Tuesday, March 23, 2021

மனதே உற்சாகம் கொள்

https://youtu.be/E90fZK-GaYQ சில நேரங்களில் நமக்கு மனம் உற்சாகம் இல்லாமல் காணப்படும். மனதை உற்சாக நிலைக்கு கொண்டு வருவது எப்படி? மனநல ஆலோசகர் திருமதி. ஜான்சிராணி சில வழிகளைச் சொல்லித் தருகிறார்.

Latest Posts

1952 லேயே சொந்தமாக கார் வைத்து இருந்த கலைஞர்!

எம்ஜிஆருக்கு முன்பே கலைஞர் பணக்காரராக இருந்தாரா? இந்த கேள்வி வரலாறு தெரிந்தவர்களுக்கு சிரிப்பூட்டும் என்றாலும் திரிக்கப்பட்ட பல கட்டுக் கதைகள் இந்த சமூகத்தில் பரப்பப்பட்டு வருகின்றன. கலைஞர் பிறந்தது 1924ல், கோவையில் செயல்பட்ட ஜுபிடர் திரைப்பட...

பல நாடுகளுக்கு ஏற்றுமதி ஆகும் காயர் பித், வேளாண்மையிலும் புரட்சியை ஏற்படுத்தி வருகிறது!

தமிழ்நாட்டில், கரிசல் மண், செம்மண், வண்டல் மண், களிமண், சரளை மண், தேரிக்காடுகள் எனப் பலவகையான மண் வளம் உள்ளது. ஆனால், கொங்கு மண்டல மண், சற்றே வெளிரி இருக்கின்றது. இது மதிர் மண்....

கள் தடை நீக்கப்பட வேண்டும்; விற்கும் உரிமையை பனை ஏறும் வல்லுநர்களுக்கே வழங்க வேண்டும்!

தமிழ்நாட்டில் கடந்த 33 ஆண்டுகளாக கள்ளுக்கு தடை உள்ள நிலையில், 15 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு அமைப்புகள், விவசாயிகள், பனை தொழிலாளர்கள் கள் இறக்க அனுமதி கோரி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இதனிடையே, 2009...

இந்திரன் என்ற எழுத்தாளர் உருவான கதை

எழுத்தாளர், கவிஞர், ஓவியர், நூல் திறன்ஆய்வு அறிஞர் இந்திரன் இராஜேந்திரன் அவர்களுடன் திரு. அருணகிரி நடத்திய உரையாடலின் போது அவர் கூறியவை.. ''என் தந்தை சென்னைக்காரர். ஓவியர். தாய் புதுச்சேரிக்காரர். பிரெஞ்சுக் குடி உரிமை...

