Sunday, October 25, 2020

சின்ன பழுதுகளை நாமே சரி செய்து கொள்ள உதவும் சின்ன கருவிகள்

வீடுகளில் நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களில் ஒரு சின்ன பழுது ஏற்பட்டாலும், அதை நீக்க அதற்கான பழுது நீக்குபவர்களைத் தேடி ஓடுகிறோம். பாத்ரூம் குழாயில் தண்ணீர் கசிகிறது என்றால் உடனே பிளம்பரைத் தேடி...

Latest Posts

வேலை வாய்ப்புக்கு உதவும் விரிவான தொழில் நுட்ப அறிவு

முதல் நிறுவனத்தில் எனக்கு வேலையில் விருப்பம் இல்லாததால், வேறு வேலை தேடும் பொழுது மற்றொரு ஐரோப்பிய வாகன தொழிற் நிறுவனத்தில் LabVIEW Developer வேலைக்கான விளம்பரம் பார்த்து விண்ணப்பித்து இருந்தேன். எனக்கு அனுபவம்...

நாட்டு உடைமை நூல்களின் பிழை திருத்தும் பணியில் கணியம்

நாட்டுடைமை நூல்களை தமிழ் விக்கி மூலம் சரிபார்க்கிறது, கணியம் அறக்கட்டளை. இணையத்தில் தமிழ் வளர்க்கும் நோக்குடைய கணியம் அறக்கட்டளை தமிழ் விக்கி மூலம் (https://ta.wikisource.org/s/8xyy) திட்டத்தில் மெய்ப்புப் பார்க்கும் பணியில் (ப்ரூஃப் ரீடிங்) நேரடியாகப்...

இந்த பெண்மணி எப்படி சம்பாதித்து இருக்கிறார், பாருங்கள்!

2000 முதல் 2004 வரை, சென்னை வில்லிவாக்கம் நாதமுனி சாலையில், ஐஸ்வர்யம் குடியிருப்பில் வாடகை வீட்டில் வசித்து வந்தேன். உரிமையாளரான ஒரு அம்மா,அடுத்த தெருவில் ஒரு பெரிய வீட்டில் இருந்தார்கள். மாதந்தோறும் அங்கே சென்று,...

அரசுப்பள்ளி ஆசிரியர்களிடம் ஏற்பட வேண்டிய மனமாற்றம்

சில வாரங்களுக்கு முன்னர் தமிழக பள்ளிகளோடு இணைந்து செயல்பட சுவீடனில் ஒரு தன்னார்வ நிறுவனம் தொடங்குவது பற்றி நண்பர்களோடு பேசிக் கொண்டிருந்தேன். அரசு பள்ளிகளோடு மட்டும் இணைந்து செயல்படுவது என முடிவெடுத்தோம். ஆனால் கல்லூரிகளிலும்...

போட்டிகளை கையாளும் வியூகங்கள் !

கோடிக் கணக்கில் புழங்கும் வணிகத்திற்கு எத்தனை வியூகங்கள் வகுக்க வேண்டும்? போட்டிகள் குவிந்து இருக்கும் பிராண்டுகளுக்கு எத்தகைய நுட்பங்களைத் தீட்ட வேண்டும்? மாறி வரும் சந்தையில் தன்னை நிலைநிறுத்த எப்படிப்பட்ட திட்டங்களைத் தீட்ட வேண்டி இருக்கும்?


போட்டி பிராண்டுகளின் வீக்னஸ் மீது, நம் வலிமையை பயன்படுத்துவதே வியூக த்தின் அடிப்படை. சந்தையில் நிலவும் வளமான வாய்ப்புகளை எளிதாகக் கைப்பற்ற பயன்படுத்தப்படும் நுட்பம்தான் வியூகம். செய்வதைத் திருந்த செய்வது மட்டும் அல்ல வியூகம். சரியான வழியைக் கணித்து தெளிவான பயணம் செய்யப் பயன்படுவதே வியூகம்.

கண்ணுக்குத் தெரியாத மாற்றம்


மாறிவரும் சந்தையைத் தெரிந்து கொள்ள வேண்டும். அதுபோல மாற வேண்டிய சந்தையை யும் புரிந்து கொள்ள வேண்டும். செய்ய வேண்டிய புதிய நிர்வாக முறைகளை, முறையாக அறிந்து கொள்ள வேண்டும். வர்த்தக உலகின் நாளொரு வளர்ச்சியும், பொழுதொரு மாற்றமும் நம் கண்களுக்குத் தெரிவதில்லை. கடந்து வந்த காலத்தை கண் திறந்து பார்க்கும் போது தான் கண்மூடித் திறப்பதற்குள் நடந்த வளர்ச்சிகள் கண்கூடாகத் தெரிகிறது.


