Latest Posts

அனைத்து இந்து ஜாதிகளுக்கும் அர்ச்சகர் ஆகும் உரிமை! வெற்றியை நோக்கி சட்டப் போராட்டம்!

- Advertisement -

“அனைத்து ஜாதியினர் அர்ச்சகர் திட்டம் இந்தியா காணாத மாபெரும் புரட்சித் திட்டம்” என்று அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம், தமிழ்நாடு அரசு நியமன அர்ச்சகர்கள் சங்கம் ஆகியவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டுத் தெரிவித்துள்ளன.

இது குறித்து அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கத்தலைவர் வா.ரங்கநாதன் தமது அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அனைத்து ஜாதியினரும் அர்ச்சராகும் திட்டத்தில் ஒரு மாபெரும் புரட்சியைத் திராவிட முன்னேற்றக் கழக அரசு நிகழ்த்தியுள்ளது. 1969இல் கருவறைத் தீண்டாமையை ஒழிக்க தந்தை பெரியார் போராட்டம் அறிவித்ததைத் தொடர்ந்து,பரம்பரை வழி அர்ச்சகர் முறையை ஒழித்து கலைஞர் சட்டம் இயற்றினார். அதனை எதிர்த்து சேஷம்மாள் உள்ளிட்ட பார்ப்பனர்கள் உச்ச நீதிமன்றம் சென்றனர். 1972இல் சேஷம்மாள் தீர்ப்பு வந்தாலும், ஆகமத்தை மீறக்கூடாது என்றும் தீர்ப்பில் சொன்னதால், அர்ச்சகர் நியமனம் செய்ய இயலவில்லை.
கலைஞர் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளியைத் தொடங்கியதால் தி.மு. கழகம் 2006- ஆம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் 23.5.2006 அன்று அரசாணை ஒன்று பிறப்பிக்கப்பட்டது. அதன்படி தகுதியும் திறமையும் பெற்ற அனைத்து இந்துக்களும் ஜாதி பாகுபாடின்றி திருக்கோவில்களில் அர்ச்சகர்களாக ஆவதற்கு வழிவகை செய்யப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் ஆதிதிராவிட வகுப்பைச் சேர்ந்த 34 மாணவர்கள் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த 76 மாணவர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த 55 மாணவர்கள், இதர வகுப்பைச் சேர்ந்த 42 மாணவர்கள் மொத்தம் 207 மாணவர்கள் பயிற்சியை முடித்து சான்றிதழ் பெற்றுள்ளனர்.

மாணவர்கள் ஆகமம், வேதம், மந்திரம் கற்று தீட்சை பெற்றனர். மீண்டும் உச்ச நீதிமன்றம் சென்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சிவாச்சாரியார்கள் தடை வாங்கினர். 2009ல் அர்ச்சகர் பயிற்சி முடித்த பிறகு, அனைத்து அரசியல் கட்சிகளையும், இந்து மத அமைப்புகள் சார்ந்த கட்சிகளையும் சந்தித்து எங்களின் சிக்கல்களைக் கூறினோம்.
எங்களுடைய வழக்குக்காக தெருமுனைகளிலும், பேருந்து நிலையங்களிலும், கடை வீதிகளிலும், சாலைகளிலும், அனைத்து இடங்களிலும் வசூல் செய்தும், கருவறையில் தீண்டாமையை ஒழிக்க வேண்டும் என்பதற்கான பட்டினிப் போராட்டம், சாலை மறியல், கருவறையில் நுழையும் போராட்டம் போன்ற அனைத்துப் போராட்டங்களில் ஈடுபட்டும், தற்போது வரை எங்களுக்கு அனைவரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
பல இடையூறுகளைக் கடந்து, ஆகமக் கோயில்களில் முறையாகத் தமிழ் முறைப்படி, சமஸ்கிருத, வேத மந்திரங்களும் முறைப்படி கற்று தீட்சை பெற்றோம். இன்று ஆகமக் கோயில்களில் பூஜை செய்வதற்கான தகுதியோடு நாங்கள் இருக்கிறோம்.

