1990-களில் டாட் காம் (இணையதள) நிறுவனங்கள் பெருகத் தொடங்கின. தொலைத் தொடர்பு நிறுவனங்கள் கடல டியில் கண்ணாடி இழை (ஃபைபர் ஆப்டிக்) கேபிள் இடுவதற்காக, 20 பில்லியன் டால ருக்கும் அதிகமாக செலவிட நேர்ந்தது. இந்த கண்ணாடி இழைக் கேபிள், இந்தியப் பெருங்கடல், மற்றும் பசிஃபிக் பெருங்கடல் இடையே, நடுத்தரைக் கடல் வழியாக, நியூயார்க் முதல் லண்டன் வரையும், அதற்கு அப்பாலும், முதன் முறையாக அமைக்கப் பட்டது.
இணைய நெரிசல் ஏற்படாமல் தடுக்கவும், தகவல் போக்குவரத்தில் சிக்கல் ஏற்படாமல் இருக்கவும், முன் எச்சரிக்கை நடவடிக்கை யாகவே இது மேற்கொள்ளப்பட்டது. இதனை தகவல் வெடிப்பு என்று குறிப் பிட்டார்கள் சில வல்லுநர்கள். 2000 ஆண்டை நெருங்கும் போது, இந்த அய்யம் ஓய்ந்தது. பின்பு யூடியூப், நெட்ஃபிளிக்ஸ் போன்ற வீடியோ தளங்கள் ஃபேஸ்புக், வாட்சாப் சமூகத் தளங்கள் பெருகின. இவற் றுக்கேற்ப, ஏறக்குறைய 20 ஆண்டுகளுக்குப் பிறகு, இன்னொரு மாபெரும் முதலீடு செய்யப் பட்டது.
2018 இல் மீண்டும் கடலடியில் மாபெரும் கண்ணாடி இழைக் கேபிள்கள் இடப் பட்டன. டெலிஜியாகிரஃபி என்ற டெலிகாம் கன்சல்டன்சியின் துணைத் தலை வர் டிம் ஸ்ட்ரான்ச் இதைப்பற்றி, “தகவல் வெடிப்பு ஏற்படாமல் பாதுகாக்கும் வகை யில் இது இன்னும் வலுவாக இருக்கிறது. ஆனாலும் கடலுக்கடியில் இன்னும் சில மோசமான கேபிள்கள் சென்று கொண்டு இருக்கின்றன” என குறிப்பிட்டார் தற் போது முன்னணியில் உள்ள இரண்டு மாபெரும் நிறுவனங்களான கூகுள் மற்றும் ஃபேஸ்புக்கால், இத்தகைய மாபெரும் தகவல் நெருக்கடி ஏற்படுகிறது.
இணைய நிறுவ னங்கள் 2018 – 2020 களில், ஐந்தில் நான்கு பங்கு முதலீட்டை கேபிள் அமைப்பதில் முதலீடு செய்ய திட்டமிட்டு உள்ளன. டெலிஜியாகிரஃபி நிறுவனத்தின் கூற்றின் படி, ஆண்டுக்கு இத்தகைய நிறுவனங்கள் 20 விழுக்காட்டுக்குக் குறையாமல், கேபிள் அமைப்பதில் தொடர் முதலீடு செய்து வருகின்றன.
“இவர்களில் கடலுக்கடியில் கண்ணாடி இழைக் கேபிள்கள் அமைப் பதில், கூகுள் நிறுவனம் தான் மிகப் பெரிய முதலீட்டாளர்” என்கிறது இந்நிறுவனம்.
லண்டனில் உள்ள வழக்கறிஞரான மைக் கான்ரடி என்பவர், 1999 இல் இருந்து, கடலுக்கு அடியில் கண்ணாடி இழைக் கேபிள்கள் அமைக்கும் பணித் திட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்த டிஜிட்டல் காலத் தில், மைக்ரோசாஃப்ட் மற்றும் அமேசான். காம் ஆகிய நிறுவனங்கள் தொழிலகப் பணிகளை மறுவடிவமைப்பு செய்து வருகின்றன.
தற்போது புதிய இணைய நிறுவனங்கள் எங்கெங்கு கேபிள்கள் பதிக்க சரியான இடம் என்பதை ஆராய்ந்து வருகின்றன. இதற்காக 200 மில்லியன் டாலர் அளவுக்கு, அட்லாண்டிக் இணைப்பு கொடுக்க முனைந்து வருகின்றன. இதற்காக கூட்டு நிறுவனங்களின் அனுமதிக்காக காத்திருக்கத் தேவையில்லை.
“வலை உலகில், கேபிள் அமைப்பதற் கான புவியியல் புள்ளிகள், மக்கள் தொகை யின் அடிப்படையில் கணக்கிடப் படுகின் றன. கடல் பரப்போ அல்லது நிலப் பரப்போ கேபிள் அமைப்பதைப் புறக்க ணிக்க முடியாது. திட்டமிட்டு, கேபிள்கள் கட்டமைக்கப் படுகின்றன” என்கிறார் கூகுள் நிறுவன கேபிள் குழுவின் தலைவர் ஜெய்னி ஸ்டோவெல். குறிப்பாக, சைனாவில் உள்ள புதிய தொழில் முனைவோர்களும் இந்த கேபிள் அமைக்கும் வர்த்தகத்தில் நுழைந்து வருகின் றனர். ஹவாய் டெக்னாலஜிஸ் என்ற நிறுவனம், பிரிட்டிஷ் நிறுவனமான குளோபல் மரைன் சிஸ்டம் என்ற நிறுவனத் துடன் இணைந்து, சைனா அரசின் ஈடுபாட் டுடன், இத்தகைய கேபிள் இணைப்புகளை ஏற்படுத்தி வருகிறது.
