Latest Posts

தமிழ்நாட்டின் வளர்ச்சியின் பின்னால் உள்ள சிட்கோ தொழிற்பேட்டைகள்!

- Advertisement -

வெற்றியின் வெளிச்சங்கள்

அந்த அதிகாலை மூன்றரை மணிக்கெல்லாம் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் பரபரப்பாக காணப்பட்டது. ஒளிர்ந்து கொண்டிருந்த கோயம்பேடு வெளி வளாகச் சாலையில் ஓரம் கட்டி நின்ற பேருந்தில் இருந்து நானும், எனது சென்னை நண்பரும் கீழே இறங்கினோம். நாங்கள் ஏறிய ஆட்டோ அம்பத்தூர் எஸ்டேட்டை நோக்கி மேற்காக பறந்து செல்லத் தொடங்கியது.

சாலை எங்கும் வெறிச் சோடி இருந்தாலும் வெளிச்சம் மட்டும் குறையவேயில்லை. முப்பது அடிக்கு ஒரு மின் கம்பம் வீதம் துரத்திக் கொண்டே வந்து, தனது வெளிச்ச ரேகைகளை வழியெங்கும் விசிறியடித்துக் கொண்டிருந்ததது. “அட..டா! எத்தனை வெளிச்சம்? என சற்று வாய் விட்டே மகிழ்ந்த என்னை அப்படியே ஏற- இறங்கப் பார்த்த என் சென்னை நண்பர், சற்று ரிலாக்சாக பேசத் தொடங்கினார்.

“மும்பய் நகரம் பெற்றிருக்கும் அதே 24 மணி நேர சுறுசுறுப்பை நமது சென்னை மாநகரமும் இன்றைக்குப் பெற்றுள்ளது. இது ஒரு மாநகரத்தின் வளர்ச்சி. ஏன் ? இது நமது தமிழ் கூட்டத்தின் வளர்ச்சி”- என சற்று உணர்ச்சி வசப்பட்ட நிலையில் பேசிக் கொண்டே போனார். அவரது பேச்சு அப்படியே படிப்படியாக முன்னேறிச் சென்று பல கிளைகளாகப் பிரிந்தது.

ஆம் நண்பர்களே….!

இன்றைக்கு கொட்டிக் கிடக்கும் வெளிச்சம் என்பது, வெறும் விளக்கு வெளிச்சம் மட்டுமல்ல. மாறாக, இந்த வெளிச்சம், தொலைநோக்குப் பார்வை கொண்ட திராவிடத்தின் வெளிச்சம். தன்னைத் தானே வடிவமைத்துக் கொண்ட தன்னிகரற்ற வெளிச்சம்.

சென்னை – திருபெரும்புதூர் என்றாலே, அங்கு நிறுவப்பட்டு உள்ள “செயின்ட் கோபைன்”- என்ற தென் கொரிய நாட்டு கண்ணாடித் தொழிற்சாலை நினைவுக்கு வரும். இதற்குப் பின்பு, அதே திருபெரும்புதூருக்கு அருகில் இருங்காட்டுக்கோட்டையில் கொரியன் நாட்டு “ஹூண்டாய்”- கார் கம்பெனி. இது 1996- ஆம் ஆண்டில் சென்னைக்கு வந்த பின்பு, இந்த மண்ணில் நடந்த மிகப் பெரிய ஆட்டோ மொபைல் – தொழிற் புரட்சி வியப்பை உருவாக்கிய ஒன்று ஆகும்.
இந்த ஒரே ஒரு ஆட்டோ மொபைல் நிறுவனம் இங்கே வந்த பிறகு அதனைச் சார்ந்து சுமார் 400 துணை நிறுவனங்கள், ஹூண்டாய் மோட்டார்சுக்குத் தேவையான உதிரி பாகங்களை தயாரிக்கத் தொடங்கி விட்டன.

