Latest Posts

காத்திருக்கிறார்கள், ஊபர், ஓலா, ஆட்டோ ஓட்டுநர்கள்

- Advertisement -

இந்திய நகரங்களில் உபர், ஓலா நிறுவனங்களால் தொடங்கிய வாடகைக் கார்களின் புரட்சி கொரோனாவிலா செய்வது அறியாமல் திகைத்து நிற்கிறது. உபர், ஓலா டாக்சிகள் நகர மக்களின் பயணத்தை எளிதாக்கின. இதற்கு கணினித் தொழில் நுட்பம் பெரிய அளவில் கைகொடுத்தது.பயணிகளின் இடத்தை எளிதில் சென்று அடைய உதவும் மேப் வசதி, பணத்தை ஆன்லைன் மூலம் செலுத்தும் வசதி, குறைந்த கட்டணத்துடன் இருக்கைகளை பகிர்ந்து பயணிக்கும் வசதி, வெளிப்படைத் தன்மை என்று பயணிகள் விரும்பும் பல வசதிகள் இந்த நிறுவனங்களால் தரப்பட்டன. பார்க்கிங் இடங்களைத் தேடி அலைய வேண்டியது இல்லை என்ற காரணத்தால் சொந்தமாக கார் வைத்து இருப்பவர்கள் கூட இந்த டாக்சிகளை விரும்பி பயன்படுத்தினார்கள்.

எனவே இந்த வாய்ப்பை இன்னும் வளர்த்து எடுக்க மேற்கண்ட நிறுவனங்கள் தொடர் முயற்சிகளை மேற்கொண்டு இருந்தன.

ஆனால் கொரொனை பாதிப்பு அத்தனைக்கும் சிக்கலை ஏற்படுத்தி விட்டது. இந்த நிறுவனங்கள் பெரிய நிறுவனங்கள் என்பதால் ஓரளவு தாக்குப்பிடித்து நிற்க வாய்ப்பு இருக்கிறது. ஆனால் இந்த நிறுவனங்களை நம்பி கடனுக்கு கார்களை வாங்கி ஓட்டிக் கொண்டிருந்து ஓட்டுநர் முதலாளிகள் கடுமையான சவாலை எதிர்கொண்டிருக்கின்றனர்.

காருக்கான மாதத் தவணை கட்டவும் முடியாமல், சம்பாதிக்கவும் முடியாமல் திணறி வருகின்றனர். இப்போதுதான் அரசு தளர்வுகளை அறிவித்து வருகிறது. ஆனாலும் முழுமையாக தளர்வுகள் அறிவிக்கப்படாத நிலையில் பயணம் செய்பவர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே இருக்கிறது. ஓட்டுநர்களிடம் பேசும்போது, தவணைத் தொகை கட்டி முடித்தவர்களும், ஓரளவு சேமிப்பு வைத்திருந்தவர்களும் சமாளித்துக் கொண்டார்கள். மற்றவர்கள் தவணைத் தொகை கட்ட முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். வீட்டுச் செலவுக்கும் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலையில், எப்படியோ சமாளித்துக் கொண்டிருக்கிறார்கள். வெளியூர்களில் இருந்து சென்னை வந்து உபர், ஓலாவுக்காக ஓட்டிக் கொண்டிருந்தவர்கள் தங்கள் காரிலேயே சொந்த ஊர்களுக்கு சென்று விட்டனர்.

அண்மையில் சென்னையிலும் ஆட்டோக்கள் ஓட அனுமதி அளிக்கப்படடது. பொதுப் போககுவரத்து இலலை; கொரோனா பீதியால் மக்கள் வீட்டை விட்டே வெளியே வர அஞ்சுவதால் ஆட்டோக்களில் பயணிக்கவும் ஆட்களைத் தேடத்தான் வேண்டி இருக்கிறது. நிறைய பேர்கள் வராததால் ஆட்டோ ஓட்டுநர்களும் சோர்வுடனேயே காணப்படுகின்றனர். இந்த காத்திருப்பு இன்னும் எத்தனை நாட்களோ என்ற கவலையுடனேயே இவர்கள் நாட்களைக் கடத்தி வருகின்றனர்.

– மலர்

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

Subscribe to our latest news