Latest Posts

ஆன்லைன் வணிகத்தில் பாதுகாப்பானது டெபிட் கார்டா? கிரெடிட் கார்டா?

- Advertisement -

ஆன்லைனில் வணிகம் செய்யும் நிலை தற்போது பெருகி வருகிறது. இதற்காக, கடன் அட்டையையோ (Credit Card) பற்று அட்டையையோ (Debit Card) கொடுக்கும் போது சில நேரங்களில் சிக்கல் ஏற்படுகிறது.

ஒரு முறை இணையதளத்தில் நாற்காலி வாங்கும்போது, நான் டெபிட் கார்டைப் பயன்படுத்தினேன். முதல் முறை Transaction failed (செயல்பாடு தோல்வி) என்று வந்தது. மறுமுறை, அதே அட்டையை பயன்படுத்திய போது, நல்ல விதமாகச் சென்று, கணக்கில் பற்று ஏற்பட்டு, ஓரிரு நாளில் நாற்காலியும் கிடைத்துவிட்டது.

Also read: டிஜிட்டல் மார்கெட்டிங் பேஃக் லீங்க் – 6

டெபிட் கார்டைப் பயன்படுத்தியபோது, உடனே கணக்கைச் சரிபார்த்து, இரண்டு முறை debit ஆகவில்லை என்று உறுதி செய்ய முடிந்தது. ஆனால், கிரெடிட் கார்டைப் பயன்படுத்தும்போது, செயல்பாடு தோல்வி என்று வந்தால் அது சிக்கல்தான். அப்படி வந்தால், அந்தத் தொகை பெண்டிங்கில் வைக்கப்படும். அதாவது, கிரெடிட் கார்டின் வரம்பு(Limit) ஒரு லட்சம் ரூபாய் என்று வைத்துக் கொள்ளலாம். தோல்வி அடைந்த ரூ.3000 -த்தை சேர்த்து, வரம்பு ரூ.80,000 ஆகிறது. மீண்டும் அதே அட்டையைப் பயன்படுத்தும்போது, முந்தையத் தொகை சேராவிட்டாலும், பயன்படுத்துவதற்கு ஒரு மாதம் காத்திருக்க வேண்டும். அதாவது, ரூ.20000 வரை அந்த மாதம் 20ந் தேதி வரை பயன்படுத்த முடியாது. தவறாகப் போய் விட்ட ரூ.3000 சேர்த்து 17000 வரை தான் கிரெடிட் கார்டில் செலவு செய்ய முடியும். சுருக்கமாகச் சொன்னால், மாத வரம்பு ரூ.97,000 ஆக குறைந்து விடுகிறது. மறுமாதம், அந்த pending (சில வங்கிகளில் Hanging) ஐ சரி செய்து இயல்பாக ரூ.1,00,000 (ஒரு லட்சம்) ஆகி விடுகிறது. வங்கிகள் வசிக்கும் இடத்திற்கு அருகில் இயங்குவதால், இத்தகைய தவறுகள் ஏற்படும்போது, கேட்க முடிகிறது. பிற மாவட்டமாக, வேற மாநிலமாக இருந்தால் எப்படி விசாரித்து தெரிந்து கொள்ள இயலும்?

ஆகவே, ஆன்லைன் வணிகத்தில் ஈடுபடும்போது, டெபிட் கார்டைப் பயன்படுத்துங்கள், Transaction failed என்று வந்தால், அந்த சிறிய சீட்டை காட்டி, நிருபித்து தொகையைத் திரும்பப் பெறலாம்.

– வாதூலன்

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

Subscribe to our latest news