Saturday, January 23, 2021

வணிகர்களுக்கான சில அடிப்படைச் செய்திகள்

தொழிலுக்கென்று எழுதப்படாத விதிகள் ஆயிரம் இருப்பினும் சில முக்கிய காரணிகளை தெரிந்து கொண்டு தொடங்கினால் வெற்றி சிகரத்தை எட்டிப் பிடிக்கலாம். தொடங்கும் தொழிலின் தன்மையை பொறுத்து சில காரணிகளில் மாற்றம் இருந்தாலும் கூட...

Latest Posts

கள் தடை நீக்கப்பட வேண்டும்; விற்கும் உரிமையை பனை ஏறும் வல்லுநர்களுக்கே வழங்க வேண்டும்!

தமிழ்நாட்டில் கடந்த 33 ஆண்டுகளாக கள்ளுக்கு தடை உள்ள நிலையில், 15 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு அமைப்புகள், விவசாயிகள், பனை தொழிலாளர்கள் கள் இறக்க அனுமதி கோரி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இதனிடையே, 2009...

இந்திரன் என்ற எழுத்தாளர் உருவான கதை

எழுத்தாளர், கவிஞர், ஓவியர், நூல் திறன்ஆய்வு அறிஞர் இந்திரன் இராஜேந்திரன் அவர்களுடன் திரு. அருணகிரி நடத்திய உரையாடலின் போது அவர் கூறியவை.. ''என் தந்தை சென்னைக்காரர். ஓவியர். தாய் புதுச்சேரிக்காரர். பிரெஞ்சுக் குடி உரிமை...

மடிக் கணினிகளை பாதுகாப்பாக பயன்படுத்துவது எப்படி?

மடிக் கணிணியை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பள்ளி, கல்லூரி மாணவர்கள், மென்பொருள் பொறியாளர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினருமே மடிக் கணினியை பயன்படுத்தி வருகின்றனர். அத்தகைய மடிக்...

தாழக் கிடப்பாரை தற்காக்க வேண்டும் என்று சொன்ன அய்யா வைகுண்டர்

அய்யா உண்டு என சொன்னால்.... அங்கே நீங்கள் இந்து சாதீய கொடூரங்களை எதிர்க்கிறீர்கள் என பொருள்... இந்து சனாதன தர்மத்தில் இருக்கும் சாதீய பாகுபாடுகள் குறித்து பலரும் பேசியிருக்கிறார்கள். போராடி இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் வள்ளலாருக்கு முன்னரே...

தங்கத்தேரின் தங்கத்தில் கலப்படம்!

‘பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை’, என்பது வள்ளுவர் வாய்மொழி இது பொய்யாமொழி. இன்று தனி வாழ்விற்கும், குடும்ப வாழ்விற்கும், சமுதாயக் கூட்டுப் பணிகளுக்கும், அரசியல் செயல்பாட்டிற்கும், சமயங்களின் நடவடிக்கைகளுக்கும் பொருள், பணம் ஆதாரமாக இருப்பதைக் காண்கின்றோம்.

ஒவ்வொரு வாழ்க்கை முறைக்கும் ஒரு பொருளாதாரம் இருக்கின்றது. அதற்கு என்று சில நெறிமுறைகள் உள்ளன. அவற்றைப் பின்பற்றுகின்றவரை சிக்கல் இல்லை. வாழ்க்கை சீராக, செம்மையாக நடைபெறும்.

கோவில்களைச் சமயம் சார்ந்தவைகளாகக் கருதுகின்றோம். சமயத்தில் இரண்டு நிலைகள் உள்ளன. ஒன்று, கொள்கைச் சமயம். இது தத்துவம் சார்ந்தது. இதன் உயர்நிலை ஆன்மீகம். மற்றொன்று சடங்குச் சமயம். இதற்கு கோவில் வேண்டும்; சடங்குகள் வேண்டும். தனித்தனி வழிப்பாட்டு முறைகளை உருவாக்கி இருப்பார்கள். தனித்தனி அடையாளங்கள் இருக்கும். இது அமைப்பு வழி இயங்கும்.