ஹூனண்டாய் மோட்டார்ஸ் பத்துக்கும் மேற்பட்ட கார் வகைகளை இங்கே தயாரித்து உலகின் 87 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகின்றது. உற்பத்தியை ஆரம்பித்த முதல் பத்து ஆண்டுகளில் பத்து லட்சம் கார்களை தயாரித்த நிறுவனம், இன்றைக்கு 31 நொடிகளுக்கு ஒரு காரை தயாரித்து வருகிறது.

இத்தனை விரைவான மாற்றங்கள் எங்கிருந்து தொடங்கியது ……?

அன்றைய தி.மு.க. அரசு தனது தொழில் மற்றும் வர்த்தகம் சார்ந்த அனுபவங்களை வைத்தும், தமிழ் நாட்டின் வலிமையான உள் கட்டமைப்பு வசதிகளை முன் வைத்தும் ஒரே ஒரு கொரியன் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டது. அந்த நிறுவனம் உள்ளே வந்த நேரத்தில் நிலவிய சர்வதேச சந்தைப் பெருக்கத்தால், அதன் உற்பத்தி முழு வீச்சினை எட்டியது. இதனால், வேலை வாய்ப்புகள் பல்கிப் பெருகியதுடன், துணைத் தொழில்களும் வேர் பிடித்துக் கொண்டன.
இது மிகப் பெரிய பொருளாதார சுழற்சியையும், நம் தேசத்திற்கு கணிசமான அளவுக்கு அந்நியச் செலாவணியையும் பெருக்கின. அத்துடன் பிற போட்டி நிறுவனங்களும் தானாகவே உள்ளே வந்தன.

அப்புறம் என்ன ?

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் முதல் இடத்தில் இருந்த மராட்டிய மாநிலத்தை கீழே இறக்கி விட்டு, அந்த முதல் இடத்தை தமிழ்நாடு கைப்பற்றிக் கொண்டது.

மாறி வரும் சர்வ தேச சந்தைகளின் போக்குகள். அதற்கு பொருத்தமான முடிவுகளை எடுக்கும் மாநில அரசு. அந்த முடிவுகளை ஆதரிக்கும் ஒன்றிய அரசு. வெளி நாட்டு முதலீட்டாளர்களை ஈர்க்கும் அகச் சூழல்கள்- என இந்த அத்தனை காரணிகளையும் “திராவிட மாடல்”- என்ற வெற்றிச் சூத்திரம் ஒரே நேர் கோட்டில் கொண்டு வந்து நிறுத்தி வைத்தது.

என் மனதிற்குள் இந்த செய்திகள் ஓடிக் கொண்டிருக்கும் போதே, நாங்கள் பயணித்து வந்த ஆட்டோ தனது இலக்கை வந்தடைந்திருந்தது. கீழே இறங்கிய என்னை, எதிரே இருந்த அடுக்கு மாடிக் குடியிருப்பு அன்புடன் வரவேற்றது.

“எடிட்டர் சார்!. இது தான் நம்ம அலுவலகம் மற்றும் வீடு எல்லாம். உங்கள் களப்பணிகள் முடியும் வரைக்கும் தாங்கள் இங்கே தங்கிக் கொள்ளலாம். இதில் தடையேதுமில்லை”- என கூறிய நம் சென்னை நண்பர், கீழ் தளத்தில் காத்திருந்த லிப்ட் ஐ நோக்கி நடந்தார். நானும் அவரைப் பின் தொடர்ந்து சென்றேன்.
வந்த வேகத்தில் அப்படியே குளித்து ரெடியாகி இன்றைய களப் பணிக்கு தயாரான என்னிடம் நண்பர் தன்னுடைய பைக் சாவியையும், பெட்ரோ கார்டையும் என் கையில் திணித்து விட்டு, புறப்பட்டார்.

அதே வேகத்தில் லிப்ட்டில் ஏறி கீழிறங்கி வந்து பார்க்கிங்கில் உள்ள பைக்கை எடுத்து கொண்டு அடுக்கு மாடிக் குடியிருப்பின் இரும்பு கேட்டைக் கடந்து வெளியேறி முதன்மைச் சாலையை வந்தடைந்தேன்.

