ஏற்ற பருவம் : நவம்பர்- டிசம்பர்
விதை நேர்த்தி : ஒரு கிலோ விதைக்கு 4கிராம் டிரைகோடெர்மா கலந்து விதை நேர்த்தி செய்ய வேண்டும் .
ஒரு எக்டருக்கு 3.5 கிலோ விதை தேவைப்படும். குழித் தட்டு முறையில் நாற்றுகள் உற்பத்தி செய்து நடுவதால் வயலில் முழு அளவில் செடிகளை பராமரிக்கலாம். பன்னிரெண்டு நாட்கள் வயதுடைய நாற்றுகளை வரிசைக்கு வரிசை 2.5 மீட்டர் செடிக்கு செடி 0.9 மீட்டர் இடைவெளி பார்களில் நடவு செய்யலாம் .
அடியுரம் : தொழுஉரம் -20 டன்கள். ,வேப்பம் புண்ணாக்கு- 100கிலோ, அசொஸ்பிரில்லம் -2கிலோ ,பாஸ்போபேக்டிரியா -2 கிலோ, சூடொமொனாஸ் – 2.5 கிலோ ஒரு எக்டருக்கு கடைசி உழவுக்கு முன் இட வேண்டும்.
சூப்பர் 340 கிலோ பொட்டாஷ், 94 கிலோ அடி உரமாக இட வேண்டும் .மேலுரமாக 120 கிலோ யூரியா இட வேண்டும்.
எத்திரல் 10 லிட்டர் தண்ணீருக்கு 2.5 மில்லி என்ற விகிதத்தில் கலந்து விதைத்த 15ம் நாளிலிருந்து வாரம் ஒரு முறை வீதம் 4 முறை தெளிக்க வேண்டும் .
20*15 சே.மீ அளவுள்ள பாலித்தீன் பையில் 5 கிலோ நனைத்த கருவாட்டுடன் ஒரு பஞ்சில் 1 மிலி டைகுலோர்வாஸ் மருந்தை நனைத்து பொறியாக வயலில் ஆங்காங்கே வைக்க வேண்டும். ஒரு எக்டருக்கு 50 பொறிகள் தேவைப்படும் .
மகசூல் : எக்டருக்கு 120 நாட்களில் 25-30 டன்கள்
மரவள்ளி சாகுபடி
விதைக் கரணை தேர்வு : நோய் தாக்காத மையப்பகுதியிலிருந்து 15 செ.மீ. நீளம் 8 செ.மீ .பருமன் உள்ள குச்சிகள் .
மரவள்ளி நாற்றங்கால் : மேட்டுப்பாத்திகளில் 5-7 செமீ வரிசைக்கு வரிசை, செடிக்கு செடி இடைவெளி இருக்குமாறு கரணைகளை நட வேண்டும் .விதைக் கரணைகள் ஊன்றிய 7 நாட்களில் முளைக்கத் தொடங்கும் 15 – 20 நாட்களில் வயலில் நட்டு விட வேண்டும் .விதைக் கரணைகள் முளை விட்டதும் தேமல் நோயின் அறிகுறிகள் தென்பட்டால் அத்தகைய செடிகளை களைந்து நல்ல கரணைகளை நடவு செய்ய வேண்டும் .நாற்றங்கால் அமைப்பதினால் கீழ்கண்ட நன்மைகளை பெறலாம்.
1. தரமான விதைக் கரணைகளை பெறலாம் .
2. தேமல் நோய் தாக்கிய கரணைகளை தொடக்கத்திலேயே கண்டறிந்து நீக்கலாம்
3. வயலில் சரியான செடிகளின் எண்ணிக்கை
4. ஒரு முறை களை எடுக்கும் செலவும் . இரு முறை நீர்ப்பாசனம் செய்யும் செலவும் குறையும் .
ஒரு ஏக்கரில் பயிரிட 16 சதுர மீட்டர் நாற்றங்கால் போதுமானது.
விதைக் கரணை நேர்த்தி : விதைக் கரணைகளின் அடிப்பாகத்தை கார்பண்டாசிம் என்ற மருந்து 1 லிட்டர் தண்ணீருக்கு 1 கிராம் என்ற அளவில் கலந்து 15 நிமிடம் நனைத்து பின் நடவேண்டும் . ஒரு ஏக்கரில் நடவு செய்ய 80-120 கிராம் மருந்து தேவைப்படும் .
வறட்சியை தாங்கி வளர : மானாவாரியில் பயிரிடப்படும் மரவள்ளி பயிர் வறட்சியை தாங்கி வளர 1 லிட்டர் தண்ணீரில் 5 கிராம் பொட்டாசியம் குளோரைடு என்ற விகிதத்தில் கலந்த கரைசலில் கரணைகளை சுமார் 20 நிமிடங்கள் நனைத்து பின் நடவேண்டும் .
அதிக அளவில் கிழங்கு பிடிக்க : ஒரு ஏக்கரில் நடவு செய்ய தேவையான கரணைகளை 30 கிலோ சூப்பர் பாஸ்பேட் உரம் மற்றும் 30 கிலோ செம்மண்ணை 60 லிட்டர் தண்ணீரில் கலந்து அக்குழம்பில் கரணைகளின் 5 செ .மீ . அளவு நனைத்து நடவேண்டும் ஏக்கருக்கு
தேவையான விதைக் கரணைகள் :
கிளைக்கும் தன்மையுள்ள ரகம்
மானாவாரி – இடைவெளி 75*75 செ .மீ.– 7111 எண்கள்
இறவை — 60*60 செ .மீ. — 11111 எண்கள்
கிளைக்கும் தன்மை குறைவாக உள்ள ரகம்
மானாவாரி – இடைவெளி 90*90 செ .மீ.– 4938 எண்கள்
இறவை — 90*75 செ .மீ. — 5925 எண்கள்
– மான்விழி பொன்னுசாமி