Sunday, November 29, 2020

மஞ்சள் நடவு முதல் பக்குவப்படுத்துதல் வரை..

மஞ்சள் பல்வேறு மண்வகைகளில் குறிப்பாக வண்டல் கலந்த மண், குறைவான களிமண் கொண்ட நிலம் போன்றவற்றில் சாகுபடி செய்யப்படுகிறது. குறுமண்ணும், வண்டலும் கலந்த வடிகால் வசதி உள்ள நிலம் மிகவும் உகந்தது. களர்,...

Latest Posts

போட்டோ காப்பியர் தொழிலின் இன்றைய வாய்ப்புகள் எப்படி?

செராக்ஸ் என்று வழக்கத்தில் அழைக்கப்படும் போட்டோ காப்பியர் தொழில் இப்போது எப்படி இருக்கிறது? தொழில் உச்சத்தைத் தொட்டு விட்டதா, புதியவர்களுக்கு இன்னும் வாய்ப்பு இருக்கிறதா? படிப்பொறி எந்திரங்கள் இந்தியாவில் தயாரிக்கப்படுவது இல்லை. அனைத்தும் வெளிநாடுகளில்...

மகிழ்ச்சியாக பாடுபடுவதில் இருக்கிறது, வளர்ச்சி!

சுறுகறுப்பாக, மகிழ்ச்சியோடு பணிக்கு வீட்டில் புறப்பட்டான் தேவா. அப்படி என்ன பெரிய வேலை? பெரிய ஜெனரல் மேனேஜரா? இல்லை கம்பெனி எம்டியா? இவை எதுவும் இல்லை. ஒரு பெரிய ஓட்டலின் வாயிலில் கதவை திறந்து...

சிக்கல்கள் மேல் சிக்கல்கள். சமாளிப்பது எப்படி?

பொதுவாக வாழ்க்கையில் அடிக்கடி சிக்கல்கள் தோன்றும், சிக்கல் (பிரச்சனை) வருகின்ற பொழுது நாம் அதிர்ச்சிக்கு உள்ளாகின்றோம். "இதனால் என்ன பாதக விளைவுகள் ஏற்படுமோ! என்ற அச்சம் வருகின்றது. அதனால் மனக் கலக்கமும், கவலையும்...

வெண்டை – 90 நாட்களில் அறுவடை

தோட்டக்கலை பயிர்களில் முதன்மையான பயிர்களில் ஒன்று, வெண்டை இதற்கு எப்போதும் சந்தை உண்டு பிப்ரவரி, மார்ச் மாதங்கள் வெண்டை விளைச்சலுக்கு ஏற்ற மாதங்கள். இதற்கு நடப்பு ஜனவரி மாதத்திலேயே நிலத்தை தயார் செய்தல்...

நட்புடன் கையாளுகிறோம்; வாடிக்கையாளர்கள் பெருகுகிறார்கள்

பெண்கள் தொடங்கி நடத்த ஏற்ற தொழிலாக, பலர் பெண்கள் அழகு நிலையத்தைக் கருதுகிறார்கள். தேவையான இடம் பிடித்து கட்டமைப்பை ஏற்படுத்தி விட்டால் போதும். பின்னர் வாடிக்கையாளர்களை வரவைக்கத் தேவையான முயற்சிகளை மேற்கொண்டாலே போதும் என்பதோடு லாப விகிதமும் அதிகம். மற்ற தொழில்களைப் போலவே இதற்கும் ஆட்கள் கிடைப்பதுதான் அரிதாக இருக்கிறது. என்னதான் பத்திரிகைகளில் விளம்பரம் போட்டு ஆட்களை எடுத்தாலும், பெரும்பாலானோர் நீண்ட நாட்கள் இருப்பது இல்லை. தொடர்ந்து இடம் மாறிக்கொண்டே இருக்கிறார்கள்.

அழகு நிலையத்தை நடத்தும் உரிமையாளர்களுக்கே அத்தனை பணிகளும் தெரியும் என்றால் சிக்கல் இல்லை. எப்படியும் சமாளித்துக் கொள்ளலாம். அப்படி அத்தனை அழகு நிலையப் பணிகளிலும் நல்ல பயிற்சி உள்ள திருமதி. சுமதி, திருமதி. ஆனந்தி இருவரும் சேரந்து, சென்னை, இராமாபுரம், இராயலா நகரில் பெண்கள் அழகு நிலையம் ஒன்றை நடத்தி வருகிறார்கள். அவர்களிடம் வளர்தொழிலுக்காக பேட்டி கண்டபோது,

”நாங்கள் ஐந்து ஆண்டுகளாக இந்த அழகு நிலையத்தை நடத்தி வருகிறோம். பொதுவாக பெண்களுக்கு தங்களை அழகு படுத்திக் கொள்வதில் ஆர்வம் அதிகம். வீட்டில் இருந்தபடியே செய்து கொள்ள முடிந்தவற்றை தாங்களாகவே செய்து கொள்வார்கள். ஆனால் எல்லாவற்றையும் வீட்டிலேயே செய்து கொள்ள முடியாது. சில அழகுபடுத்தல் வேலைகளை அழகு நிலையம் வந்துதான் செய்து கொள்ள முடியும்.

