பணப்புழக்கத்தைக் கண்காணியுங்கள்

சிறுதொழில் முனைவர்கள், ஒரே நேரத் தில் டன் கணக்கான செயல்களை ஓவர் லோடாக செய்து கொண்டு இருப்பார்கள். ஆனால் அவர்கள் தொழிலின் கணக்கு வழக்குகளை மேலாண்மை செய்யவோ அல்லது பணப் புழக்கத்தைக் கண்காணிக்கவோ அவர் களுக்குப் போதுமான நேரம் இருப்பது இல்லை. பணப்புழக்கத்தைக் கண்காணிக்கத் தவறியதால், பெரும்பாலான தொழில்கள் சிறிய மற்றும் பெரிய சறுக்கல்களைச் சந்தித்து உள்ளன.

சில மறைக்கப்பட்ட/ கண்டுகொள்ளப் படாத அல்லது அற்பமாக எண்ணப்படும் செலவுகளை, கணக்கு வழக்கில் கொண்டு வரத் தவறியதால், பல நிறுவனங்கள் தங்கள் பணப் புழக்கத்தில் தோல்வியைச் சந்தித்து உள்ளன. பின்வரும் தவறுகளில் ஏதாவது ஒன்றை நாம் செய்கிறோமா, அவற்றைச் சரிசெய்து, வெற்றி பெறுவது எப்படி?

வலுக்கட்டாய வளர்ச்சி

ஒருவர் ஃபேஸ்புக்கில் சிறிதாக விளம்பரம் செய்து, ஒரு மென்பொருள் நிறுவனத்தைத் தொடங்கினார். முதல் மாதத்தில் தன் முதலீட்டிற்கு நல்ல வருமானம் பெற்றார். உடனே அவர் தான் ஈட்டிய வருமானத்தை விட, ஐந்து மடங்கு அதிகமாக தன் விளம் பரங்களுக்காகச் செலவழித்தார்.

ஆனால் அவர் எதிர்பார்த்தது போல், வாடிக்கையாளர்களும் சரி, வருமானமும் சரி, ஐந்து மடங்கு பெருகவில்லை. மாறாக செலவுகள்தான் அதிகரித்தன. அந்தச் செல வுகளை ஈடுசெய்ய அவர் குறுகிய காலக் கடன் வாங்க வேண்டி இருந்தது.

ஒரு நிறுவனம் வளர்ச்சி பெறுவது, சீராக வளர்ச்சி பெறுவது நல்லதுதான். ஆனால் வலுக்கட்டாய செலவு வளர்ச்சி என்பது என்ன? சிறு வருமானம் பார்த்த உடன் பணி யாளர்களை நான்கு முதல் ஐந்து மடங்கு உடனே அதிகரித்தல்; நிறுவனம் இயங் குவதற்கு எடுத்தவுடன் மிகப்பெரிய இடத் தைப் பிடிப்பது; வருமானத்தை மீறி, விளம் பரங்களுக்குக் கொட்டிக் கொடுப்பது, இவை தான் வலுக்கட்டாய செலவு வளர்ச்சி.

இந்த வகையில் செலவைத் திணிப்பதால், மிகப் பெரிய செலவை இழுத்து விட்டுவிடும்.

நிறுவனத்தை விரிவுபடுத்துவது, பணி யாளர்களை அதிகரிப்பது போன்றவற்றை, நீண்டகால அடிப்படையில் நம் வருமானம் பெருகும் விகிதத்திற்கேற்ப, கொஞ்சம் கொஞ்சமாகச் செய்ய வேண்டும்.

வாடிக்கையாளரைக் கையகப்படுத்தும் செலவு

வாடிக்கையாளர்களைப் பிடிக்க, நிறு வனங்கள் வெவ்வேறு வழிமுறைகளைக் கடைப்பிடிக்கின்றன. அதற்காக குறிப் பிடப்பட்ட தொகையும் செலவழிக் கப்படுகிறது. ஆனால் ஒரு நிறுவனம் ஒரு வாடிக்கையாளரைப் பிடிப்பதற்கான செலவை விட, அவரால் கிடைக்கும் இலாபம் அதிகமாக உள்ளதா என்பதைக் கண்காணிக்க வேண்டும். ஒரு வாடிக்கையா ளரைக் கையகப்படுத்த செலவழித்த தொகையை, கையகப்படுத்தும் செலவு என்பார்கள்.

