முருங்கை இலை மற்றும் அதன் பொடி மற்றும் அதில் இருந்து பல மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களுக்கு ஏற்றுமதி வாய்ப்பு உள்ளது. இந்தியாவில் இருந்து முருங்கை இலை மற்றும் அதன் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் பல அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
பல நாடுகளில் முருங்கை உற்பத்தி இருந்தாலும் நம் தமிழ்நாட்டில் இருந்து செல்லும் முருங்கைப் பொருட்களுக்கு வரவேற்பு இருக்கிறது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் மதுரை, திருப்பூர், கோவை, கரூர், தூத்துக்குடி, திருநெல்வேலி, தஞ்சாவூர், வேலூர், திண்டுக்கல், திருவாரூர், கன்னியாகுமாரி, தேனி, ஈரோடு.. மாவட்டங்களில் முருங்கை அதிகமாக உற்பத்தி செய்யப்படுகிறது.
பச்சை முருங்கை இலை, இலைப் பொடி, காய்கள், பூ போன்றவை தமிழ்நாட்டில் இருந்து நாள்தோறும் ஆஸ்திரேலியா, மலேசியா, சிங்கப்பூர், அரபு நாடுகள், கனடா, அமெரிக்கா, ரஷ்யா, ஜெர்மனி, ஆஃப்ரிக்கா, ஃபிரான்ஸ், இத்தாலி, சீனா, பிரிட்டன் போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
முருங்கை காய் பச்சையாகவும் அனுப்பப்படுகிறது. அதை உலர வைத்து பொடி செய்தும் அனுப்புகிறார்கள்.முருங்கை விதையை தனியே பிரித்து உலர வைத்து பக்குவப் படுத்தி பொடி செய்து அனுப்பப்படுகிறது.
இலைப் பொடியை அடைத்து கேப்சூல் மாத்திரைகளாகவும் அனுப்புகிறார்கள். முருங்கை இலையில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரித்து அனுப்ப அந்த பொருட்களெ தொடர்பான FSSAI, Lab Certificate போன்றவற்றை பெற வேண்டி இருக்கும்.
நாம் எந்த நாட்டுக்கு அனுப்புகிறோமோ, அந்த நாட்டில் ஏதேனும் சான்றிதழ்கள் பெற வேண்டி இருந்தால் அவற்றையும் பெற வேண்டும். பெற்றுள்ள சான்றிதழ்கள் குறித்து பேக்கிங்கில் குறிப்பிட வேண்டும்.
பச்சை முருங்கை இலை 100, 200 மற்றும் 300 கிராம் என்ற அளவில் பேக்கிங் செய்து தெர்மோகோல் பெட்டியில் ஐஸ் பார் வைத்து ஏர் கார்கோ (Air Cargo) மூலம் அன்றாடம் தமிழ்நாட்டில் இருந்து ஏற்றுமதி செய்யப்படுகிறது.முருங்கை இலை அது தொடர்பான பொருட்கள் அனுப்புவதற்கு ஏபிஇடிஏ-வில் (APEDA) உறுப்பினராக வேண்டும்.
– பி. கிருஷ்ணன்,
9367423299