சடங்குச் சமயம் பொருள் சார்ந்த சமயமாக இருக்கும். இயற்கை வழிபாடாகத் தொடங்கி, கடவுளுக்கும் உருவம் தந்து கோவில் கட்டியது ஊர்கள் தோன்றிய காலத்தில். வேளாண்மை வேரூன்றிய பொழுதுதான். ஆடு மாடுகள் மேய்த்து காடுகளில் சுற்றித் திரிந்த மனிதன் வேளாண்மை செய்த காலம் பொருளாதார வளர்ச்சிக் காலம். தனக்கு வீடு கட்டிக் கொண்டது போலவே, கோவிலும் கட்டினான். கோவிலைச் சுற்றி சமயம் வளர்ந்தது.

ஆதி மனிதன் தான் கண்டு அஞ்சியவற்றை, அடக்க முடியாதவற்றை வழிபடத் தொடங்கினான் அப்படி அவன் முதலில் வழிபட்டது நெருப்பாக இருக்கலாம். கதிரவன், மழை என வழிபாடு விரிவடைந்தது. பின்னர் அறிவும், கற்பனையும் வளர இறைவன் என்று உருவம் கொடுத்தான்; கதைகள், காவியங்கள் புனைந்தான்.

கோவில் வரலாறு மிகவும் நீண்டது; நெடியது. தொடக்க காலத்தில் ஊர்களில் சிறிய, சிறிய கோவில்களைக் கட்டி வழிபட்ட காலத்தில் பொருளுக்கு இருந்த இடம் குறைவு.

பொங்கல் வைப்பார்கள்; தேங்காய் பழங்கள் படைத்து வழிபடுவார்கள். படைத்தவற்றை எல்லாம் பகிர்ந்து உண்பார்கள். திருவிழாக்கள் என்றால் ஒவ்வொரு குடும்பமும் தங்களது வளத்திற்கேற்ப பொருள் தருவார்கள். ஊர் கூடி விழா எடுப்பார்கள். இன்னும் கிராமங்களில் இந்த நிலை தொடர்வதைக் காணலாம்.

மன்னர்கள் மிகப் பெரிய கோவில்களைக் கட்டிய பிறகு கோவிலுக்கு என்று அணிகலன்களும், சொத்துகளும், நிலங்களும் வழங்கப் பெற்றன. அவற்றை நிர்வகிக்க அறங்காவலர்கள் தோன்றினார்கள். கோவில்களுக்கு என்று சொத்துகளும் வருவாயும் சேர்ந்தன.

பெரிய கோவில்களில் திட்டமிட்டு வழிப்பாட்டு முறைகளை வகுத்தனர்; பெரிய விழாக்களை நடத்தினர். எல்லாவற்றிலும் பொருளாதாரக் கண்ணோட்டம் வந்தது. கோவில்களின் புகழுக்கு ஏற்ப அதன் பொருளாதாரக் கட்டுக்கோப்பும் உயர்ந்தது.

இன்று, பல பெரிய கோவில்களின் சொத்துகளையும் வருவாயையும் மதிப்பிடக் கூட முடியாது. எடுத்துக் காட்டாக திருவனந்தபுரத்தில் இருக்கும் ஒரு பெரிய கோவிலின் விலை மதிப்பற்ற பொருட்கள் இருக்கும் சில அறைகளை இன்னும் திறக்கக்கூட முடியவில்லை. கோவிலில் உள்ள சிலைகளின் மதிப்பைக் கணிக்க முடியாது.

கோவிலின் வருவாய் பல வழிகளில் ஓடி வரும் ஆற்று நீர் போல வற்றாது வந்து கொண்டு இருக்கின்றது. சான்றுக்கு இரண்டு கோவில்களைக் குறிப்பிடலாம்.

ஒன்று திருப்பதி வேங்கடாசலபதி கோவில். இந்தக் கோவிலில் வரிசையில் நின்று காணிக்கை போடுவதைக் காணலாம். இது பணக்கார சாமி. லட்டு வியாபாரம் மட்டும் கோடியைத் தாண்டும். இதனைச் சுற்றி வளரும் வாணிபம் விண்ணைத் தொடும்.