இன்னொரு வகை ஒரு வாடிக்கை யாளரின் வாழ்நாள் மதிப்பு எனப்படுகிறது. ஒரு வாடிக்கையாளரின் வாழ்நாள் முழுவ தும் அவரால் கிடைக்கும் வருமானத்தை வாழ்நாள் மதிப்பு என்கிறோம். இந்த வகை யில், ஒரு வாடிக்கையாளரைக் கையகப் படுத்தும் செலவு அதிகமாக இருந்தாலும், அந்த நிறுவனத்திற்கு அவரால் கிடைக்கும் ஆயுட்கால வருமானம் பலமடங்கு அதிக மாக இருப்பதால், நிறுவனம் இதில் கவனம் செலுத்தினால், நிலையான பணப்புழக்கம் ஏற்படும்.

சிறு வாடிக்கையாளர்களுக்கு அதிக ளவில் கையகப்படுத்தும் செலவு செய்வது தவிர்க்கப்பட வேண்டும். பல வர்த்தகர் கள் இதில்தான் சறுக்குகின்றனர். அதிக வாடிக்கையாளர்கள், அதிக வருமானம் என்பதில் தான் கவனம் செலுத்த வேண்டும். கையகப்படுத்தும் செலவில் மறைக்கப்பட்ட செலவுகள் அதிகம் உள்ளன. சான்றாக, விற்பனை யாளரின் அதிகளவு சம்பளம் மற்றும் அதிகமான கமிஷன்; மொபைல் மற்றும் இன்டர்நெட் செலவு ஆகியவையும் உள்ளடங்கும்.

இந்த மறைமுகச் செலவுகளும் கையகப்படுத்தும் செலவில் சேர்த்துக் கணக்கிடப்பட வேண்டும். இல்லை யெனில், வருமானத்தை விட, செலவுகள் அதிகரித்து, பணப்புழக்கம் பாதிக்கப்படும்.

வருமானத்தை தவறாகக் கணக்கிடுதல்

ஒருவர் இணைய வழியில் விற்பனையைத் தொடங்கினார். 2400 ரூபாய்க்கு மொபைல் ஃபோன் வாங்கி, அதனை 3600 ரூபாய்க்கு விற்பனை செய்தார். ஒரு மொபைல் ஃபோனுக்குக் கமிஷன் 1200 ரூபாய். அதாவது மூன்றில் ஒரு பங்கு இலாபம்.

ஆனால் அந்த ஆண்டு முடிவில் அவர் தன் இருப்பு நிலைக் கணக்கைத் தயாரிக்கும் போது, வருமான இழப்பு ஏற்பட்டு இருந்தது. காரணம் என்னவெனில், அவர் சந்தைக் கமிஷன், கூரியர் செலவு, பரிமாற்றச் செலவு, சரக்குகளை இருப்பு வைக்கும் கிடங்கிற்குக் கொடுக்கும் வாடகை முதலி யவற்றைக் கணக்கில் கொள்ளவில்லை.
அனைத்து செலவுகளையும் செலுத்திய பின்னரும், வங்கிக் கணக்கில் போதுமான பணம் இருந்தால் மட்டுமே, நிறுவனத்திடம் சரியான பணப்புழக்கம் உள்ளது என்று கருத முடியும்.

சீசன் வணிகம்

திருமண சீசன், பொங்கல் விழாக் காலங் களில், துணிவகைகள், நகைகள் போன்ற விற்பனை நன்றாக அமைந்து இருக்கும். தீபா வளி நேரத்தில் பட்டாசு விற்பனை அமோக மாக இருக்கும். போட்டிகள் கடுமையாக இருக்கும் போது, வாடிக்கையாளர்களை ஈர்க்க அதிக அளவில் தள்ளுபடி, கழிவுகள் அல்லது கேஷ்பேக் கொடுக்க வேண்டி இருக்கும். இவற்றைக் கவனமாகக் கையாள வேண்டும். இந்த தள்ளுபடிகள் வரம்பு மீறா மல் இருக்க வேண்டும்.