2015-ஆம் ஆண்டு தீர்ப்பு வந்தது. அதிமுக ஆட்சியில் அர்ச்சகர் நியமனம் நடைபெறவில்லை. 2021-இல் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற மு.க. ஸ்டாலின், ஆகஸ்ட் 14 அன்று பதவியேற்ற நூறாவது நாளில், அனைத்து இந்துக்களையும் ஆகமக் கோயில்கள் உள்ளிட்ட பல தமிழ்நாட்டுக் கோயில்களில் அர்ச்சகர்களாக நியமித்தார். பெண் ஓதுவாரையும் நியமித்தார். இதனை எதிர்த்தும், அர்ச்சகர் விதிகளை எதிர்த்தும் 30-க்கும் மேலான வழக்குகள் தொடுக்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து, 26.03.2022 முதல் இன்று வரை தமிழ்நாடு முதலமைச்சரும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும் இதற்குத் தீர்வு காணும் வகையில், உடனடியாக நடவடிக்கை எடுத்ததால், தற்போது பணி நியமனம் செய்யப்பட்ட அனைத்து அர்ச்சகர் பயிற்சிப் பள்ளி மாணவர்களும் திருக்கோயில்களில் பணிபுரிந்து வருகின்றனர்.

உச்சநீதிமன்றத்திலும், உயர்நீதிமன்றங்களிலும் 50க்கும் மேற்பட்ட வழக்குகள் மாதந்தோறும் வந்த வண்ணம் உள்ளன. கருவறையில் தீண்டாமையை உறுதிப்படுத்த வேண்டும் என்பதற்காக சில அமைப்புகள், பல எதிர்ப்புகளும் தடைகளும் செய்து வருகின்றனர். இதுதான் ஸநாதனம். அந்த வழக்குகள் இந்து சமய அறநிலையத்துறையால் முறியடிக்கப்பட்ட நிலையில், திருச்சி வயலூர் முருகன் கோவில் அர்ச்சகர் நியமனத்தை எதிர்த்து நீதிமன்றத்தில்வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் குறிப்பிட்ட மத உட்பிரிவினரைத் தவிர மற்றவர்களை ஆகமக் கோயில்களில் அர்ச்சகராக நியமிக்க முடியாது எனச் சொல்லி அர்ச்சகர் நியமனத்தை ரத்து செய்தார். அதற்கு எதிராக இந்து சமய அறநிலைத்துறை சார்பில் மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட்டு தடையாணை பெறப்பட்டுள்ளது.

இச்சூழலில் மீண்டும் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளுக்கு உயிர் கொடுக்கப்பட்டு 94 பேர், குறிப்பாக மூன்று மாணவிகள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு ஓராண்டு அர்ச்சகர் படிப்பை, சென்ற வாரம் முடித்து சான்றிதழ்கள் பெற்றுள்ளனர். தற்போது நடப்பு கல்வியாண்டு 2023 – 2024 ஆம் ஆண்டில் 111 மாணவர்கள் அர்ச்சகர் பயிற்சி பள்ளியில் பயின்று வருகின்றனர். இவற்றில் 11 மாணவிகள் சிறீரங்கம், அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் பயின்று வருகின்றனர்.

அர்ச்சகர் நியமனங்களி லும், அர்ச்சகர் பயிற்சிகளிலும் பாலின சமத்துவத்தை உருவாக்க “கரு சுமக்கும் பெண்களும் இனி கருவறைக்குச் செல்லலாம்” எனத் தமிழ்நாட்டு பெண்களைப் போற்றும் வகையில், திருக்கோயில்களில் பாலின பாகுபாடின்றி முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. அர்ச்சகர் பயிற்சிப் பள்ளி மற்றும் அர்ச்சகர் பணி நியமனத்திற்குத் தொடர்ச்சியாக தமிழ்நாடு அரசு பல நல்ல திட்டங்களை முன்னெடுத்து வருகிறது.