மற்றோன்று ஐயப்ப சாமி கோவில். இது கேரளாவில் இருந்தாலும், பெரிதும் தமிழக பக்தர்களைக் கொண்ட கோவில். இதன் வருவாய்க்கும் அளவு இல்லை. பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் காட்டில் வாழ்ந்த மலை மக்களின் ஐயனார் வழிபாடாகத்

தொடங்கியது, ஐயப்பன் கோவிலாக அதனை வளர்த்து எடுத்தனர்.
அந்தக் கோவிலை பந்தளம் அரச குடும்பம் சொந்தம் கொண்டாடியது. பின்பு திருவனந்தபுரம் அரசின் கட்டுபாட்டிற்குள் வந்து, பின்னர் திருவாங்கூர் தேவஸ்வம் அமைப்பின் கீழ் வந்தது. அதன் வருவாய் கூடக் கூட, வழிபாட்டு முறைகளும், கட்டுப்பாடுகளும் கூடி இருக்கின்றன.

வருவாய்ப் பெருக்கத்திற்கும், பக்தர்களின் தேவைக்கும் ஏற்ப கோவில் கட்டமைப்பு விரிவடைந்து இருக்கின்றது. முதலில் கோவிலுக்கு அடித்தட்டு மக்கள் மிகுதியாக வந்தனர். காலப் போக்கில் நடுத்தர மக்கள், மேல்மட்ட மக்களின் எண்ணிக்கை சென்ற நூற்றாண்டின் இறுதியில் இலட்சத்தைத் தாண்டியது.

கோவில் அமைந்து இருக்கும் மலைகள் சூழ்ந்த இயற்கை வளம் நிறைந்த சுற்றுச் சூழல் மனிதர்களை ஈர்க்கிறது.. இது மேற்குத் தொடர்ச்சி மலையின் இதயப் பகுதி போன்ற இடத்தில் அமைந்து இருக்கின்றது. இந்தப் பகுதியில் புலிகள் சரணாலயம் உள்ள பெரியாறு பகுதியும் உள்ளது.

திருவனந்தபுரம் தேவஸ்தான அமைப்பு சபரிமலை வளர்ச்சித் திட்டத்திற்காக மலைப் பகுதியில் நிறைய நிலத்தை ஒதுக்கி உள்ளது. இதில் வனவிலங்குகள் பாதுகாப்பு, காடுகள் – இயற்கைச் சூழல் பாதுகாப்பு பற்றிக் கவலைப் படாமல், ஐயப்ப சாமி கோவில் நகர் வளர்ச்சித் திட்டத்தில் ஈடுபட்டு வருகின்றது. மிகப் பெரிய தங்கும் விடுதிகளும், வணிக நிலையங்களும் கட்ட தனியாருக்கு கணிசமான நிலத்தை ஒதுக்கித் தருகின்றது.

கோவில் இடமான சபரி மலை சுற்றுலாத் தலமாகவும், வணிகத் தலமாகவும் மாறி வருவது குறிப்பிடத் தக்கது. கோவில் பொருளாதாரம் வாணிபப் பொருளாதாரமாக மாறுகின்றது..

கோவிலுக்கு வருகின்ற பக்தர்களுக்கு உதவும் வகையில் முறையான வாணிபம் நடைபெறுவதில் தவறு இல்லை. ஆனால் உழைக்காமல் வருவாய் பெறும் நோக்கில், கோவில் அறங்காவலர்களோ, பணியாளர்களோ முறையற்ற நோக்கில் வருவாய் பெற கோவிலைப் பயன்படுத்துகின்ற பொழுதுதான் சிக்கல் வருகின்றது.

எடுத்துக் காட்டாக ஒன்றைக் கூறலாம். கடந்த ஐம்பது ஆண்டுகளில் பல பெரிய கோவில்களில் தங்கத் தேர் செய்தார்கள். அதற்காகத் தனியே நன்கொடை பெற்றார்கள். கோவிலில் சேர்த்து வைத்து இருந்த பணத்தை, தங்கத்தைப் பயன்படுத்தினார்கள்.

