Latest Posts

பயிர் விளைச்சல் பெருந் தகவல்

- Advertisement -

விதைகள் மற்றும் உரங்கள் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள், தங்களுக்கான விவரங்களை பல்லாயிரம் உழவர்களிடம் இருந்து சேகரித்து, திரும்ப அதே உழவர்களிடமே விற்பனை செய்கின்றன.


ஆறு தலைமுறைகளாக, பென் ரெயின்ஸ்கி-யின் குடும்பம், மேற்கு லோவாவில் உள்ள விண்ட்ஸ்வெப்ட் சமவெளியில் மக்காச் சோளமும் சோயாபீன்சும் பயிரிட்டு வருகிறது. ஆனால் இன்று அவர், தனது 12 ஆயிரம் ஏக்கரில் தனது புதிய பயிர்களுடன் மதிப்புள்ள தகவல்களையும் அறுவடை செய்து வருகிறார். ரெயின்ஸ்கி என்ன சொல்கிறார்?


“எதிர்காலம் எளிய தகவல் பகுப்பாய்வு மற்றும் தொழில்நுட்பத்தால் கட்டமைக்கப்படும்” என்கிறார். அவர் தனது தாத்தாவின் கையெழுத்தில் எழுதப்பட்ட நோட்டுப் புத்தகத்தைப் பாதுகாத்து வருகிறார். அதில், ஒரு மரக்கால் மக்காச் சோளம் எத்தனை கோழி முட்டைகளை உருவாக்கும் என்ற குறிப்பை எழுதி வைத்திருக்கிறார்.


கடந்த ஆறு ஆண்டுகளாக அவர் கிளைமேட் கார்ப் என்ற நிறுமத்தில் தகவல் பகுப்பாய்வு சேவையில் தன்னை ஈடுபடுத்தி வருகிறார். ரெயின்ஸ்கி சொல்கிறார், “தனது சிறந்த பயிர்களை விதைக்கும் போது, ஆறு விழுக்காடு விதைகளைக் குறைக்கிறார். அதுபோல 11 விழுக்காடு உரங்களைக் குறைக்கிறார். ஆனால் எப்போதுமே அவரது பயிர்களே சிறந்த பயிர்களாக வளர்ந்து நிற்கின்றன. இதில் எந்த ரகசியமும் கிடையாது. இவை எல்லாம் பயிரிடும் நிலத்தின் தன்மையைக் கண்டறிந்து, அவ்வப்போது குறிப்பெடுத்து வைத்தவைதான் என்கிறார். இப்போது இவை எல்லாமே டிஜிட்டல் மென்கருவிகளாகக் கிடைக்கின்றன.


உழவர்களின் தொழிலறிவு, மகசூல்கள், எரு (உர) வகைகளின் பயன்பாடு, பயிர்கள் வளர்ச்சிக் காலம், மழையின் அளவு மற்றும் இத்தகைய பல்வேறு விவரங்களைத் தொகுத்து, பேயர், சின்கென்டா, டவ்டூபான்ட் மற்றும் பேஸ்ப் முதலிய உலகளாவிய வேளாண்துறை நிறுவனங்கள் செயல்படுகின்றன.


இந்த நிறுவனங்கள், இத்தகைய விவரங்களை ஒரு மென்பொருளில் கொடுத்து, அந்த மென்பொருள், விதைகளின் சேர்க்கை, எருக்கள் மற்றும் அதிகபட்ச மகசூலுக்கு விதைத் தெளிப்பு முறை – போன்றவற்றை உழவர்களுக்கு முன்னறிவித்துக் காட்டுகின்றன. இதனால் இத்தகைய மென்பொருட்களின் விற்பனை அதிகரித்துள்ளது. இந்த மென்பொருட்களுக்கு ஏராளமான உழவர்கள் சந்தாதாரர்கள் ஆகியுள்ளனர். கிளைமேட் கார்ப் நிறுவனத்தின் தலைவர்களில் ஒருவரான மைக் ஸ்டெர்ன் என்பவர், “உழவர்களின் வரலாற்று அனுபவங்களைப் பயன்படுத்தி, மென்பொருளை உருவாக்கி, டிஜிட்டல் மயமாக்கி, மீண்டும் உழவர்களிடமே விற்பனை செய்கிறோம்” என்கிறார். டேட்டாவே புதிய கரன்சி, அதாவது, “தகவலே புதிய பணத் தாள்” என்கிறார்.


