இந்தியா முழுவதும் கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாக ரொக்கமில்லாத பணப்பரிமாற்றம் ஓரளவு உயர்ந்து வருகிறது. 160 மில்லியன் மக்கள் இந்த வசதியை பயன்படுத்தி கொள்கின்றனர். பாதுகாப்பு தன்மையை கூடுதலாக்கும் வகையில் புதிய விர்ச்சுவல் கிரடிட் /டெபிட் (Virtual Credit/Debit Cards) எனும் புதிய வசதி தற்போது அறிமுகப் படுத்தபட்டு உள்ளது. இதன் பயன்கள் பின்வருமாறு.
இழப்பு ஏதேனும் ஏற்படுமாயின் இந்த விர்ச்சுவல் அட்டையில் எவ்வளவு தொகை குறிப்பிட்டு உள்ளோமோ அந்த தொகை அளவுக்கு மட்டுமே இழப்பு ஏற்படும்.
இது கையில் வைத்திருக்ககும் அட்டை இல்லை; விர்ச்சுவல் அட்டை என்பதால் யாராலும் அபகரிக்க முடியாது இந்த விர்ச்சுவல் அட்டை செயலில் இருக்கும் கால அளவு அதிகபட்சம் இரு நாட்கள் மட்டுமேயாகும்.
இதன் வாயிலான பணப் பரிமாற்றம் OTP எனும் ஒரு முறைக்கு மட்டுமே ஆன கடவுச் சொற்களின் வாயிலாக மட்டுமே அனுமதிக் கப்படும். ஒவ்வொரு முறையும் PIN, OTP ஆகியவற்றின் வாயிலாக மட்டுமே இந்த விர்ச்சுவல் அட்டையை உருவாக்க முடியும்.
தொட்டுணரக் கூடிய டெபிட், கிரடிட் கார்டை அச்சிட்டு அனுப்பிப் பெறுகின்ற நடைமுறை இதில் அறவே ஒழிக்கப் படுகின்றது
வழக்கமான கடனட்டையை பெறுவ தற்காக கட்டணம் செலுத்துவதைப் போன்று இதனை பெறுவதற்காக தனியாக கட்டணம் செலுத்த தேவையில்லை. தேவை இல்லை எனில் இந்த விர்ச்சுவல் அட்டையை அறவே நீக்கம் செய்து மிகுதி தொகையை நம் கணக்கில் வரவு வைத்துக் கொள்ள முடியும்.
இந்த வசதியை ஸ்டேட் வங்கி, யூனியன் வங்கி, எச்டிஎஃப்சி, ஐடிபிஐ, பேங்க் ஆப் பரோடா போன்ற வங்கிகள் வங்கிகள் வழங்குகின்றன
இந்த வசதியை இன்டர்நெட் பேங்கிங், மொபைல் பேங்கிங் ஆப் ஆகிய இரு வழிகளில் பெற முடியும். இந்த வசதியை பெறுவதகு முதலில் இவைகளின் வாயிலாக நம் வங்கியின் முகப்புத் திரையில் உள்நுழைவு செய்ய வேண்டும். பின்னர் services section எனும் பகுதிக்கு சென்று அதில் Generate Virtual Card எனும் வாய்ப்பினை தேர்வு செய்து சொடுக்க வேண்டும்.
தொடர்ந்து விர்ச்சுவல் டெபிட்/கிரடிட் அட்டையில் நாம் பயன்படுத்த விழையும் தொகையை குறிப்பிட்டு Submit கிளிக் செய்ய வேண்டும். உடன் ஒன் டைம் பாஸ்வேர்டு ஒன்று உருவாகி நம் கைபேசிக்கு வந்து சேரும். இதனை உள்ளீடு செய்து Submit கொடுக்க வேண்டும். உடன் விர்ச்சுவல் டெபிட் அல்லது கிரடிட் அட்டை ஒன்று உருவாகி விடும். இந்த அட்டை 48 மணி நேரம் மட்டுமே செயல்படும்.
இந்த விர்ச்சுவல் அட்டையை குறிப்பிட்ட நோக்கத்திற்காக மட்டும் அல்லாது குறிப்பிட்ட தொகை காலியாவது வரை மட்டும் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
-முனைவர் ச. குப்பன்