Latest Posts

சொல்லத் தயங்காதீர்கள் !

- Advertisement -

அமெரிக்காவில் சிக்காகோவில் கன்சாலஸ் என்றொரு பாதிரியார் வாழ்ந்து வந்தார். அவருக்கு ஒருநாள் ஏழை எளிய மக்களுக்காக ஒரு சிறந்த தொழிற்கல்வி நிறுவனத்தைத் தொடங்க வேண்டும் என்ற ஆசை பிறந்தது.

நல்லவற்றை போதிக்கும் அந்த கல்வி நிறுவனத்தைத் தொடங்க அவர் எவ்வளவு பணம் தேவை என்று கணக்கு போட்டுப் பார்த்தார். அவர் விரும்பும் அந்த சிறந்த கல்விக் கூடத்தைத் தொடங்க சுமார் ஒரு மில்லியன் டாலர் தேவைப்பட்டது.
அவரிடம் அவ்வளவு பணம் இல்லை. தம்மால் இது முடியாது என்று அவர் விட்டு விடவில்லை. நாள்தோறும் இதே எண்ணமாகவே இருந்தார். எப்பொழுதும் இதைப்பற்றியே சிந்தித்து வந்தார். இப்படியே சுமார் இரண்டு ஆண்டுகள் சென்றன.

இதற்கு என்ன செய்யலாம் என்று சிந்தித்துப் பார்த்தபோது தேவாலயத்தில் பிரார்த்தனை முடிந்த பின்னர் தனது எண்ணத்தை வந்திருப்போரிடம் சொல்லலாம் என்று முடிவு செய்தார். மனிதர்கள் உதவக்கூடும் என்ற எதிர்பார்ப்புடன் அதன்படி 1890ம் ஆண்டில் ஒரு நாள் தான் நிறுவ விரும்பிய கல்விக் கூடத்தைப் பற்றி மிகச் சிறப்பாக விரிவான முறையில் எடுத்து உரைத்தார்.

அந்தக்கூட்டத்தில் ஒரு பெரிய பணக்காரர் இருந்தார். அவர் பெயர் ஆர்மர். கன்சாலசின் பேச்சும் எண்ணமும் அவரை மிகவும் கவர்ந்து விட்டது. உடனே பாதிரியாரை அணுகி தான் பத்து மில்லியன் டாலர் நன்கொடை தருவதாய்க் கூறினார். மேலும் கன்சாலஸ் தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் அந்த கல்வி நிறுவனத்தை தலைமையேற்று நடத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

பின்னர் ஆர்மர் தான் தருவதாய் கூறிய தொகையின் ஒரு பகுதியாக ஒரு மில்லியன் டாலர் பணத்தையும் கொடுத்தார். கன்சாலஸ் ஒரு மில்லியன் டாலரைக் கொண்டு 1893ல் ஆர்மர் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி என்றொரு கல்வி நிறுவனத்தைத் தொடங்கினார். அவரே அக்கல்லூரியின் தலைவராகவும் பொறுப்பு ஏற்றுக் கொண்டார். ஆர்மர் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி என்ற பெயரில் புதிய கல்வி நிறுவனம் செயல்படத் தொடங்கியது.

இன்று உலகத்தின் சிறந்த கல்வி நிறுவனங்களில் இதுவும் ஒன்றாக திகழ்கிறது.

- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

Subscribe to our latest news