வேளாண்மையை டிஜிட்டல் மயமாக்கியது புதிதாக ஏற்பட்டது அல்ல, 1980 வாக்கில், மண் வகைகளைப் பற்றிய தகவல்கள், ஆறு அங்குலம் உள்ள ஃபிளாப்பி தட்டுகளில் பதிவு செய்யப்பட்டு, உரத்தின் தேவைகளைப் பற்றி கணக்கீடு செய்யப்பட்டது. மேலும் இவற்றை மேம்படுத்தி, இணைய நிறுவனங்கள் மாபெரும் தகவல் வங்கியை உருவாக்கின.
இந்த நுட்பம், இன்று உழவர்களின் கைக்கணினியில், ஒவ்வொரு சதுர அடியிலும், விதைத் தெளிப்பு முறையில், எவ்வளவு விதைகளைப் போட்டால், அதிகபட்சமாக எவ்வளவு மகசூலைப் பெற முடியும் என்கிற விவரம் வரை விரிவாக கணக்கீடு செய்து அறிவிக்கிறது.


இந்த மென்பொருளில், மேலும் மேலும் உழவர்களின் தொழிலறிவும் பகிர்வு செய்யப்பட்டு, இந்த தகவல் வங்கி, இன்னும் இன்னும் விரிவாகிக் கொண்டே செல்கிறது. இதன் மூலம் செயற்கை நுண்ணறிவு உருவாக்கப்பட்டு, சிறந்த ஆலோசனைகளை உழவர்களுக்கு வழங்குகிறது. இது ஆக்கப்பூர்வமான சுழற்சி. மேலும் மேலும் அதிக தகவல்கள், இணையும் போது, அல்காரிதம்கள் அதிகரிப்பதால், துல்லியத்தன்மை கூடுகிறது.


“உழவர்களுக்கு முன்னறிவிப்பு செய்யப்பட்டு, அதற்குப் பதிலாக, அவர்களிடமிருந்து மேலும் மேலும் தொழிலறிவு பெறப்பட்டு, தகவல் வங்கி இன்னும் பெரிதாகிறது” என்கிறார் பகுப்பாய்வாளர் சான்ஃபோர்டு சி பெர்ன்ஸ்டெயின். 20 ஆம் நூற்றாண்டின் நடுப் பகுதியில், டிஜிட்டல் வேளாண் சந்தை ஆண்டுக்கு ஒரு பில்லியன் டாலர் அதாவது சுமார் 7000 கோடி ரூபாய் என்ற அளவிலேயே எதிர்பார்ப்பு இருந்தது.


ஆனால் இன்று பெரு நிறுவனங்கள் தங்களது வேளாண் தகவல் வங்கியை இணைத்து, ஒரு ஏக்கருக்கு ஒரு டாலர் என்ற அளவில் சந்தா வசூலிக்கப்பட்டு, இத்தகைய மென்பொருட்களை புதிதாக வடிவமைக்கவும், பழையதை மேம்படுத்தவும் பயன்படுத்தப்படுகின்றன. “வர்த்தக அளவில் வெற்றிகரமான இத்தகைய பெருந்தகவல் வங்கி, வருங்காலத்தை வடிவமைப்பதில் முக்கிய பங்காற்றுகிறது” என்கிறார் பேஸ்ப் நிறுவனத்தின் முதன்மை நிதி அலுவலர் ஹான்ஸ் யுள்ரிச் எங்கெல்.