தாழக் கிடப்பாரை தற்காக்க வேண்டும் என்று சொன்ன அய்யா வைகுண்டர்

அய்யா உண்டு என சொன்னால்…. அங்கே நீங்கள் இந்து சாதீய கொடூரங்களை எதிர்க்கிறீர்கள் என பொருள்…
இந்து சனாதன தர்மத்தில் இருக்கும் சாதீய பாகுபாடுகள் குறித்து பலரும் பேசியிருக்கிறார்கள். போராடி இருக்கிறார்கள்.
தமிழ்நாட்டில் வள்ளலாருக்கு முன்னரே தோன்றியவர் அய்யா வைகுண்டர். வள்ளலார் காலம் 1823 – 1874 அய்யா வைகுண்டர் காலம் 1809 – 1851. வைகுண்டரின் காலத்திற்கு பிறகுதான் வள்ளலாரின் திருவருட்பா வெளிவருகிறது. இது ஒப்பீடு அல்ல காலத்தை உங்களுக்கு புரிய வைக்கவே இந்த கணக்கு.
முத்துகுட்டி என்பதே அவரது இயற்பெயர். அவர் பிறந்த காலங்களில் சாதீய வெறி உச்சத்தில் இருந்தது.  நாடார் உள்ளிட்ட பல சாதிய பெண்களுக்கு மார்பு சேலை அணிதல், இடுப்பில் குடம் எடுத்தல், பொன்நகைகள் அணிதல் ஆகியன தடை செய்யப்பட்டு இருந்தது. ஆண்களுக்கு தலைபாகை கட்டுதல், மீசை வளர்த்தல், வளைந்த கைப்பிடி கொண்ட குடையை பயன்படுத்துதல், உயர்ந்த சாதி மொழியை பயன்படுத்துதல் போன்றவை தடை செய்யப்பட்டு இருந்தது. (உயர்ந்த சாதி மொழி என்றால் சாப்பிட போகிறேன் என சொல்லக்கூடாது, கஞ்சி குடிக்க போறேனுதான் சொல்லணும்) குழந்தைகளுக்கு தெய்வங்களின் பெயர்களை சூடுவது கூட தடை செய்யப்பட்டிருந்தது. வைகுண்டருக்கு பெற்றோர் சூட்ட நினைத்த பெயர் முடிசூடும் பெருமாள். ஆனால் முடியவில்லை. முத்துகுட்டி என்றே வைத்தார்கள்.
இந்த கொடூர சாதியங்கள் ஊடாக முத்துகுட்டி வளர்கிறார்.
1833 ஆம் ஆண்டு திருச்செந்தூர் சென்ற அவர் இறையறிவு பெற்று தன் பொதுவாழ்வை தொடங்கினார். #தாழக்கிடப்பாரை_தற்காப்பதே_தர்மம் என முன்வைத்தார். நாடார் மட்டுமின்றி இடையர், பறையர், கம்மாளர், வாணியர், தோல் வணிகர், மறவர் , பரதவர், சக்கிலியர், துலுக்கர், பட்டர் உள்ளிட்ட பலரும் அவரை அப்போது வணங்கினர்.
“காணிக்கையிடாதீங்கோ காவடி தூக்காதீங்கோ
வீணுக்கு தேடுமுதல் விறுதாவில் போடாதீங்கோ “
என உழைக்கும் மக்கள் மீதான அன்பை வெளிக்காட்டினார். ஆலயங்களுக்குள் விடமறுத்த இந்துகளிடம் இருந்து காணிக்கை மட்டும் வாங்கிக் கொண்டிருந்த காலம் அது. இந்த கருத்தை அவர் உரக்கவே சொன்னார். மன்னராட்சி நடைபெற்ற காலம் அது. அரசனுக்கு எதிராக பேசுவது, தெய்வத்திற்கு எதிராக பேசுவதும் நிந்தனையாக கருதப்பட்ட காலம் அது. ஆகையால் அவர் கைது செய்யபட்டார். 110 நாட்கள் திருவனந்தபுரம் சிறையில் அடைக்கப்பட்டார்.
அந்த காலக் கட்டத்திலும் அவர் “ அவன் பட்டம் பறித்திடுவேன், கொட்டி கலைத்திடுவேன் “ என உரக்கப் பாடினார்.
