சிறு வணிக நிறுவனங்கள் அன்றாட வேலைகளை முடிப்பதற்கே அல்லாடும் போது தம் வணிகத்தின் வெற்றிக்கான / வளர்ச்சிக்கான புதிய வழிமுறைகளை செயல்படுத்துவதைப் பற்றி சிந்திக்க முடியாமல் தவிப்பார்கள். ஆனால் பின்வரும் படிமுறைகளைப் பின்பற்றி தங்கள் வர்த்தகத்தை வெற்றிகரமாக வளர்ச்சியை நோக்கி கொண்டு செல்ல முடியும்.
நம் நிறுவனத்தில் உற்பத்தியாகும் பொருளைப் பற்றி அல்லது வழங்கும் சேவையைப் பற்றி காணொலிக் காட்சிகளை மிகச் சரியாக போதுமான அளவு தயார்செய்து அவற்றை முகநூல், வாட்சாப் போன்ற சமூக ஊடகங்களில் வெளியிடச் செய்ய வேண்டும்.
கூடவே நம் நிறுவனத்தைப் பற்றியும், வாடிக்கையாளர்களுக்கு அடிக்கடி எழும் ஐயங்களைப் பற்றியும், அவற்றைத் தீர்ப்பதற்கான வழிமுறைகளைப் பற்றியும், அவற்றுக்கான பதில்களை எஃப்ஏக்யூ (FAQ) வாயிலாக தயார்செய்து அவற்றையும் வெளியிடச் செய்ய வேண்டும்.
உள்ளூர் நிகழ்வுகளில் நம் நிறுவனமும் LinkedIn மூலம் பங்கெடுத்துக் கொள்ளுமாறு செயல்படச் செய்ய வேண்டும். முக்கியமாக ஒருசில சிறப்பு அறிவிப்புகளை சமூக ஊடகங்களில் அவ்வப்போது வெளியிடச் செய்ய வேண்டும். நம் நிறுவனத்திற்கென தனியாக இணையதள பக்கத்தை உருவாக்கி பேணிவர வேண்டும்.
தொடர்ந்து சமூக ஊடகங்களில், காணொலிக் காட்சிகளாக வெளியீடு செய்தவற்றை நம் இணையதள பக்க ங்களிலும் வெளிடச் செய்ய வேண்டும். இதிலும், நிறுவனம் பற்றி, வாடிக்கையாளர் கேள்விகளுக்கான பதில்கள், விளக்கங்கள்,- எஃப்ஏக்யூ முதலியவற்றைத் தயாரித்து வெளியிட வேண்டும்.
காணொ லிக் காட்சி களை பொழுது போக்கு போன்றோ வழக்கமான பத்தோடு பதினொன்று என்றோ பார்வையாளர் தாண்டிச் செல்லாமல் call-to-action (CTA) எனும் அடுத்த செயலிற்கு அதாவது,
மேலும் நம் நிறுவனத்தைப் பற்றிய விவரங்களை முழுவதுமாக அறிந்து கொள்ள, தனியாக மின் புத்தகங்களைப் பதிவிறக்கம் செய்து படித்து அறியுமாறு
கொண்டு செல்ல வேண்டும். உடனடியாக நம் உற்பத்திப் பொருளை (அ) சேவையை வாங்குமாறு பார்வையாளர்களிடம் வலியுறுத்தி தொல்லை செய்து அவர்களை வெறுப்படையச் செய்யக் கூடாது. அதற்குப் பதிலாக எவ்வாறான வழிமுறைகளில் இவற்றைக் கொள்முதல் செய்ய முடியும் என்ற விவர காணொலிக் காட்சியை மட்டும் சிடிஏ (CTA) எனும் செயலில் கொண்டு வருவது நன்று.
அடுத்து என்னதான் இணையதள பக்கத்தை பேணிவந்தாலும் பொதுமக்கள் அனைவரும் நம் இணைய பக்கத்தைப் பார்வையிட வருவார்கள் என்ற உறுதி எதுவும் அளிக்க முடியாது.
அதனால் அதற்கான தீர்வாக பொதுமக்கள் கைகளில் வைத்துள்ள அனைத்து வகையான மொபைல் ஃபோன்களிலும் மேலே கூறிய காணொலிக் காட்சிகளை / தகவல்களைக் காண முடியுமாறு செய்ய வேண்டும். இவை சமூக ஊடகங்களின் வாயிலாக பொது மக்களின் மொபைல் ஃபோன்களில் சென்று அடையுமாறு செய்ய வேண்டும்.
– வசந்தகுமார்