சந்தை மாறுவதும் தெரிவதில்லை, மாறும் விதமும் புரிவதில்லை. மாற்றத் திற்குத் தேவையான காலத்தைக் கூட கணிக்க முடிவதில்லை. கடந்த 15 ஆண்டு களில் சந்தை கண்ட மாற்றங்களை எண்ணிப் பார்த்தால்தான் நாம் கடந்து வந்த வழியின் மேடுபள்ளம் தெரியும். கடக்க வேண்டிய வழியிலுள்ள புதை குழிகள் புலப்படும். வர்த்தகத்தையும் சந்தை யையும் அணுக வேண்டிய வழிமுறைகள் புரியும்.

பிராண்டுகளின் குவியல்


அந்தக் காலத்தில் கடையில் எந்தப் பொருள் வாங்கினாலும் அதன் பில்லில் “விற்ற பொருள் திரும்ப எடுத்துக் கொள்ளப் பட மாட்டாது” என்று அச்சிடப்பட்டு இருக்கும். வாங்கிய பொருட்கள் சரியில்லா விட்டால், குப்பையில் தான் போட வேண்டும் என்ற நிலை.


இன்று வாடிக்கையாளர்களே பிரதமர், முதல்வர். வாங்கிய பொருளை திருப்பி எடுக்க மாட்டோம் என்ற நிலை மாறி, “எங்கள் பொருளைப் பயன்படுத்திப் பாருங் கள். பிடிக்கவில்லையா, திருப்பித் தந்து விடுங்கள், பணம் வாபஸ்” என்று கூறுகி றார்கள்.
கடைக்கு வந்த வாடிக்கை யாளரிடம், “வாங்க சார், ஒரு ஃபோன் போட்டா, வீட்டுக்கே வந்து தருவோமே?” என்று கெஞ்சுகிறார்கள்.


சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு, எந்தப் பொருளை எடுத்தாலும், அதில், ‘பார்த்துக் கோ, எடுத்துக்கோ’ என்பது போல, ஓரிரண்டு பிராண்டுகளே இருந்தன. இன்றோ திரும்பிய பக்கங்களில் எல்லாம் பிராண்டுகள்.

நினைக்கும் நேரத்தில் அறிமுகம்


புதிய பிராண்டை அறிமுகப் படுத்து வோம் என்று நாம் நினைத்து முடிப்பதற் குள் நான் நினைத்த பிராண்டைப் போலவே வேறு மூன்று நிறுவனங்கள் உற்பத்தி செய்து கொண்டு இருக்க, மேலும் ஐந்து நிறுவனங்கள் அறிமுகப் படுத்தியே விடுகின்றன.


நாம் எதைச் செய்ய முடியா தென்று திகைத்து நிற்கிறோமோ, அதையே மூன்று பேர் செய்தே முடித்து விடுகிறார் கள். இன்றைய தொழில் நுட்ப வளர்ச்சி யைப் பார்க்க முடிவது இல்லை. எங்கிருந்து அதைக் கணிப்பது, பின் அதை எப்படிக் கையாள்வது?


ஒரு பக்கம் ஒரு பெரிய அறையை பூதம் போல அடைத்துக் கொண்டு இருந்த கணினியை, உள்ளங் கைக்குள் கைக் கணினியாக சுருக்கியது தொழில் நுட்பம் என்றால், இன்னொரு பக்கம், சிறிய டிவிகளை, திரையரங்கு அளவுக்கு பெரிதாக மாற்றியதும், தொழில் நுட்பமே.


வாங்க விரும்பும் பொருள எந்த இடத்தில் குறைந்த விலையில் கிடைக்கும் என்று தேடி, ஸ்மார்ட் ஃபோனில் ஆர்டர் செய்து விட முடிகிறது. அதே பொருளின் தரம் சரியில்லை எனில், ஃபேஸ்புக், டிவிட்டர், வலைப்பூ போன்ற சமூக வலைத் தளங்களில் வெளியிட்டு, காட்டிக் கொடுக் கவும் முடிகிறது.


