- Advertisement -
- நீங்கள் விளக்கு ஏற்றுபவரா? இருளைக் கண்டு புலம்புபவரா? விளக்கை அணைப்பவரா என்பதை நீங்கள் தான் முடிவு செய்கிறீர்கள். வாழ்வை மேம்படுத்தும் நம்பிக்கை எண்ணங்களை வான் நோக்கி வளரச் செய்வதும் மனம்தான்.
- உங்களுக்கு உங்கள் உழைப்பின் மீது எவ்வளவு நம்பிக்கையும், மரியாதையும் உள்ளதோ அதை விட அதிகமாக உங்கள் உள்ளுணர்வின் மீதும், சுய சிந்தனையின் மீதும் நம்பிக்கை வேண்டும்.
- ஒரு விஷயத்தைப் பற்றிய முழு விவரமும் தெரிந்தவரிடம் மட்டுமே அறிவுரை பெறுவது மிகவும் முக்கியம். அதை விடுத்து, நமக்கு மிகவும் நெருங்கியவர் என்பதாலேயே அவரது கருத்துக்களை ஏற்பது தவறு.
- எதிர்மறை மனிதர்களின் உலகம் கவலைகளும், துன்பங்களும், சோர்வும் நிரம்பியது. அவர்களது வாழ்க்கை பொய்மை நிறைந்த வாழ்க்கை. அவர்கள் உலகில் மகிழ்ச்சியும், உண்மையும் மலர்வதில்லை. மன அமைதியற்ற வாழ்க்கை இவர்களுடையது. எப்பொழுது அதீதக் கனவுகளிலும், நிறைவேறாத ஆசைகளிலும் சஞ்சரிப்பவர்கள் இவர்கள்.
- ஒருவர் எவ்வளவு வலிமையாக உங்கள் மீது தன் எதிர்மறைக் கருத்துக்களைத் திணித்தாலும் அவை உங்களைப் பாதிக்காத வரை சிக்கல் இல்லை.
- வல்லவர்களாய் வாழ, முதலில் நாம் பிறரது (குறிப்பாய் எதிர்மறையாளர்களின்) அங்கீகாரத்தை எதிர்பார்க்கக் கூடாது. பிறரது சம்மதம், ஒப்புதல், ஏற்புடைமை இவை இருக்கும் வரை, பிறரின் நம்பிக்கையின் எல்லைகளுக்குள் நீங்கள் சிக்கித் தவிக்கும் இரை ஆவீர்கள்.
Also read: கம்பெனியின் பெயரை மாற்றுவது எப்படி?
- ஒரு உண்மையை நாம் உணரத்தான் வேண்டும். “எதிர் மறையாளர்களை’ ஒரு போதும் நாமாக மாற்ற முடியாது. அவர்களாக மனம் வந்து மாறினால் தான் நேர்மறையாளராக முடியும். ஏனெனில், எதிர்மறை எண்ணம் என்பது ஓர் உளவியல் சிக்கல் என்பதை விட, அது ஒருவரது மனோபாவம், சுயமாய் தேர்வு செய்யும் மனப்பண்பு என்பதே உண்மை.
- நேர்மையாளர்கள் எப்போழுதும் சுறுசுறுப்பாகவும், மகிழ்ச்சியாகவும், ஆக்கபூர்வமாகவும் செயல்படுவர். எதிர் மறையாளர்கள், சோம்பலும் கடுமையும் நிறைந்த மனோநிலையில் செயல்திறன் குன்றி இருப்பார்கள்.
- ஒருவர் நம்மைக் கோபப்படுத்த எடுக்கும் முயற்சிகள் அனைத்தையும் முறியடிக்கும் சக்தி நம் புன்னகைக்கு உண்டு. எதிர்மறையாளர்களைச் செயல் இழக்கச் செய்ய அவர்களைப் பார்த்துச் சிரித்தாலே போதும். ஏனெனில் “நான் மகிழ்ச்சியாக உள்ளேன்” என்பதை வெளிப்படுத்தும் உடல் மொழி புன்னகை. இது நம் மனத் துணிச்சலின் சின்னம்.
- தொடர்ந்து படிப்பது, பார்ப்பது, கேட்பது என அனைத்தும் எதிர்மறையாகவே இருந்தால், எதிர்மறை எண்ணங்களும், நடவடிக்கைகளும்தான் சராசரி வழி என நம் மனம் ஏற்றுக் கொண்டு விடும். இதனால்தான் எதிர்மறைத் தாக்கத்தைத் தவிர்க்க நம்மால் இயன்ற அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வது தேவை ஆகிறது. எதிர்மறை எண்ணங்கள் எவ்வடிவில் நம்மைத் தாக்கினாலும் அதை எதிர்க்க நாம் பழகுவது அவசியம்.
- நாம் எதிர்மறை எண்ணங்களை வெறுக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். முடியாது, நடக்காது என்ற எதிர்மறைக்குப் பதில் நேர்மறை எண்ணங்களை நேசிக்கத் துவங்குங்கள். அப்படிச் செய்தால் எப்படியாவது, எதிர் மறை எண்ணங்களுக்கு எதிரடி கொடுக்கத் துவங்குவீர்கள்.
- உங்களைக் கோபமூட்ட, தளர்வடைய, பொறுமை இழக்கச் செய்யும் எதிர்மறை மனிதர்களை, உங்களால் எளிதாக அடையாளம் காண முடியும். ஆனால் நம்மோடு நட்புறவாடி, நம்மை நம்பச் செய்து, பின் நம் முதுகிற்குப் பின்னே புறம் பேசி, நம்மை ஏளனப்படுத்த முயலும் அந்த நச்சு நண்பர்களிடம் தான் நாம் மிகவும் கவனமாய் இருக்க வேண்டும்.
– க. அபிராமி
- Advertisement -