நிதித் திட்டத்தில் இத்தகைய சீசன் விற் பனைக்கான சரியான முன் ஏற்பாடுகள் செய்ய வேண்டும். மேலும், சீசன் காலத்தில் பணப்புழக்கம் பெருகினாலும், சீசன் அல்லாத காலங்களில் பணப்புழக்கம் குறையலாம். சீசன் அல்லாத காலங்களில் வர்த்தகத்தை எவ்வாறு மேலாண்மை செய் வது என்பதைத் திட்டமிட வேண்டும்.

பிந்தி பெறப்படும் பணம்

வாடிக்கையாளர்களிடம் இருந்து நமக்கு வரவேண்டிய பணத்தை மிகவும் தாமத மாகப் பெற்றுக் கொள்வது; அதிக அளவில் வாடிக்கையாளர்களுக்கு கடன் கொடுப்பது, பணப்புழக்கத்தைக் குறைக்கலாம். குறைந்தது மூன்று மாதத்திற்கு மேல் கொடுக்கப்படும் கெடு, பெரும்பாலும் நமக்கு சிக்கலையே ஏற்படுத்தும்.

நமக்கு சரக்குகளை சப்ளை செய்பவர்கள் இந்த அளவுக்கு நமக்காக காத்திருப்பது இல்லை. அவரிடம் நம்பகத் தன்மையை நிலைநாட்ட, அதிக வட்டிக்குக் கடன் வாங்கி அந்தக் கெடு காலங்களை சமாளிக்க வேண்டி இருக்கும். இதனால் அன்றாடம் நிறுவனத்தை நடத்தும் செலவிற்கும், பணி யாளர்களுக்கு ஊதியம் கொடுக்கவும், பல சிக்கல்களைச் சந்திக்க நேரலாம். எனவே, அதிகக் கெடு மற்றும் வரம்புமீறி கடன் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.

வரிகளை தவறாகக் கையாளுதல்

நமக்கு உரிய அரசு வரிகளை உரிய காலத் தில் நாம் செலுத்தியே ஆக வேண்டும். இப் போது அனைத்து வரிகளும் ஜிஎஸ்டி-க்குள் ஒருங்கிணைக்கப்பட்டு உள்ளன. இதற்கு உரிய கணக்குப்பதிவு அலுவலர்களின் ஆலோசனையின் படி செயல்பட வேண்டும்.
உரிய காலக் கெடுவிற்க்குள் வருமானக் கணக்குகளை சரியாக தாக்கல் செய்து, வர்த் தகத்திற்கான வரிகளை சரியாகச் செலுத் தவில்லை எனில், வணிகவரித் துறை நட வடிக்கை எடுக்க நம் நிறுவனத்தின் கதவைத் தட்டலாம்.

இதனால் கூடுதல் வரி மற்றும் அபராதம் விதிக்க நேரலாம். இதனால் பணப் புழக்கத்தில் மிகப்பெரிய துண்டு விழலாம். இதனால் கணக்கு வழக்குகள் துல்லியமாக கணக்கீடு செய்யப்பட வேண்டும். அதுபோல ஜிஎஸ்டி-யில் செய்யப்படும் திடீர் மாற்றமும் வர்த்தகத்தைப் பாதிக்கலாம். எனவே இத்தகைய நிச்சயமற்ற தன்மைகளை எதிர்பார்த்து, கவனமாக செயல்பட வேண்டும்.

எதிர்பாராத நிகழ்வுகள்

எதிர்பாராத செலவுகள், இயற்கைப் பேரி டர்கள் முதலியவை நிறுவனத்தின் பணப் புழக்கத்தை தீவிரமாகப் பாதிக்கும். மேலும், நமது நம்பிக்கைக்கு உரிய ஊழியர்கள் போட்டி நிறுவனம் தொடங்கலாம். நம் பல வாடிக்கையாளர்களை அவர்கள் பிடித்துக் கொள்ளலாம். இவற்றை எல்லாம் எதிர் பார்த்தே தொழில் நடத்த வேண்டும்.

பெரும்பாலும் இவற்றில் இருந்து நிறுவ னத்தைக் காப்பீடுகள் காப்பாற்றலாம். ஆனால் காப்பீடுகள் எல்லாவற்றையும் கவர் செய்யாது. சில அம்சங்களுக்கு காப்பீடு கிடைக்காது. மேலும், இழப்புகளில் குறிப்பிட்ட விழுக்காடு மட்டுமே காப் பீடுகள் கிடைக்கும். இந்த சிறிய தொகையை வைத்து, குறைந்தபட்ச வணிகத் தேவைகளை நிறைவேற்ற தயாராக இருக்க வேண்டும்.

