இது இந்திய அரசாங்கத்தாரால் 1950 ஆண்டு முதல் அறிமுகப்படுத்தப் பட்டு விற்பனை செய்யப் பட்டு வருகின்றது. இது, முதல் ஐந்தாண்டு திட்டத்தின் ஒரு அங்கமாகும். நாட்டின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு இந்த சேமிப்பு பத்திரம் வழங்கப்படுகிறது. இதனால், வரும் வருமானம் நாட்டின் பல்வேறு திட்டங்களுக்காக பயன்படுத்தப் பட்டு வருகின்றது. குறிப்பாக, நாட்டின் பொருளாதாரத்தை சரி செய்வதில் முக்கிய பங்காற்றுகின்றது.
இது அஞ்சலகங்களில் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. தனி நபர்கள், இருவர் இதனை வாங்கலாம். 18வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு அவர்களது பாதுகாவலர்கள் மூலம் வாங்கி கொள்ளலாம். குறைந்தபட்சம் ரூபாய் 100/- இதற்காக முதலீட்டு செய்யலாம். அதிகப்பட்ச வரம்பு இல்லை. முன்பு, இதற்காக பத்திரம் வழங்கினார்கள். தற்போது சேமிப்பு கணக்குகளுக்கு வழங்குவதை போலவே பாஸ்புத்தகம் வழங்கப்படுகின்றது.
அக்டோபர் 1 முதல் இதன் வட்டி விகிதம் 7.9 சதவீதம் கூட்டு வட்டியை தரக்கூடியது. இதன், வட்டி விகிதம் நாட்டின் பண மதிப்பை பொருத்து கருத்தில் அடிக்கடி மாறக்கூடியது. தற்போது, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை வட்டிமாற்றி அமைக்கப்படுகிறது. இது வருமான வரி சலுகை 80 C படி தகுதி உள்ளது. இதன் முதிர்வு காலம் என்பது 5 வருடங்கள். அதற்கு முன்னர், பணம் பெற இயலாது. இதை வங்கியில் அடகு வைத்து கடன் பெற்றுக்கொள்ளாம். இந்தியாவில் உள்ள அனைத்து அஞ்சல் நிலையங்களிலும் மாற்றம் செய்து அதற்கு தனியாக விண்ணப்பிக்க வேண்டும்.
எவ்வளவு முதலீடு செய்தால் எவ்வளவு வட்டி கிடைக்கும் என்பதை பார்க்கலாம்.
WITH EFFECT FROM 01 st OCTOBER 2019
DENOMINATION
IN RS. WITH INTEREST AFTER MATURITY INTEREST ONLY
RS 100/- 146.25 46.25
RS1000/- 1462.54 762.54
RS10000/- 14625.38 4625.38
RS.1,00,000/- 146253.79 46253.79
– த. செந்தமிழ்ச் செல்வன்