புத்துணர்ச்சியோடு விரைந்து கொண்டிருக்கும் சென்னை வாசிகளை மனதிற்குள் ரசித்தபடியே அம்பத்தூர் தொழில் பேட்டை என்ற மிகப் பெரிய பெயர் பலகையின் கீழே வந்து நின்றேன். அந்தப் பலகையில் எழுதப்பட்டிருக்கும் தகவல்களை எல்லாம் வரிக்கு வரி படித்தேன். 1950- களின் பிற் பகுதியில் போடப்பட்ட இரண்டாவது ஐந்தாண்டு திட்டத்தின்படி, இந்தியாவெங்கும் பல்வேறு வகையான தொழில் பேட்டைகள் தொடங்கப்பட்ட போது, தமிழ்நாட்டுக்கு முதலில் கிண்டி தொழிற் பேட்டையும் பிறகு அம்பத்தூர் தொழிற் பேட்டையும் கிடைத்தன.

அம்பத்தூர் எஸ்டேட் -டூ – வில்லிவாக்கம் சிட்கோ நகர் – ஒரு அரைமணி ஓட்டம். தொழிற்பேட்டையின் பார்க்கிங் பகுதியில் பைக்கை நிறுத்தி விட்டு பொறுப்பு அதிகாரியின் அலுவலக அறைக்குள் சென்றேன். உள்ளே நுழைந்த மாத்திரத்தில்……,

“வாங்க சார்! நீங்க அனுப்பிய மெயில் பார்த்தேன். மீடியாக்காரங்க எல்லாம் சிட்க்கோவுக்கு கண்டிப்பாக நேரில் வாங்க. வந்து இங்கே என்னதான் நடக்கிதென்று உன்னிப்பாக பார்த்து எழுதுங்க.”

அவர் காட்டிய இருக்கையில் சென்று அமர்ந்து கொண்டிருக்கும் போதே இரண்டு நபர்கள் அந்த அறைக்குள் வந்தார்கள்.

“ஏம்பா… நீங்க ரெண்டு பேரும் வெல்டர்கள் தானே?.

“ஆமாங்க சார்”

“அந்த ஏ- த்ரீ பிளாக்ளே மதீனா கிரில்ஸ்- க்கு ரெண்டு வெல்டர் எக்ஸ்ட்ரா தேவைப்படுதாம். கூடவே ரெண்டு ஃபிட்டர் இருந்தாலும் கூட்டிட்டுப் போங்க”- என அவர்களைப் பார்த்து கட்டளையாக கூறி விட்டு அந்த இரண்டு லேபர்களின் விபரங்களை பதிவு ஏட்டில் பதிந்து கொண்டார்.

அடுத்து இரண்டு நபர்கள் வந்தார்கள்.

“உங்களுக்கு என்னப்பா! லோடு தானே?. அந்த ஈ- சிக்ஸ் பிளாக் சூப்பர் பர்னிச்சர்லே ஒரு நான்கு நடை அளவுக்கு ஸ்கூல் பர்னிச்சர் லோடு ரெடியாக உள்ளது. அந்த ஓனர்ட்டே விபரம் சொல்லி சரக்குகளை லோடு செஞ்சுக்கங்க! ”

“சரிங்க சார்!”

“ஏப்பா…. உங்களது ஏய்ச்சர் வண்டிதானே?. எங்கே வண்டி நம்பரை சொல்லு”- என விபரங்களை கேட்டு வாங்கிக் கொண்டு, அவர்களை அனுப்பி வைத்து விட்டு அடுத்து காத்துக் கொண்டிருந்த இளைஞரை உள்ளே அழைத்தார்.

“வணக்கம் சார்! எஸ்.எஸ்.ஐ. மோகன் சார் அனுப்பினார்”.

