ரிவர்ஸ் சார்ஜ் மெக்கானிசம்

பொதுவாக ஜிஎஸ்டியின் கீழ் பொருட்களை வழங்குபவர் (அ) சேவைகளை வழங்குபவர் இவற்றைப் பெறுபவரிடம் இருந்து விற்பனைத் தொகை உடன் ஜிஎஸ்டி வரியையும் சேர்த்து வசூலித்து அரசிற்கு செலுத்துவார்.

அதற்குப் பதிலாக பொருட்களைப் பெறுபவர் (அ) சேவைகளைப் பெறுபவர் இவற்றை வழங்குபவர் வாயிலாக அரசிற்கு இந்த ஜிஎஸ்டி வரியைச் செலுத்துவதற்குப் பதிலாக இவற்றைப் பெறுபவரே நேரடியாக அரசிற்கு ஜிஎஸ்டி வரியைச் செலுத்துவதே ஆர்சிஎம் (RCM) என சுருக்கமாக அழைக்கப்படும் பின்செல் செலவு தொழில் நுட்பம் (Reverse Charge Mechanism) ஆகும்.

Advertisement

இவ்வாறான தொழில் நுட்பம் ஜிஎஸ்டியின் கீழ் பதிவு பெறாதவரிடம் இருந்து ஜிஎஸ்டியின் கீழ் பதிவு பெறுபவர் பொருட்களை (அ) சேவைகளைப் பெறும்போது நடைமுறைப் படுத்தப்படும் ஜிஎஸ்டியின் கீழ் இந்த ஆர்சிஎம் பிப்ரவரி 2019 முதல் நடைமுறைப் படுத்தப்பட்டு உள்ளது.

அயல்பணி வழிமுறையில் நிறுவனத்தி ற்குப் பணியாளரை வழங்குபவர்கள், காப்பீட்டு முகவர்கள், நிதி நிறுவனங்கள் (அ) வங்கிகளின் வாராக் கடனை வசூலிக்க நியமிக்கும் முகவர்கள், வணிக நிறுவனத்திற்காக செயல்படும் வழக்குரைஞ ர்கள் (அ) இசைவு தீர்ப்பாளர்கள், இணையவழி வணிக இயக்குநர்கள் (E-commerce Operator), பொருள் போக்குவரத்தா ளர்கள் போன்றோர் வழங்கும் சேவைகளின் மீது ஜிஎஸ்டி வரி விதித்தாலும் அவர்களின் ஆண்டு வருமானம் 40 இலட்சத்திற்கு மிகாமல் இருக்கும் நிலையில் இந்த ஜிஎஸ்டி வரியை செலுத்தத் தேவையில்லை என்ற நிலையில் அவ்வாறான பரந்துபட்ட சேவை வழங்குபவர்களின் சேவைகளையும் ஜிஎஸ்டி வரி வசூலின் கீழ் கொண்டு வருவதற்காகவே இந்த ஆர்சிஎம் நடைமுறைப் படுத்தப்பட்டு உள்ளது.

தற்போது நடைமுறையில் பொருட்களை வழங்குபவர் இந்த ஆர்சிஎம்-ஐ செயல்படுத்துவது இல்லை. அதனால் பொருட்களை வழங்குபவர்களையும், சேவைகளை வழங்குபவர்களையும், ஜிஎஸ்டிவின் கீழ் கொண்டு வரச்செய்வதே இந்த ஆர்சிஎம் அடிப்படை நோக்கமாகும்.

ஜிஎஸ்டிவின் கீழ் பதிவுபெற்ற நபர் ஒருவர் ஆர்சிஎம்-இன் அடிப்படையில் ஜிஎஸ்டிவின் கீழ் பதிவுபெறாத நபரிடம் இருந்து பொருட்களை (அ) சேவைகளைப் பெறும்போது அதற்கான ஜிஎஸ்டி வரியை பதிவுபெறாத நபருக்குப் பதிலாக பதிவுபெற்ற நபர் செலுத்துவதாக இடமாற்றம் செய்யப் பெறுகிறது.

வரிஏய்ப்பைத் தடுப்பதே இந்த ஆர்சிஎம் இன் அதற்கடுத்த அடிப்படை நோக்கமாகும். இந்த ஆர்சிஎம்-இன் படி ஜிஎஸ்டி வரியில் ஒரு பகுதியை மட்டும் வழங்குவது, மிகுதியை விலக்குப் பெறுவது என்ற பேச்சுக்கே இடமில்லை. இந்த ஆர்சிஎம்-இன் வாயிலாக 100% ஜிஎஸ்டி வரியை முதலில் செலுத்தியாக வேண்டும்.