இன்று சமூக வலைத் தளங்களில் ஒவ்வொரு மனிதனும் ஓர் ஊடகமே. தனிநபர்களை பகைத்துக் கொண்டால், நிறுவனங்களின் வண்ட வாளங்கள் தண்டவாளத்தில் ஏறிவிடும்.

உலக மயமாக்கம்


இத்தனை மாற்றங்களுக்கும் முக்கிய காரணமாக இருப்பது உலக மயமாக்கம் (குளோபலைசேஷன்). இந்த தத்துவம்தான் தனித்தனியாகப் பிரிந்து கிடக்கும் உலக நாடுகளை ஒரே ஊராக மாற்றி விட்டது. இந்த உலக மயமாக்கத்தை நாம் யாரும் தடுத்து நிறுத்த முடியாது. உலக மயமாக் கத்திற்கு ஏற்ப இன்று நிறுவனங்களும் மாறி வருகின்றன.


மூலப் பொருட்களை விலைகுறைந்த நாடுகளில் வாங்கி, குறைந்த வேலைக்கூலி நாடுகளில் உற்பத்தி செய்து, குறைந்த விலையில் விற்க முடிகிறது. எந்த நாட்டில் உற்பத்திச் செலவு குறைவோ, அந்த நாட்டுக்கு பொருள் உற்பத்தியை எளிதாக மாற்ற முடிகிறது. இன்று விற்பவர்களுக்கும், வாங்கு பவர்களுக்கும் உள்ள இடைவெளி குறைந்து வருகிறது. வாடிக்கையாளர் களுக்குத் தேவையான பொருள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், ஆர்டர் செய்து வாங்க முடிகிறது.

உலகம் விரிகிறது, போட்டி பெருகுகிறது


உற்பத்தியாளர்களின் பிராண்டுகள் உலகம் முழுவதும் விரிவடையும் அதே நேரத்தில், உலகில் உள்ள அனைத்து நிறுவ னங்களின் பிராண்டுகளும் போட்டிக்கு வந்து விடுகின்றன. ஒருபுறம் சந்தை விரிகிறது; இன்னொரு புறம் போட்டி பெருகுகிறது.


அடுத்த தெரு கடை, பக்கத்து ஊர் நிறுவனம் என்று கண்காணும் இடத்தில் இருந்த போட்டியாளர்கள், இன்று உலக வரைபடத்தில் புலப்படாத இடத்தில் இருந்தும் போட்டியாளர்கள் நம்முடன் சண்டைக்கு (சந்தைக்கு) வந்து நிற்கிறார்கள். கண் இமைக்கும் நேரத்தில், நம் வாடிக்கை யாளர்களை இழுத்துச் சென்று விடலாம்.


மாறிவரும் சந்தையில், உலகம் தழுவி பெருகி வரும் போட்டியில், பெருகிவரும் வாடிக்கையாளர்கள் எதிர்பார்ப்புகளின் நடுவில், நமக்கு புதிய சிந்தனைகள் தேவைப் படுகிறது. நம் தொழிலுக்குத் தேவை புதிய நிர்வாக முறைகள், புதிய சிந்தனைகள், புதிய நுட்பங்கள், புதிய வியூகங்கள். அடிப்படை மாற்றங்களை ஏற்றுக் கொள்ள வேண்டும்; புதிய வழிகளில் முயற்சிக்க வேண்டும். அப்போதுதான் நம் வர்த்தகம் வளரும், தொழில் பெருகும்.

-சிவமுருகன், உப்பத்தூர்

Latest Posts

வேலை வாய்ப்புக்கு உதவும் விரிவான தொழில் நுட்ப அறிவு

முதல் நிறுவனத்தில் எனக்கு வேலையில் விருப்பம் இல்லாததால், வேறு வேலை தேடும் பொழுது மற்றொரு ஐரோப்பிய வாகன தொழிற் நிறுவனத்தில் LabVIEW Developer வேலைக்கான விளம்பரம் பார்த்து விண்ணப்பித்து இருந்தேன். எனக்கு அனுபவம்...

நாட்டு உடைமை நூல்களின் பிழை திருத்தும் பணியில் கணியம்

நாட்டுடைமை நூல்களை தமிழ் விக்கி மூலம் சரிபார்க்கிறது, கணியம் அறக்கட்டளை. இணையத்தில் தமிழ் வளர்க்கும் நோக்குடைய கணியம் அறக்கட்டளை தமிழ் விக்கி மூலம் (https://ta.wikisource.org/s/8xyy) திட்டத்தில் மெய்ப்புப் பார்க்கும் பணியில் (ப்ரூஃப் ரீடிங்) நேரடியாகப்...

