இந்தியாவில் LLP என சுருக்கமாக அழைக்கப் பெறும் பொறுப்பு வரையறு க்கப்பட்ட கூட்டாண்மை எனும் கருத்தமைவு 2008 ஆம் ஆண்டு முதல் பொறுப்பு வரையறுக்கப்பட்ட கூட்டாண்மை சட்டம், 2008 (Limited Liability Partnership Act, 2008 ) இன் வாயிலாக அறிமுகப்படுத்தப்பட்டது.
இதில் கூட்டாண்மையின் நெகிழ்வு தன்மையும், கம்பெனிகளின் வரையறுக்கப் பட்டபொறுப்பும் ஒருங்கிணைந்து கிடைக்கி ன்றது. அதனைத் தொடர்ந்து தனியார் கம்பெனிகள் பங்குச் சந்தையில் பட்டியலிட ப்படாத கம்பெனிகள் போன்றவை எல்எல்பி நிறுவனங்கள் ஏராளமாக உருவாகின.
ஆனால் இவ்வாறான எல்எல்பி நிறுவனங்கள் உற்பத்தித் தொழில் தவிர்த்த மீதி 12,000 வகையான வணிகப் பணிகளில் அல்லது சேவைகளில் மட்டுமே ஈடுபட இதுவ ரை அனுமதிக்கப்பட்டு வந்தது. அதாவது எல்எல்பி நிறுவனங்கள் உற்பத்தி துறையில் மட்டும் ஈடுபட முடியாது.
இந்நிலையில் கம்பெனி செகரட்டரி களின் மாமன்றம், எல்எல்பி நிறுவனங்களை உற்பத்தித் துறையிலும் அனுமதிக்க வேண்டும் என கம்பெனிகளின் விவகாரத் துறை அமைச்சகத்திற்கு கோரிக்கை வைத்தது. இதன் அடிப்படையில் இது வரையில் இருந்து வந்த அந்த கட்டுப்பாடு தளர்த்தப்பட்டு விட்டது. கடந்த ஏப்ரல் 17, 2019 முதல் எல்எல்பி நிறுவனங்களும் உற்பத்திதொழில்களில் ஈடுபட பதிவு செய்து கொள்ளலாம் எனும் அனுமதியை வழங்கி உள்ளது.
–வசந்தகுமாரி