Latest Posts

குப்பை வண்டி விதி தெரியுமா?

- Advertisement -
ஒரு நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் அவசரமாக வெளியூர் செல்ல வேண்டி இருந்தது.
ஆகையால் தொடர்வண்டி நிலையத்துக்கு உடனே செல்ல வேண்டி வாடகைக் கார் ஒன்றைப் பிடித்து உடனே நிலையம் செல்லு மாறு ஓட்டுநரிடம் சொன்னார்.
இவர்கள் கார் சென்று கொண்டு இருக் கும் போது, இவர்களுக்கு முன்னால் சென்ற கார் ஒன்று திரும்புவதற்கான சிக்னல் எதுவும் கொடுக்காமல் திடீரென்று திரும் பியது. ஒரு கணம் நிலை தடுமாறிய டாக்சி ஓட்டுநர், உடனே பிரேக்கை போட்டு காரை நிறுத்தினார். கொஞ்சம் சுதாரிக்காமல் இருந் தாலும் அந்த காரை இந்த கார் இடித்து இருக்கும்.
அந்த காரில் இருந்து எட்டிப் பார்த்த அதன் ஓட்டுநர், இந்த ஓட்டுநரை கன்னா பின்னா என்று நா கூசும் சொற்களை பயன்படுத்தித் திட்டத் தொடங்கினார். இந்த டாக்சி ஓட்டுநரோ சற்றும் கோபப்படாமல் ஒரு புன்னகையை மட்டும் சிந்தி விட்டு தனது காரை, எதுவுமே நடவாதது போல ஓட்டத் தொடங்கினார்.
”ஏன் அவனை சும்மா விட்டீங்க? நாலு திட்டு திட்டி இருக்கலாமே? அவன் மேல தப்பு வைத்துக் கொண்டு நம்ம மேல எகிர்றான்..?” என்று அதிகாரி டாக்சி ஓட்டுநரிடம் கேட்டார்.
அதற்கு டாக்சி ஓட்டுநர் சொன்ன பதில்தான் குப்பை வண்டி விதியை ஒட்டிய பதில். ஆங்கிலத்தில் ‘The Law of the Garbage Truck’ என்பார்கள்.
”இப்படிப்பட்ட மனிதர்களுக்கு ‘குப்பை வண்டி’ என்று பெயர் சார்.. பல மனிதர்கள் இப்படித்தான் குப்பை வண்டிகள் போல இருக்கிறார்கள். மனம் நிறைய குப்பைகளை, அழுக்குகளை, வைத்து இருக்கிறார்கள். விரக்தி, ஏமாற்றம், கோபம் அவர்களிடம் நிறைந்து இருக்கும்.
அது போன்ற குப்பைகள் சேரச் சேர அதை இறக்கி வைக்க அவர்களுக்கு ஓரிடம் தேவை. சில நேரங்களில் அதை நம்மிடம் அவர்கள் இறக்கி வைப்பார்கள். அதை நாம் சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டும். அவர்கள் நம் மீது கொட்டும் குப்பைகளை நாம் சுமந்து கொண்டு போய் நம் பணி புரியும் இடத்திலோ, அல்லது வீட்டிலோ, தெருவில் போகும் மற்றவர்களிடமோ நாம் கொட்டக்கூடாது சார்” என்றார், ஓட்டுநர்.
இதில் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய செய்தி என்னவென்றால், வாழ்க்கையில் வெற்றி பெற்ற சாதனையாளர்கள் எவரும், இந்த குப்பை வண்டிகள் தங்களை ஆக்கிரமித்துக் கொள்ள அனுமதிக்கவே மாட்டார்கள் என்பதுதான்.
அலுவலகத்திலோ அல்லது வீட்டிலோ, வெளியிலோ காரணமின்றி நம் மீது யாரேனும் எரிந்து விழுந்தாலோ, அல்லது வன்சொற்களை வீசினாலோ பதிலுக்கு நாம், ஒரு புன்னைகையை மட்டும் பதிலாக தந்து விட்டு அந்த இடத்தை விட்டு அகன்று விட வேண்டும்
– தமிழரசு
- Advertisement -

Latest Posts

Don't Miss

Stay in touch

Subscribe to our latest news