அனைத்து இந்துக்கள் அர்ச்சகர் போராட்டத்தில், கருவறை தீண்டாமைக்கு எதிரான போராட்டத்தில், இதுவரையிலான கோரிக்கை என்பது, அனைத்து இந்துக்களும், அதாவது அனைத்து ஆண்களும் அர்ச்சகராக வேண்டும் என்பதுதான். தற்போது நிகழ்ந்துள்ள மாபெரும் புரட்சி என்னவென்றால் அர்ச்சகர் நியமனத்தில் பாலின பேதமும் தகர்க்கப்பட்டுள்ளது என்பதே. 3 மாணவிகள் மாபெரும் கனவோடு அர்ச்சகர் படிப்பை முடித்துள்ளனர்.

அடுத்து அர்ச்சகர்களாக நியமனம் பெறக் காத்திருக்கிறார்கள். பெண்கள் அர்ச்சகராக நியமிக்கப்பட்டால் இந்திய வரலாற்றில், ஏன் உலக வரலாற்றிலேயே மாபெரும் சமத்துவப் புரட்சியாக நிலைத்து நிற்கும். ஆனால் ஆலயங்களில் சமத்துவத்தை விரும்பாத, ஏற்கனவே கோயில்களைத் தங்களின் சொந்த சொத்தாகக் கருதும் பார்ப்பன அர்ச்சகர்கள், இந்த மாபெரும் சமத்துவப் புரட்சியை ஏற்கவில்லை. கோயில்கள் மீதான தங்கள் அதிகாரம் பறிபோகும் எனக் கருதிப் பதறி, உடனே மதுரை உயர்நீதி மன்றத்திலும், உச்சநீதி மன்றத்திலும், அர்ச்சகர் படிப்பு முடித்துள்ளோருக்கு கோயில்களில் பயிற்சி அளிக்கக் கூடாது என்று வழக்குகள் கொடுத்துள்ளனர்.

இந்த வழக்குகளை முறியடிக்க இந்து சமய அறநிலையத்துறை தீவிரமாக முயற்சித்து வருகிறது. எல்லோரும் இந்துக்கள், எல்லா இந்துக்களும் சமம், ஸநாதன தர்மம் எல்லா இந்துக்களையும் சமமாக கருதுகிறது என்றெல்லாம் பேசும் ஆர்எஸ்எஸ், பாஜக, விசுவ இந்து பரிசத், சங் பரிவார் அமைப்பினர், குறிப்பாக மோடி, அமித்ஷா, அண்ணாமலை போன்றோர் ஆலயங்களில் அனைத்து இந்துக்களும், குறிப்பாக இந்து பெண்களும் அர்ச்சகராவதற்கு என்றாவது பேசியுள்ளார்களா?

தமிழ்நாட்டில் மதுரை, திருவரங்கம், திருச்செந்தூர், பழனி, திருவண்ணாமலை உள்ளிட்ட பெரிய கோயில்களில் இன்று வரை தமிழர்கள், குறிப்பாகக் கவுண்டர், தேவர், வன்னியர், செட்டியார், நாடார், கோனார், தேவேந்திரர், ஆதிதிராவிடர், அருந்ததியர் உள்ளிட்ட எவரும் அர்ச்சகராக முடியவில்லை என்ற நிலை, சுதந்திரம் பெற்று அரசியல் சட்டம் வந்து 70 ஆண்டுகள் ஆன பின்பும் நீடிப்பது அவமானகரமானது.

