Latest Posts

கொடிய ஹிட்லரை, ரஷ்யாவின் செஞ்சேனை வீழ்த்திய 75ஆம் ஆண்டு விழா

- Advertisement -

”உலக நாடுகளை பாசிசத்தின் கோரப்பிடியில் சிக்கி விடாமல் பாதுகாத்தது சோவியத் செஞ்சேனை. சோவியத் செஞ்சேனை அந்த மகத்தான தியாகத்தையும் சாதனையையும் செய்து இருக்காவிட்டால் உலகின் எதிர்காலம் என்ன ஆகியிருக்கும் என்பதை கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை. பாசிசத்திற்கு எதிரான போராட்டத்தில் சோவியத் மக்கள் ஆற்றிய அளப்பரிய பங்கும், அர்ப்பணிப்பும் அளவிட முடியாத தியாகமும் உலக வரலாற்றில் மிக மிக முக்கியத்துவம் வாய்ந்தது.

செஞ்சேனை வீரர்கள் தங்களது நாட்டை மட்டுமல்ல, நாஜிசத்தின் பிடியிலிருந்து அனைத்து நாடுகளையும் காப்பது தங்களது கடமை என்று கருதினார்கள். 1945 இறுதிக் கட்டத்தில் நாசிச ஜெர்மனியின் ராணுவ துருப்புக்களில் 80 சதவீதத்திற்கும் அதிகமாகவும், அவர்களால் கைப்பற்றப்பட்டு இருந்த நாடுகளின் படைகளில் பெரும்பாலானவையும் ஒட்டு மொத்தமாக சோவியத் சோசலிச ரஷ்ய குடியரசை அழிக்கும் நோக்கத்துடன் குவிக்கப்பட்டு இருந்தன; ஆனால் அத்தனை படைகளும் சோவியத் மக்களின் மகத்தான ஒற்றுமையின் முன்பு தோல்வி அடைந்து ஓடின.

இந்த உலவகை பெரும் தீமையில் இருந்து பாதுகாத்தது எங்கள் மக்கள்; கொடிய சர்வாதிகாரத்தினை வீழ்த்தியவர்கள் எங்கள் மக்கள்.

எதிரிப் படைகளின் 600 பிரிவுகளை சோவியத் செஞ்சேனையும், சோவியத் மக்களும் வீழ்த்தினார்கள். எதிரிகளின் விமானப் படைகள், டாங்குகள், தானியங்கி துப்பாக்கி கள் உள்ளிட்ட தளவாடங்களின் 75 சதவீதத்தை நொறுங்கச் செய்தார்கள். அவர்கள் செய்தது இவ்வுலகில் இதுவரை யாருமே செய்து  காட்டி இராத மாபெரும் வீரம். மகத்தான தியாகம். இதுதான் இரண்டாம் உலகப்போர் தந்த முதன்மையான உண்மை ஆகும்.  இந்த உண்மையை நமது குழந்தைகளிடமும், பேரக்குழந்தைகளிடமும், கொள்ளுப் பேரக்குழந்தைகளிடமும் வாழையடி வாழையாக எடுத்துச் செல்வோம்; மீண்டும் மீண்டும் முழங்குவோம் சோவியத் மக்களே நாஜிசத்தை விரட்டி ஒழித்தார்கள்; சோவியத் செஞ்சேனையே உலகைப் பாதுகாத்தது; சோவியத் ஒன்றியமே உலகம் முழுவதும் இருக்கிற எண்ணற்ற தேசிய இனங்களின் விடுதலைக்கு வித்திட்டது.”

– கொடிய சர்வாதிகாரி ஹிட்லரின் படைகளை இரண்டாம் உலகப் போரின் இறுதியில், சோவியத் ஒன்றியத்தின் செஞ்சேனை வெற்றி கொண்டு பாசிசத்தை வீழ்த்தியதன் 75 ஆம் ஆண்டு நினைவாக கடந்த ஜூன், 24 அன்று  ரஷ்யாவில் நடந்த மாபெரும் விழாவில் ரஷ்ய குடியரசுத் தலைவர் திரு. புடின்.

விழாவில் 14ஆயிரம் ரஷ்ய துருப்புக்கள், 200க்கும் மேற்பட்ட அதிநவீன ஆயுத தளவாடங்கள், இரண்டாம் உலகப் போரில் பங்கேற்ற ராணுவத் தளவாடங்கள், 75 அதிநவீன ராணுவ விமானங்கள் பங்கேற்ற பிரம்மாண்டமான ராணுவ அணி வகுப்பு மாஸ்கோவின் செஞ்சதுக்கத்தில் நடைபெற்றது.

– எழில்

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

Subscribe to our latest news