Thursday, October 29, 2020

ஓவியங்களில், டிசைன்களில் பயன்படுத்தப்படும் சில நுட்பங்களைப் புரிந்து கொள்வோம்

ஓவியத்துக்கு அடிப்படைக் கலைக் கூறுகளாக கோடு, வடிவம், இடப்பரப்பு, வண்ணம், தகை நேர்த்தி, இழைநயம் போன்றவைகள் எவ்வாறு இன்றி அமையாதவை ஆக இருக்கின்றனவோ, அவற்றைப் போலவே, ஓவியத்தின் பண்புக் கூறுகளாக சமநிலை (பேலன்ஸ்),...

Latest Posts

கணினியை அணைத்து வைத்த பிறகும் நேரம், தேதியை சரியாக காட்டுவது எப்படி?

பேட்டரி என்று சொன்ன உடனேயே நம் நினைவுக்கு வருவது கைக்கடிகாரமும், சுவரில் மாட்டும் சுவர்க் கடிகாரமும்தான். இதைத் தவிர இன்வெர்ட்டரில் பயன்படுத்தப்படும் பெரிய அளவிலான பேட்டரியும் நினைவுக்கு வரக் கூடும்....

வேலை வாய்ப்புக்கு உதவும் விரிவான தொழில் நுட்ப அறிவு

முதல் நிறுவனத்தில் எனக்கு வேலையில் விருப்பம் இல்லாததால், வேறு வேலை தேடும் பொழுது மற்றொரு ஐரோப்பிய வாகன தொழிற் நிறுவனத்தில் LabVIEW Developer வேலைக்கான விளம்பரம் பார்த்து விண்ணப்பித்து இருந்தேன். எனக்கு அனுபவம்...

நாட்டு உடைமை நூல்களின் பிழை திருத்தும் பணியில் கணியம்

நாட்டுடைமை நூல்களை தமிழ் விக்கி மூலம் சரிபார்க்கிறது, கணியம் அறக்கட்டளை. இணையத்தில் தமிழ் வளர்க்கும் நோக்குடைய கணியம் அறக்கட்டளை தமிழ் விக்கி மூலம் (https://ta.wikisource.org/s/8xyy) திட்டத்தில் மெய்ப்புப் பார்க்கும் பணியில் (ப்ரூஃப் ரீடிங்) நேரடியாகப்...

இந்த பெண்மணி எப்படி சம்பாதித்து இருக்கிறார், பாருங்கள்!

2000 முதல் 2004 வரை, சென்னை வில்லிவாக்கம் நாதமுனி சாலையில், ஐஸ்வர்யம் குடியிருப்பில் வாடகை வீட்டில் வசித்து வந்தேன். உரிமையாளரான ஒரு அம்மா,அடுத்த தெருவில் ஒரு பெரிய வீட்டில் இருந்தார்கள். மாதந்தோறும் அங்கே சென்று,...

மார்க்கெட்டிங் சில அடிப்படைகள்

மார்க்கெட்டிங் என்பது விளம்பரப்படுத்துதல் மட்டும் அல்ல. அதைத் தாண்டியும் நிறைய விஷயங்கள் இருக்கின்றன.
வாடிக்கையாளர்களை நம் தயாரிப்புகள் அடைய ஒவ்வொரு நோக்கிலும் செல்லுதல் வேண்டும். நம் பொருள் வாடிக்கையாளருக்கு மனநிறைவு தந்தால்தான் மீண்டும் மீண்டும் நம்மிடம் வருவார்கள், மற்றும் மற்றவர்களுக்கும் அதை பரிந்துரை செய்வார்கள். அப்பொழுது நம் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை பெருகும்.


மார்க்கெட்டிங் மிக்ஸ்:
மார்க்கெட்டிங் மிக்ஸ் எனப்படுவது பின்வருவனவற்றின் கலவை ஆகும்.

1.ப்ராடெக்ட் (Product)

2.ப்ரைஸ் (Price)

3.ப்ளேஸ் (Place)

4.ப்ரொமோஷன் (Promotion)

இவை நான்கும் மார்க்கெட்டிங்கின் 4 P எனப்படுகின்றன.