இவ்வாறான ஆர்சிஎம்-இன் படி ஜிஎஸ்டியின் கீழ் பொருட்களை எப்போது வழங்கினார் என எவ்வாறு நிர்ணயம் செய்து வரியை வசூலிப்பது என்ற சிக்கல் எழும்; ஆயினும் பின்வரும் சூழ்நிலைகளில் எது முந்தைய நிகழ்வோ அதனையே பொருட்களை வழங்கிய நாளாக கணக்கில் கொள்ளப்படும்.

பொருட்களை வழங்குபவரிடம் இருந்து பெறுபவர் பொருட்களை பெற்ற நாள். பொருட்களை பெறுபவரின் கணக்குப் பதிவேடுகளில் அந்த பொருட்களுக்கான விற்பனைத் தொகை வழங்கப்பட்ட நாளாக பதிவு செய்யப்பட்ட நாள்.
பொருட்களை பெறுபவரின் வங்கி கணக்கில் பதிவு செய்யப்பட்டு அந்த பொருட்களுக்கான விற்பனைத் தொகை வழங்கப்பட்ட நாள்.

பொருட்களை வழங்குபவர் அந்த பொருட்களை வழங்கும் போது அதனோடு கூடவே வழங்கிய விற்பனை பட்டியலில் குறிப்பிட்ட நாளில் இருந்து 30 நாள்.
குறிப்பு: மேலே கூறிய சூழலிலும் பொருட்களை வழங்கிய நாளை கண்டுபிடிக்க முடியாத போது பொருட்களைப் பெறுபவரின் கணக்குப் பதிவேடுகளில் அந்த பொருட்களுக்கான விற்பனைத் தொகை வழங்கப்பட்ட நாளாக பதிவு செய்யப்பட்ட நாளே கணக்கில் கொள்ளப்படும்.

இவ்வாறான ஆர்சிஎம்-இன் படி ஜிஎஸ்டிவின் கீழ் சேவைகளை எப்போது வழங்கினார் என எவ்வாறு நிர்ணயம் செய்து வரியை வசூலிப்பது என்ற சிக்கல் எழும் ஆயினும் பின்வரும் சூழ்நிலைகளில் எது முந்தைய நிகழ்வோ அதனையே சேவைகளை வழங்கிய நாளாக கணக்கில் கொள்ளப்படும்.

சேவைகளை பெறுபவரின் கணக்குப் பதிவேடுகளில் அந்த சேவைகளுக்கானத் தொகை வழங்கப்பட்ட நாளாக பதிவு செய்யப்பட்ட நாள்.
சேவைகளை பெறுபவரின் வங்கி கணக்கில் அந்த சேவைகளுக்கானத் தொகை வழங்கப்பட்ட நாளாக பதிவு செய்யப்பட்ட நாள்.

சேவைகளை வழங்குபவர் அந்த சேவைகளை வழங்கும் போது அதனோடு கூடவே வழங்கிய விற்பனை பட்டியலில் குறிப்பிட்ட நாளில் இருந்து 60 நாள்.
குறிப்பு: மேலே கூறிய சூழலிலும் சேவைகளை வழங்கிய நாளை கண்டுபிடிக்க முடியாத போது சேவைகளை பெறுபவரின் கணக்குப் பதிவேடுகளில் அந்த சேவைகளுக்காகத் தொகை வழங்கப்பட்ட நாளாக பதிவு செய்யப்பட்ட நாளே கணக்கில் கொள்ளப்படும்.

இவ்வாறு ஆர்சிஎம்-இன் படி ஜிஎஸ்டி வரி செலுத்தும் போது உள்வரும் வரவினங்களைக் கழித்துக் கொண்டு மிகுதித் தொகை செலுத்தும் வசதியான ஐடிசி (ITC)-ஐ கணக்கில் கொள்ளாமல் முதலில் ஆர்சிஎம்-இன் படி ஜிஎஸ்டி வரியை ரொக்கப் பேரேட்டின் வாயிலாக செலுத்திய பின்னர் மற்ற ஜிஎஸ்டி வரி செலுத்தும் தொகையில் இவ்வாறு ஆர்சிஎம் – இன் படி ரொக்கமாக செலுத்திய தொகையை, ஐடிசி-ஐ கணக்கில் கொண்டு கழித்தது போக மிகுதித் தொகையைச் செலுத்தலாம்.
இந்த ஆசிஎம் – இன் படி ஜிஎஸ்டி வரி ஒவ்வொரு மாதத்தின் தொகையும் அதற்கடுத்த மாதம் 20 நாளுக்குள் செலுத்த வேண்டும். படிவம் எண் ஜிஎஸ்டிஆர் 2 – ஐ தயார் செய்யும் போது, இந்த ஆர்சிஎம் இன் படி செலுத்தப்பட்ட ஜிஎஸ்டி வரி தானாகவே திரையில் காண்பிக்காது.

