தேங்காய் மட்டையைச் சுற்றி உள்ள பல தொழில்கள்!

கயிறு தொழில்கள் மற்றும் விவசாயத்திற்கு இந்திய அரசின் கயிறு வாரியம் பல்வேறு சேவைகளை வழங்குகிறது. அவை,

 1. கயிறு தொழில் துவங்க மானியம் வழங்குதல்.
 2. கயிறு தொழில்களான தென்னை நார் உற்பத்தி, கயிறு உற்பத்தி, சுருள் கயிறு உற்பத்தி, நார் கயிறு கட்டில் உற்பத்தி, நார் கழிவு உரம் தயாரித்தல், கயிறு மதிப்பூட்டப்பட்ட தொழில்கள், துவங்குவதற்கு மானியத்துடன் கூடிய வங்கிக் கடன் வழங்குதல்.
 3. கயிறு பொருட்களை வெளிநாடுகளில் சந்தைப்படுத்த, வெளிநாடு சென்று வர, மற்றும் பொருட்காட்சியில் பங்குபெற மானியம் வழங்குதல்.
 4. கயிறு தொழில்களை புதுப்பிக்க மானியம் வழங்குதல்
 5. நார் கழிவுகளை இயற்கை உரமாக மாற்ற தொழில்நுட்பம் வழங்குதல்
 6. கயிறு பூவஸ்த்தரா கொண்டு ஆறு, குளம், ஏரி கரைகளில் மண் அரிப்பைத் தடுக்க தொழில்நுட்பம் வழங்குதல்
 7. கயிறு பொருட்களைப் பயன்படுத்தி பசும்புல்வெளி அமைக்கத் தொழில்நுட்பம் வழங்குதல்
 8. அதிக அளவு தண்ணீர்ப் பயன்பாட்டைக்குறைத்து, நார்க் கழிவுகளைப் பயன்படுத்தி நீரைச் சேமித்து வைத்து விவசாயம் செய்ய தொழில்நுட்பம் வழங்குதல்
 9. நார் கழிவுகளை இயற்கை உரமாக மாற்றும் நுண்ணுயிரியை ஆய்வுக் கூடத்தில் தயாரித்து விற்பனைக்கு வழங்குதல்
 10. மகளிருக்கான சுய தொழில் துவங்க மகிளா காயர் யோஜனாத் திட்டத்தின் மூலம் கயிறு திரித்தல் பயிற்சி, மிதியடித் தயாரித்தல் பயிற்சி ஊக்கத்தொகையுடன் வழங்குதல்
 11. கயிறு கைவினை மற்றும் அணிகலன் தயாரித்தல் பயிற்சி ஊக்கத்தொகையுடன் வழங்குதல்
 12. மேற்கண்ட பயிற்சிகளை பெறும் மகளிருக்கு மானியத்துடன் தொழில் துவங்க உதவி வழங்குதல்.
 13. கயிறு தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு விபத்து காப்பீடு வழங்குதல்
 14. கயிறு தொழிற்சாலைகள் மூலம் உற்பத்தி ஆகும் பொருட்களின் தரத்தை அறிய ஆய்வுக் கூட வசதிகள் வழங்குதல்
 15. தென்னை நார் தொழிற்சாலைகளுக்கு அதிக அளவில் மானியம் வழங்கி புதிய தொழிற்சாலைகளை அதிக அளவில் உருவாக்கி அதன் மூலம் கிராமப் புறங்களிலேயே அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்குதல்.

