இணையம் வழியாக ஏற்றுமதி-இறக்குமதி பயிற்சி

ஏற்றுமதி-இறக்குமதி தொழிலை முழுமையாக தெரிந்து கொண்டு தொழில் தொடங்க வேண்டும் என்ற ஆர்வத்தில் இருப்பவர்கள் இணையதளம் வழியாக இலவசமாக ஏற்றுமதி – இறக்குமதி தொழில் பற்றிய அடிப்படை முறையை கற்கலாம்.
தனியார் அமைப்புகள் நடத்தும் ஏற்றுமதி தொடர்பான பயிற்சி வகுப்புகள் பெரும்பாலும் ஒரு கருத்தரங்கம் போலவே நடைபெறுகிறது. இதில் பங்கு பெறுவோர் ஒரே நாளில் முழுமையான தகவல்களைழீயீ பெற இயலாது. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் வெளிநாட்டு வர்த்தக அமைச்சகம் ஏற்றுமதி-இறக்குமதி பற்றிய அடிப்படை கல்வியை இலவசமாக இணைய தளம் வழியாக கற்பிக்கிறது.


எளிய ஆங்கிலத்தில், பல்வேறு பாடப் பிரிவுகள் இதில் அடங்கி உள்ளவீ. வீடியீ காட்சி வசதிகளும் கூட உள்ளன. ஆங்கிலத்தை புரிந்து கொள்ளும் ஆற்றல் உள்ளவர்கள் யார் வேண்டுமானாலும் இதில் சேர்ந்து பயன் பெறலாம். வயது, கல்வித் தகுதி இதற்கு எந்த ஒரு தடையும் இல்லை.

Advertisement


முழுமையான விவரங்கள் niryatbandhu.iift.ac.in/exim வலை தளத்தில் உள்ளன. அனைத்துப் பாடங்களையும் படித்த பின்பு, விருப்பம் இருந்தால், ஆன்லைன் தேர்வு எழுதி, ருபாய் இரண்டாயிரம் செலுத்தி, நடுவண் அரசின் சான்றிதழையும் பெறலாம்.

-எஸ். எஸ். ஜெயமோகன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here