“வாங்க தம்பி! உங்களது பேப்பர்ஸ் எல்லாம் ரெடியாகிருச்சு. உள்ளே சைட்- டை நேர்லே போய் பாருங்க. இந்த வாரத்திலேயே ஃபேப்ரிகேஷன் வேலையை தொடங்கி விடலாம். நீங்க ஆரம்பிக்கிற டெய்லரிங் யூனிட்டிற்கு தேவையான “ரா மெட்டீரியல்”-ஐ சரியான ரேட்லே சிட்கோ- வே வாங்கித் தரும். அது போல, உங்கள் ப்ரொடக்‌ஷன் பொருளை சரியான சந்தையில் மார்க்கெட்டிங் செய்தும் தரும்.
அதற்கு என தனியாக ஒரு மார்க்கெட்டிங் டீமே சிட்கோ-வில் வைத்து உள்ளோம். அதே போல, ஆண், பெண் டெய்லர்களும் நம்ம கைவசம் உள்ளார்கள். வணிக ரீதியாக எந்த உதவியாக இருந்தாலும் என்னிடம் தயங்காமல் கேளுங்கள்”.

“ரொம்ப தேங்கஸ் சார்!. எல்லா விபரங்களையும் மோகன் சார் ஆரம்பத்திலேயே சொல்லி விட்டார். நம்ம தமிழ்நாடு அரசின் துறை சார்ந்த உதவிகளும், இப்படியான தனிப்பட்ட அரிதான உதவிகளும் என்னைப் போன்ற வளரிளம் தொழில் முனைவோர்களுக்கு உற்சாகம் தரும்தாதானே சார்.”- என அந்த பட்டதாரி இளைஞன் மன நெகிழ்வுடன் பேசினான்.

“தமிழ்நாடு முழுக்க 120 சின்னச் சின்ன “சிட்கோ” சக்கரங்கள் தொடர்ந்து சுற்றிக் கொண்டே இருக்கிறது தம்பி”- என கூறிய படியே சிரித்து என்னை வழியனுப்பி வைத்தார் – அந்த பொறுப்பு அதிகாரி. (இன்னும் வரும்)