முதலில் வாடிக்கையாளரின் தேவையை அறிந்து பொருளை (ப்ராடெக்டை) உருவாக்க வேண்டும். பிறகு அந்த பொருளின் மதிப்பு மற்றும் வாடிக்கையாளரினால் செலவு செய்யக் கூடிய விலையில் (ப்ரைஸ்) இருக்க வேண்டும். மற்றும் அதை எங்கு விற்க முடியுமோ அந்த இடத்தில் (ப்ளேஸ்) விற்க வேண்டும். மற்றும் வாங்கத் தூண்டும் ஃப்ரொமோஷன் செயற்பாடுகளைச் செய்ய வேண்டும்.


எல்லா மார்க்கெட்டிங்கும் இந்த நான்கின் கலவை தான். ஆனால் அதன் விகிதம் மாறும். சான்றிற்கு ஒரு நட்சத்திர உணவகத்தைப் பொருத்த வரை விலை அதிகமாக இருக்கும். அங்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு விலை ஒரு பொருட்டு அல்ல. இதுவே பட்ஜெட் உணவகத்தைப் பொருத்த வரை விலை குறைவாக இருக்கும். ஏனென்றால் அங்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு விலைதான் முக்கியம்.


சரியான விகிதத்தில் இந்த நான்கையும் கலந்தால் வெற்றி நிச்சயம். முக்கியக் குறிப்பு என்னவென்றால் இதன் கலவை விகிதம் நிலையானது அல்ல. நாளுக்கு நாள் மாறும். ஏனென்றால் ஒரு பொருளின் விலை அதிகமாக இருந்தால் வாடிக்கையாளர்கள் அதன் தரம் அதிகமாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். விளம்பரப்படுத்துதல் மூலமும் ஒரு பொருளை நல்ல விலையில் விற்கலாம்.


ப்ராடெக்ட்:
யாரை எல்லாம் நம் பொருள் மனநிறைவு அடையச் செய்யும் என்பதை நாம் அறிந்து இருத்தல் வேண்டும். சில நேரத்தில் அந்த பொருள் நம்முடைய தேவையை நிறைவு செய்யும் என்பதை வாடிக்கையாளர்கள் அறிந்திருக்க மாட்டார்கள். அவர்களையும் நம் பொருள் சேருதல் வேண்டும்.


ஃப்ரைஸ்:
வாடிக்கையாளர் நம் பொருளை வாங்கும் பொழுது அதன் விலை அவர்களுக்கு மனநிறைவாகவும், நமக்கு லாபம் தருவதாகவும் இருத்தல் வேண்டும். தரமான நியாயமான விலை கொடுக்கலாம். விலையும் அதன் தரமும் ஒன்றுக்கு ஒன்று நேர்விகிதத்தில் இருத்தல் வேண்டும்.


ஃப்ளேஸ்:
இது வாடிக்கை யாளரையயும் பொருளையும் இணைக்கக் கூடியது ஆகும். அது மொத்த விற்பனை யாளர், சில்லரை விற்பனை யாளர் போன்றோரின் இடமாக இருக்கலாம். சில பொருட்களுக்கு அதன் இடம் ஒரு தடையாக இருக்காது. இணையம் ஆனது ஒரு பொருளின் விற்கும் இடத்தை எளிதாக்கி விட்டது.


ஃப்ரொமோஷன்:
ஒரு பொருளை மீடியா மூலமோ அல்லது மின்னஞ்சல் மூலமோ விளம்பரப் படுத்தலாம். பெரிய நிறுவனங்களுக்கு விளம்பரம் ஒரு முக்கியமான செயல் பாடாகும். சில்லரை விற்பனையாளர் களுக்கும் அவர்களுக்கு ஏற்ற அளவிலாவது விளம்பரம் தேவைப்படும்.


