சந்தை என மாற்றும் பேகிஸ்டோ

இந்த Bagisto நம் ஆன்லைன் கடையை ஒரு சந்தையாக மாற்றி விடுகின்றது. அதன் வாயிலாக நம் ஆன்லைன் கடைக்குள் பல்வேறு விற்பனையாளர்களும் தங்கள் பொருட்களை விற்பனை செய்யும் வாய்ப்பை உருவாக்குகின்றது.


நம் ஆன்லைன் கடைக்கு வரும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும், கொள்முதல் செய்வதற்கான ஏராளமான வாய்ப்புகளை வெவ்வேறு வகையில் பல்வேறு விற்பனையாளர்களிடமிருந்து பெறுகின்ற வசதியை வழங்குகின்றது. ஒரு பொருளின் விலையை ஒப்பிட்டுப் பார்க்கும் வசதியையும் வழங்குகிறது.


கடையின் இருப்பை அவ்வப்போது கணக்கிட்டு தேவைக்கேற்ப பொருட்களை வரவழைக்கவும் இது உதவுகின்றது. ஒரு சில விற்பனையாளர்களின் புதிய பொருட்களை கொண்டு வந்து விற்பனை செய்வதற்கான அனுமதியை தானாகவே வழங்கிடுமாறு செய்கின்றது. ஒவ்வொரு விற்பனையாளரும் என்னெ ன்ன பொருட்களை விற்கின்றனர் என இது பட்டியலிடுவதால் இதில் வாடிக்கையாளர் தமக்கு தேவையான பொருட்களை சரியான விற்பனையாளரிடமிருந்து பெறுவதற்கும், விலைகளையும் பொருளின் தரத்தையும் ஒப்பீடு செய்வதற்கும் ஆன வசதியை வழங்குகின்றது.


இந்த Bagisto விற்பனையாளர்கள் தங்களுடையவிவரங்களையும், பொருட்களின் விவரங்களையும், இணைய முகவரிகளையும் தேவையான போது மாற்றி கொள்ள அனுமதிக்கின்றது. மேலும் விவரங்களுக்கு பேகிஸ்டோ இணைய தளம் செல்லலாம்.

-வசந்தகுமாரி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here