இந்த ஓட்டம் முன்னேறிக் கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு நிறுவனமும் பல்லாயிரம் உழவர்களின் வியப்பூட்டும் அனுபவ அறிவுகளை ஒருங்கிணைத்து வைத்துள்ளது. பேயர் நிறுவனம் 160 மில்லியன் ஏக்கர் நிலங்களின் தகவல் அறிவுகளை ஒருங்கிணைத்து வைத்துள்ளது.


பேஸ்ப், சின்கென்டா மற்றும் டவ்டூபான்ட் ஆகிய நிறுவனங்கள் இரண்டாவது இடங்களில் உள்ளன. “யார் முன்னிலை வகிக்கிறார்கள் என்பதைச் சொல்வது கடினம். மிகக் கூடுதல் தகவல், மிகச் சிறந்த தகவல் வங்கியை கட்டமைக்கிறது” என்கிறார் டான் பர்டெட். இவர் சின்கென்டா நிறுவனத்தின் முதல் நிலைத் தலைவராக உள்ளார்.


மேலும் இத்தகைய நிறுவனங்கள் தகவல் சேகரிக்கும் எந்திரனை (ரோபோ) உருவாக்கும் பணித் திட்டத்தில் ஈடுபட்டுள்ளன. இந்த எந்திரன்கள் சமமற்ற, சகதி நிறைந்த, எத்தகைய நிலமாக இருந்தாலும், அந்த நிலத்தை ஆராய்ந்து, அதன் குறைபாடுகளையும், அவற்றை ஈடுசெய்யும் வழிமுறைகளையும் எச்சரிக்கைகளையும் கொடுக்கும் என்பதாகவும் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.


“ஒரு பயிர் நோயில் அல்லது சிக்கலில் இருந்தால், அதன் மேற்புற இலையை சூரிய வெளிச்சத்தை நோக்கித் திருப்பும் வகையில், இந்த எந்திரன் அதன் முயற்சியைச் செய்யும்” என்கிறார், கேடபிள்விஎஸ் நிறுவனத்தின் தொழில்நுட்ப மேம்பாட்டுத் துறை வல்லுநர் லாரெலி டேவிஸ். எத்தகைய செயற்கைக் கோள் அல்லது தொழில்நுட்பம் இருந்தாலும், தனிப்பட்ட பயிரின் அல்லது செடியின் நோயை, துயரத்தை, அதன் இலையை வைத்துக் கண்டறிவது கடினம். ஆனால், இந்த எந்திரன்கள் இத்தகைய குறைபாடுகளைக் களையும் என்கிறார்.


ரெயின்ஸ்கி, தனது வேளாண் நிலத்தில் குழந்தைகளுடன் ஈடுபடுவதை பொழுதுபோக்காக வைத்துள்ளார். தகவல் புரட்சி வேளாண் வர்த்தகத்தை மாற்றியமைத்து வருவதாக சொல்கிறார். வாடிக்கையாளர்களின் உணவுத் தேவைகள் வெளிப்படையானவை. எப்படி விதைப்பது, பயிரிடுவது, வளர்ப்பது, மகசூல் ஈட்டுவது என்பவை மதிப்பு மிக்க தகவல்.


தானியம் அல்லது மது தயாரிக்க மக்காச் சோளம் அல்லது பார்லி தேவைப்படுகிறது. இவை அதிகபட்ச ஸ்டார்ச் கொண்டவை. இவற்றை எந்த உழவரின் நிலத்தில், நம் தேவைக்கேற்ற தானியம் கிடைக்கும் என்பதை கணினித் திரையில் பார்த்தே எளிதாக ஆர்டர் செய்து விடலாம். நம் பயிர்களின் வளர்ச்சி நிலைகளும் அவர்களின் கணினித் திரையில் காட்டப்படும்.


ரெயின்ஸ்கி மேலும், “இந்த சரியான தொழில்நுட்பத்தால், என் பயிர்களுக்கான வாங்குபவர்கள் (வாடிக்கையாளர்கள்) எனக்குக் கிடைக்கிறார்கள்” என்கிறார்.

-ஆலன் பாரி

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

Subscribe to our latest news