கொரோனா – இனி வணிக செயல்பாடுகளில் ஏற்பட இருக்கும் அதிரடி மாற்றங்கள்

செல்போனையும்-அத்தியாவசிய-சேவையாக-அறிவிக்க-வேண்டும்;-மானியம்-தேவை:-மத்திய-அரசுக்கு-கோரிக்கை

                                                                                                                                         கொரோனா தொற்றின் விளைவாக வணிக செயல்பாடுகளில் மாற்றங்களளை அமைத்தால்தான் நாம் சந்தையில் நிலைத்து நிற்க முடியும். மார்ச் 2020- இல் மட்டும் 50 லட்சம் புதிய பயனர்கள் UPI அலை பேசி பண பரிமாற்றத்திற்கு மாறியதாக NPCI (National  payment Corporation of India ) தலைமை செயல்பட்டு அதிகாரி பிரவீன் ராய் கூறியுள்ளார்.

      இனி வரும் காலங்களில் வங்கிகளுக்கு செல்வது குறைந்து பெரும்பாலான பண பரிமாற்றங்கள் அலைபேசி மூலமும்  இணைய  வாங்கி சேவை மூலமும் நடைபெறும்,.பணத்தை டெபாசிட் செய்வதற்கு ATM இயந்திரங்களை பயன்படுத்துவார்கள். 

தனி நபர் இடைவெளியை கடைபிடிப்பதற்காக வாடிக்கையாளர்கள் இனி அலை பேசி மூலம் பொருட்களை ஆர்டர் செய்வார்கள். .இதனை அறிந்த பேஸ்புக் நிறுவனம் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்துடன் கூட்டு வைத்துள்ளது. 22-4-2020 அன்று பேஸ்புக் நிறுவனம் 43,574 கோடி ரூபாயை ஜியோ தனில் முதலீடு செய்துள்ளது. இதன் மூலம் 9.99% ஜியோ பங்குகளை தனதாக்கி கொண்டுள்ளது பேஸ்புக்.

இனி ரிலையன்ஸ் நிறுவனமும் பேஸ்புக் நிறுவனத்தின் துணை நிறுவனமான வாட்சாப் செயலியும் இணைத்து செயல்படுவார்கள். ஜியோ அலைபேசியில் பொருட்களை ஆர்டர் செய்து வாட்சாப் மூலம் பண பரிமாற்றம் நடைபெறும். பேஸ்புக் மூலமும் பொருட்களை ஆர்டர் செய்வார்கள். கூகிள் பே போன்று வாட்ஸ் ஆப் பேமன்ட் செயலையும் தயார் செய்து விட்டார்கள். அரசு அனுமதி மட்டுமே பெற வேண்டும். இது போன்ற கூட்டணிகள் வரும் காலத்தில் அதிக அளவில் நடைபெறும் 

ரோபோட்டிக்ஸ், ஆர்ட்டிஃபிசியல் இன்டெலிஜெடன்ஸ், டேட்டா மைனிங் துறைகள் வளரும்

மாணவர்கள் தங்கள் பாடங்களை  ஆன்லைன் மூலம் கற்பார்கள். ஆகவே பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை கடுமையாக குறையும். பொறியியல்  கல்லூரிகளில் கெமிக்கல் இன்ஜினியரிங் மற்றும்பயோடெக் இன்ஜினியரிங் துறைகளுக்கு மட்டும் அதிக மவுசு இருக்கும். மாத்திரைகள் உற்பத்தியில் இந்தியா நல்ல முன்னேற்றம்  காணும் என்பதால் இந்த துறைகளுக்கு அதிக தேவை இருக்கும். கணினி துறையில் ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் மற்றும் டேட்டா மைனிங் , ரோபோடிக்ஸ் துறைகளுக்கு அதிக தேவை இருக்கும்.

உற்பத்தித்துறை வீழ்ச்சியை சந்திக்கும்

ஊரடங்கின் விளைவாக வாங்கும் சக்தி குறையும். அதனால் உற்பத்தி துறை அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு  வீழ்ச்சியை சந்திக்கும். சுற்றுலா துறைக்கு அடுத்த இரு ஆண்டுகள் சவாலாக அமையும். ஊடக துறை இனி தொலைக்காட்சி மற்றும் இணையத்தை சார்ந்ததாக இருக்கும். மக்கள் செய்தி தாள்கள், இதழ்கள் வாங்குவதை குறைத்து கொள்வார்கள். ஆகவே

அச்சு ஊடகங்கள் டிஜிட்டலுக்கு மாறும்

அச்சு ஊடகங்கள்டிஜிட்டலுக்கு மாறுவது நல்லது. ஊடக இணையதளங்கள் பயனாளர்களை ஈரத்தால் விளம்பரங்கள் மூலமாகவும், சாந்த மூலமாகவும் அதிக வருவாயை ஈட்ட முடியம். ஆகவே இணைய பத்திரிக்கை செய்தி அலசல்கள் தரமானதாக இருக்க வேண்டும். 

சினிமா துறையும் கடுமையான வீழ்ச்சியை சந்திக்கும். இனி கஷ்டப்பட்டு எடுக்கும் திரைப்படங்கள் அமேசானிலும், நெட்ப்ளிக்ஸிலும் வெளியிடப்படும். மக்கள் வீட்டிலிருந்தே படங்களை பார்த்து ரசிப்பார்கள். உற்பத்தி துறையில் பணியாளர்களுக்கு பதிலாக ரோபாட்டுகளை பயன்படுத்துவார்கள். 

என்ன தான் இயந்திரங்கள், ரோபாட்டுக்களை  பயன்படுத்தினாலும் மனிதர்களின் படைப்பாற்றல் மற்றும் புத்தாக்கங்களுக்கு எடு இணை ஏதும் இல்லை. ஊரடங்கு காலத்தில் ஒரு பிரபலமான இயக்குனர் ஒரு நடிகரையும், நடிகையையும் நடித்த பழைய கதா பாத்திரங்களை வைத்து இன்றைய சூழல்களை பற்றி அலைபேசியில் பேசுவதாக கதை அமைத்து, அலைபேசியில் படமெடுத்து அதனை குறும்படமாக வெளியிட்டார். (கவுதம் மேனன்). இது போன்று வணிகர்களும் தங்கள் படைப்பாற்றல்களை டிஜிட்டல் மூலமாக உட்புகுத்தவன் மூலம் சந்தையில் நிலைத்து நிற்க முடியும். 

  – ஜே. தினேஷ் ,எஸ். ஆர். எம். பல்கலைக்கழகம்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here