இந்து கோவில்களில் ஊட்டுப் புரைகள் என்ற பெயரில் பார்ப்பனர்களுக்கு மட்டும் இருவேளை உணவு இலவசமாக வழங்கி வந்த காலம் அது. அய்யா வைகுண்டர் அவர்கள் உழைக்கும் மக்களை சாதி பேதமின்றி ஒன்றுபடுத்தி அவர்களை பொது சமபந்தி என்ற பொது உணவை உண்ணவும், தன் கருத்துகளை பரப்ப ஏதுவாகவும் சிறிய நிழல் தாங்கல்களையும், பதி என்ற சற்றே பெரிய வழிபாட்டு கட்டிடங்களையும் நிறுவினார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் அகஸ்தீஸ்வரம், தாமரைக்குளம், சின்ன முட்டம் பகுதிகளில் ஏராளமான நிழல் தாங்கல்களை காணலாம்.
வைகுண்டரின் பதிகளில் ஆண் பெண் பேதமில்லை, சாதி மத பேதமில்லை, வீண் சடங்குகள் இல்லை, உருவ வழிபாடில்லை. அனைவரும் தலைப்பாகை கட்டி சுயமரியாதையுடன் வழிபட முடியும்.
“ கோவில்கள் வைத்து குருபூசை செய்யார்கள்
பூவதுகள் போட்டு போற்றியே நில்லார்கள்
ஆடு கிடாய் கோழி அறுத்துப் பலியிடார்கள்
மாடு மண்ணுருவை வணங்கி திரியார்கள் “
என அவரின் அகிலத்திரட்டு ஓங்கி சொல்கிறது. வேள்விகளை அவர் முற்றிலும் மறுக்கிறார். இன்றும் அய்யா வழியினர் வேள்விகளை நம்புவது இல்லை. சக மனிதர்களை முன் வைக்கிறார்கள். அய்யா வைகுண்டர் உருவாக்கிய கருத்துகள் நீதிக்கட்சி மூலம் பின்னர் சட்டங்களாகின. தோள் சீலை போராட்டத்தில் இவரின் விழிப்புணர்வு பெரிது. இவர் உருவாக்கிய நெருப்பு சனாதன தர்மத்தை பொசுக்க தொடங்கியது.
அவரின் அகிலத்திரட்டில் இருந்து… சில வரிகள்..
கனத்த கற்கண்டு கருப்புக் கட்டிக் கேட்டடிப்பான்…
நாருவட்டியோலை நாள் தோறுங் கேட்டடிப்பான்…
வாதுக்கு நொங்கு வாய்கொண்டு கேட்டடிப்பான்..
…..
கொல்லைதனில் சான்றோரை கொண்டுவா என்றடிப்பான்
….
கொதிக்கும் பதனீர் கொண்டுவா என்றடிப்பான்
….
சாணான் கள்ளேரியெனச் சண்டாள நீசனெல்லாம்
வீணாகச் சான்றோரை விரட்டியடிப்பான் காண்
சாணுடம்பு கொண்டு தரணிமிக ஆண்டாலும்
….
சாணான் சாணானெனவே சண்டாள நீசனெல்லாம்
கோணா துளத்தோரை கோட்டி செய்தேயடித்தான். என முடிக்கிறார் தன் அம்மானை பாடலை.
இதுவே போதுமானது அய்யா வைகுண்டரை புரிந்து கொள்ள. அவர் உருவாக்க நினைத்த சமதர்மத்தை புரிந்து கொள்ள்.. இந்தியாவில் சாதிய மறுப்பாளர்களுக்கு காலத்தால் மட்டுமில்லை, கருத்துகளாலும் முன்னோடி அய்யா வைகுண்டர். யாரின் உரிமைக்காக போராடினாரோ அவர்கள் முழுதாக உள்வாங்கி செயல்பட வேண்டும்.
அய்யா உண்டு என சொன்னால்…. அங்கே நீங்கள் இந்து சாதீய கொடூரங்களை எதிர்க்கிறீர்கள் என பொருள்.
 – பா. சரவண காந்த்.
ஆதாரம்: நாடார் வரலாறு கறுப்பா…? காவியா…?