இந்து பெரும்பான்மை மக்களின் நலனுக்காக இட ஒதுக்கீடு முதல் கோயில் அர்ச்சகர் வரையிலான திட்டங்களைச் செயல்படுத்தி வருவது திராவிட இயக்கங்கள் தான். குறிப்பாகத் திராவிட முன்னேற்றக் கழகம் தான்.

ஆலயங்களில், ஜாதி, பாலின சமத்துவத்திற்கு அரசியல் சட்டம் வலியுறுத்தும் சமத்துவ சமுதாயத்திற்காக, குறிப்பாக அரசியல் சட்டத்தில் பிரிவு 25 2(தீ)யின் அடிப்படையில் இந்து சமய மத நிறுவனங்களை எந்த வேறுபாடும் இன்றி அனைத்து மக்களுக்கும் திறந்து வைக்க வேண்டும் என்ற அம்பேத்கரின் கோட்பாட்டை நடைமுறைப்படுத்தும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபுவுக்கும் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்களுக்கும் வாழ்த்துகளையும் நன்றியையும் உரித்தாக்குகிறோம்.’

-இவ்வாறு அவர் தமது அறிக்கையில் கூறியுள்ளார்.

தேவதாசி, உடன்கட்டை, பால்ய விவாகம் வரிசையில் பட்டனப்பிரவேசம்!” - அர்ச்சகர்  பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் குமுறல்! | nakkheeran

