விற்பனை வாய்ப்பு !

0
61

 

பிளாஸ்டிக் பொருள்களுக்கு தமிழக அரசு தடை விதித்து உள்ள நிலையில் பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தவிர்க்க என்ன செய்யலாம் என்ற மாற்று சிந்தனை தற்போது ஏற்பட்டு உள்ளது.

இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி துணிப்பை, சணல் பை, வாழை இலை, தாமரை இலை, பாக்கு மட்டைப் பொருட்கள், அலுமினியம் பூசப்பட்ட காகிதம், காகித உருளைகள், தாமரை இலைகள், கண்ணாடி தம்ளர்கள், மூங்கில் மரத்தாலான பொருட்கள், காகித உறிஞ்சு குழாய்கள், காகிதப் பைகள் போன்றவற்றின் விற்பனையில் ஈடுபடலாம்.

உலர்ந்த மந்தாரை இலைகளை பூந்துடைப்பம் கட்ட பயன்படுத்தும் புல்குச்சிகள் கொண்டு தைத்து விற்பனை செய்யலாம்.

இதற்கு பெண் தொழிலாளர்களை பீஸ் ரேட்டில் பயன்படுத்தலாம்.

– ஆர்.அருண்குமார்