கரும்புள்ளி எடுத்தல்

நிறுவனத்திற்கு ஒரு சிறிய கடன் தேவைப் படலாம். ஆனால், கடன் கொடுக்கும் வங்கி களை அணுகும் போது, நமது கடந்த கால கரும்புள்ளி, நமக்குக் கடன் தருவதைத் தடுக்கிறது. சான்றாக, சப்ளையர்கள் அல்லது மொத்த வியாபாரிகளுக்குக் கொடுத்த காசோலை, நம் கணக்கில் போதுமான பண இருப்பு இல்லாத காரணத்தால், ரிட்டர்ன் ஆகி இருக்கலாம்.

அல்லது ஏற்கெனவே வாங்கிய கடன்களுக்கு ஒன்றிரண்டு தவணை கள் தவறி இருக்கலாம். இதுபோன்ற சிறுசிறு நிகழ்வுகளால் கடன் கொடுக்கும் நிறுவனங்கள் நம்மீது கரும்புள்ளியை வைத்து விடும். மேலும், ஜிஎஸ்டி முறை யாகச் செலுத்தப்பட்டு, நல்ல ஜிஎஸ்டி இணக்க மதிப்பீடு பெற்று இருக்க வேண்டும். இது போன்ற சிறுசிறு நிகழ்வுகளில் மிகுந்த கவனமாகச் செயல்பட வேண்டும்.

பொருத்தம் இல்லாத பணியாளர்களைத் தேர்வு செய்தல்

நல்ல பணியாளர்களாக இருப்பார்கள் என்று நினைத்துதான், நாம் ஊழியர்களை, நல்ல சம்பளம் கொடுத்து, தேர்வு செய்கி றோம். இரண்டு முதல் மூன்று மாதங்கள் பயிற்சிக்காகப் போய் விடுகிறது.

நான்கு முதல் ஐந்து மாதங்கள் தாண்டிய பின்பும் அவர்கள், இதுவரை அவர்களுக்காக நாம் செலவழித்த தொகைக்கு ஈடாக விற் பனை அல்லது உற்பத்தியைக் காட்ட வில்லை எனில், இதுவரை அவர்களுக்குக் கொடுத்த பயிற்சியும், ஊதியமும் வீணாகி விடுகின்றன. இது, நம் பணப்புழக்கத்தில் பெரிய பள்ளத்தையே ஏற்படுத்தும். எனவே, பணியாளர்களைத் தேர்வு செய்வதில் கவனமாக இருக்க வேண்டும்.

இதர மறைக்கப்பட்ட செலவுகள்

சில செலவுகள் தொடக்கத்தில் முக்கியம் இல்லாதது போல தோன்றலாம். அவற்றை நாம் தவிர்க்கும் போது, பின்னால் பெரிய இழப்பைச் சந்திக்க நேரலாம். சான்றாக காப் பீடு, கடன் அட்டைக் கட்டணம், பணி யாளர்களுக்கான நலன்கள், வரிகள் மற்றும் வணிகக் கட்டணம் போன்றவை. எனவே, தொழில் முனைவர்கள் அல்லது நிர்வாகிகள் இவற்றைச் சரியாக நிர்வகிக்க வேண்டும்.

திட்டமிட்ட மேலாண்மை

வருமானம் தண்ணீர் கசிவது போல் இருந்தாலும், செலவுகள் வெள்ளம் வழிந் தோடுவது போல் என்பார்கள். நாம் சரியான நிதித் திட்டத்தை மதிப்பீடு செய்து, எல்லாவிதமான செலவுகளையும் முறையாக மேலாண்மை செய்ய வேண்டும்.

எல்லா விதமான சூழ்நிலைகளையும் சமாளிக்க தயாராக இருக்க வேண்டும். நல்ல கணக்குப் பதிவு வல்லுநர் மற்றும் நல்ல கணக்குப் பதிவு மென்பொருளைப் பயன் படுத்தி, நம் பணப்புழக்கத்தை சரியாக வைத்து இருக்க வேண்டும்.

– ஹெலன் ஜஸ்டின்,திருமுல்லைவாயில்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here