நாம் தான் அவ்வாறான விவரங்களை உள்ளீடு செய்ய வேண்டும். மாநிலங்களுக்கு இடையே நடைபெறும் இந்த ஆர்சிஎம் இன் படியான வசதியை ஜிஎஸ்டி இன் கீழ் பயன்படுத்திக் கொள்ள முடியாது.

ஒரே மாநிலத்திற்குள் நடைபெறும் விற்பனை நடவடிக்கைகளில் மட்டும் இந்த ஆர்சிஎம்-இன் படியான வசதியை ஜிஎஸ்டி இன் கீழ் பயன்படுத்திக் கொள்ள முடியும். செல்ஃப் இன்வாய்சிங் (Self-invoicing) எனும் வசதியைக் கொண்டு இந்த ஆர்சிஎம்-ஐ பயன்படுத்திக் கொள்ள முடியும்.

ஆயினும், இதனை செயல்படுத்துவதற்கான கிளியர் டேக்ஸ் ஜிஎஸ்டி (Clear Tax GST) எனும் மென்பொருளைப் பயன்படுத்தி செல்ஃப் இன்வாய்சிங் இன் படி பட்டியலை நாமே தயார் செய்ய வேண்டும்.

ஏனெனில் பொருட்களை வழங்குபவர் (அ) சேவைகளை வழங்குபவர் ஜிஎஸ்டி இன்கீழ் பதிவு பெறாதவர் என்பதால் அவர் ஜிஎஸ்டி இன்படி விற்பனை பட்டியலை தயார்செய்ய வேண்டிய அவசியமில்லாது போகிறது. பின்வரும் படிமுறைகளைப் பின்பற்றி செல்ஃப் இன்வாய்சிங் என்பதன் படி கிளியர் டேக்ஸ் ஜிஎஸ்டி எனும் மென்பொருளைப் பயன்படுத்தி பெறுபவரே பட்டியலை உருவாக்கிக் கொள்ள முடியும்.

முதலில் New Purchase Invoice எனும் பட்டனைத் தேர்வு செய்து கிளிக் செய்ய வேண்டும். பின்னர் தோன்றும் திரையின் Invoice Serial Number என்ற புலத்தில் இந்த பட்டியலிற்கான வரிசை எண்ணை உள்ளீடு செய்து கொள்ள வேண்டும்.

Invoice Date என்ற புலத்தில் பொருளை (அ) சேவையைப் பெற்ற நாளினை உள்ளீடு செய்ய வேண்டும்.

பின்னர் Reference Number என்ற புலத்தில் இந்த பொருளை (அ) சேவையைப் பெறுவதற்காக நாம் வழங்கிய கொள்முதல் ஆணை எண்ணை உள்ளீடு செய்ய வேண்டும்.

Due Date என்ற புலத்தில் நாம் இதனை வழங்குபவருக்கு தொகையை வழங்க எண்ணியிருக்கும் நாளை உள்ளீடு செய்ய வேண்டும்.

Vendor Name எனும் புலத்தில் இந்தப் பொருளை (அ) சேவையை வழங்கியவரின் பெயரையும் முகவரியையும் உள்ளீடு செய்ய வேண்டும்.

எச்சரிக்கை இந்த புலத்தில் நம் பெயரை உள்ளீடு செய்ய வேண்டாம்.. பொருள் (அ) சேவையின் விவரங்களையும், தொகை விவரங்களையும் அவற்றுக்கான புலங்களில் உள்ளீடு செய்ய வேண்டும்.

Advance Settings என்பதன் கீழிறங்கு பட்டியலை விரியச் செய்து Reverse Charge என்ற வாய்ப்பை செய்துகொள்ள வேண்டும். அனைத்துப் புலங்களிலும் தேவையான விவரங்களை உள்ளீடு செய்ததை உறுதி செய்து கொள்ள வேண்டும். இறுதியாக சேவ் எனும் பட்டனைத் தேர்வுசெய்து கிளிக் செய்து சேமித்துக் கொள்ள வேண்டும்.

– முனைவர் ச. குப்பன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here