தொடக்கத்தில் போதுமான வாடிக்கையாளர்கள் வரவில்லை என்றாலும், காலப்போக்கில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்தது.
நாங்கள் ஸ்ட்ரெயிட், யு கட், டீப் கட், வி கட், ஸ்டெப் கட், லேயர் கட், பேபி கட், மஷ்ரூம் கட், ஃப்ரன்ட் கட், ஃபெதர் கட் என சுமார் பத்து வகைகளில் முடி வெட்டுகிறோம். வரும் பெண்கள் இவற்றில் எது தங்களுக்கு பிடிக்கிறதோ அதை தேர்வு செய்து முடியை அழகு படுத்திக் கொள்வார்கள். அந்த நேரங்களில் முடி தொடர்பான அழகுக் குறிப்புகளை அவர்களுக்கு சொல்வோம். அது அவர்களுக்கு அதிகம் பிடிக்கும்.

முகத்தை மேலும் பொலிவாக்க, இளமையுடன் தோன்ற பெண்கள் ஃபேசியல் செய்து கொள்வதிலும் ஆர்வம் காட்டுகிறார்கள். நாங்கள் ஃப்ரூட் ஃபேசியல், சில்வர் ஃபேசியல், பனானா ஃபேசியல், பியர்ல் ஃபேசியல், கோல்டன் ஃபேசியல், ஹனி ஃபேசியல், க்ளோ ஃபேசியல், டயமண்ட் ஃபேசியல், பிளாட்டினம் ஃபேசியல் என பல விதமான ஃபேசியல்களை செய்கிறோம். இதற்கான கட்டணம் ஐநூறு ரூபாயில் இருந்து தொடங்குகிறது.

அடுத்தது, ப்ளீச்சிங். ப்ளீச்சிங் செய்வதாலும் முகத்துக்கு கூடுதல் பொலிவு கிடைக்கிறது. ஃபேர் க்ளீன் அப், டி டான் ப்ளீச், ஃப்ரூட் ப்ளீச், ஃபெம் ப்ளீச், ஆலிவ் ப்ளீச், ஆக்சி ப்ளீச், கோல்ட் ப்ளீச், லேக்டோ ப்ளீச், டயமண்ட் ப்ளீச் என ப்ளீச்சிங்கிலும் பல வகைகள் உள்ளன.

த்ரெடிங் என்பது முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்குவது ஆகும். ஐ ப்ரோ (புருவம்), லிப் (உதட்டுன் மேல்பகுதி), சின் (நாடி), சைட் பர்ன்ஸ் (காதோரம்), சீக்ஸ் (கன்னங்கள்), நோஸ் (மூக்கு), நாஸ்ட்ரில்ஸ் (நாசித் துளைகள்), ஃபோர்ஹெட் (நெற்றி), ஜா (தாடை), நெக் (கழுத்து), ஃபுல் ஃபேஸ் (முழு முகத்துக்கும்) என்று அங்குள்ள முடிகளை த்ரெடிங் முறையில் நீக்குகிறோம். பெரும்பாலும் புருவ முடிகளை ஒழுங்கு படுத்துவதற்கே அதிக எண்ணிக்கையிலான வாடிக்கையாளர்கள் வருகிறார்கள். புருவ முடிகளை மாதம்தோறும் செய்ய வேண்டும் என்பதால், தொடர்ந்து செய்து கொள்ள வருவார்கள்.

ஸ்பா என்பது மசாஜ் செய்வதைக் குறிக்கும். தலைக்கு மசாஜ் செய்து விடுவோம். இது செய்து கொள்பவர்களுக்கு புத்துணர்வைக் கொடுக்கும். நிறைய பியூட்டி பார்லர்களில் இந்த மசாஜ் இருப்பதில்லை. எங்களிடம் இந்த சேவையும் உள்ளது.