இந்த பெண்மணி எப்படி சம்பாதித்து இருக்கிறார், பாருங்கள்!

2000 முதல் 2004 வரை, சென்னை வில்லிவாக்கம் நாதமுனி சாலையில், ஐஸ்வர்யம் குடியிருப்பில் வாடகை வீட்டில் வசித்து வந்தேன். உரிமையாளரான ஒரு அம்மா,அடுத்த தெருவில் ஒரு பெரிய வீட்டில் இருந்தார்கள். மாதந்தோறும் அங்கே சென்று,...

அரசுப்பள்ளி ஆசிரியர்களிடம் ஏற்பட வேண்டிய மனமாற்றம்

சில வாரங்களுக்கு முன்னர் தமிழக பள்ளிகளோடு இணைந்து செயல்பட சுவீடனில் ஒரு தன்னார்வ நிறுவனம் தொடங்குவது பற்றி நண்பர்களோடு பேசிக் கொண்டிருந்தேன். அரசு பள்ளிகளோடு மட்டும் இணைந்து செயல்படுவது என முடிவெடுத்தோம். ஆனால் கல்லூரிகளிலும்...

Don't Miss

கோயம்பேடு மார்க்கெட்: திரு. சாவித்திரி கண்ணன் ‘நறுக்’ கேள்விகள்!

கோயம்பேடு சந்தையில் கூட்டத்தை முறைப்படுத்த தவறியதாலும்,மார்க்கெட்டில் வியாபாரத்தை ஒழுங்குபடுத்தாமல் விட்டதாலும் கொரோனா பரவியது. இதில் ஊடகங்கள் ஊதி பெருக்கி பீதியை கிளப்ப, பதட்டம் உருவானது. கோயம்பேடு சந்தை மூடப்பட்டது! அந்த நேரத்திற்கு அது சரியானதுதான்!...

லலிதா ஜுவல்லரி தொடங்கிய எம். எஸ். கந்தசாமி, வாங்கிய கிரன்குமார் இருவருக்கும் என்ன ஒற்றுமை?

தமிழ் நாட்டில் லலிதா ஜுவல்லரியை முதலில் தொடங்கியவர், மறைந்த திரு. எம். எஸ். கந்தசாமி. இவருடைய மறைவுக்குப் பின், இவருடைய மகனிடம் இருந்து சென்னை லலிதா ஜுவல்லரியை வாங்கியவர் திரு. கிரன்குமார். தொடக்கத்தில்...

உலக அளவில் மீன் அதிகம் விரும்பப்பட அதில் அப்படி என்ன இருக்கிறது?

உணவுச் சத்துகளில் புரதம் முதன்மையானது. புரதத்தில் கார்பன், ஆக்சிஜன், ஹைட்ரஜன் போன்ற மூலக்கூறுகளுடன் நைட்ரஜன் சேர்ந்து உள்ளது. புரதம் எந்த ஒரு உயிரினத்திலும் அதன் உடல் எடையில் பாதிக்குமேல் அதாவது 50 விழுக்காட்டிற்கு...

மனிதன் படைப்பிலேயே சிறந்தது எது?

மனிதர்கள் ஓரிடத்திலேயே தங்க நேர்ந்ததில் இருந்து.. ஓரிடத்திலேயே தங்க நேர்ந்ததால் நல்லது, கெட்டது என அனைத்தையும் காண நேர்ந்தது. இன்பத்தைக் கொடுத்தவர்கள் துன்பத்தைக் கொடுத்தார்கள்; துன்பத்தைக் கொடுத்தவர்கள் இன்பத்தைக் கொடுத்தார்கள். சொந்தம் உருவானது. உறவுகளில்...

ஸ்ட்ரெஸ்சில் இருந்து உங்களைக் காப்பாற்றும் 10% : 90% ஃபார்முலா!

நிறைய மனிதர்கள் தங்களுக்கு ஸ்ட்ரெஸ் எனப்படும் மன பதட்டம் இருப்பதாக நினைக்கிறார்கள். ஸ்ட்ரெஸ் காரணமாக பல சிக்கல்கள் ஏற்படுவதாகவும் கருதுகிறார்கள். நிரந்தரமான மன பதட்டம் நம் மகிழ்ச்சியை கெடுத்து விடும். ஸ்ட்ரெஸ் என்ற...

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.