ஏற்றுமதி, இறக்குமதியாளர்களுக்கு பயன்படும் வகையில் “போர்ட் விங்ஸ்” என்ற ஆங்கில வார இத.ழ் வெளி வருகிறது. இதை நடத்தி வரும் முகவை திரு. க. சிவகுமார், இந்த இதழ் குறித்துக் கூறியபோது,.
“இராமநாதபுரம் மாவட்டம்,, கமுதிக்கு அருகில் உள்ள நகரத்தார்குறிச்சி எனது சொந்த ஊர். 1991 ஆம் ஆண்டு சென் னைக்கு வந்தேன். மஹாருடி என்டர் பிரைசஸ். எனும் ஏற்றுமதி-இறக்குமதி நிறுவனத்தில் பணிபுரிந்தேன். அங்கு, ஆவணப்படுத்துதல், சுங்கப் பிரிவின் செயல்பாடுகள், போக்குவரத்துகளை கையாளும் விதம், இறக்குமதி யாளர்களை தொடர்பு கொள்ளுதல் போன்றவற்றைக் கற்றேன்.
சிறுவயது முதல் இதழ்களை படிப்பதில் எனக்கு ஆர்வம் அதிகம். தினமணியில் வெளிவரும் கட்டுரை களைப் படித்துவிட்டு அவ்வப்போது ஆசிரியர்க்கு கடிதம் எழுதுவேன். எழுதுவதிலும், படிப்பதிலும் ஆர்வம் கொண்ட எனக்கு, தினமணி நாளிதழின், வடசென்னை பகுதியின் பகுதி நேர செய்தியாளராக பணிபுரிய வாய்ப்புக் கிடைத்தது.
வடசென்னையில் நிலவும் சூழலைக் குறித்து அந்த இதழில் அவ்வப்போது செய்திக் கட்டுரைகள் எழுதுவேன். சென்னை, எண்ணூர் பற்றிய செய்திகள், போக்குவரத்து நெரிசல், கடல் சார்ந்த மக்களின் சிக்கல்கள், ஏற்றுமதியாளர்கள் சந்திக்கும் இடர்கள், அவர்களுக்கான தேவைகள் குறித்து பல கட்டுரைகளை எழுதி உள்ளேன்.
நமது தென்னக கடற்கரையின் பரப்பளவு மிகவும் நீளமானது. கடல் சார்ந்த தொழில் வளம் அதிக அளவில் உள்ளது. இதனைப் பயன்படுத்தி இன்னும் நாம் வளர முடியும்.
கடல் வணிகம் குறித்து வெளிவரும் இதழ்கள் மிகவும் குறைவு. இந்த வகையில், துறைமுகம், கப்பல் போக்குவரத்து மற்றும் ஏற்றுமதி-இறக்குமதி அனைத்தையும் உள்ளடக்கிய துறை சார்ந்த ஓர் ஆங்கில இதழைத் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் எனக்குத் தோன்றியது.
ஆங்கிலப் இதழ்களில் பணிபுரிந்த எனது நண்பர்கள் திரு. சரவணன், திரு. சுதாகரன் உதவியுடன் 2013 ம் ஆண்டு ‘போர்ட் விங்ஸ்’ என்ற செய்தி இதழைத் தொடங்கினேன்.
ஏற்றுமதி, இறக்குமதி சார்ந்த அரசின் அறிவிப்புகள், திட்டங்கள், கொள்கைகள் ஆகியவற்றை விரிவாக எழுதுகிறோம். துறை சார்ந்த வல்லுநர்களின் பேட்டி களையும், தொழில் முனைவோரின் கட்டுரைகளையும், அரசுக்குத் தெரிவிக்க வேண்டிய கோரிக்கைகளையும் வெளியிடு கிறோம். மேலும், சென்னை, மும்பை, கிருஷ்ணபட்டினம் போன்ற துறைமுகங் களுக்கு வரும் கப்பல்களின் அட்டவணை களையும் தருகிறோம்.
எங்களுடைய செய்திகள் அனைத் தையும் எளிய ஆங்கிலத்தில் எழுது கிறோம். லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தாரும், துறைமுகங்களும் எங்களுக்கு ஆதரவு தருகிறார்கள்.
இதழில் வெளிவரும் அனைத்து செய்திகளையும்எங்களின் வலைத் தளத்திலும் (www.portwings.in) பதிவு செய்து வருகிறோம்.” என்றார், திரு. சிவகுமார். (9444222056)
-எஸ். எஸ். ஜெயமோகன்