இவை தவிர கைவிரல் நகங்களை சீராக வெட்டி அழகு படுத்துதல் (மனிக்யூர்), கால்விரல் நகங்களை சீராக வெட்டி அழகு படுத்துதல் (பெடிக்யூர்), வேக்சிங் மூலம் கை, கால்களில் உள்ள முடிகளை அகற்றுதல், உடல் மசாஜ், மணப்பெண்ணை அலங்கரித்தல் போன்ற பணிகளையும் செய்கிறோம். மணப்பெண் அலங்காரம், வீட்டு விழாக்களுக்கான பெண்கள் அலங்காரம் போன்றவற்றை அவர்கள் வீட்டுக்கே சென்று செய்து கொடுப்போம்.

திருமண விழாக்களில் மணப்பெண்ணுக்கு மட்டுமல்லாமல், அவர்களுடைய உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் கூட அலங்காரம் செய்யும் பணிவாய்ப்பு கிடைக்கும். முக அழகு, சேலை அணிந்து விடுதல், மருதாணி போட்டு விடுவது, சடை அலங்காரம், ஆபரணங்கள் அணிந்து அழகு படுத்துவதுஎன அத்தனையையும் செய்து கொடுப்போம். மணமகள் அலங்காரத்துக்கு தேவையான ஆபரணங்களுக்கான வாடகையாக தனியே இரண்டாயிரம் ரூபாய் பெற்றுக் கொள்வோம். மணப்பெண் அலங்காரத்துக்கு ஐந்தாயிரம் ரூபாய் முதல் எட்டாயிரம் ரூபாய் வரை பெறுகிறோம்.

மஞ்சள் நீராட்டு விழாவுக்கும் எங்களுக்கு அழைப்பு வரும். விருந்து, விழாக்களில் கலந்து கொள்ள செல்லும் பெண்களும் எங்களிடம் வந்து அழகு படுத்திக் கொண்டு செல்வார்கள்.

வாடிக்கையாளர்களுடன் நாங்கள் இருவருமே நட்புடன் தோழிகளைப் போல பேசுவோம். இது அவர்களுக்கு நிறைய பிடிக்கும். வரும் அனைவருக்கும் எங்கள் விசிட்டிங் கார்டுகளை கொடுத்து அனுப்புவோம். அவர்கள் செல்பேசி எண்களை நாங்கள் எங்கள் செல்பேசியில் பதிந்து வைத்துக் கொள்வோம். இதனால் அவர்கள் எங்களிடம் பேசும்போது, அவர்களிடம், அவர்கள் பெயர் சொல்லி பேச முடிகிறது. இது ஒரு நெருக்கத்தை எற்படுத்துகிறது. இது எங்கள் வாடிக்கையாளர்களை நிலைப்படுத்திக் கொள்ள உதவுகிறது.

அவர்களுக்கு தெரிந்தவர்களுக்கு எங்களை அறிமுகப்படுத்துகிறார்கள். குறிப்பாக அவர்களுக்குத் தெரிந்தவர்கள் வீட்டு திருமண விழாக்களுக்கு எங்களை பரிந்துரைக்கிறார்கள்.

அழகுக் கலை தொழிலை, தகுந்த பயிற்சியுடன் எவரும் தொடங்க முடியும். ஆனால் திறமை, ஆர்வம், ஈடுபாடு, கவனம், நட்புடன் கூடிய அணுகு முறை அத்தனையும் இந்த தொழிலில் வெற்றி பெறத் தேவையானதாகும். பொழுது போக்காக செய்கிறேன் என்று செயல்பட்டால் வெற்றி பெற முடியாது. பெண்களுக்கு எப்போதும் அழகு பற்றிய ஆர்வம் இருந்து கொண்டே இருக்கும். குறிப்பாக இளம் வயது பெண்களுக்கு இந்த ஆர்வம் அதிகம். எனவே எங்கள் தொழிலுக்கு சரிவு என்பதே இருக்காது என்ற நம்பிக்கையுடன் செயல்பட்டு வருகிறோம்.

நாங்கள் எங்கள் அழகு நிலையத்தைத் தொடங்க சுமார் ஐந்து லட்ச ரூபாய் முதலீடு செய்தோம். எங்கள் முயற்சிக்கேற்ற லாபம் கிடைத்து வருகிறது.” என்றனர்.

– ஆர். நந்தினி

Join our list

Subscribe to our mailing list and get interesting stuff and updates to your email inbox.

Thank you for subscribing.

Something went wrong.

Latest Posts

போட்டோ காப்பியர் தொழிலின் இன்றைய வாய்ப்புகள் எப்படி?

செராக்ஸ் என்று வழக்கத்தில் அழைக்கப்படும் போட்டோ காப்பியர் தொழில் இப்போது எப்படி இருக்கிறது? தொழில் உச்சத்தைத் தொட்டு விட்டதா, புதியவர்களுக்கு இன்னும் வாய்ப்பு இருக்கிறதா? படிப்பொறி எந்திரங்கள் இந்தியாவில் தயாரிக்கப்படுவது இல்லை. அனைத்தும் வெளிநாடுகளில்...