அஸ்பயர் திட்டம்

(A Scheme for Promotion Innovation Rural Industry And Entrepreneurship)

 1. தொழில் வாய்ப்பைப் பயன்படுத்தி வேலை இல்லாமையை குறைப்பது
 2. தொழில் முனைவோரின் கயிறு சார்ந்த பயிற்சியின் மூலமாக கயிறு சார்ந்த தொழிலாக முறைப்படுத்துதல்
 3. கீழ் மட்டத்தில் உள்ளோர்களை பொருளாதார ரீதியில் மேன்மைப்படுத்துதல்
 4. புதிய சந்தை வாய்ப்பு முறையைப் பயன்படுத்தி கயிறு தொழிலின் வர்த்தகத்தை உயர்த்துதல்
 5. புதிய தொழில்நுட்பத்தை மேம்பாடு செய்வதன் மூலம் கயிறு சார்ந்த தொழிலை வர்த்தக ரீதியாக வலிமைப்படுத்துதல்

கயிறு வாரியம், தஞ்சாவூர் பிள்ளையார்பட்டியில் உள்ள மண்டல விரிவாக்க மையத்தில் வாழ்வாதாராத்திற்கான தொழில் வளர்ச்சி முனைப்பு என்கிற பெயரில் கயிறு மற்றும் கயிறு சார்ந்த தொழில்கள் வளர்ச்சிக்கான பயிற்சிகள் தரப்பட்டு வருகின்றன. கயிறு மற்றும் கயிறு சார்ந்த தொழில் தொடங்க விருப்பம் உள்ள புதிய தொழில் முனைவோர்கள் புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய கீழ்கண்ட பயிற்சிகளைப் பெற முயற்சிக்கலாம்.

இடம் விட்டு இடம் கொண்டு செல்லக் கூடிய நார் உற்பத்தி இயந்திரத்தில் பயிற்சி;


மோட்டார் பொருத்தப்பட்ட பரம்பரை ராட்டையில் கயிறு உற்பத்தி;


தானியங்கி ஸ்பின்னிங் மெஷினில் கயிறு உற்பத்தி;


மின்னனு ராட்டையில் கயிறு உற்பத்தி; கயிற்றால் ஆன கைவினைப்பொருட்கள் மற்றும் பரிசுப் பொருட்கள் உற்பத்தி;


அனுகிரஹா/அனுபம் தறிகள் கொண்டு ஜியோ டெக்ஸ்டைல்ஸ் நெசவு நெய்தல்;

கயிறு நார்த்தூள்(காயர் பித்) கொண்டு வீட்டுத் தோட்டம்/புல்வெளி அமைத்தல்;

கயிறு நார்த்தூள் கொண்டு உரம் மற்றும் தூள் கட்டிகள் (பித் பிளாக்) செய்தல்;

நார் பதப்படுத்துதல்;

டெகார்டிக் கேட்டர் இயந்திரம் கொண்ட நார் உற்பத்தி செய்தல்;


கயிறு சார்ந்த உரங்கள் தயாரித்தல்;


கயிற்றாலான தோட்டக் கருவிகள் தயாரித்தல்;


கயிறு தொழில் விற்பனைக்குப் பயிற்சி;


வயது வரம்பு : 18 வயதிற்கு மேற்பட்டோர்
பயிற்சிக் கட்டணம் : ரூ.2000 + ஜிஎஸ்டி வரி
பெண்களுக்குப் பயிற்சிக் கட்டணம்: ரூ.1000 + ஜிஎஸ்டி வரி
SC/ST: ரூ.100 (அனுமதிக் கட்டணம் மட்டும்)

மேலும் விவரங்களுக்கு: வளர்ச்சி அலுவலர், மண்டல விரிவாக்க மையம், பிள்ளையார்ப்பட்டி(அஞ்சல்) வல்லம்(வழி), தஞ்சாவூர்- 613 403, தொலைபேசி: 04362-264655


மின்னஞ்சல்: cbrectnjcoirboard@gmail.com
கயிறு வாரியப் பயிற்சி, கிளைகள், கடன், மானியம், மார்க்கெட் உதவி பற்றி அறிய:
secretary, coir board, govt.of india, mahathma gandhi road, cochin- 682016, kerala. ph: 0484-2372979, email: chairmancoirboard@gmail.com, website: www.coirboard.in

-எம். ஞானசேகர் (தொழில் ஆலோசகர்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here