சரியான விலையை நிர்ணயித்தல்:
நம்முடைய போட்டியாளர்கள் என்ன விலைக்கு விற்கிறார்கள் என்பதை நாம் முதலில் அறிதல் வேண்டும். பொருட்கள் தயாரிக்கும் அளவும், அதன் தேவையும் அதிகமாக இருந்தால், அது பொருட்களின் விலையை மாற்றி அமைக்கும். அதாவது மிகக் குறைவான விலையோ அல்லது மிக அதிகமான விலையோ அல்லாமல் சரியான அளவில் பொருட்களை தயாரிக்க வேண்டும்.


பப்ளிக் ரிலேஷன்:
இது மார்க்கெட்டிங் மிக்ஸின் ஐந்தாவது யாக அமைகின்றது. நம்முடைய நிறுவனத்தைப் பற்றிய நல்ல அறிமுகம் வாடிக்கையாளரிடம் இருத்தல் வேண்டும். பப்ளிக் ரிலேஷன் நுட்பங்கள் மூலம் நம்முடைய நிறுவனத்தின் இமேஜை மேல் நிலைக்குக் கொண்டு செல்லுதல் வேண்டும். நம்முடைய நிறுவனத்தைப் பற்றி என்ன விதமான பெயரை நம்முடைய நிறுவனத்திற்கும் வாடிக்கையாளர்களுக்கும் ஏற்படுத்துகின்றோம் என்பதில் கவனம் கொள்ள வேண்டும்.


வாடிக்கையாளரை அறிதல்:
வாடிக்கையாளர்கள் பற்றிய தகவல்கள் நமக்கு தெரிதல் வேண்டும். அவர்களுடைய தேவை, அவர்களுடைய வாங்கும் திறன் ஆகியவற்றை அறிந்து நம்முடைய பொருட்களை கொண்டு செல்லுதல் வேண்டும்.


வாடிக்கையாளரை பிரித்து அறிதல்:
குறைந்த விலையில் அதே நேரம் அடிக்கடி வாங்குபவர், எப்போதாவது வாங்குபவர், அதிக விலையில் அதே நேரம் அடிக்கடி வாங்குபவர், எப்போதாவது வாங்குபவர் என வாடிக்கையாளரைப் பிரித்து அறிதல் வேண்டும். தள்ளுபடிகள் மூலம் நிறைய வாடிக்கையாளர்களை அறியலாம்.


தகவல்களை பயன்படுத்துதல்:
ஏன் வாடிக்கையாளர்கள் ஒரு பொருளை வாங்குகிறார்கள் என்பதை முதலில் அறிய வேண்டும். இதன் மூலம் நிறுவனமானது மார்க்கெட்டிங் தீர்மானங்களை எடுக்கலாம்.


அறிந்து கொள்ள வேண்டியவை:
வாடிக்கையாளர் ஒரு தனி நபராக இல்லாமல், ஒரு நிறுவனமாய் இருந்தால் அவர்கள் வாங்கும் நடவடிக்கையைப் பற்றி இன்னும் அதிகமாய் அறிதல் வேண்டும். சர்வேக்களின் மூலமும் அதிக தகவல்களைத் திரட்டலாம்.

-முத்து கார்த்திகேயன்

Latest Posts

கணினியை அணைத்து வைத்த பிறகும் நேரம், தேதியை சரியாக காட்டுவது எப்படி?

பேட்டரி என்று சொன்ன உடனேயே நம் நினைவுக்கு வருவது கைக்கடிகாரமும், சுவரில் மாட்டும் சுவர்க் கடிகாரமும்தான். இதைத் தவிர இன்வெர்ட்டரில் பயன்படுத்தப்படும் பெரிய அளவிலான பேட்டரியும் நினைவுக்கு வரக் கூடும்....

வேலை வாய்ப்புக்கு உதவும் விரிவான தொழில் நுட்ப அறிவு

முதல் நிறுவனத்தில் எனக்கு வேலையில் விருப்பம் இல்லாததால், வேறு வேலை தேடும் பொழுது மற்றொரு ஐரோப்பிய வாகன தொழிற் நிறுவனத்தில் LabVIEW Developer வேலைக்கான விளம்பரம் பார்த்து விண்ணப்பித்து இருந்தேன். எனக்கு அனுபவம்...

