முறையால் நோயற்ற தாவரத்தை பெறலாம்.


மகரந்தப்பை வளர்ப்பு:
சரியான நிலையில் உள்ள மகரந்தத்தை உகந்த ஊடகத்தில் வளரச் செய்வதே மகரந்தப்பை வளர்ப்பு ஆகும்.
மகரந்தமுறை வளர்ப்புக்கு, உகந்த தாய்ச் செடியில் இருந்து மகரந்ததை எடுத்து ஆராய்ச்சி கூடத்தில் பராமரித்தல், ஊடகத்தின் உகந்த கார அமில நிலையாப் பராமரித்தல், தாவரத்தின் வளர்ப்பு காலம் ஆகியவை முத்ன்மையானவையாக உள்ளன.


மகரந்தப்பை வளர்ப்பின் இரு படி நிலைகள்:
மகரந்தப்பை வளர்ப்பு, இரு படி நிலைகளான நேரிடை மற்றும் மறைமுக வளர்ப்பு முறைகளில் வளர்க்கப்படுகிறது. நேரிடை முறையில் மகரந்தம் தன்னில் இருந்து தாவரத்தை ஊடகத்தின் மூலம் உருவாக்கும். மறைமுக முறையில் மகரந்தத்தில் இருந்து பசைக்கூடு மூலமாக தாவரத்தை உருவாக்கும். தாவரங்களை மகரந்தப்பை மூலமாக குறுகிய காலகட்டத்தில் உருவாக்கலாம், ஏனெ ன்றால் நுனிகள் எப்பொழுதும் நோயற்றதாக இருக்கும்.


தாவரத்தின் புத்துயிர்ப்பு:
ஒரு முதிர்ந்த தாவரத்தில் இருந்து திசு மூலமாக குறுகிய காலகட்டத்தில் முழு தாவரத்தை உருவாக்குவது சாத்தியமாகும். இதை தாவரத்தின் புத்துயிர்ப்பு என்று அழைக்கப்படுகிறது. இம்முறை மரவள்ளிக் கிழங்கில் வெற்றிகரமாக செய்து காட்டப் பட்டது.


நுண் பயிர்பெருக்கம்:
தண்டு கணுவில் இருந்து எடுக்கப்பட்ட திசுவின் மூலம் ஆயிரக்கணக்கில் தாய் மூலவகை தாவரத்தை குறுகிய காலக ட்டத்தில் உருவாக்கலாம்.


செயற்கை விதைகள்:
வளர்கரு தோற்றம் உயிரி தொழில் நுட்பத்தின் ஒரு இன்றியமையாத அடிப்படை தொழில் நுட்பம் ஆகும். உடற்கூறு கருவை பயன்படுத்தி செயற்கையாக விதைகளை உருவாக்கலாம். சோடியம் ஆல்சினைட் மற்றும் கால்சியம் குளோரைட் மூலம் உடற்கூறு கருவின் விதை உறையை உருவாக்கலாம். இதில் இருந்து முழுத் தாவர இயற்கை விதைகள் போல் உருவாக்கலாம். இம்முறையால் அதிக அளவில் மூல வகை தாவரங்களைப் பெருக்கலாம். மேலும் மரபணு கட்டமைப்பில் மாற்றங்களை உருவாக்கலாம். இம்முறையின் மூலம் காய்கறிகளை உருவாக்கலாம். விதைகளற்ற தர்பூசணியை இவ்வகையில் உருவாக்கலாம்.

-மூலம்: சிபிஎம்பி, டிஎன்ஏயு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here