– அஷ்கர் அலி, பள்ளப்பட்டி

- Advertisement -

Latest Posts

Don't Miss

[tdn_block_newsletter_subscribe title_text="Stay in touch" description="U3Vic2NyaWJlJTIwdG8lMjBvdXIlMjBsYXRlc3QlMjBuZXdz" input_placeholder="Email address" tds_newsletter2-image="5" tds_newsletter2-image_bg_color="#c3ecff" tds_newsletter3-input_bar_display="row" tds_newsletter4-image="6" tds_newsletter4-image_bg_color="#fffbcf" tds_newsletter4-btn_bg_color="#f3b700" tds_newsletter4-check_accent="#f3b700" tds_newsletter5-tdicon="tdc-font-fa tdc-font-fa-envelope-o" tds_newsletter5-btn_bg_color="#000000" tds_newsletter5-btn_bg_color_hover="#4db2ec" tds_newsletter5-check_accent="#000000" tds_newsletter6-input_bar_display="row" tds_newsletter6-btn_bg_color="#da1414" tds_newsletter6-check_accent="#da1414" tds_newsletter7-image="7" tds_newsletter7-btn_bg_color="#1c69ad" tds_newsletter7-check_accent="#1c69ad" tds_newsletter7-f_title_font_size="20" tds_newsletter7-f_title_font_line_height="28px" tds_newsletter8-input_bar_display="row" tds_newsletter8-btn_bg_color="#00649e" tds_newsletter8-btn_bg_color_hover="#21709e" tds_newsletter8-check_accent="#00649e" embedded_form_code="JTNDIS0tJTIwQmVnaW4lMjBNYWlsY2hpbXAlMjBTaWdudXAlMjBGb3JtJTIwLS0lM0UlMEElM0NsaW5rJTIwaHJlZiUzRCUyMiUyRiUyRmNkbi1pbWFnZXMubWFpbGNoaW1wLmNvbSUyRmVtYmVkY29kZSUyRmNsYXNzaWMtMTBfNy5jc3MlMjIlMjByZWwlM0QlMjJzdHlsZXNoZWV0JTIyJTIwdHlwZSUzRCUyMnRleHQlMkZjc3MlMjIlM0UlMEElM0NzdHlsZSUyMHR5cGUlM0QlMjJ0ZXh0JTJGY3NzJTIyJTNFJTBBJTA5JTIzbWNfZW1iZWRfc2lnbnVwJTdCYmFja2dyb3VuZCUzQSUyM2ZmZiUzQiUyMGNsZWFyJTNBbGVmdCUzQiUyMGZvbnQlM0ExNHB4JTIwSGVsdmV0aWNhJTJDQXJpYWwlMkNzYW5zLXNlcmlmJTNCJTIwJTdEJTBBJTA5JTJGKiUyMEFkZCUyMHlvdXIlMjBvd24lMjBNYWlsY2hpbXAlMjBmb3JtJTIwc3R5bGUlMjBvdmVycmlkZXMlMjBpbiUyMHlvdXIlMjBzaXRlJTIwc3R5bGVzaGVldCUyMG9yJTIwaW4lMjB0aGlzJTIwc3R5bGUlMjBibG9jay4lMEElMDklMjAlMjAlMjBXZSUyMHJlY29tbWVuZCUyMG1vdmluZyUyMHRoaXMlMjBibG9jayUyMGFuZCUyMHRoZSUyMHByZWNlZGluZyUyMENTUyUyMGxpbmslMjB0byUyMHRoZSUyMEhFQUQlMjBvZiUyMHlvdXIlMjBIVE1MJTIwZmlsZS4lMjAqJTJGJTBBJTNDJTJGc3R5bGUlM0UlMEElM0NkaXYlMjBpZCUzRCUyMm1jX2VtYmVkX3NpZ251cCUyMiUzRSUwQSUzQ2Zvcm0lMjBhY3Rpb24lM0QlMjJodHRwcyUzQSUyRiUyRlZhbGFyLnVzMi5saXN0LW1hbmFnZS5jb20lMkZzdWJzY3JpYmUlMkZwb3N0JTNGdSUzRGJiNTM2ZDNlMDlmMDk5MGYzOTNkYTAwYzElMjZhbXAlM0JpZCUzRGZiZDdiNDU3MzYlMjIlMjBtZXRob2QlM0QlMjJwb3N0JTIyJTIwaWQlM0QlMjJtYy1lbWJlZGRlZC1zdWJzY3JpYmUtZm9ybSUyMiUyMG5hbWUlM0QlMjJtYy1lbWJlZGRlZC1zdWJzY3JpYmUtZm9ybSUyMiUyMGNsYXNzJTNEJTIydmFsaWRhdGUlMjIlMjB0YXJnZXQlM0QlMjJfYmxhbmslMjIlMjBub3ZhbGlkYXRlJTNFJTBBJTIwJTIwJTIwJTIwJTNDZGl2JTIwaWQlM0QlMjJtY19lbWJlZF9zaWdudXBfc2Nyb2xsJTIyJTNFJTBBJTA5JTNDaDIlM0VTdWJzY3JpYmUlM0MlMkZoMiUzRSUwQSUzQ2RpdiUyMGNsYXNzJTNEJTIyaW5kaWNhdGVzLXJlcXVpcmVkJTIyJTNFJTNDc3BhbiUyMGNsYXNzJTNEJTIyYXN0ZXJpc2slMjIlM0UqJTNDJTJGc3BhbiUzRSUyMGluZGljYXRlcyUyMHJlcXVpcmVkJTNDJTJGZGl2JTNFJTBBJTNDZGl2JTIwY2xhc3MlM0QlMjJtYy1maWVsZC1ncm91cCUyMiUzRSUwQSUwOSUzQ2xhYmVsJTIwZm9yJTNEJTIybWNlLUVNQUlMJTIyJTNFRW1haWwlMjBBZGRyZXNzJTIwJTIwJTNDc3BhbiUyMGNsYXNzJTNEJTIyYXN0ZXJpc2slMjIlM0UqJTNDJTJGc3BhbiUzRSUwQSUzQyUyRmxhYmVsJTNFJTBBJTA5JTNDaW5wdXQlMjB0eXBlJTNEJTIyZW1haWwlMjIlMjB2YWx1ZSUzRCUyMiUyMiUyMG5hbWUlM0QlMjJFTUFJTCUyMiUyMGNsYXNzJTNEJTIycmVxdWlyZWQlMjBlbWFpbCUyMiUyMGlkJTNEJTIybWNlLUVNQUlMJTIyJTNFJTBBJTNDJTJGZGl2JTNFJTBBJTA5JTNDZGl2JTIwaWQlM0QlMjJtY2UtcmVzcG9uc2VzJTIyJTIwY2xhc3MlM0QlMjJjbGVhciUyMiUzRSUwQSUwOSUwOSUzQ2RpdiUyMGNsYXNzJTNEJTIycmVzcG9uc2UlMjIlMjBpZCUzRCUyMm1jZS1lcnJvci1yZXNwb25zZSUyMiUyMHN0eWxlJTNEJTIyZGlzcGxheSUzQW5vbmUlMjIlM0UlM0MlMkZkaXYlM0UlMEElMDklMDklM0NkaXYlMjBjbGFzcyUzRCUyMnJlc3BvbnNlJTIyJTIwaWQlM0QlMjJtY2Utc3VjY2Vzcy1yZXNwb25zZSUyMiUyMHN0eWxlJTNEJTIyZGlzcGxheSUzQW5vbmUlMjIlM0UlM0MlMkZkaXYlM0UlMEElMDklM0MlMkZkaXYlM0UlMjAlMjAlMjAlMjAlM0MhLS0lMjByZWFsJTIwcGVvcGxlJTIwc2hvdWxkJTIwbm90JTIwZmlsbCUyMHRoaXMlMjBpbiUyMGFuZCUyMGV4cGVjdCUyMGdvb2QlMjB0aGluZ3MlMjAtJTIwZG8lMjBub3QlMjByZW1vdmUlMjB0aGlzJTIwb3IlMjByaXNrJTIwZm9ybSUyMGJvdCUyMHNpZ251cHMtLSUzRSUwQSUyMCUyMCUyMCUyMCUzQ2RpdiUyMHN0eWxlJTNEJTIycG9zaXRpb24lM0ElMjBhYnNvbHV0ZSUzQiUyMGxlZnQlM0ElMjAtNTAwMHB4JTNCJTIyJTIwYXJpYS1oaWRkZW4lM0QlMjJ0cnVlJTIyJTNFJTNDaW5wdXQlMjB0eXBlJTNEJTIydGV4dCUyMiUyMG5hbWUlM0QlMjJiX2JiNTM2ZDNlMDlmMDk5MGYzOTNkYTAwYzFfZmJkN2I0NTczNiUyMiUyMHRhYmluZGV4JTNEJTIyLTElMjIlMjB2YWx1ZSUzRCUyMiUyMiUzRSUzQyUyRmRpdiUzRSUwQSUyMCUyMCUyMCUyMCUzQ2RpdiUyMGNsYXNzJTNEJTIyY2xlYXIlMjIlM0UlM0NpbnB1dCUyMHR5cGUlM0QlMjJzdWJtaXQlMjIlMjB2YWx1ZSUzRCUyMlN1YnNjcmliZSUyMiUyMG5hbWUlM0QlMjJzdWJzY3JpYmUlMjIlMjBpZCUzRCUyMm1jLWVtYmVkZGVkLXN1YnNjcmliZSUyMiUyMGNsYXNzJTNEJTIyYnV0dG9uJTIyJTNFJTNDJTJGZGl2JTNFJTBBJTIwJTIwJTIwJTIwJTNDJTJGZGl2JTNFJTBBJTNDJTJGZm9ybSUzRSUwQSUzQyUyRmRpdiUzRSUwQSUzQ3NjcmlwdCUyMHR5cGUlM0QndGV4dCUyRmphdmFzY3JpcHQnJTIwc3JjJTNEJyUyRiUyRnMzLmFtYXpvbmF3cy5jb20lMkZkb3dubG9hZHMubWFpbGNoaW1wLmNvbSUyRmpzJTJGbWMtdmFsaWRhdGUuanMnJTNFJTNDJTJGc2NyaXB0JTNFJTNDc2NyaXB0JTIwdHlwZSUzRCd0ZXh0JTJGamF2YXNjcmlwdCclM0UoZnVuY3Rpb24oJTI0KSUyMCU3QndpbmRvdy5mbmFtZXMlMjAlM0QlMjBuZXclMjBBcnJheSgpJTNCJTIwd2luZG93LmZ0eXBlcyUyMCUzRCUyMG5ldyUyMEFycmF5KCklM0JmbmFtZXMlNUIwJTVEJTNEJ0VNQUlMJyUzQmZ0eXBlcyU1QjAlNUQlM0QnZW1haWwnJTNCZm5hbWVzJTVCMSU1RCUzRCdGTkFNRSclM0JmdHlwZXMlNUIxJTVEJTNEJ3RleHQnJTNCZm5hbWVzJTVCMiU1RCUzRCdMTkFNRSclM0JmdHlwZXMlNUIyJTVEJTNEJ3RleHQnJTNCZm5hbWVzJTVCMyU1RCUzRCdBRERSRVNTJyUzQmZ0eXBlcyU1QjMlNUQlM0QnYWRkcmVzcyclM0JmbmFtZXMlNUI0JTVEJTNEJ1BIT05FJyUzQmZ0eXBlcyU1QjQlNUQlM0QncGhvbmUnJTNCZm5hbWVzJTVCNSU1RCUzRCdCSVJUSERBWSclM0JmdHlwZXMlNUI1JTVEJTNEJ2JpcnRoZGF5JyUzQiU3RChqUXVlcnkpKSUzQnZhciUyMCUyNG1jaiUyMCUzRCUyMGpRdWVyeS5ub0NvbmZsaWN0KHRydWUpJTNCJTNDJTJGc2NyaXB0JTNFJTBBJTNDIS0tRW5kJTIwbWNfZW1iZWRfc2lnbnVwLS0lM0U=" descr_space="eyJhbGwiOiIxNSIsImxhbmRzY2FwZSI6IjE1In0=" tds_newsletter="tds_newsletter3" tds_newsletter3-all_border_width="0" btn_text="Sign up" tds_newsletter3-btn_bg_color="#ea1717" tds_newsletter3-btn_bg_color_hover="#000000" tds_newsletter3-btn_border_size="0" tdc_css="eyJhbGwiOnsibWFyZ2luLWJvdHRvbSI6IjAiLCJiYWNrZ3JvdW5kLWNvbG9yIjoiI2E3ZTBlNSIsImRpc3BsYXkiOiIifSwicG9ydHJhaXQiOnsiZGlzcGxheSI6IiJ9LCJwb3J0cmFpdF9tYXhfd2lkdGgiOjEwMTgsInBvcnRyYWl0X21pbl93aWR0aCI6NzY4fQ==" tds_newsletter3-input_border_size="0" tds_newsletter3-f_title_font_family="445" tds_newsletter3-f_title_font_transform="uppercase" tds_newsletter3-f_descr_font_family="394" tds_newsletter3-f_descr_font_size="eyJhbGwiOiIxMiIsInBvcnRyYWl0IjoiMTEifQ==" tds_newsletter3-f_descr_font_line_height="eyJhbGwiOiIxLjYiLCJwb3J0cmFpdCI6IjEuNCJ9" tds_newsletter3-title_color="#000000" tds_newsletter3-description_color="#000000" tds_newsletter3-f_title_font_weight="600" tds_newsletter3-f_title_font_size="eyJhbGwiOiIyMCIsImxhbmRzY2FwZSI6IjE4IiwicG9ydHJhaXQiOiIxNiJ9" tds_newsletter3-f_input_font_family="394" tds_newsletter3-f_btn_font_family="" tds_newsletter3-f_btn_font_transform="uppercase" tds_newsletter3-f_title_font_line_height="1" title_space="eyJsYW5kc2NhcGUiOiIxMCJ9"]