Latest Posts

நூறு நாட்களில் லட்சம் படிகள்

- Advertisement -

நன்செய் பிரசுரம் – என்னும் பதிப்பகத்தைச் சென்னையில் ஆறு ஆண்டுகளாக நடத்தி வருகிறார் கவிஞர் தம்பி. “திருத்துறைப்பூண்டி சொந்த ஊர். டிப்ளமாவில் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி படித்து இருக்கிறேன். சிறு வயது முதலே வாசிப்புப் பழக்கம் கொண்டவன். சென்னையில் நண்பர்க ளுடன் தங்கி இருக்கிறேன். தொடக்கத் தில் நற்றிணைப் பதிப்பகத்தில் வேலை செய்தேன்.

பிறகு தந்தை பெரியாரின் “பெண் ஏன் அடிமையானாள்”? புத்தகத்தை சமூகத்தின் கடைக்கோடி மனிதன் வரை கொண்டு செல்ல விரும்பினேன். இதற்காக நானும் என் நண்பர்களும் இணைந்து 2013 இல் நன்செய் பதிப்பகத்தைத் தொடங்கினோம்.
பொதுவாக பதிப்புத் துறையில் நூல்களை ஒரு தலைப்புக்கு 1000 + 200 = 1200 படிகள் அச்சிடுவார்கள். 1000 புத்தகங்களை விற்பனைக்கும் 200 புத்தகங்களைப் பிரித்து எழுத்தாளருக்கும், இதழ்கள் திறனாய்வுப் பகுதிகளுக்கும் கொடுத்து விடுவார்கள். கடந்த ஆறு, ஏழு ஆண்டுகளாக 500 + 50 = 5500 படிகள் அச்சடித்தார்கள்.

இப்பொழுது பிஓடி ((POD) Print on demand) முறையைப் பயன்படுத்துகிறார்கள். இம்முறை மூலம் தேவைக்கேற்ப படிகளை அச்சிட்டு விற்பனை செய்கிறார்கள். அச்சிடும் அனைத்துப் புத்தகங்களும் விற்று விடும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது. தேவைக்கேற்ப அச்சிடுவதால் பதிப்பகத்தாருக்கு பெரிய அளவில் இழப்பு ஏற்படாது. ஒரே நேரத்தில் அதிக படிகளை அச்சிட பணம் திரட்ட வேண்டி இருக்கும்.

பிஓடி முறையில் அவ்வாறு ஒரேயடியாக பணம் திரட்டும் சுமை குறைகிறது. புத்தகங் கள் விற்பனையாகும் வரை பாதுகாத்து வைத்து இருக்க இடம் தேவைப்படும். பிஓடி முறையில் தேவைக்கேற்ப படிகளை அச்சிடு வதால் அடுக்கி வைக்க அதிக இடம் தேவைப்படாது.

இப்போது. ஃபேஸ்புக் (ம) இணைய தளங்களில் எழுதுவோரும் அவற்றைப் புத்தகங்களாக வெளியிட விரும்புகிறார்கள்.

அவர்களுக்கும் பிஓடி முறை சிறந்தது. இந்த முறையில் குறைந்த அளவு புத்தகங் களை அச்சிட்டுக் கொள்ளலாம். ஆனால் நாங்கள் மேற்சொன்ன எந்த முறைகளையும் பின்பற்றவில்லை. ஏனெனில், அந்த முறை களில் இலாபம் ஈட்ட முடியும் என்ற நம் பிக்கை எங்களுக்கு இல்லை.

நாங்கள் பெண் ஏன் அடிமையானாள்? புத்தகத்தை முதல் பதிப்பிலேயே ஒரு இலட் சம் பிரதிகள் அச்சிட்டோம்.

அடுத்ததாக வெளியிட இருக்கும் “பாலியல் கல்வி” என்னும் நூலையும் அதற்கு அடுத்தடுத்து வெளியிட இருக்கின்ற புத்தகங் களையும் ஒரு இலட்சம் படிகள் என்னும் எண்ணிக்கையில்தான் அச்சிட திட்டமிட்டு உள்ளோம்.

பொதுவாக மற்ற பதிப்பகங்களில் ஒரு பக்கத்திற்கு ஒரு ரூபாய் என்று விலை வைப்பார்கள். ஆனால் நாங்கள் ஒரு பக்கத்திற்கு 30 காசுகள் வீதம் விலையைக் கணக்கிட்டு ஒரு புத்தகம் 10 ரூபாய் என்ற மிகக் குறைந்த விலையில் விற்பனை செய்கிறோம்.

இலாபம் ஒருபுறம் இருந்தாலும், பெண் ணுரிமை தொடர்பான விழிப்புணர்ச்சியை பெண்களிடையே ஏற்படுத்த வேண்டும் என் பதே எங்கள் முதன்மையான நோக்கமாக இருக்கிறது.

பெண்களுக்கான உரிமை பற்றிய புரி தலை இந்த நூல் சிறப்பாக ஏற்படுத்தும். அந்த அளவுக்கு தந்தை பெரியாரின் சிந்த னைகள் இடம்பெற்று இருக்கின்றன.. விலையை மிகக் குறைவாக வைத்து இருப் பதால் எங்களைப் போன்ற பெண்ணுரிமை ஆர்வலர்கள் மொத்தமாக நூல்களை வாங்கி, அவர்களுக்குத் தெரிந்தவர்களுக்கு இலவசமாக வழங்குகிறார்கள்.

நாங்கள், பெண் ஏன் அடிமையானாள்? நூலைப் பதிப்பித்த நூறு நாட்களிலேயே ஒரு இலட்சம் படிகளை விற்றோம். ஃபேஸ்புக் மற்றும் இணைய தளங்களை எங்கள் புத்தகத்துக்கான விளம்பரங்களை வெளியிட பயன்படுத்தினோம். நன்செய் என்ற பெயரில் ஒரு யூடியூப் சேனலையும் உருவாக்கி இருக்கிறோம்.

அதில் “பெண் ஏன் அடிமையானாள்?” நூலைப் பற்றி சில சமூக ஆர்வலர்கள் பேசும் வீடியோக்களைப் பதிவேற்றி ஏராள மான வாசகர்களின் கவனத்தை ஈர்த்தோம்.
தமிழ்நாட்டில் ஒவ்வொரு பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளிடையேயும் இந்த நூலைக் கொண்டு சேர்க்க முயற்சித்து வருகிறோம். குறிப்பாக ஒவ்வொரு மாணவி யும், அவர்களின் அன்னையரும் படிக்க வேண்டிய நூல் இது.

ஆன்லைன் வாசிப்பால் இளைஞர்களி டையே புத்தகம் படிக்கும் பழக்கம் குறைந்து வருவது, ஒரு பக்கம் உண்மை என்றாலும், புத்தகங்களை வாங்கிப் படித்து பழகி விட் டால் இளைஞர்கள் புத்தகங்களை விரும்பத் தொடங்கி விடுவார்கள் என்று நம்புகிறோம்.

நாட்டில் எண்ணற்ற அரசு நூலகங்கள் உள்ளன. நூலகங்கள் இல்லாத பள்ளி, கல்லூரிகளே கிடையாது. தங்கள் வீடுகளி லேயே நூலகங்களைப் பராமரிப்பவர்களும் இருக்கிறார்கள். எனவே பதிப்புத் தொழில் அப்படி எல்லாம் அழிந்து போய் விடாது.‘’ என்கிறார் கவிஞர். தம்பி.

– மு. யோகி
(மாணவ பத்திரிகையாளர்)

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

Subscribe to our latest news