நம் வாழ்க்கை முறை, வீட்டிற்கு தேவையான மளிகைப் பொருட்கள் வாங்குவது, ரியல் எஸ்டேட்டில் முதலீடு, வாழ்க்கைத் துணைகளை தேடுவது, மருத்துவரிடம் மருத்துவ ஆலோசனையைப் பெறுவது அல்லது நாம் வாழும் வீட்டின் பாதுகாப்பு போன்றவை யாவும் டிஜிட்டல் பயன்பாடுகளின் மூலம் (தொலைபேசிகள் மற்றும் டேப்லெட்களால்) முழுமையாகக் கட்டுப்படுத்தக்கூடிய பல சிறப்புகள் நிறைந்ததாக மாறிவிட்டது. ஒரு பட்டனைக் கிளிக் செய்தால் போதும் விரும்பும் அனைத்தும் உடனடியாக நிறைவேற்றி வைக்கப்படும். டிஜிட்டல் செயல்பாடுகளை உற்று நோக்கினால், ஒரு வியப்பான நிகழ்வை கண்டறிய முடியும். ஒவ்வொருவருக்கும் ஒரு விருப்பமான பயன்பாடு உள்ளது. மற்றும் அந்த நோக்கத்திற்காக வேறு மாற்று பயன்பாட்டு சேவையை எப்போதாவது பயன்படுத்துகிறோம். ஒரு பகுதியில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மின் வர்த்தகம் e – commerce இயங்கக்கூடும். நம் அனைவருக்கும் அந்த பயன்பாட்டை நம்பி வாழ்கின்றோம். ஒருங்கிணைந்த சேவைகளை வழங்கும் பல தளங்கள் உள்ளன. ஆனால், அவற்றுள் ஒன்றில்தான் எப்போதும் முன்பதிவு செய்கிறோம். அவற்றின் சேவைக்கட்டணம் அதிகமாக இருக்கலாம். ஆனால், எல்லா பயன்பாட்டையும் நாம் பயன்படுத்துவதில்லை. ஒரு சிறந்த தயாரிப்பு அனுபவத்தை வழங்குவதற்கான அதன் திறனை நம்புவதால், ஒரு பயன்பாட்டு சேவையை ஒருவர் ஏற்றுக்கொள்வது இயல்பு. அவற்றின் வழங்கும் முறை நம்பிக்கையானதாக இருப்பதால் அதை ஏற்றுக்கொள்கிறோம். அவற்றின் விலைகள் நியாயமானவை என்று நம்புகிறோம். இந்த நம்பிக்கையை குறைப்பதற்கான காரணங்கள் ஏராளமாக இருக்கலாம். ஆனால், அந்த பயன்பாடுகளின் ஒருங்கிணைத்த சேவைகள் நம்பிக்கையை ஊக்குவிக்குவிக்கின்றன என்பதே உண்மை.
Also read: குறைந்த முதலீட்டுத் தொழில்கள்!
டிஜிட்டலைசேஷன் நமது வாழ்க்கை முறையை கற்பனை செய்ததை விட பல வழிகளில் மாற்றிவிட்டது. இந்த மாற்றங்களின் வேகம் மற்றும் வணிகத்தின் தாக்கம் ஆகியவை நம்மை அதன் போக்கிற்கு கொண்டுசெல்கிறது. டிஜிட்டல் மற்றும் இயற்பியல் உலகங்களுக்கிடையில் டிஜிட்டல் வணிகம் இயங்கிவருகிறது. மேலும், ஒவ்வொரு தொடர்புகளையும் செயல்படுத்தும் வகையில் நிறுவப்பட்ட டிஜிட்டல் வழங்கிச்சுற்றுகள் கட்டுப்படுத்துகிறது. அத்தகைய சூழ்நிலையில், டிஜிட்டல் கட்டமைப்பு ஒரு நிறுவனத்தின் எதிர்பார்ப்புகளை அளவிடுவதன் மூலமும் உயர் தரமான டிஜிட்டல் தொடர்புகளுக்கு முக்கிய பங்காற்றுகிறது. டிஜிட்டல் மீது கொண்டுள்ள நம்பிக்கை டிஜிட்டல் வணிகத்தின் உயிர்நாடி அல்லது நாணயமாக பார்க்கப்படுகிறது.
– த. செந்தமிழ்ச் செல்வன்