நாட்டு உடைமை நூல்களின் பிழை திருத்தும் பணியில் கணியம்

நாட்டுடைமை நூல்களை தமிழ் விக்கி மூலம் சரிபார்க்கிறது, கணியம் அறக்கட்டளை. இணையத்தில் தமிழ் வளர்க்கும் நோக்குடைய கணியம் அறக்கட்டளை தமிழ் விக்கி மூலம் (https://ta.wikisource.org/s/8xyy) திட்டத்தில் மெய்ப்புப் பார்க்கும் பணியில் (ப்ரூஃப் ரீடிங்) நேரடியாகப்...

இந்த பெண்மணி எப்படி சம்பாதித்து இருக்கிறார், பாருங்கள்!

2000 முதல் 2004 வரை, சென்னை வில்லிவாக்கம் நாதமுனி சாலையில், ஐஸ்வர்யம் குடியிருப்பில் வாடகை வீட்டில் வசித்து வந்தேன். உரிமையாளரான ஒரு அம்மா,அடுத்த தெருவில் ஒரு பெரிய வீட்டில் இருந்தார்கள். மாதந்தோறும் அங்கே சென்று,...

Don't Miss

மொழிபெயர்ப்பு, மொழி ஆக்கம் சார்ந்த பணிகளுக்கு வாய்ப்பு எப்படி?

இன்று மொழி பெயர்ப்புத் துறை சுமார் நாற்பது பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பு கொண்ட துறையாக, வளர்ந்து நிற்கிறது. இந்திய ரூபாய் மதிப்பில் சொல்வதானால், இரண்டு லட்சத்து அறுபது ஆயிரம் கோடி ரூபாய்...

கோயம்பேடு மார்க்கெட்: திரு. சாவித்திரி கண்ணன் ‘நறுக்’ கேள்விகள்!

கோயம்பேடு சந்தையில் கூட்டத்தை முறைப்படுத்த தவறியதாலும்,மார்க்கெட்டில் வியாபாரத்தை ஒழுங்குபடுத்தாமல் விட்டதாலும் கொரோனா பரவியது. இதில் ஊடகங்கள் ஊதி பெருக்கி பீதியை கிளப்ப, பதட்டம் உருவானது. கோயம்பேடு சந்தை மூடப்பட்டது! அந்த நேரத்திற்கு அது சரியானதுதான்!...

லலிதா ஜுவல்லரி தொடங்கிய எம். எஸ். கந்தசாமி, வாங்கிய கிரன்குமார் இருவருக்கும் என்ன ஒற்றுமை?

தமிழ் நாட்டில் லலிதா ஜுவல்லரியை முதலில் தொடங்கியவர், மறைந்த திரு. எம். எஸ். கந்தசாமி. இவருடைய மறைவுக்குப் பின், இவருடைய மகனிடம் இருந்து சென்னை லலிதா ஜுவல்லரியை வாங்கியவர் திரு. கிரன்குமார். தொடக்கத்தில்...

உலக அளவில் மீன் அதிகம் விரும்பப்பட அதில் அப்படி என்ன இருக்கிறது?

உணவுச் சத்துகளில் புரதம் முதன்மையானது. புரதத்தில் கார்பன், ஆக்சிஜன், ஹைட்ரஜன் போன்ற மூலக்கூறுகளுடன் நைட்ரஜன் சேர்ந்து உள்ளது. புரதம் எந்த ஒரு உயிரினத்திலும் அதன் உடல் எடையில் பாதிக்குமேல் அதாவது 50 விழுக்காட்டிற்கு...

மனிதன் படைப்பிலேயே சிறந்தது எது?

மனிதர்கள் ஓரிடத்திலேயே தங்க நேர்ந்ததில் இருந்து.. ஓரிடத்திலேயே தங்க நேர்ந்ததால் நல்லது, கெட்டது என அனைத்தையும் காண நேர்ந்தது. இன்பத்தைக் கொடுத்தவர்கள் துன்பத்தைக் கொடுத்தார்கள்; துன்பத்தைக் கொடுத்தவர்கள் இன்பத்தைக் கொடுத்தார்கள். சொந்தம் உருவானது. உறவுகளில்...

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.