Latest Posts

துணிப் பைகள் தயாரிக்கலாம், பணம் சம்பாதிக்கலாம்!

- Advertisement -

இந்த ஆண்டின் தொடக்கம் பிளாஸ்டிக் பைகள் தயாரிப்பவர்களுக்கு கவலை தருவதாகவும், பிளாஸ்டிக் பைகளை தடை செய்ய வேண்டும் என்று விரும்பியவர்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும் அமைந்து இருந்தது. பிளாஸ்டிக் பொருட்களில் சிலவற்றிற்கு விடை கொடுத்து அனுப்ப வேண்டிய கட்டாயத்தை அரசு உருவாக்கி விட்டது.

அந்த வகையில் பிளாஸ்டிக் தாள், மெல்லிய பிளாஸ்டிக் தட்டுகள், தேநீர் கப்கள், தண்ணீல் தம்ளர்கள், பிளாஸ்டிக் பை ரகங்கள், பிளாஸ்டிக் அரசியல் கட்சிகளுக்கான கொடிகள், பிளாஸ்டிக் ஸ்ட்ரா என்று தடை செய்யப்பட்ட பொருள்கள் பட்டியிலிடப்பட்டு உள்ளன.

இப்படி தடை செய்யப்பட்ட பொருட்களுக்கு மாற்றுப் பொருட்களாக மந்தார இலை, பாக்கு மரத் தட்டுகள், கிண்ணங்கள் போன்றவை பயன்படுத்துப் படுகின்றன. ஏற்கனவே, பிளாஸ்டிக் பொருட்களைத் தயாரிப்பதிலும், விற்பதிலும், சந்தைப்படுத்துவதிலும் ஆர்வம் செலுத்தி வந்த வணிகர்கள் இனி, சணல் பைகள், துணிப் பைகள், காகிதப் பைகள் தயாரிப்பு பற்றி சிந்திக்கத் தொடங்கி இருக்கிறார்கள். சில புதிய தொழில் முனைவோரும் உருவாகி இருக்கும் புதிய வாய்ப்பை எப்படி தொழிலாக மாற்றிக் கொள்வது என்று முனைப்பு காட்டி வருகிறார்கள்.

துணிகளால் ஆன பைகளை குறைந்த முதலீட்டில் தையல் மெஷின்களை வைத்து சிறு, குறுந் தொழிலாக செய்வதன் மூலமாக வருமானம் ஈட்டலாம். இதற்கு மூலப் பொருள் காடா துணி. காடா துணி ப்ளீச் செய்தும், ப்ளீச் செய்யாமலும் இரண்டு வகைகளாக வருகின்றன. இவற்றைப் பயன்படுத்தி பலவித அளவுகளில் பைகளை தைத்து சந்தைப்படுத்தலாம். வேறு ஏதேனும் மெல்லிய, விலை குறைந்த துணி வகைகள் சந்தையில் கிடைத்தால் அவற்றையும் பயன்படுத்தலாம்.

மளிகை சாமான்கள், காய்கறிகளை வாங்கும் பையின் அளவானது நீளம் 14 அங்குலமாகவும், அகலம் 12 அங்குலாமாகவும் இருக்க வேண்டும். இதில் இரண்டு பாகங்கள் மற்றும் இரண்டு கைப்பிடி பகுதியும் அவசியம் ஆகும். காடா துணி சென்னை, மதுரை, ஈரோடு, கோவை, கரூர், சேலம் போன்ற தமிழக நகரங்களில் மொத்தமாகவும், சில்லறையாகவும் கிடைக்கிறது. மதுரா கோட்ஸ், வர்த்தமான் நூல் ரகங்களைக் பயன்படுத்தலாம். தையலானது ஒரு அங்குலத்திற்கு பத்து முதல் பன்னிரண்டு வரையில் இருப்பது தரமானதாக இருக்கும்.

சுமார் பத்து முதல் இருபது தையல் மெஷின்களை அமைத்துக் கொண்டு மளிகை சாமான்கள் விற்பனையகங்களில் இருந்து ஆர்டர் பெற்று தயாரித்து விநியோகப் படுத்தலாம். சாதாரணமாக ஒரு தையல் எந்திரம் வீட்டில் இருந்தாலும் கூட பைகளை மட்டுமே தைத்து விற்று இலாபம் பறலாம்.

