மக்களிடம் பொது போக்குவரத்து வசதியை மேம்படுத்தும் வகையில் புதிய ஆம்னி சொகுசு பேருந்துகளுக்கு பெர்மிட் தேவையில்லை என்ற முறையை மத்திய போக்குவரத்து அமைச்சகம் கொண்டு வர உள்ளது. இது தொடர்பாக மாநில அரசுகளிடம் மத்திய அரசு கருத்து கேட்டு வருகிறது.
நாட்டில் நகரமயமாக்கல் அதிகரித்து வருவதால், போக்குவரத்து வசதி என்பது அடிப்படை வசதியாக மாறிவிட்டது. பேருந்துகளின் இயக்கத்தை அரசு போக்குவரத்து கழகங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் தனியார் மற்றும் ஆம்னி பேருந்துகளின் இயக்கமும் அதிகரித்து விட்டன.
Also read: உங்களைப் பின்தொடரும் பப்பி – 1 சூட்கேஸ்
அதன்படி, தமிழகத்தில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த பேருந்துகளுக்கு சுற்றுலா பேருந்துகளுக்காக பெர்மிட் அளிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும், பொதுமக்களின் தேவையைக் கருத்தில் கொண்டு பயணிகளை ஏற்றிச் செல்லும் பேருந்துகளாகவும் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், மத்திய போக்குவரத்து அமைச்சகம் மாநிலங்களின் போக்குவரத்து துறைக்கு அனுப்பியுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது, சுற்றுச்சூழல் மற்றும் சாலை பாதுகாப்பு சிறப்புகளைக் கருத்தில் கொண்டு சரியான கட்டணத்தில் பயணிக்க ஆம்னி சொகுசு பேருந்துகளுக்கான கட்டுப்பாடுகள் குறைக்கப்பட உள்ளன. அதன்படி, புதிய ஆம்னி சொகுசு பேருந்துகளுக்கான பெர்மிட் தேவையில்லை. இந்தப் பேருந்துகள் சரியான கட்டணத்தில், 22 பேருக்கும் மேல் பயணம் செய்யும் வகையில் இருக்க வேண்டும். இந்த புதியமுறை குறித்து மாநில அரசுகள் வரும் பிப்ரவரி முதல் வாரத்துக்குள் கருத்துகளைத் தெரிவிக்க வேண்டும்.
இதுதொடர்பாக, போக்குவரத்து ஆணையரக அதிகாரிகள் கூறியதாவது, ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டண வசூல், விதிமீறல்கள் போன்ற வழக்குகளில் தொடர்புடைய ஆம்னி பேருந்துகளின் பெர்மிட் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுப்போம். தொடர்ந்து விதிமீறல்களில் ஈடுபட்டால், பெர்மிட் சஸ்பெண்ட் போன்ற நடவடிக்கையை எடுத்து வருகிறோம்.
Also read: குறைந்த முதலீட்டுத் தொழில்கள்!
பெர்மிட் குறித்து மத்திய போக்குவரத்து அமைச்சகத்தின் புதியமுறை, ஆம்னி பேருந்துகள் மீதான கட்டுப்பாடுகளை தளர்த்தும் விதத்தில் உள்ளன. மேலும், பெர்மிட் மூலம் மாநில அரசுக்கு வரவேண்டிய வருவாய் இழப்பு ஏற்படுவதோடு, அரசு போக்குவரத்து கழகங்களுக்கும் வருவாய் இழப்பு ஏற்படும் என்றனர்.
அனைத்து ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்க பொது செயலாளர் எ. அன்பழகன், தற்போது புதிய ஆம்னி பேருந்து ஒன்றுக்கு பெர்மிட் வாங்க ரூ.6 ஆயிரம் கட்டணம் செலுத்துகிறோம். இந்த பெர்மிட் 5 ஆண்டுகளுக்கு பொருந்தும். அதன்பிறகு, மீண்டும் கட்டணம் செலுத்தி புதுபித்து வருகிறோம். புதிய ஆம்னி சொகுசு பேருந்துகளுக்கு பெர்மிட் வாங்கத் தேவையில்லை என்ற முறையை மத்திய அரசு கொண்டுவர திட்டமிடப் பட்டு உள்ளது. இதன்மூலம் ஆம்னி பேருந்துகளில் அதிக அளவில் மக்கள் பயணம் செய்வார்கள். கூடுதல் போக்குவரத்து வசதியும் கிடைக்கும் என்றார்.
– மலர்