பதிவு பெற்ற இந்திய நிறுமங்களால் (பப்ளிக் லிமிடெட், பிரைவேட் லிமிடெட்) தங்கள் இயக்குநர்களுக்குக் கொடுக்கப்பட்ட கடன்களைப் பற்றி மட்டுமே இதுவரை பேசப்பட்டு வந்துள்ளன. ஆனால் தாம் பதவி வகிக்கும் நிறுமங்களுக்கே கடன்களை வழங்கிய இயக்குநர்களைப் பற்றிய செய்திகள் இப்போதுதான் அங்கொன்றும், இங்கொன்றுமாக வந்து கொண்டு உள்ளன.
இவ்வாறு நிறுமங்களுக்கு இயக்குநர்கள் கடன் வழங்குவது குறித்த சந்தேகங்களைத் தவிர்ப்பதற்கு, அண்மைய திருத்தப்பட்ட நிறுமங்களின் சட்டம் (கம்பெனி சட்டம்) 2013 – இன் படி இயக்குநர்களிடம் இருந்து நிறுமங்கள் ஃபிக்சட் டெப்பாசிட், கடன் ஆகிய இரு வழிகளில் ஏதேனும் ஒரு வகையில் தொகையைப் பெறலாம்.
இயக்குநர்களிடம் இருந்து பெறப்படும் கடன்களை பொதுவாக இயக்குநரின் சொந்த நிதியில் இருந்து பெறப்பட்ட தொகை மற்றும் தாம் பெற்ற கடன் நிதியில் இருந்து பெறப்பட்ட தொகை என்று இரண்டு பிரிவுகளாக வகைப் படுத்தலாம்
Also read: யாராவது சொல்லுங்களேன்!
நிறுமம் நிறுமங்களின் சட்டம் 2013 பிரிவு 180 இன் கீழ் பொருந்துமாறு கடன் பற்றிய தகவல்கள் இயக்குநரின் அறிக்கை மற்றும் நிறுவனத்தின் நிதிநிலை அறிக்கை கள் ஆகியவற்றில் தக்க குறிப்புகளுடன் வெளிப்படுத்தப்பட வேண்டும்..
இயக்குநர் கடன் வாங்கிய தொகைகளில் பெறப்பட்ட தொகை
இதன் கீழ் இயக்குநர் ஒரு பங்குநர் அல்லாத சூழ்நிலை, இயக்குநர் ஒரு பங்குநராக உள்ள சூழ்நிலை ஆகிய இரு வகைகள் உள்ளன.
இயக்குநர் ஒரு பங்குநர் அல்லாத சூழ்நிலையில், அவரிடம் இருந்து பெறப்பட்ட தொகை நிறுமங்களின் சட்டம் 2013 பிரிவு 76 – ன் விதிமுறைகளுக்குள்ளும், வைப்புகளை ஏற்றுக் கொள்ளும் விதிமுறைகள் 2014 உடனும் வருகின்றன. நிகர சொத்து மதிப்பு ரூ. 100 கோடி அல்லது அந்நிறுமத்தின் விற்பனை வருமானம் ரூ. 500 கோடி ஆக உள்ள ஒரு பொது நிறுமத்தால் (பப்ளிக் லிமிடெட்) மட்டுமே ஃபிக்சட் டெப்பாசிட் தொகையை பெற முடியும்.
நிறுமங்களின் சட்டம் 2013 பிரிவு 76 இன்படி ஒவ்வொரு ஆண்டும் கடன் தகுதி மதிப்பீட்டை (credit rating) பெறவும், வைப்புத் தொகைக்கு குறையாமல் அந்நிறுமங்களின் சொத்துகளைப் பொறுப்பு ஏற்பதற்காக பதிவாளரிடம் அந்த சொத்துகளின் மீது பொறுப்பு உருவாக்கி (create a charge) பதிவு செய்ய வேண்டும்.
இயக்குநர் ஒரு பங்குநர் எனும் சூழ்நிலையில், பெறப்பட்ட தொகை ஃபிக்சட் டெப்பாசிட் ஆக கருதப்படுகின்றது.
நிறுமங்களின் சட்டம் 2013 பிரிவு 180, படி ஒரு நிறுமம், தம் இயக்குநர்களிடம் இருந்து கடன் பெற, அந்த நிறுமத்தின் பங்குநர்களின் பொதுப் பேரவை கூட்டத்தில் ஒரு சிறப்புத் தீர்மானத்தை நிறைவேற்றி இருக்க வேண்டும். (அவ்வாறான சிறப்பு தீர்மானம், படிவம் MGT-14 – இன் கீழ் நிறுமங்களின் பதிவாளருக்கு வழங்கி இருக்க வேண்டும்.).
Also read: அடல் பென்ஷன் திட்டம்
ஏற்கனவே வங்கிகளிடம் இருந்து பெறப்பட்ட கடன்கள் மட்டும் அல்லாமல், நிறுமத்தின் பெறப்பட்ட பங்கு மூலதனம் (paid-up share capital), ஒதுக்கீடுகள் (free reserves) மற்றும் பத்திரங்களின் பிரீமியம் (securities premium) ஆகியவற்றின் மொத்த மதிப்பை விட கூடுதலாக கடன் பெறுவதற்காக இந்த சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருக்க வேண்டும்
இருப்பினும் 05.06.2015 தேதியிட்ட நிறுமங்களின் சட்டம் 2013 பிரிவு 180 இற்கான அறிவிப்பு, பிரைவேட் லிமிடெட்-க்கு பொருந்தாது. எனவே, இவை, பிரிவு 180 – ன் கீழ் ஒரு சிறப்புத் தீர்மானத்தை நிறைவேற்றுவதோடு மட்டும் அல்லாமல், வைப்புத் தொகையை ஏற்றுக் கொள்ள முடியும். அனைத்து பப்ளிக் லிமிடெட் நிறுவனங்களும், நிறுமங்களின் சட்டம் 2013 பிரிவு 180 படி சிறப்புத் தீர்மானத்தின் வாயிலாக மட்டுமே இயக்குநர்களிடம் இருந்து கடன் பெறமுடியும்.
– முனைவர் ச. குப்பன்