12 க்கு 14; 15க்கு 12; 12க்கு 10; 20க்கு 15 அங்குலம் என்ற பொதுவான அளவுகளிலும், வேறு தேவைக்கேற்ற அளவுகளிலும் பைகளை வெட்டி தைத்து விற்பனை செய்யலாம். கலர் துணி வகைகளிலும் பைகளைத் தயாரித்து விற்பனை செய்யலாம். பெரும்பாலான ஜவுளிக் கடை, கல்யாண நிகழ்ச்சிகளுக்குப் பயன்படுகின்ற மஞ்சள் பை சிவப்பு பிரின்ட் தமிழகத்தில் மிகவும் புகழ் பெற்று விளங்குவதைக் காணலாம். காஞ்சிபுரத்தில் இன்றளவும் பட்டு நெசவு சேலை, வேட்டி தயாரிப்பாளர்கள் இத்தகைய மஞ்சள் பைகளைத்தான் பயன்படுத்துகின்றனர்.

கரூரில் மஞ்சள் பை புழக்கம் அதிக அளவில் இருப்பதைக் காண முடிகின்றது. துணியினால் ஆன கேரி பைகளானது தற்போது பிளாஸ்டிக்குக்கு பதிலாக இடம் பிடித்து வருகின்றன.

.இந்த வணிகத்தை நடுத்தர அளவிலோ அல்லது பெரிய அளவிலோ செய்யலாம்.
நடுவண் அரசின் கீழ் நடந்து வரும் எம்எஸ்எம்ஈ-யில் திட்ட விவர அறிக்கையையும், போதிய வழிகாட்டுதலையும் கேட்டு அறியலாம். துணியினால் ஆன கேரி பேக், ஓட்டல்கள், பழங்கள், காய்கறிகள் கடைகள், பளிகைக் கடைகளுக்கு இன்றைக்கு மிகவும் தேவையானவை ஆகி விட்டன.

தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை என்பது ஜனவரி 2019 முதலாகத்தான் நடைமுறைப் படுத்தப்படுகின்றது. பெரும்பாலான மாநிலங்களில் இதற்கு முன்னரே பிளாஸ்டிக் பைகளுக்கான தடை நடைமுறைக்கு வந்து விட்டது.

சாதாரண துணிப் பைகளை வீட்டில் இருந்த படியே குடிசைத் தோழில், சிறு/குறு தொழிலாக செய்வதன் மூலமாகவும், மகளிர் சிறு உதவிக் குழுக்களாக சேர்த்தும் கூட செய்து பணம் ஈட்டலாம். தையல் மெஷின் பவர் மெஷினாக இருந்தால் கூடுதல் உற்பத்தியைக் பெறலாம்.

குறிப்பாக Siruba, Kinglion, Juki, Brother போன்ற பிராண்ட்களில் உள்ள தையல் மெஷின்களே தற்போது ரெடிமேட், ஏற்றுமதி பைகள் தயாரிப்பு நிறுவனங்களில் பயன்பாட்டில் உள்ளன. ஒரு மீட்டர் காடா/லாங்கிளாத்/பாப்ளின்/கைத்தறி/விசைத்தறித் துணியில் சுமார் நான்கு பைகள் தைக்கலாம்.

சான்றுக்கு ஒரு மீட்டர் காடா துணி ரூ. 40, நூல் ரூ. 4, தையல்கூலி ரூ.10. நான்கு பைகளுக்கான தயாரிப்பு செலவு ரூ.54. ஒ,ரு பைக்கான உற்பத்தி செலவு சுமார் ரூ. 13. 50, இருபது விழுக்காடு லாபமான ரூ.2. 70-ஐ கூட்டினால் ரூ.16.20. ரூ. 18 முதல் ரூ. 20 வரை விற்பனை செய்யலாம்.

– ஆர். எஸ். பாலகுமார் (9283182955)

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

Subscribe to our latest news