மகிழ்ச்சியாக பாடுபடுவதில் இருக்கிறது, வளர்ச்சி!

சுறுகறுப்பாக, மகிழ்ச்சியோடு பணிக்கு வீட்டில் புறப்பட்டான் தேவா. அப்படி என்ன பெரிய வேலை? பெரிய ஜெனரல் மேனேஜரா? இல்லை கம்பெனி எம்டியா? இவை எதுவும் இல்லை. ஒரு பெரிய ஓட்டலின் வாயிலில் கதவை திறந்து...

சிக்கல்கள் மேல் சிக்கல்கள். சமாளிப்பது எப்படி?

பொதுவாக வாழ்க்கையில் அடிக்கடி சிக்கல்கள் தோன்றும், சிக்கல் (பிரச்சனை) வருகின்ற பொழுது நாம் அதிர்ச்சிக்கு உள்ளாகின்றோம். "இதனால் என்ன பாதக விளைவுகள் ஏற்படுமோ! என்ற அச்சம் வருகின்றது. அதனால் மனக் கலக்கமும், கவலையும்...

வெண்டை – 90 நாட்களில் அறுவடை

தோட்டக்கலை பயிர்களில் முதன்மையான பயிர்களில் ஒன்று, வெண்டை இதற்கு எப்போதும் சந்தை உண்டு பிப்ரவரி, மார்ச் மாதங்கள் வெண்டை விளைச்சலுக்கு ஏற்ற மாதங்கள். இதற்கு நடப்பு ஜனவரி மாதத்திலேயே நிலத்தை தயார் செய்தல்...

Don't Miss

உரிய நேரம் வரும்வரை காத்திருந்து செயல்பட கற்றுத் தரும் கொக்கு

ஒவ்வொரு நிர்வாகமும், மனிதரும் தன் குறிக்கோள், இலக்கு, இலட்சியம், அதை அடையும் வழிமுறைகள், அவ்வப் போது தீர்மானிக்க வேண்டிய முடிவுகள், அவற்றைச் செயலாக்கும் திட்டங்கள் போன்ற பற்பல பணிகளை ஆற்றவேண்டியுள்ளது. நாலும் தெளிந்தெடுக்க முடிவு! ஒரு...

குறைந்த முதலீட்டு ஆன்லைன் தொழில், அஃபிலியேட் மார்க்கெட்டிங்

ஆன்லைன் சந்தையில் அண்மைக் காலமாக அஃபிலியேட் சந்தை வளர்ந்து வருகிறது. Affiliate Marketing என்றால் என்ன? அஃபிலியேட் சந்தை என்பது பொருட்களை கமிசன் அடிப்படையில் விற்றுக் கொடுப்பது ஆகும். சான்றாக, ஆயிரம் ரூபாய் மதிப்புடைய பொருளை...

கார் பழுது பார்க்கும் தொழில்: எப்படி தொடங்குவது, எப்படி வெற்றி பெறுவது?

நீங்கள் ஆட்டோமொபைல் பொறியியலில் டிப்ளமோ அல்லது பட்டம் பெற்றவரா? அல்லது குறைவாக படித்து இருந்தாலும், ஒரு கார் பழுது பார்ப்பு நிறுவனத்தில் பணி புரிந்து நேரடியாக அதன் நுட்பங்களைக் கற்றுக் கொண்டவரா? நீங்கள்...

வாஸ்து பார்த்தால் ஜோதிடருக்கு லாபம், பார்க்காவிட்டால் நமக்கு லாபம்!

இன்றைக்கு கட்டடங்களுக்கான அடிப்படை வரைபடங்களை வரைந்து தரும் கட்டட வரைகலைஞர்களுக்கும், கட்டுமான பொறியாளர்களுக்கும் பெரும் சிக்கலை எற்படுத்திக் கொண்டு இருப்பது, வாஸ்து நம்பிக்கை. வாஸ்துவைப் பற்றிக் கவலை வேண்டாம் உலக அளவில் வளர்ந்து வரும் ஆர்க்கிடெக்சர்...

மொழிபெயர்ப்பு, மொழி ஆக்கம் சார்ந்த பணிகளுக்கு வாய்ப்பு எப்படி?

இன்று மொழி பெயர்ப்புத் துறை சுமார் நாற்பது பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பு கொண்ட துறையாக, வளர்ந்து நிற்கிறது. இந்திய ரூபாய் மதிப்பில் சொல்வதானால், இரண்டு லட்சத்து அறுபது ஆயிரம் கோடி ரூபாய்...

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.