ஆனால் இந்த நிறுவனம் 9000 மைல் நீளமுள்ள லைன் உட்பட, முக்கிய பணித் திட்டங்களிலேயே ஈடுபட்டு வருகிறது. இந்த இணைப்பு பிரிட்டன் முதல் தென் ஆஃப்ரிக்கா வரை, 3700 மைல் சுற்றளவுக்கு, கேமரூன் முதல் பிரேசில் வரை இணைப்பு கொடுக்கிறது. இதே வழியில் மேலும் 12 நாடுகளும் இணைக்கப்பட்டு உள்ளன. ஃபேஸ்புக், அமேசான் இணைய சேவை நிறுவனங்கள் இணைந்து, சைனாவுடன் சேர்ந்து, சான்ஃபிரான்சிஸ்கோ முதல் ஹாங்காங் மற்றும் சிங்கப்பூர் வரை இணைப்பு கொடுக்கின்றன. மேலும் தெற்கு ஆஃப்ரிக்காவில் உள்ள சில நிறுவனங்களு டன் இணைந்து, தெற்கு ஆஃப்ரிக்கா, எகிப்து, சவூதி அரேபியா போன்ற நாடு களுக்கு இணைப்பை ஏற்படுத்தி உள்ளன.
தொழில்நுட்ப மேம்பாடு, காலநிலை மாற்றம், அரசியல் தலையீடு போன்றவற்றால் புதிய கேபிள் வழிகளை அமைப்பதில் ஓரளவு சிக்கல்களை ஏற்படுத்தினாலும், குறுக்கு வழியில் (சார்ட் ரூட்) போடப்படும் புதிய இணைப்புகள் தகவல்கள் பகிர்ந்து கொள்ளப்படுவதை, மில்லி நொடி மிச்சப் படுத்தினாலும், கணினித் துணையுடன் நடத்தப்படும் பங்கு வர்த்தகங்களில் பல கோடி ரூபாய் சேமிக்கப்படுகிறது.
மேலும் தகவல்கள் இன்னும் அதி விரைவாக பகிர்ந்து கொள்ளப்படும் போது, ஓட்டுநர் இல்லாத வண்டிகள், விபத்து ஏற்படுவதைத் தவிர்க்க துணைபுரியும் மென் பொருள் போன்றவற்றை வடிவமைக்க துணை செய்கிறது. வேகம் பெரும்பாலான நேரங்களில் பெரிய சிக்கலாக இல்லாத பொழுதிலும், குறைந்தபட்சம் இரண்டு புதிய கேபிள்கள் இடும் போது, தெற்கு ஆப்ரிக்காவின் ஸ்விஸ் கால்வாய் பகுதியில் ஏற்படும் பாட்டில் நெக் சிக்கலைத் தவிர்க்க முடிகிறது. ஒரே இடத்தில் 12 க்கும் மேல் இடப்படும் கேபிள் களை சைபர் தீவிரவாதிகள், சீர்குலைத்து, இணைய நெட்ஒர்க்கைத் தடைசெய்ய முடியும். ஆனால், பல்வேறு இடங்களிலும் பரவலாக இடப்படும் போது, அவர்களால் பெரிதாக பாதிப்பு இருக்காது.
“ஆறு புதிய கேபிள் வழிகள் அமெரிக்கா முதல் பிரேசில் வரை இப்போது நிறைவ டைந்துள்ளது. இது இன்னும் அதிகரித்து ஆறு வழிகள், 12 வழிகளாக மாறும்” என நம்பிக்கை தெரிவிக்கின்றன சிலிக்கான் வேலியில் அமைந்துள்ள பன்னாட்டு நிறுவனங்கள்
மேலும் பெரும்பாலான ஆர்க்டிக் பணித் திட்டங்கள், ஃபின்னிஸ் அரசுக்குச் சொந்தமான நிறுவனமான சினியா குரூப் ஒய் நிறுவனத்தால் மேற்கொள்ளப்படுகிறது. இந்த திட்டத்தின் படி, 11 ஆயிரம் மைல் அளவுக்கு 600 மில்லியன் டாலர் மதிப்புள்ள கேபிள்கள் இடப்பட்டுள்ளன. ஆனால் குளிர்காலங்களில் ஆர்க்டிக் பரப்பு பனியாக உறையும் போது, கடலடிக் கேபிள்கள் பாதிக்கப்பட்டால், அவற்றைப் பேணுவதும், செப்பனிடுவதும் கடினம் என்று சொல்லப்படுகிறது. இப்படி செப்ப னிடும் பணிக்கு மாதக் கணக்கில் எடுக்கும் என்றும் கருதப்படுகிறது. ஆனால் அந்த நிறுவனமோ, கேபிளின் பாதுகாப்பு ஏற்பாட் டில் நாங்கள் எந்தக் குறையும் வைக்கவில்லை என்று தெரிவிக்கிறது.
20 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப் பட்ட கடலடிக் கேபிள்களைவிட, தற்போது அமைக்கப்படும் கேபிள்களில் பாதுகாப்பு ரிஸ்க் குறைவு, பாதுகாப்பு அம்சங்கள் அதிகம், தொழில்நுட்ப ஆற்றலும் அதிகம். இதனால் கடலுக்கடியில் கேபிள் அமைக்க, மேலும் பல நிறுவனங்கள் முதலீடு செய்ய முன்வந்துள்ளன.
-புதுமைத் திலகம்