- Advertisement -

Latest Posts

Don't Miss

[tdn_block_newsletter_subscribe title_text="Stay in touch" description="U3Vic2NyaWJlJTIwdG8lMjBvdXIlMjBsYXRlc3QlMjBuZXdz" input_placeholder="Email address" tds_newsletter2-image="5" tds_newsletter2-image_bg_color="#c3ecff" tds_newsletter3-input_bar_display="row" tds_newsletter4-image="6" tds_newsletter4-image_bg_color="#fffbcf" tds_newsletter4-btn_bg_color="#f3b700" tds_newsletter4-check_accent="#f3b700" tds_newsletter5-tdicon="tdc-font-fa tdc-font-fa-envelope-o" tds_newsletter5-btn_bg_color="#000000" tds_newsletter5-btn_bg_color_hover="#4db2ec" tds_newsletter5-check_accent="#000000" tds_newsletter6-input_bar_display="row" tds_newsletter6-btn_bg_color="#da1414" tds_newsletter6-check_accent="#da1414" tds_newsletter7-image="7" tds_newsletter7-btn_bg_color="#1c69ad" tds_newsletter7-check_accent="#1c69ad" tds_newsletter7-f_title_font_size="20" tds_newsletter7-f_title_font_line_height="28px" tds_newsletter8-input_bar_display="row" tds_newsletter8-btn_bg_color="#00649e" tds_newsletter8-btn_bg_color_hover="#21709e" tds_newsletter8-check_accent="#00649e" embedded_form_code="JTNDIS0tJTIwQmVnaW4lMjBNYWlsY2hpbXAlMjBTaWdudXAlMjBGb3JtJTIwLS0lM0UlMEElM0NsaW5rJTIwaHJlZiUzRCUyMiUyRiUyRmNkbi1pbWFnZXMubWFpbGNoaW1wLmNvbSUyRmVtYmVkY29kZSUyRmNsYXNzaWMtMTBfNy5jc3MlMjIlMjByZWwlM0QlMjJzdHlsZXNoZWV0JTIyJTIwdHlwZSUzRCUyMnRleHQlMkZjc3MlMjIlM0UlMEElM0NzdHlsZSUyMHR5cGUlM0QlMjJ0ZXh0JTJGY3NzJTIyJTNFJTBBJTA5JTIzbWNfZW1iZWRfc2lnbnVwJTdCYmFja2dyb3VuZCUzQSUyM2ZmZiUzQiUyMGNsZWFyJTNBbGVmdCUzQiUyMGZvbnQlM0ExNHB4JTIwSGVsdmV0aWNhJTJDQXJpYWwlMkNzYW5zLXNlcmlmJTNCJTIwJTdEJTBBJTA5JTJGKiUyMEFkZCUyMHlvdXIlMjBvd24lMjBNYWlsY2hpbXAlMjBmb3JtJTIwc3R5bGUlMjBvdmVycmlkZXMlMjBpbiUyMHlvdXIlMjBzaXRlJTIwc3R5bGVzaGVldCUyMG9yJTIwaW4lMjB0aGlzJTIwc3R5bGUlMjBibG9jay4lMEElMDklMjAlMjAlMjBXZSUyMHJlY29tbWVuZCUyMG1vdmluZyUyMHRoaXMlMjBibG9jayUyMGFuZCUyMHRoZSUyMHByZWNlZGluZyUyMENTUyUyMGxpbmslMjB0byUyMHRoZSUyMEhFQUQlMjBvZiUyMHlvdXIlMjBIVE1MJTIwZmlsZS4lMjAqJTJGJTBBJTNDJTJGc3R5bGUlM0UlMEElM0NkaXYlMjBpZCUzRCUyMm1jX2VtYmVkX3NpZ251cCUyMiUzRSUwQSUzQ2Zvcm0lMjBhY3Rpb24lM0QlMjJodHRwcyUzQSUyRiUyRlZhbGFyLnVzMi5saXN0LW1hbmFnZS5jb20lMkZzdWJzY3JpYmUlMkZwb3N0JTNGdSUzRGJiNTM2ZDNlMDlmMDk5MGYzOTNkYTAwYzElMjZhbXAlM0JpZCUzRGZiZDdiNDU3MzYlMjIlMjBtZXRob2QlM0QlMjJwb3N0JTIyJTIwaWQlM0QlMjJtYy1lbWJlZGRlZC1zdWJzY3JpYmUtZm9ybSUyMiUyMG5hbWUlM0QlMjJtYy1lbWJlZGRlZC1zdWJzY3JpYmUtZm9ybSUyMiUyMGNsYXNzJTNEJTIydmFsaWRhdGUlMjIlMjB0YXJnZXQlM0QlMjJfYmxhbmslMjIlMjBub3ZhbGlkYXRlJTNFJTBBJTIwJTIwJTIwJTIwJTNDZGl2JTIwaWQlM0QlMjJtY19lbWJlZF9zaWdudXBfc2Nyb2xsJTIyJTNFJTBBJTA5JTNDaDIlM0VTdWJzY3JpYmUlM0MlMkZoMiUzRSUwQSUzQ2RpdiUyMGNsYXNzJTNEJTIyaW5kaWNhdGVzLXJlcXVpcmVkJTIyJTNFJTNDc3BhbiUyMGNsYXNzJTNEJTIyYXN0ZXJpc2slMjIlM0UqJTNDJTJGc3BhbiUzRSUyMGluZGljYXRlcyUyMHJlcXVpcmVkJTNDJTJGZGl2JTNFJTBBJTNDZGl2JTIwY2xhc3MlM0QlMjJtYy1maWVsZC1ncm91cCUyMiUzRSUwQSUwOSUzQ2xhYmVsJTIwZm9yJTNEJTIybWNlLUVNQUlMJTIyJTNFRW1haWwlMjBBZGRyZXNzJTIwJTIwJTNDc3BhbiUyMGNsYXNzJTNEJTIyYXN0ZXJpc2slMjIlM0UqJTNDJTJGc3BhbiUzRSUwQSUzQyUyRmxhYmVsJTNFJTBBJTA5JTNDaW5wdXQlMjB0eXBlJTNEJTIyZW1haWwlMjIlMjB2YWx1ZSUzRCUyMiUyMiUyMG5hbWUlM0QlMjJFTUFJTCUyMiUyMGNsYXNzJTNEJTIycmVxdWlyZWQlMjBlbWFpbCUyMiUyMGlkJTNEJTIybWNlLUVNQUlMJTIyJTNFJTBBJTNDJTJGZGl2JTNFJTBBJTA5JTNDZGl2JTIwaWQlM0QlMjJtY2UtcmVzcG9uc2VzJTIyJTIwY2xhc3MlM0QlMjJjbGVhciUyMiUzRSUwQSUwOSUwOSUzQ2RpdiUyMGNsYXNzJTNEJTIycmVzcG9uc2UlMjIlMjBpZCUzRCUyMm1jZS1lcnJvci1yZXNwb25zZSUyMiUyMHN0eWxlJTNEJTIyZGlzcGxheSUzQW5vbmUlMjIlM0UlM0MlMkZkaXYlM0UlMEElMDklMDklM0NkaXYlMjBjbGFzcyUzRCUyMnJlc3BvbnNlJTIyJTIwaWQlM0QlMjJtY2Utc3VjY2Vzcy1yZXNwb25zZSUyMiUyMHN0eWxlJTNEJTIyZGlzcGxheSUzQW5vbmUlMjIlM0UlM0MlMkZkaXYlM0UlMEElMDklM0MlMkZkaXYlM0UlMjAlMjAlMjAlMjAlM0MhLS0lMjByZWFsJTIwcGVvcGxlJTIwc2hvdWxkJTIwbm90JTIwZmlsbCUyMHRoaXMlMjBpbiUyMGFuZCUyMGV4cGVjdCUyMGdvb2QlMjB0aGluZ3MlMjAtJTIwZG8lMjBub3QlMjByZW1vdmUlMjB0aGlzJTIwb3IlMjByaXNrJTIwZm9ybSUyMGJvdCUyMHNpZ251cHMtLSUzRSUwQSUyMCUyMCUyMCUyMCUzQ2RpdiUyMHN0eWxlJTNEJTIycG9zaXRpb24lM0ElMjBhYnNvbHV0ZSUzQiUyMGxlZnQlM0ElMjAtNTAwMHB4JTNCJTIyJTIwYXJpYS1oaWRkZW4lM0QlMjJ0cnVlJTIyJTNFJTNDaW5wdXQlMjB0eXBlJTNEJTIydGV4dCUyMiUyMG5hbWUlM0QlMjJiX2JiNTM2ZDNlMDlmMDk5MGYzOTNkYTAwYzFfZmJkN2I0NTczNiUyMiUyMHRhYmluZGV4JTNEJTIyLTElMjIlMjB2YWx1ZSUzRCUyMiUyMiUzRSUzQyUyRmRpdiUzRSUwQSUyMCUyMCUyMCUyMCUzQ2RpdiUyMGNsYXNzJTNEJTIyY2xlYXIlMjIlM0UlM0NpbnB1dCUyMHR5cGUlM0QlMjJzdWJtaXQlMjIlMjB2YWx1ZSUzRCUyMlN1YnNjcmliZSUyMiUyMG5hbWUlM0QlMjJzdWJzY3JpYmUlMjIlMjBpZCUzRCUyMm1jLWVtYmVkZGVkLXN1YnNjcmliZSUyMiUyMGNsYXNzJTNEJTIyYnV0dG9uJTIyJTNFJTNDJTJGZGl2JTNFJTBBJTIwJTIwJTIwJTIwJTNDJTJGZGl2JTNFJTBBJTNDJTJGZm9ybSUzRSUwQSUzQyUyRmRpdiUzRSUwQSUzQ3NjcmlwdCUyMHR5cGUlM0QndGV4dCUyRmphdmFzY3JpcHQnJTIwc3JjJTNEJyUyRiUyRnMzLmFtYXpvbmF3cy5jb20lMkZkb3dubG9hZHMubWFpbGNoaW1wLmNvbSUyRmpzJTJGbWMtdmFsaWRhdGUuanMnJTNFJTNDJTJGc2NyaXB0JTNFJTNDc2NyaXB0JTIwdHlwZSUzRCd0ZXh0JTJGamF2YXNjcmlwdCclM0UoZnVuY3Rpb24oJTI0KSUyMCU3QndpbmRvdy5mbmFtZXMlMjAlM0QlMjBuZXclMjBBcnJheSgpJTNCJTIwd2luZG93LmZ0eXBlcyUyMCUzRCUyMG5ldyUyMEFycmF5KCklM0JmbmFtZXMlNUIwJTVEJTNEJ0VNQUlMJyUzQmZ0eXBlcyU1QjAlNUQlM0QnZW1haWwnJTNCZm5hbWVzJTVCMSU1RCUzRCdGTkFNRSclM0JmdHlwZXMlNUIxJTVEJTNEJ3RleHQnJTNCZm5hbWVzJTVCMiU1RCUzRCdMTkFNRSclM0JmdHlwZXMlNUIyJTVEJTNEJ3RleHQnJTNCZm5hbWVzJTVCMyU1RCUzRCdBRERSRVNTJyUzQmZ0eXBlcyU1QjMlNUQlM0QnYWRkcmVzcyclM0JmbmFtZXMlNUI0JTVEJTNEJ1BIT05FJyUzQmZ0eXBlcyU1QjQlNUQlM0QncGhvbmUnJTNCZm5hbWVzJTVCNSU1RCUzRCdCSVJUSERBWSclM0JmdHlwZXMlNUI1JTVEJTNEJ2JpcnRoZGF5JyUzQiU3RChqUXVlcnkpKSUzQnZhciUyMCUyNG1jaiUyMCUzRCUyMGpRdWVyeS5ub0NvbmZsaWN0KHRydWUpJTNCJTNDJTJGc2NyaXB0JTNFJTBBJTNDIS0tRW5kJTIwbWNfZW1iZWRfc2lnbnVwLS0lM0U=" descr_space="eyJhbGwiOiIxNSIsImxhbmRzY2FwZSI6IjE1In0=" tds_newsletter="tds_newsletter3" tds_newsletter3-all_border_width="0" btn_text="Sign up" tds_newsletter3-btn_bg_color="#ea1717" tds_newsletter3-btn_bg_color_hover="#000000" tds_newsletter3-btn_border_size="0" tdc_css="eyJhbGwiOnsibWFyZ2luLWJvdHRvbSI6IjAiLCJiYWNrZ3JvdW5kLWNvbG9yIjoiI2E3ZTBlNSIsImRpc3BsYXkiOiIifSwicG9ydHJhaXQiOnsiZGlzcGxheSI6IiJ9LCJwb3J0cmFpdF9tYXhfd2lkdGgiOjEwMTgsInBvcnRyYWl0X21pbl93aWR0aCI6NzY4fQ==" tds_newsletter3-input_border_size="0" tds_newsletter3-f_title_font_family="445" tds_newsletter3-f_title_font_transform="uppercase" tds_newsletter3-f_descr_font_family="394" tds_newsletter3-f_descr_font_size="eyJhbGwiOiIxMiIsInBvcnRyYWl0IjoiMTEifQ==" tds_newsletter3-f_descr_font_line_height="eyJhbGwiOiIxLjYiLCJwb3J0cmFpdCI6IjEuNCJ9" tds_newsletter3-title_color="#000000" tds_newsletter3-description_color="#000000" tds_newsletter3-f_title_font_weight="600" tds_newsletter3-f_title_font_size="eyJhbGwiOiIyMCIsImxhbmRzY2FwZSI6IjE4IiwicG9ydHJhaXQiOiIxNiJ9" tds_newsletter3-f_input_font_family="394" tds_newsletter3-f_btn_font_family="" tds_newsletter3-f_btn_font_transform="uppercase" tds_newsletter3-f_title_font_line_height="1" title_space="eyJsYW5kc2NhcGUiOiIxMCJ9"]