போனஸ் பங்குகள் என்பது ஒரு நிறுவனத்தில் முதலீடு செய்த பங்குநர்களுக்கு தொகையாக அவர்களுக்கு வழங்குவதற்கு பதிலாக போனஸ் பங்குகள் வெளியிடுவது போன்ற வழிகளில் ஒரு நிறுவனமானது செயல்படுத்தும்.
ஒரு நிறுவனமானது டிவிடெண்ட் ஆக வழங்குவதற்கு பதிலாக போனஸ் பங்குகளை வெளியீடு செய்யும்போது டிவிடெண்ட்டுக்கான வரி செலுத்துவது தவிர்க்கப்படுகின்றது.
நிறுவனமானது நல்ல இலாபம் ஈட்டிக் கொண்டு இருக்கும்போது தன்னுடைய இலாபத்தை தன்னுடைய நிறுவனத்திற்குள் நிலையான சொத்துகளுக்காகவும், நடைமுறை மூலதனத்திற்காகவும் மறுமுதலீடு செய்வதற்கான ஒரு சிறந்த வழிமுறையாக இது அமைகின்றது.
சில நிறுவனங்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் இவ்வாறு போனஸ் பங்குகள் வெளியீடு செய்வதால் குறிப்பிட்ட நிறுவனத்தில் முதலீடு செய்தால் தங்களுடைய முதலீட்டின் மதிப்பானது தொடர்ந்து உயர்ந்து கொண்டே இருக்கும் என பொதுமக்களுக்கு குறிப்பிட்ட நிறுவனத்தின் மீது ஒரு நல்ல மதிப்பு தோன்ற வழிவகுக்கின்றது.
நிறுமச்சட்டம் 2013 இன் படி எந்தவொரு நிறுவனமும் தன்னிடம் உள்ள மூலதன ஈவுத் தொகை கணக்கு, மூலதன மீட்பு ஒதுக்கீடு, கட்டற்ற ஒதுக்கீடுகள் (Free Reserves) ஆகியவற்றைக் கொண்டு இவ்வாறான போனஸ் பங்குகளை தன்னுடைய பங்குநர்களுக்கு ஒதுக்கீடு செய்யலாம். ஆனால் அந்த நிறுவனம் டிவிடெண்டுக்கு பதிலாக போனஸ் பங்கினை வெளியீடு செய்யக் கூடாது என வரையறை செய்துள்ளது.
மேலும் நிறுவனமானது இவ்வாறு போனஸ் பங்கினை வெளியீடு செய்வதாக இயக்குநர்களின் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டால் அந்த முடிவில் இருந்து பின்வாங்க முடியாது. ஆயினும், அந்த நிறுவனம், தான் பெற்ற கடனிற்கு வட்டி அல்லது வட்டியும் அசலும் அல்லது அத்தியாவசியமாக செலுத்த வேண்டிய செலவுகள் ஆகியவை நிலுவையில் இருக்கும்போது இவ்வாறான போனஸ் பங்குகளை கண்டிப்பாக வெளியீடு செய்ய முடியாது. தற்போது நடப்பு ஆண்டில் Biocon, BPCL, HPCL, ICICI Bank, L&T, Wipro ஆகியவை, இவ்வாறான போனஸ் பங்குகளை வெளியீடு செய்துள்ள இந்திய நிறுவனங்கள் ஆகும்.
-முனைவர் ச. குப்பன்