இதில் சில இடங்களில் தங்கத் தேரில் உள்ள தங்கத்தில் கலப்படம் செய்து விட்டதாகவும், முறைப்படி கணக்கு வைக்கவில்லை என்றும் கூறுகிறார்கள்.

சில கோவில்களில் கையிருப்பு நகைகளில் மோசடி நடத்தி இருப்பதாகவும், சரியான கையிருப்புப் பார்க்கப்படவில்லை என்றும் செய்திகள் உள்ளன.

சிலைகள் திருட்டு தொடர்ந்து நடந்து இருப்பது வெளிப்படை. தனிக் காவல்படை செயல்படுகின்றது. கோவிலுக்குத் திருப்பணி என்றோ, கோவில் கட்டவென்றோ நன்கொடை கேட்டால் நமது மக்கள் தாராளமாக, ஏராளமாகத் தருவார்கள். அப்படி வசூலிக்கும் பணத்தை எந்த அளவிற்கு, எதற்கு வசூலித்தார்களோ அதற்கே செலவிடுகின்றார்களா என்பது பெரிய கேள்வி.

ஒரு கதை சொல்வார்கள். மூன்று பேர் சேர்ந்து ஊரில் ஒரு கோவில் கட்ட பணம் வசூலித்தார்களாம். அவர்கள் எதிர்பாத்ததைவிட பலமடங்கு பணம் வசூலானதாம். அவர்களுக்கு பணத்தை அப்படியே கோவில் கட்டச் செலவிட மனம் இல்லை.

ஒருவன், ‘இவ்வளவு பாடுபட்டுப் பணம் சேர்த்து இருக்கின்றோம். இதில் நமக்கு ஒரு பங்கு எடுத்துக் கொள்ளலாம்’, என்றானாம். மற்றவர்களும் ஏற்றுக் கொண்டராகள்.
‘எப்படி?’ என்ற கேள்வி பிறந்தது அடுத்தவன் சொன்னானாம், ‘ஒரு கோடு போடுவோம். பணத்தைத் தூக்கிப் போடுவோம். கோட்டுக்கு அந்தப் பக்கம் விழுவது சாமிக்கு; இந்தப் பக்கம் விழுவது நமக்கு’, என்றானாம்.

அடுத்தவனோ, ‘கோட்டுக்கு அந்த பக்கம் நிறைய விழுந்தால் என்ன செய்வது? ஒரு சிறிய வட்டம் போடுவோம். பணத்தைத் தூக்கிப் போடுவோம். வட்டத்திற்குள் விழுவது சாமிக்கு; வெளியில் விழுவது நமக்கு’, என்றானாம்.

அதற்கும் உடன் படாத முதலாமவன், ‘பணத்தைத் தூக்கிப் போடுவோம்; மேலே போவது இறைவனுக்கு; தரையில் விழுவது நமக்கு’, என்றானாம்.
இப்படித்தான் இன்றைய நிலை போய்க் கொண்டு இருக்கின்றது.

கோவில்களும், சொத்துகளும், வருவாய்களும் சமுதாய உடமைகள். கோவில் பொருளாதாரம் அன்பையும், அறனையும் அடிப்படையாகக் கொண்ட சமத்துவப் பொருளாதாரமாக இருக்க வேண்டும்.

– டாக்டர் மா. பா. குருசாமி

Join our list

Subscribe to our mailing list and get interesting stuff and updates to your email inbox.

Thank you for subscribing.

Something went wrong.

Latest Posts

கள் தடை நீக்கப்பட வேண்டும்; விற்கும் உரிமையை பனை ஏறும் வல்லுநர்களுக்கே வழங்க வேண்டும்!

தமிழ்நாட்டில் கடந்த 33 ஆண்டுகளாக கள்ளுக்கு தடை உள்ள நிலையில், 15 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு அமைப்புகள், விவசாயிகள், பனை தொழிலாளர்கள் கள் இறக்க அனுமதி கோரி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இதனிடையே, 2009...