Join our list

Subscribe to our mailing list and get interesting stuff and updates to your email inbox.

Thank you for subscribing.

Something went wrong.

Latest Posts

1952 லேயே சொந்தமாக கார் வைத்து இருந்த கலைஞர்!

எம்ஜிஆருக்கு முன்பே கலைஞர் பணக்காரராக இருந்தாரா? இந்த கேள்வி வரலாறு தெரிந்தவர்களுக்கு சிரிப்பூட்டும் என்றாலும் திரிக்கப்பட்ட பல கட்டுக் கதைகள் இந்த சமூகத்தில் பரப்பப்பட்டு வருகின்றன. கலைஞர் பிறந்தது 1924ல், கோவையில் செயல்பட்ட ஜுபிடர் திரைப்பட...

பல நாடுகளுக்கு ஏற்றுமதி ஆகும் காயர் பித், வேளாண்மையிலும் புரட்சியை ஏற்படுத்தி வருகிறது!

தமிழ்நாட்டில், கரிசல் மண், செம்மண், வண்டல் மண், களிமண், சரளை மண், தேரிக்காடுகள் எனப் பலவகையான மண் வளம் உள்ளது. ஆனால், கொங்கு மண்டல மண், சற்றே வெளிரி இருக்கின்றது. இது மதிர் மண்....

கள் தடை நீக்கப்பட வேண்டும்; விற்கும் உரிமையை பனை ஏறும் வல்லுநர்களுக்கே வழங்க வேண்டும்!

தமிழ்நாட்டில் கடந்த 33 ஆண்டுகளாக கள்ளுக்கு தடை உள்ள நிலையில், 15 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு அமைப்புகள், விவசாயிகள், பனை தொழிலாளர்கள் கள் இறக்க அனுமதி கோரி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இதனிடையே, 2009...

இந்திரன் என்ற எழுத்தாளர் உருவான கதை

எழுத்தாளர், கவிஞர், ஓவியர், நூல் திறன்ஆய்வு அறிஞர் இந்திரன் இராஜேந்திரன் அவர்களுடன் திரு. அருணகிரி நடத்திய உரையாடலின் போது அவர் கூறியவை.. ''என் தந்தை சென்னைக்காரர். ஓவியர். தாய் புதுச்சேரிக்காரர். பிரெஞ்சுக் குடி உரிமை...

Don't Miss

சின்ன பழுதுகளை நாமே சரி செய்து கொள்ள உதவும் சின்ன கருவிகள்

வீடுகளில் நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களில் ஒரு சின்ன பழுது ஏற்பட்டாலும், அதை நீக்க அதற்கான பழுது நீக்குபவர்களைத் தேடி ஓடுகிறோம். பாத்ரூம் குழாயில் தண்ணீர் கசிகிறது என்றால் உடனே பிளம்பரைத் தேடி...

15 ம் நூற்றாண்டில் கன்னிமேரி ஓவியங்களில் திறமை காட்டிய ஓவியர் ரபேல்

வரலாறு நெடுகிலும் ஓவியர்களும், அவர்களின் ஓவியங்களும் பேசப்பட்டு வருகின்றன. பல நூற்றாண்டுகளுக்கு முன் தங்கள் ஓவியங்களால் பாராட்டு பெற்றவர்களின் ஓவியங்கள் இன்றளவும் போற்றப்படுகின்றன. அப்படிப்பட்ட ஓவியர்களில் ஓருவர், ரஃபேல்லோ சான்சியோ ரபேல் (Raffaello Sanzio...

உங்களுக்கு அருகில் உள்ள சின்னச் சின்ன சுற்றுலா இடங்கள்

எப்படி இருந்தாலும் கொரோனா லாக் டவுன் விரைவில் முடிவுக்கு வந்துதான் தீரும். பொதுப் போக்குவரத்தையும் தொடங்கி விடுவார்கள். ஐந்து மாதங்களுக்கும் மேலாக வீட்டுக்குள் முடங்கிக் கிடப்பவர்களில் பலர், எப்போது பொது முடக்கம் ஒரு...

உங்கள் இரகசியத்தைக் காப்பாற்றப் போவது யார்?

பெரும்பாலான உறவுமுறைகள், தேவை இல்லாத சமாச்சாரங்களைப் பரிமாறிக் கொள்வதால்தான் பாதிப்புக்கு உள்ளாகின்றன. ஒரு செய்தியைப் பரிமாறிக் கொள்ளும் முன் சிலவற்றை மனதில் கொள்வது நல்லது. எல்லா செய்திகளையும் எல்லோரிடமும் பரிமாறிக் கொள்ள தேவை...

வாடிக்கையாளர் எந்த வகையானவர் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்

இன்றைக்கு வணிகத்தில் வாடிக்கையாளர்களின் வகைகளையும், அவர்களின் மனநிலையை அறிந்து கொள்வது என்பது மிகப் பெரிய சவாலான பணி ஆகும். ஒவ்வொரு வாடிக்கையாளரும் ஒவ்வொரு விதமாக முடிவு செய்வதைப்பார்க்க முடியும். எனவே வணிகம் என்பது...

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.