இந்திரன் என்ற எழுத்தாளர் உருவான கதை

எழுத்தாளர், கவிஞர், ஓவியர், நூல் திறன்ஆய்வு அறிஞர் இந்திரன் இராஜேந்திரன் அவர்களுடன் திரு. அருணகிரி நடத்திய உரையாடலின் போது அவர் கூறியவை.. ''என் தந்தை சென்னைக்காரர். ஓவியர். தாய் புதுச்சேரிக்காரர். பிரெஞ்சுக் குடி உரிமை...

மடிக் கணினிகளை பாதுகாப்பாக பயன்படுத்துவது எப்படி?

மடிக் கணிணியை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பள்ளி, கல்லூரி மாணவர்கள், மென்பொருள் பொறியாளர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினருமே மடிக் கணினியை பயன்படுத்தி வருகின்றனர். அத்தகைய மடிக்...

தாழக் கிடப்பாரை தற்காக்க வேண்டும் என்று சொன்ன அய்யா வைகுண்டர்

அய்யா உண்டு என சொன்னால்.... அங்கே நீங்கள் இந்து சாதீய கொடூரங்களை எதிர்க்கிறீர்கள் என பொருள்... இந்து சனாதன தர்மத்தில் இருக்கும் சாதீய பாகுபாடுகள் குறித்து பலரும் பேசியிருக்கிறார்கள். போராடி இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் வள்ளலாருக்கு முன்னரே...

Don't Miss

உங்களுக்கு அருகில் உள்ள சின்னச் சின்ன சுற்றுலா இடங்கள்

எப்படி இருந்தாலும் கொரோனா லாக் டவுன் விரைவில் முடிவுக்கு வந்துதான் தீரும். பொதுப் போக்குவரத்தையும் தொடங்கி விடுவார்கள். ஐந்து மாதங்களுக்கும் மேலாக வீட்டுக்குள் முடங்கிக் கிடப்பவர்களில் பலர், எப்போது பொது முடக்கம் ஒரு...

உங்கள் இரகசியத்தைக் காப்பாற்றப் போவது யார்?

பெரும்பாலான உறவுமுறைகள், தேவை இல்லாத சமாச்சாரங்களைப் பரிமாறிக் கொள்வதால்தான் பாதிப்புக்கு உள்ளாகின்றன. ஒரு செய்தியைப் பரிமாறிக் கொள்ளும் முன் சிலவற்றை மனதில் கொள்வது நல்லது. எல்லா செய்திகளையும் எல்லோரிடமும் பரிமாறிக் கொள்ள தேவை...

வாடிக்கையாளர் எந்த வகையானவர் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்

இன்றைக்கு வணிகத்தில் வாடிக்கையாளர்களின் வகைகளையும், அவர்களின் மனநிலையை அறிந்து கொள்வது என்பது மிகப் பெரிய சவாலான பணி ஆகும். ஒவ்வொரு வாடிக்கையாளரும் ஒவ்வொரு விதமாக முடிவு செய்வதைப்பார்க்க முடியும். எனவே வணிகம் என்பது...

பணியாளர் நிர்வாகம்: இணைந்து பணியாற்றச் செய்யுங்கள்

பெரிய நிறுவனங்களின் மேலாளர்கள், தங்களிடம் பணி புரிவோரை சிறப்பாக பணிபுரிய வைக்க என்ன செய்யலாம்? உங்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்ப செயல்படும் பணியாளர்களை அவ்வப்போது அழைத்து பாராட்டுங்கள். வெற்றிப் பயணத்தின் தொடக்கம் அதுதான். ஆனால் இந்த...

உரிய நேரம் வரும்வரை காத்திருந்து செயல்பட கற்றுத் தரும் கொக்கு

ஒவ்வொரு நிர்வாகமும், மனிதரும் தன் குறிக்கோள், இலக்கு, இலட்சியம், அதை அடையும் வழிமுறைகள், அவ்வப் போது தீர்மானிக்க வேண்டிய முடிவுகள், அவற்றைச் செயலாக்கும் திட்டங்கள் போன்ற பற்பல பணிகளை ஆற்றவேண்டியுள்ளது. நாலும் தெளிந்தெடுக்க முடிவு! ஒரு...

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.